Feb 27, 2014

மீண்டும் என் சாம்பலிலிருந்து...

பீனிக்ஸ், கவிதை, சாம்பல், காதல் கவிதை

என்னுள் ஒளிந்திருந்த
காதலை
மெல்ல தட்டி எழுப்பினேன்...
பீனிக்ஸ் பறவையாக
உயிர்பெற்று 
சிறகடித்தது வானில்...

கண்கள் நிறைந்த
கனவுகளுடனும்
உள்ளம் முழுக்க
தன்னம்பிக்கையுடன்
மேலும் மேலும் உயர பறந்தது
அது...

எட்டாக் கணவாய்களையும்
நீண்ட கண்டங்களையும்
உயர்ந்த சிகரங்களையும்
அகன்ற ஆழிகளையும் கூட
சாதுர்யமாய் கடந்து
வீறு நடை போட்டது...

தகிக்கும் பாலையையும்,
பொசுக்கும் எரிமலையையும்
ஒய்யாரமாகக் கடந்து சென்றது
என் பீனிக்ஸ் பறவை...

நடுங்கவைக்கும் கார்காலத்தையும்
பொசுங்கவைக்கும் வேனிற்காலத்தையும்
உணவாகக் கொண்டு திண்ணமாய்
பறந்து கொண்டிருந்தது
வசந்தத்தை நோக்கியே...

வசந்தமென எண்ணி 
அவள் பார்வையில் அகப்பட்டதும்
எரிந்து பொசுங்கி
சாம்பலாகிவிட்டது
என் காதல் பீனிக்ஸ்.

மெல்ல உயிர்கொடுத்து
அவளுக்காக
என் காதலை தட்டி
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் என் சாம்பலிலிருந்து...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Feb 18, 2014

புத்தக விமர்சனம்: இளமை எழுதும் கவிதை நீ.

கல்லூரி கதைதான், இரண்டு குடும்பம் சில நண்பர்கள்,ஒரு நேர்மையான மினிஸ்டர் என்று கதையை கடைசி வரைக்கும், அதன் விறுவிறுப்பு குறையாதவாறு கதையை நகர்த்திச் சென்றிருப்பார் குடந்தையூர்.ஆர்.வி.சரவணன். புத்தகத்தை படித்து முடித்தவுடன், இரண்டரை மணி (நீங்க நாலு மணி நேரம் படிச்சிட்டு, யாரும் கேள்வி கேக்கக் கூடாது) நேர திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியிருப்பார், குடைந்தையூரார் அவர்கள்.  கதையில் வரும் வசனங்கள் அனைத்தும் கதைக்கு சிறப்பு சேர்ப்பன. காட்சிகள் மூலம் கதையை அழகாக சலிப்பு தட்டாத வண்ணம் கதையை சாமர்த்தியமாக நகர்த்தியிருப்பார்.

Feb 16, 2014

உதிரும் நான் -30

கயிற்றருந்த கன்றுக்குட்டியாய்
கும்மாளமிட்டுத்
திரிந்துகொண்டிருந்தேன்
நித்தமும்...

சிறுக்கி மகளின்
சிரிப்பில் அகப்பட்டபின்
சின்னாபின்னமாகி
சீரழிவதேனோ???


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


உதிரும் நான், காதல் கவிதை, கவிதை, காதல், uthirum naan, kathal, kavithai

Feb 11, 2014

உதிரும் நான் -29

மலரை வருடும்
பூந்தென்றலாய் தான்
கடந்து சென்றாள்
என்னுள்...

இரயில் கடந்த
தண்டவாளமாய்
அதிர்ந்துகொண்டிருக்கிறேன்
இன்னமும் நான்...


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Feb 10, 2014

ஆவிப்பா- புத்தக விமர்சனம்

இன்று தனது முதல் நூலான ஆவிப்பா நூலை வெளியிடும் நண்பர் கோவை ஆவி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். 

நஸ்ரியா புகழ், நஸ்ரியாதாசன் என வாத்தியார் பாலகணேஷ் அவர்களால் புகழப்பட்ட கோவை ஆவி எனப்படும் ஆனந்த விஜயராகவன் அவர்கள் தனது குறும்பாக்கள் அனைத்தையும் தொகுத்து மாலையாக்கி புத்தக வடிவில் சிறப்பாக வெளியிட்டுள்ளார்.