Nov 30, 2011

வரலாற்றுப் புதினங்களை மின்னூலாகப் பதிவிறக்கம் செய்ய

புத்தகங்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், அதிலும் வரலாற்றுப் புதினங்கள் என்றால் சொல்லவா வேண்டும், தற்போது தமிழகத்தில் கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக  அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Nov 28, 2011

உந்தன் பிரிவும், உந்தன் நினைவும்


மனம் தவிக்கிறது
மனதில் அமைதி இல்லை;
புல்வெளியும், முல்படுக்கையாய்த் தோன்றுகிறது.
நடப்பது அனைத்தும் விரக்தியைத் தோன்றுகிறது
அடுத்து முன்னேற முடியவில்லை
வாழ்க்கையிலும்.
சோலைவனத்தையும்
பாலை வனமாக்கியது
உந்தன் பிரிவு.
காரனமரியாத் தவிப்பு
நெஞ்சு கனத்தது
கண்ணீர் நிரப்பியது கண்களை;
கண்களை மூடினேன்
உந்தன் பசுமையான நினைவுகள்
எந்தன் மனத்திரையில் ஓடியது.
மனம் நிறைவடைந்தது
உற்ச்சாகமானது,
என்னைச் சுற்றி அனைத்தும்
இன்பமயமாய்த் தோன்றியது.
உந்தன் பிரிவே எனக்கு நோயும் ஆனது
உந்தன் நினைவே அதற்க்கு மருந்தும் ஆனது...
மாலை மதியோ,
மேற்க்கு வானில்
கண்டும் காணாமலும் நகர்கிறான்
தினமும் என்னை நகைத்துக்கொண்டே...

ஏமாந்தவனின் கவிதை



கதைகளில் கேட்டேன்,
அன்று நம்பினேன்;
தேவதைகளும்,
அழகுப் பேய்களும்,
வெள்ளை உடையில் உலாவுமென்று...
ஆனால் இன்று நம்பவில்லை.
ஏனென்றால்
நீயோ வண்ண உடையில்லவா
உலாவிக் கொண்டிருக்கின்றாய்...
என் அழகு ராட்சசியே
என்னை வதைக்கும் பேயாக...

வாக்கு மூலங்கள்:


 

என் செல்லமே, என் கண்ணே,

என் அன்பே...
என் கண்களுக்கு ஆணை இட்டேன்
நீ என்னைக் காணும் வரை விழித்திரு என்று,
கண்டு விட்டாய், இமைத்து விட்டேன்.

என் கால்களுக்கு ஆணை இட்டேன்
நீ வரும் வரை காத்திரு என்று,
வந்து விட்டாய், சென்று விட்டேன்.

என் மனதிற்கு ஆணை இட்டேன்
நீ நுழையும் வரை திறந்திரு என்று
நுழைந்து விட்டாய், அடைத்து விட்டேன்.

என் உயிருக்கு ஆணையிட்டேன்
நீ இறக்கும் வரை வாழ்ந்திரு என்று
இறந்து விட்டாய்- நான் மட்டும்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,
இந்த கவிதை வாக்குமூலங்களுக்காக

இதோ
முடிந்தவுடன் இறந்துவிடுகிறேன்...
முடிந்தும் விட்டது!
நாளைய காதலர்கள்
இதற்கு தீர்ப்பெழுதட்டும்!
பாவம்,
அவர்களாவது ஆணையிடாமளிருக்க!!!

Nov 21, 2011

தண்ணீர் சிகிச்சை

1.தலைவலி 2.ரத்த அழுத்தம் 3.சோகை 4.கீல்வாதம் 5.பொதுவான பக்கவாதம் 6.ஊளைச்சதை 7.மூட்டுவலி 8.காதில் இரைச்சல் 9.இருதயத் துடிப்பு 10.மயக்கம் 11.இருமல் 12.ஆஸ்துமா 13.சளி 14.காச நோய் 15.மூளைக் காய்ச்சல் 16.கல்லீரல் நோய்கள் 17.சிறு நீரகக் குழாய் 18.பித்தக் கோளாறுகள் 19.வயிற்றுப் பொருமல் 20.ரத்தக்கடுப்பு 21.மூலம்

Nov 4, 2011

அதிர்ச்சி தரும் ஜெயலலிதாவின் நடவடிக்கை:


ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தததும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர் பார்த்தேன். அதில் எதிர் பார்த்தது ஊழலுக்கு எதிராக விசாரணை அமைப்பு, மணல திருட்டைத் தடுப்பது, மின் பட்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்தல், கொலை கொள்ளை போன்றவற்றைத் தடுத்தல்,  காவல் துறையை நவீனப் படுத்தி, அதனை சீரமைத்தல். இன்னும் அதிகமாகவே எதிர் பார்த்தேன். ஆனால் ஏதும் நடக்கவில்லை...

புதிய தலைமைச் செயலகத்தை மாற்றியது, சமச்சீர்க் கல்வியை கை கழுவ நினைத்து நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியது. முன்னாள் தி.மு.க.களை கைது என தொடர்கிறது...

மூன்று பேரின் தூக்கு தண்டனையை எதிர்க்காதது, மீனவர் பிரச்னையை தீர்க்க முயற்சிக்காதது என ஆக்கப் பூர்வமான வேலைகளில் கவனம் செலுத்தாமல், கருணாநிதி செய்த ஏதும் தமிழகத்தில் இருக்கக்கூடாது என வேலைத் தொடர்கிறது.

இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றம் செய்யப் போகிறோம் என்று கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

இந்திய வரலாற்றில் அடிமை வம்சத்தில் ஒரு மன்னன இருந்தான், அவன் பெயர் முகம்மது பின் துக்ளக். இவன் தான் ஜெயலலிதாவாக மாறி பிறந்து விட்டான் என்று தோன்றுகிறது...

ஏனெனில் இவனும் இப்படித்தான் தலைநகர் இடமாற்றம், நாணயத்தை தொலிற்கு மாற்றுதல் என்று பல காமடிகளைச் செய்தான். அனைத்தும் தோல்வியில் முடிந்தது. .


கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் தான் நூலகம் அமைய வேண்டும் - ஜெயலலிதா. டி.பி.ஐ வளாகத்தில் கல்வித்துறை சார்ந்த நிர்வாக அலுவலகங்கள் தான் உள்ளன. ஆனால், இன்று அண்ணா நூலகம் அமைந்துள்ள பகுதியில் என்னென்ன உள்ளன தெரியுமா?
1. அண்ணா பல்கலைக்கழகம்
2. சென்னைப் பல்கலைக்கழக கிண்டி வளாகம்
3. ஐ.ஐ.டி சென்னை.
4. ண்ணா ஜெம் மேநிலைப் பள்ளி
5. ஏ.எம்.எம் பள்ளி
6. தேசிய தோல் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்
7. எம்.ஏ செவிலியர் பயிற்சிக் கல்லூரி
8. மத்திய தொழிற்நுட்பக்கழகம் (CPT)
9. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU)
10.தேசிய அச்சுத் தொழிற்நுட்பக் கல்விக் கழகம்.
11. ரோஜா முத்தையா மைய நூலகம். 12. எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம்.
13. இந்திய தேசிய ஆடைகள் கல்விக் கழகம்.
14. ஆசிய இதழியல் கல்லூரி
15. இந்திய விடுதி மற்றும் விருந்தோம்பல் கல்விக் கழகம்.
16. கணித நிறுவனம்.
17. திரைப்படக் கல்லூரி.
18. தர்மாம்பாள் மகளிர் தொழிற்நுட்பக் கல்லூரி.
19. தமிழ்நாடு வணிகக் கல்விக் கழகம்.
20. தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர் பயிற்சிக் கழகம்.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் Google Maps ல் சென்று பார்க்கவும். இவ்வளவு கல்வி நிறுவனங்களும் அண்ணா நூலகத்தில் இருந்து சுமார் 10 நிமிட பயண தூரத்திலேயே அமைந்துள்ளன. இதைவிட நூலகம் அமைக்க சிறந்த இடம் எது....?

ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்கிற அரசின் முடிவு, நிஜமாகவே தூக்கிவாரிப் போடுகிறது.

 கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக? நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், "ரொம்ப ஓவர்!'

தலைமைச் செயலகக் கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்வரின் அறிவிப்பு வந்தபோது நாம் முன்வைத்த அதே கருத்தைத்தான் இப்போதும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். அலுவலக வளாகத்துக்காக, நூலகத்துக்காக, மருத்துவமனைக்காக வெவ்வேறு விதமான பயன்பாடுகளைக் கருதி அதற்கேற்றாற்போன்ற கட்டட அமைப்புகளை நமது கட்டடக் கலை வல்லுநர்கள் உருவாக்குகிறார்கள்.

அதற்கு என்று வெவ்வேறு கட்டடக் கலை நிபுணர்கள் (ஆர்க்கிடெக்ட்ஸ்) இருக்கிறார்கள். திரையரங்குகளைக் கூடத் திருமண மண்டபங்களாக அப்படியே மாற்ற முடியாத நிலையில் அலுவலக வளாகத்தையும், நூலகத்தையும் மருத்துவமனைகளாக மாற்றி அமைக்கப் போகிறோம் என்பது விபரீத யோசனை மட்டுமல்ல, வெட்டி வேலையும்கூட.

எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், இப்போது பராமரிப்புகூடச் சரியாக இல்லாமல், குழந்தைகளை நாய் கவ்விச் சென்ற சம்பவங்கள் வெளியில் வராமல் அடக்கி வாசிக்கப்படும் அவலத்தில் இருக்கிறது. அந்த மருத்துவமனையை சர்வதேசத் தரத்துக்குத் தரம் உயர்த்தி ஏழைகளுக்கும் சிறப்பான சேவையை அளிக்க முன்வருவதை விட்டுவிட்டு, சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும், செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை இடமாற்றம் செய்கிறேன், அறிவுசார் பூங்கா அமைக்கிறேன் என்றெல்லாம் அரசு கூறுவது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன?

சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?

சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?

உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்?

நூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்!
அண்ணா நூற்றாண்டு நூலகம் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாற்றப்பட்டுள்ளது என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் (எதிர்கட்சித் தலைவர்): அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த நூலகம் உயர் கல்விக் கூடங்கள் நிறைந்த பகுதியில் அமைந்திருகிறது. கல்வியாளர்கள் படிப்பதற்கும்,  ஆராய்ச்சி செய்வதற்கும் ஏற்ற சூழ்நிலை அங்கு அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை பொருத்தவரை அமைப்பு முறையை பற்றியோ, கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் இருந்தன என்றோ குற்றச்சாட்டு எழவில்லை. அண்ணா பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே அவர் பெயரில் உலகத்தரம் வாய்ந்த ஒரு நூலக கட்டிடம் அமைந்திருப்பது பொருத்தமானது. குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றை அரசு அமைக்க விரும்பினால், ஏற்கனவே இயங்கி வரும் குழந்தைகள் நல மருத்துவமனையை மேம்படுத்தலாம்; அல்லது, புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய குழந்தைகள் நல மருத்துவமனையை திருமழிசையில் புதிதாக அமையவிருக்கும் துணை நகரத்தில் அமைக்கலாம்.
திமுக ஆட்சியில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டது என்ற காரணத்தாலேயே, இன்றைய ஆட்சி அதை மாற்றுகிறதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் காரணமாகவே முந்தைய ஆட்சியில் செய்தவைகள் எல்லாம் இன்றைய ஆட்சியில் மாற்றுவதன் மூலம் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது. ஆகவே, மக்கள் நலன் கருதி நூலக கட்டிடத்தை மாற்றக்கூடாது.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற அரசு எடுத்துள்ள முடிவை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசின் இந்த தவறான முடிவுக்கு கல்வியாளர்கள், தமிழ் சான்றோர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சியில் எழுப்பப்பட்ட நூலகம் என்ற காரணத்துக்காகவே, அதிமுக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 

சமச்சீர் கல்வியை அதிமுக அரசு முடக்க முனைந்தபோது தமிழகமே எதிர்த்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகே அதிமுக அரசு செயல்படுத்தியது. ஆனாலும், அதிமுக அரசு எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. நூலகத்தை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): தமிழக அரசின் இந்த முடிவு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நூலகம் மிகப் பெரிய தகவல் களஞ்சியம் மட்டுமின்றி, சென்னை மாநகரின் புதிய அடையாளமாக உள்ளது. அங்கு குழந்தைகள் நல மருத்துவமனையை அமைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக, நூலகத்தை இடமாற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது. நூலகம் அதே இடத்தில் செயல்படும் என்று ஜெயலலிதா அறிவிக்க வேண்டும்.
கி.வீரமணி (தி.க. தலைவர்): திமுக அரசால் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. கருணாநிதி மீது காழ்ப்பு, எதிர்ப்பு, வெறுப்பு காரணமாக இருந்தாலும், உண்மையாக அண்ணாவை அவமதிக்கும் முடிவு இது,
அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தி, ஆட்சி செய்வோர் இப்படி அண்ணாவின் புகழுக்கும், 

பெருமைக்கும் களங்கத்தை உருவாக்கும் செயலில் ஈடுபடலாமா?  தமிழக அரசின் இந்த முடிவை மாற்ற வேண்டும். மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, இதுபோன்றவற்றில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது தேவையா? இவ்வாறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

ஜெயலலிதாவின் முடிவிற்கு நீதிமன்றம் தடை:
சென்னையில் கோட்டூர் புரத்தில் இயங்கிவந்த அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்வதாக அரசு அறிவித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பொதுநல மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தார். மறு உத்தரவு வரும் வரை இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, இது தொடர்பாக தமிழக அரசு 6 வார காலத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சி தருவதாகவும் கூறியுள்ளார்.