அது ஒரு மாலைப் பொழுது, நானும் என்னவளும் எங்கள் ஊர் அழகிய நீரோடையில் காலாற நடந்து உலாவிக் கொண்டிருந்த நேரம், மாலையில் சிறு உலா தான் அது. எந்தன் கையைப்பிடித்த படியே என்னுடன் பல கதைகள் பேசி நடந்து கொண்டே வந்தாள் என்தன் தோழி. மாலையில் நடந்த அந்த இரவுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த அழகிய போராட்டத்தை ரசித்த படியே இருவரும் வீடு நோக்கி நடந்தோம். அந்த மாலைப் பொழுதின் ரம்யம் எங்களை அப்படியே கட்டி வைத்தது. அப்படியே என்னுடன் வந்த என்தன் அழகு ராட்சசியும் என்னை அவளது கரங்களால் சேர்த்து என் கரங்கள் வழியாக என்னைக் கட்டிக் கொண்டாள்.
வயலுக்குச் சென்ற பாட்டி, ஆடு மேய்க்கச் சென்ற தாத்தா, களைப் பறிக்க சென்றவர்கள், நாற்று நட போனவர்கள் என யார் எதிரில் திரும்பினாலும் என்தன் கையை விட நான்மறுக்க, அவள் வெட்கத்துடன் கையை உதற ஆசைப்பட்டாலும், விடாத என்தன் கை. அந்த ஸ்பரிசத்தில் அவ்வளவு பேரானந்தம், அனுபவித்தால் தான் தெரியும். கடந்து சென்றவர்கள் எல்லாரும் பொறாமையுடன் சென்றது அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது. அழகாக பாடிக் கொண்டே இருந்தது எங்கள் இருவருக்கும் பிடித்த பாடல்கள்.
மாலை நேரம் வந்துவிட்டதால் ஓடை மணலின் சூடு குறைந்து பாதத்திற்கு அழகாக வெது வெதுவென்ற ஓர் உஷ்ணம், நடக்க நடக்க பாதத்திற்கு மிக இதமாக இருந்தது, வெயில் குறையக் குறைய இன்னும் நீரோடை மணல் ஏற்கெனவே தன் ஈரப் பதத்தை இழந்திருந்ததால் அது இன்னும் மாலைத் தென்றலில் குளிர்ச்சியாகிக் கொண்டே சென்றது. தேகத்தை வருடும் அழகிய இனியத் தென்றல், பாதங்களில் இதமான மணல், அருகில் என்னுடன் கைகொர்த்தப் படியே நடைபழகும் என்தன் வளர்ந்த குழந்தை (மனைவி). இந்த நிகழ்வுகள் என்னை வேறு உலகத்திற்கே கூட்டிச் செல்ல முயன்றுகொண்டிருந்தன. ஆனால் என்னவளின் இருப்பு, என் மனம் கூட எங்கும் அலையாமல் என்னை அவளையே சுற்றிவரச் செய்தது, அவளது விரல் தீண்டலின் ஸ்பரிசம், காற்றில் அசைந்தாடும் அவளது மெல்லிய கூந்தல், நான் அவளிடம் நடைப் பழகையில் உரசும் தோல். என இன்னும் ஏராளம்.
இருளுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த பெரும் போரில் இருள் மெல்ல மெல்ல வென்றுகொண்டே வந்தான், கதிரவன் இருட்டுக்காக விட்டுக் கொடுப்பவன் போல செங்கதிர்களை வீசி விலகிக் கொண்டும், சந்திரனோ தன் பங்கிற்கு அவனும் கீழை வானத்தில் உலாவ ஆரம்பித்தான். எனக்கோ இந்தக் காட்சிகள் எதுவும் பெரியதாகப் படவில்லை. இந்த இயற்கை காட்டும் பேரழகைவிட அவற்றின் சாயலில் என்னுடன் வரும் என்தன் தேவதையே எனக்குப் பெரியதாக தெரிந்து கொண்டும் வந்தாள். அவளின் சிறு புன்னகையில் அந்த மாலை நேர வனப்பு எல்லாம் தோற்றுவிடும் போல இருந்தது.
அன்று நான் முதன் முதலில் கண்ட நாளில் எனக்கு எப்படித் தோன்றினாளோ, அப்படியேதான் இன்றும் இந்த மனம் மயங்கும் மாலைப் பொழுதிலும் எனக்கு என்தன் தேவதை எனக்கு காட்சியளித்துக் கொண்டிருந்தாள். ஆமாம் சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கூட மாலை நேரம், பள்ளி முடிந்து திரும்பும் பொழுதில் மாலைக் கதிரவனின் செங்கதிர்கள் இவள் குழல் மீதுப் பட்டு முத்துக்களாகவும், தங்கமாகவும் சிதறும். அதனை நான் அன்று தூரத்தில் இருந்து ஒளிந்திருந்து பார்ப்பேன், இன்று சிதறும் முத்துகள் அனைத்தும் என் மீதே தெரித்துக் கொண்டு இருக்கிறது அவள் கூந்தலின் செங்கதிர் ஸ்பரிசத்தால். நான் மாய உலகில் சங்கமமாக, கடந்த காலம் அப்படியே நினைவில் ஓடும் அற்ப்புத தருணம், அப்படியென்ன சிந்தனையாம் என்று கேட்ட குரலுடன் நிகழ்காலம் திரும்பினேன் அந்த கடந்தகாலத்திலிருந்து...
எதிர்கால நினைவுகள் தொடரும்...
...வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...
சாளையக்குறிச்சி...
தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. நினைவுகள் கவிதையாய் ஜொலிக்கிறது.
ReplyDeleteவணக்கம்...
Deleteதங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...
இதமான அழகான வரிகள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
வணக்கம் அண்ணா...
Deleteஇனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
நினைவுகளின் ஸ்பரிசம் நெஞ்சு நிறைத்தது
ReplyDeleteகனவுகளாய் இல்லாமல் காட்சி விரிந்தது
உறவின் உண்மை உன்னதமானது உன்`ராட்சசி`
பிறந்ததே உன் புகழ் போற்றவே!
அருமை சகோ! வார்த்தகள் சொன்னது ஆயிரமாயிரம்.
அழகிய காதல் காட்சிக் காவியம்.
தொடரட்டும். வாழ்த்துக்கள்!
வணக்கம் தோழி...
Deleteதங்கள் கருத்து எனக்கு மேலும் மகிழ்ச்சியூட்டுகிறது... எழுதும் ஆர்வத்தையும் அதிகரிக்கிறது, நன்றி...
இனிய வருகைக்கும், அழகான கருத்துக்கும் மிக்க நன்றி... வருகை தொடரட்டும்...
அடடா என்ன ஒரு கற்பனை? இது தொடரவேண்டும்! வித்தியாசமான தலைப்பும்கூட!
ReplyDeleteகண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன் நண்பா...
Deleteவருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...
நாளைமுதல் வலைச்சர ஆசிரியப் பணி பொறுப்பேற்கின்றீர்களென அறிந்தேன்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சகோதரரே!
உங்கள் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்!
வணக்கம் தோழி... தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... கொடுத்த பணியை சிறப்பாக முடிப்பேன் என நம்புகிறேன்...
Deleteநன்றி...
வலைச்சர ஆசிரியருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅசத்துங்க...
வணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
அன்பின் வெற்றிவேல் - அருமையான சிந்தனை - எதிர்கால சிந்தனை நன்று - ஆக்க பூர்வமான சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் அய்யா...
Deleteதங்கள் வருகைக்கும், அழகான கருத்துக்கும் மிக்க நன்றி...
//எல்லாரும் பொறாமையுடன் சென்றது அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது//
ReplyDelete//இருளுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த பெரும் போரில் இருள் மெல்ல மெல்ல வென்றுகொண்டே வந்தான்//
எதிர்கால நினைவுகளுக்காக காத்திருக்கிறேன், நண்பனே!
வணக்கம் சைதை அஜீஸ்,
Deleteகாத்திருங்கள் விரைவில் அடுத்தது வரும்...
வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...