தி.மு.க தமிழர்களுக்கு செய்த துரோகம் ஊர் அறிந்ததே, ஆனால் அக்கழகம் 'தமிழ்' தான் உயிர் மூச்சு என அழைத்து அதற்க்கும் பெரும் துரோகத்தை இழைத்துவிட்டு இன்று எதுவுமே தெரியாதது போல இருக்கின்றனர். ஆம். மாபெரும் துரோகம். பேச வேண்டிய நேரத்தில் பேசாமலும், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரத்தில் எதிர்க்காமலும் இருந்ததன் விளைவு.
செப்டம்பர் 18ல் 2004ம் ஆண்டு இந்திய அரசு தமிழ் மொழியை செம்மொழி(Classical Language) யாக அறிவித்தது. பிறகு அக்டோபர் மாதம் 2005ல் சம்ஸ்கிருத மொழியை செம்மொழியாக அறிவித்தது. தமிழைத் தொடர்ந்து சமஸ்கிருதத்தை செம்மொழியாக அறிவித்தத்தில் பெரும் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஏனெனில் அதுவும் இந்தியாவில் வழக்கற்றுப் போன ஓர் பழம் பெரும் மொழி.
தமிழை செம்மொழியாக அறிவித்ததைத்தான் கோவையில் 2010ல் சூன் திங்கள் 23-27ல் மாபெரும் செம்மொழி மாநாடு என்று சொல்லி கழக மாநாட்டை அரங்கேற்றியது தி.மு.க. அங்கு நடந்தது எல்லாம் ஊர் அறிந்ததே. ஆனால் அதன் திரை மறைவில் நாம் அறியாத பல செயல்பாடுகள் அரங்கேறியது.
ஆம். 2006ம ஆண்டில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட உடன் செம்மொழி தொடர்பான தகுதிகளின் விதிகளில் அமைச்சரவையில் இந்திய பண்பாட்டு மற்றும் சுற்றுலாக் கழக அமைச்சரின் சார்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது மொழியின் தன்மை 2000 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும் என்பதை 1500 லிருந்து 2000 இருந்தால் போதும் என மாற்றினர். ஏனெனில் அப்போது சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சராக இருந்தவர் ஆந்திராவைச் சார்ந்த ரெட்டி. அவர் தான் மேற்கண்ட திருத்தத்தை கொண்டு வந்தார். அவருக்கு தங்கள் தெலுங்கையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டி ஆசை போலும்.
ஆனால் இந்த திருத்தம் கொண்டு வந்த போது இந்திய அமைச்சரவையில் பலமுடன் விளங்கிய தி.மு.க எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
அதன் விளைவுகளைப் பாருங்கள்.
- 2008ல் கன்னடா மற்றும் தெலுங்கு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
- 2013ல் மலையாளமும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்தியாவில் ஐந்து செம்மொழிகள். இவர்கள் அரசியலுக்காகவும், ஒட்டு வங்கிக்காகவும் என்னென்ன வேலைகளெல்லாம் செய்கிறார்கள், ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டியது தானே! ஏன் ஹிந்தி, குஜராத்தி, பெங்கால் மொழிகளை விட்டு வைத்து உள்ளனர் என்று எனக்குத் தெரியவில்லை. அவற்றையும் அறிவித்து விட வேண்டியதுதானே! நம் தமிழ் அறிஞர்கள் நமக்கு கிடைக்க வேண்டிய தகுதிகளை சுமார் 200 ஆண்டுகள் போராடி பெற்றனர், ஆனால் அவற்றை மற்றவர்கள் சிறு திருத்தம் மற்றும் கோரிக்கைகள் மூலம் தகுதியே இல்லாமல் பெற்றுவிட்டனர். அப்போது இந்தத் திருத்தத்தை தி.மு.க மற்றும் தமிழக அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும் அனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. அவர்களுக்கு வெறும் பெயர் மட்டுமே வேண்டும். அதனை பெற்றுவிட்டனர், நாம் நம் புகழை இழந்துவிட்டோம்.
இப்போது இந்தியாவில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என குப்பைகளோடு குப்பையாக சேர்ந்துவிட்டது நம் தமிழும்.
உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர்.
செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். (ஜோர்ஜ் எல்.ஹார்ட்).

தகுதிகள்
உலகில் செம்மொழிக்கான தகுதிகள் மொழி அறிஞர்கள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :
1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.
உலகச் செம்மொழிகள்
இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.
இந்தோ-ஐரோப்பிய மொழிகள்:
- கிரேக்க மொழி
- சமஸ்கிருதம்
- இலத்தீன்
பாரசீக மொழிஆபிரிக்க-ஆசிய மொழிகள்:
- அரபு மொழி
- எபிரேயம்
திராவிட மொழிகள்:
- தமிழ்
சினோ-திபெத்திய மொழிகள்:
- சீன மொழி
இவை அனைத்து உலக மொழி அறிஞர்களால் செம்மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் நம் இந்திய அரசு அங்கீகரித்துள்ள செம்மொழிகளைப் பார்க்கலாம்.
தமிழ்
சமஸ்கிருதம்
தெலுங்கு
மலையாளம்
கன்னடம்
எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆக குப்பைகளோடு குப்பையாக தமிழையும் சேர்த்து விட்டனர். மனம் வெம்புகிறது. இந்த அறிவிப்புகளுக்கு நம் தமிழ் அரசியல் வாதிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதைப் பார்க்கும்போது இன்னும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
வருகைக்கு மிக்க நன்றி. அப்படியே தங்கள் கருத்தையும் சொல்லிவிட்டும் செல்லுங்களேன்.
வந்துவிட்டீர்கள் அப்படியே இந்த பதிவுகளையும் வாசித்துவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே.
சரியா சென்னீர்கள்.
ReplyDeleteஅருமையான பகிர்வு .
வணக்கம்... தாங்கள் இப்போதுதான் முதல் வருகை என்று நினைக்கிறேன். தொடர்ந்து வருகைத் தாருங்கள், நல வரவு. இனிய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி...
Deleteதிமுக என்றாலே துரோகம் தான்.தமிழிலிருந்து தோன்றிய மலையாளமும் செம்மொழி கொடுமைடா சாமி
ReplyDeleteவணக்கம்,
Deleteஆமாம் ஆமாம். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை... கொடுமைதான்.
தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
கொஞ்ச நாளில் ஒரியா, மராத்தி, குயராத்தி, வங்காளி, அசாமி எல்லாம் செம்மொழியாகி விடும். தெற்கில் தமிழுக்கு அடுத்து பழமையான துளுவுக்கு மாநிலம் கூட கொடுக்காத இந்திய அரசு. கொடுமை, மலையாளம் கடந்த 200 ஆண்டுகளில் தான் முழு மொழியானதாம். 17-ம் நூற்றாண்டில் கேரளத்தில் தமிழ் வழக்கில் இருந்து தமிழ் நூல்கள் உண்டாக்கப்பட்டன, இது எங்கு போய் முடியுமோ. நாளைக்கே எங்கள் மதராஸ் பாசையும் செம்மொழியாக்க முனையப் போகின்றேன். அவ்வ்வ் !
ReplyDeleteவணக்கம் நிரஞ்சன்,
Deleteதாங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே, நாளையே இது நடந்தாலும் நடக்கலாம். ஆச்சர்யமில்லை.வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
ஆழமான அலசலுடன் கூடிய அருமையான பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி அண்ணா...
Deleteஇனிய வருகைக்கும், அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி...
அரசியல் லாபத்திற்காக மொழியை அடகு வைத்து விட்டனர்! அருமையான பதிவு! நன்றி!
ReplyDeleteவணக்கம்...
Deleteசிலர் தன்மானத்தையே அடகு வைத்து விட்டனர். என்ன செய்ய!!! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
அப்போ "டமில்" நம்ம இந்தோ-ஐரோப்பிய மொயீ கடயாதாபா?
ReplyDeleteஇல்லை... தமிழ், திராவிட மொழி என்கிறார்கள். தனிச்சிறப்பு வாய்ந்தது.
DeleteM K than sontha labathirkaka eghaiyum seivar
ReplyDeleteஆமாம்... அவர்கள் அப்படித்தான்!!! நாம் தான் சூதானமா இருந்து பொழச்சிக்கணும்...
Deleteவருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.... பேரை சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்...
vegu neeNda alasal. porumaiyaaga thEdippiduththu ivvaLavu vivaramum thandhadhaRkku paarattukkaL.
ReplyDeleteindha valaippadhivai paarkkavillaiyaayin indha vivarangaL theriyaamalE pOiyirukkum.chennaiyil irundhu anwar basha. from bashasdesk@gmail.com
வணக்கம் அன்வர் பாஷா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்...
vegu neeNda alasal. porumaiyaaga thEdippiduththu ivvaLavu vivaramum thandhadhaRkku paarattukkaL.
ReplyDeleteindha valaippadhivai paarkkavillaiyaayin indha vivarangaL theriyaamalE pOiyirukkum.chennaiyil irundhu anwar basha. from bashasdesk@gmail.com
:)
Deleteதமிழைப் பற்றி கவலைப்பட இன்று யாருமில்லை. அரைகுறைகளும், தற்குறிகளும், தான் தோன்றிகளும், சுயநலமிகளும் அரசியலை ஆக்கிரமித்தால் இதுதான் கதி. தமிழர்கள் என்றும், எதற்கும் கொதித்து எழப்போவதில்லை. இருப்பினும் உம்போன்ற சிலரால் தமிழ் உயிர் வாழ்கிறது என்பது மட்டும் என்றும் மாறாத உண்மை.
ReplyDeleteஅன்பின் வெற்றிவேல் - அரசியலில் இது மாதிரி எல்லாம் நடப்பதைத் தவிர்க்க இன்னும் இயலவில்லையே - நடுவண் அரசினை நாம் நம்பி இருப்பதும் அவர்கள் மாநில அரசுகளை நம்பி இருப்பதும் இது மாதிரித்தான் நடக்கும் - என்ன செய்வது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம்,
Deleteஅதிகாரம் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்கிறார்கள். கேட்க ஆள் இல்லை. என்ன செய்ய?
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
MIKA SARIYAAKA SOLLAP PATTA SEITHI !!!MU.KA VIN ATHIKAARA PASIKKU "THAMIL"" ILAK KAANATHU !!!
ReplyDeleteவணக்கம் ஐஸ்நாதன்,
Deleteஆமாம், சரியாக சொல்லியுள்ளீர்கள். அவர் தன சுயநலத்திற்காக அனைத்தையும் செய்துகொண்டார்.
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
எல்லாம் அரசியல் படுத்தும் பாடு
ReplyDeleteஅதற்காக நம் உரிமையை இழப்பது எவ்வகையில் சரியாகும்!!!
DeleteIYA PIRAMOZHIYAI KOORAI KOORATHIRKAL NAAM INDIARKAL ENRA ENNAME SIRANTHATHU
ReplyDeleteENGLISH KARAN VITHAITHTHA KALLI(ARIYA- DIRAVITAM) SETI INRUM AZHIYAVILLAI
வணக்கம் நண்பா...
Deleteநான் குறைகூறவில்லை, உண்மை நிலையைத் தான் கூறுகிறேன். இந்தியன் என்பதற்காக உண்மையையும், என் உரிமையும் மறைத்துக் கொண்டிருக்க இயலாது.
நான் திராவிடம் என்ற சொல்லையே நம்புவதில்லை, அது ஒரு அரசியல் சொல். தமிழ் பற்றியும், அரசியலின் உண்மை நிலை பற்றியுமே கூறுகிறேன்... தங்கள் வருகைத் தொடரட்டும்....
நண்பா அவை அனைத்தும் தமிழ் மொழியிடமிறுந்து பிரிந்தவை.
ReplyDelete