Aug 5, 2013

அவள் கேட்க மறந்த என் காதல் கனவுகள்

தேங்காய்ப் பூக்களாய்
உதிரும் அவள்
புன்னகையை
மொத்தமாக 
உண்ணத் துடிக்கும்
நான்...

சிறு சிறு தூறல்களாய்
நெடு நேரம் நனைக்காவிட்டாலும்
கோடை மழையாய் அவளை
சட்டென அணைக்க
ஆசைப்படும் நான்...

அவளைப் பார்த்து
மலரும் தாழம்பூ'வாய் 
தினமும் மலர நினைக்கும்
என் காலை...

அந்தி மாலையில்
கூவும் குயிலுக்குப் பதில்
நான் உரக்கக் கூப்பிட 
நினைக்கும்
அவள் பெயர்...

அவள் கண்ணசைவில் 
ஊஞ்சலாடிக்
கொண்டிருக்க்கும்
என் காதல்...

அவள் காதலுக்காகவே 
ஏங்கிக்கொண்டிருக்கும் 
என் உயிர்...

என இன்னும் 
எத்தனையோ, 
அவள் கேட்க மறந்த 
என் காதல் கனவுகள்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...




18 comments:

  1. சொட்டுது....
    காதல் ரசம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா... முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. அன்பின் வெற்றிவேல் - காதல் கொப்பளிக்கிறது - இன்னும் கேட்க மறந்த காதல் கனவுகள் இருக்கின்றன - கனவுகள் அனைத்துமே அருமை - காதலனைப் பொறுத்த வரையில் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. கனவுகள் அனைத்துமே அருமை - காதலனைப் பொறுத்த வரையில்,,,,

      அய்யா, எதோ உள்குத்தல் மாதிரியே இருக்கு!

      Delete
  3. அந்தி மாலையில்
    கூவும் குயிலுக்குப் பதில்
    நான் உரக்கக் கூப்பிட
    நினைக்கும்
    அவள் பெயர்...அழகு..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,,,
      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. உங்களின் காதல் கனவுகள் அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மதுரைத் தமிழரே...

      தங்கள் இனிய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  5. காக்க மறுக்குதே காதல் மனமிது
    கேட்க மறுத்த கதை!

    அருமை! அழகிய கற்பனை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளமதி...

      தங்கள் இனிய கருத்துக்கும், அழகான வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...

    Visit : http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், அண்ணா...

      தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா...

      கவிதைய பற்றி எதுவும் சொல்லாம போயிருக்கீங்க... ஆச்சர்யமா இருக்கு!

      Delete
  7. சகோ உங்களை ஒரு தொடர் எழுத அழைக்கிறேன்
    நேரம் இருப்பின் http://nizammudeen-abdulkader.blogspot.ae/2013/08/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. என்னை தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி சகோ...

      Delete
  8. Replies
    1. வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      தங்கள் வருகைத் தொடரட்டும்...

      Delete
  9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு

    வலைச்சர தள இணைப்பு : கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா... அப்படியே வாழ்த்துகளுக்கும்...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...