Aug 28, 2013

உதிரும் நான் -19

கவிதையை எந்த 
நடையில்
எழுதினாலும்...

உன் காதல் மொழி போல்
சுவையாய் இல்லையடி
என் காதலி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Aug 23, 2013

உதிரும் நான் -18

திருவிழாக் காலங்களில்
பரபரப்பாக மாறிவிடும்
கோவில் தெரு போல் 
ஆகிவிடுகின்றேன்...

அவளைப்
பார்க்கும் தருணங்களில்
மட்டும்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Aug 20, 2013

உதிரும் நான் -17

வயல் வரப்புகளினூடும்,
காய்ந்துபோன ஓடை
மணலிலும்,
கள்ளிச் செடியின் மேல்
எழுதிய நம் பெயர்
தானடி
என் முதல் கவிதை...

வெற்றிவேல்...

சாளையக்குறிச்சி...



Aug 17, 2013

நாம் (தமிழ்) அழிந்து கொண்டிருக்கிறோமா? சில கேள்விகள்...!


அனைவருக்கும் வணக்கம், எனக்குள் பல நாட்களாக தோன்றிக்கொண்டிருந்த கேள்விகளின் பதில் தான் இந்த பதிவு. அனைவரும் கூறுகிறார்கள் தமிழ் மொழி தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழ் இனி மெல்லச் சாகும் என்று. இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழின் தடமே அழிந்துவிடும். அதாவது தமிழ் பேச்சு வழக்கிலிருந்து அழிந்து, அது தற்போதுள்ள சமஸ்கிருதம், கிரேக்கம் மற்றும் லத்தீன் போன்று ஏட்டளவில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அது தன் சுய மதிப்பை இழந்துவிடும் என இன்னும் பலவாறு வதந்திகள் நீண்டுகொண்டே இருக்கிறது... ஆனால் எனக்கு இவற்றில் உடன்பாடு என்பது சிறிதும் இல்லை...

Aug 16, 2013

உதிரும் நான் -16

கொசுவத்தை வாரி
இடுப்பில் சொருகி, 
வியர்த்த நெற்றியோடு 
எக்கி எக்கி தான்
எட்டாத மாங்காயைத் 
தொரட்டியால் தட்டுகிறாள்...

ஆனால்,

விழுவது என்னமோ,
நானாகவே இருக்கிறேன்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Aug 14, 2013

உதிரும் நான் -15

நாடே சுதந்திரத்தைக்
கொண்டாடிக்கொண்டு
இருக்கிறது...

ஆனால்
என் மனமோ
அவள் காதல் தேசத்தில்
அடிமைப் பட்டுக் கிடக்கவே
ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறது...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Aug 13, 2013

உதிரும் நான் -14

அவள் தன்
தலையணையை கட்டிக்கொண்டு
உறங்கிக் கொண்டிருக்கிறாள்...

என் இரவோ
என்னை முழுவதுமாக
கேலி செய்து கொண்டிருக்கிறது...


வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Aug 11, 2013

உதிரும் நான் -13

அவளைப் பற்றி
தினமிரவு நட்சத்திரங்களுடன்
கதைத்துக் கொண்டிருப்பேன்.
என்ன ஆச்சர்யம்!

இப்போதெல்லாம் பகலிலும்
அவள் கதையைக் கேட்க
நட்சத்திரங்கள் தோன்றிவிடுகிறது
என் வானில்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...




Aug 8, 2013

பிறந்த நாள் கவிதை

வெட்கங் கெட்டவனாய்
வீதியில் திரிந்து கொண்டும்,
ஏதோ நினைப்பில்
சிரித்துக்கொண்டும்
காரணமறியாமல் நான்...

தேய்ந்து வரும் நிலவை
வளர் பிறையோடு எப்படி
ஒப்பீடு செய்ய...

உன்னைப் பார்த்தே
தினமும் பூக்க முற்படும்
தாழை'யாக நான்...

உன்னைப் போலவே தினமும்
பூக்க பன்னிரண்டு வருடம்
தவம் இருக்கும் குறிஞ்சி
மலர்...

உருவகம் காட்ட முற்ப்பட்டு
தோற்கிறேன்- ஒப்பீடு என்பதே
இல்லாதவளுக்கு!

எப்படி சொல்ல முயன்றாலும்
அத்தனைப் பஞ்சம்- என்
சொற்களுக்கும்
கற்பனைக்கும் உன்னை எழுத!!!

ஆயினும் விழைகிறேன்.
அன்புத் தோழியான
அழகுத் தேவதைக்கு
அன்பான
வாழ்த்துகள் கூற...

இனிய
பிறந்த நாள்
நல்வாழ்த்துகள்...


அன்போட வெற்றிவேல்...

டிஸ்கி:
அனைவருக்கும் வணக்கம்... இன்று (அதாவது ஆடி 24, வெள்ளிக்கிழமை) எனக்கு பிறந்த நாள். பல வருடம் கழித்து வெள்ளியும் ஆடி 24ம் சேர்ந்து வருது... பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் கொஞ்சம் சந்தோசம். மேல இருக்கற கவிதை எனக்கு நானே எழுதுனது இல்ல, சில மாதங்கள் முன்னாடி நான் எழுதுனது... என்னோட கவிதை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு, அப்படியே வாழ்த்திவிட்டு செல்லுவீங்களாம்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Aug 7, 2013

உதிரும் நான் -12

என் உறக்கம், என் இரவு
என அனைத்தையும்
களவாடி விடுகிறாள்...

நான் உறங்கிவிட்டதாய் நினைத்து 

அவள் கொடுக்கும் ஒற்றை 
முத்தத்தில்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Aug 5, 2013

அவள் கேட்க மறந்த என் காதல் கனவுகள்

தேங்காய்ப் பூக்களாய்
உதிரும் அவள்
புன்னகையை
மொத்தமாக 
உண்ணத் துடிக்கும்
நான்...

சிறு சிறு தூறல்களாய்
நெடு நேரம் நனைக்காவிட்டாலும்
கோடை மழையாய் அவளை
சட்டென அணைக்க
ஆசைப்படும் நான்...

அவளைப் பார்த்து
மலரும் தாழம்பூ'வாய் 
தினமும் மலர நினைக்கும்
என் காலை...

அந்தி மாலையில்
கூவும் குயிலுக்குப் பதில்
நான் உரக்கக் கூப்பிட 
நினைக்கும்
அவள் பெயர்...

அவள் கண்ணசைவில் 
ஊஞ்சலாடிக்
கொண்டிருக்க்கும்
என் காதல்...

அவள் காதலுக்காகவே 
ஏங்கிக்கொண்டிருக்கும் 
என் உயிர்...

என இன்னும் 
எத்தனையோ, 
அவள் கேட்க மறந்த 
என் காதல் கனவுகள்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...