தன் கரைப் புற்க்களினால்
தானாக சுரந்தோடும் பசும்பாலுடன்
கரையோர மரங்களின்
மனம் பரப்பும் பூக்களோடும்
இளம் காளையரின் தோல் நனைத்து
கன்னிப் பெண்களின் மார் தழுவி..
தன் மடியில் துள்ளித் திரிந்த மீன்கள்
ஒற்றைக் காலில் காத்திருந்து இறைதேடும்
பச்சிகள் என் யாவற்றையும் இழந்து...
பாலிதீன் குப்பைகளையும் நகரக் கழிவுகளையும்
தன்னோடு சுமக்கும் நிலை கண்டு
மனம் வெதும்பி, மழையைப் பொய்த்து
கருவேல மரங்களாயும் பொட்டல் நிலமாகவும்
மாறிக்கொண்டிருக்கும் நதிகள்...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
தானாக சுரந்தோடும் பசும்பாலுடன்
கரையோர மரங்களின்
மனம் பரப்பும் பூக்களோடும்
இளம் காளையரின் தோல் நனைத்து
கன்னிப் பெண்களின் மார் தழுவி..
தன் மடியில் துள்ளித் திரிந்த மீன்கள்
ஒற்றைக் காலில் காத்திருந்து இறைதேடும்
பச்சிகள் என் யாவற்றையும் இழந்து...
பாலிதீன் குப்பைகளையும் நகரக் கழிவுகளையும்
தன்னோடு சுமக்கும் நிலை கண்டு
மனம் வெதும்பி, மழையைப் பொய்த்து
கருவேல மரங்களாயும் பொட்டல் நிலமாகவும்
மாறிக்கொண்டிருக்கும் நதிகள்...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது... வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமாசடைவது இயற்கை மட்டுமல்ல
ReplyDeleteமனிதனும் சேர்ந்துதான்...
அழகிய சிந்தனை. அருமையான கவிதை!
வாழ்த்துக்கள் சகோ!
*எழுத்துப் பிழைகளை கவனியுங்கள்.. நன்றி!..
நதிக்கரையில் வீடு கட்டுவதை சேர்த்திருக்கலாம்.
ReplyDelete"புற்களினால்" என்றும் "பொட்டல்" என்றும் மாற்றிக்கொள்ளவும்..
நன்றி...
எங்கே போய்க்கிட்டு இருக்கோம் நாமன்னுதான் தெரியலை
ReplyDeleteஅழிவை நோக்கி தான்.... வேறெங்கே....
ReplyDeleteவிழிப்படையும் நேரமிது...... விழிக்கச் செய்யும் வரிகள் இவை!!
ReplyDeleteஉறக்கத்தில் இருந்து மீன வேண்டிய நேரம் இது. அருமையான வரிகள்
ReplyDeleteஅருமையான வரிகள்...
ReplyDelete///தன் கரைப் புற்க்களினால்
ReplyDeleteதானாக சுரந்தோடும் பசும்பாலுடன்
கரையோர மரங்களின்
மனம் பரப்பும் பூக்களோடும்
இளம் காளையரின் தோல் நனைத்து
கன்னிப் பெண்களின் மார் தழுவி..
தன் மடியில் துள்ளித் திரிந்த மீன்கள்
ஒற்றைக் காலில் காத்திருந்து இறைதேடும்
பச்சிகள் ///
என்று நீங்கள் வர்ணித்தது போலவே இருக்கும் நதிகரையில் உட்கார்ந்தால் ஆனந்தம் தான். ஆனால் நதிகளெல்லாம் தான் நீங்கள் சொல்வதுபோல் பிளாஸ்டிக் பைகளால் நிரம்பிவிட்டதே
நதியின் சோகம் ...!
ReplyDeleteநாடாதிருந்தேன் எங்கிருந்தோ எனை நாடி வந்திங்கே
ReplyDeleteவாடா மலர் தந்து வாழ்த்துரைத்தாய் !!.................
வணங்குகின்றேன் வார்த்தைகளால் அலங்கரித்து
நான் வடித்த கவிதைக்கோர் மகுடம் சூட்டிய நன் மனதே
வாழ்க வாழ்க வலைத்தளம் உள்ளவரை இவ் வையகத்தில்
நாம் உள்ளவரை நிலைத்திருக்கட்டும் நீங்காது இன்று போல்
உனது நட்பும் எமக்கு நிலவைப் போல .
அனைத்தும் அருமையானதாய் உள்ளது
ReplyDeleteஅருமையான கவிதைகள்
ReplyDeleteஅருமையான வலைதளம் ..என் பக்கம் வந்து பின்னூட்டமிட்ட்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி வெற்றிவேல் .
ReplyDeleteAngelin.
உண்மை இதுதான .இப்போல்லாம் பீச்சில் நண்டு சிப்பிகளை காண்பது அரிது .அப்பாவி கடல் வாழ் உயிரினங்கள் ப்ளாஸ்டிக்கை உணவென்று நினைத்து தின்று மரிக்கின்றன .
ReplyDeleteAngelin
ஆமாம் ஏஞ்சலில்... தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. பிளாஸ்டிக்கை முடிந்த வரை தவிர்ப்பதே நல்லது...
Deleteதங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...