Aug 5, 2012

அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்

வரலாறு  என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் சரியானதுமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா? அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும்? சிறிது ஞாபகப்படுத்துங்களேன்.


அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான். இந்தியாவின் மிகச்சிறந்த, பெரிய பேரரசர். பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார், கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது.  பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார், இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது, ஆனால் அசொகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது. அது திட்டமிட்டே அனைத்து சரித்திர புத்தகங்களிலும், வரலாற்றிலிருந்தும் மறைக்கப் பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது இந்திய அரசு மற்றும் புத்தஅமைப்புகளால்.

Chakravatin.JPG
அசோகன்
அது  என்னவெனில் பேரரசர் அசோகர் பார்ப்பதற்கு மிகவும் அவ லட்சனமாகவும், கரிய நிறமாகவும் அழகற்றவராகவும் இருந்தார், ஒருமுறை அவர்  அந்தப்புரத்திற்கு சென்றபோது அவரை மற்ற பெண்கள் அனைவரும் கேலி செய்துவிட்டனர், அதனால் அவர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட  பெண்களை கழுவில் ஏற்றி கொடுமை செய்து கொன்று விட்டார்.  அவர் ஒரு ஆண் மகனாக இருந்திருந்தால் தனது ஆண்மையை அந்த பெண்களிடம் அவர் நிரூபித்திருக்க வேண்டும், அதனை விட்டு அவர் தனது அதிகாரத்தினால் அனைவரையும் கொடுமை செய்து கொலை செய்வது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?

மேலும் அவர் எப்படி அரியணை ஏறினார் என்பதை அனைத்து நூல்களும் தனது தமையனுடன் போரிட்டுவென்றார் என்றே கூறுகிறது. ஆனால் அவர் தனது சகோதரர்கள் 99 பேரை வஞ்சகமான முறையில் கொன்றே அவர் ஆட்சி பீடத்தில் ஏறினார்.  ஏனோ தெரியவில்லை அவர்  திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை. 

மேலும்  இவன் தனது அரண்மனையில் அந்தப்புரத்துடன் ஒரு சித்தரவதைக் கூடாரத்தைம் நிறுவி எதிர்ப்போரை சித்தரவதை செய்து கொன்றுல்லான்.

அரச பதவி ரத்த சொந்தம் அறியாது என்று கூறுவார்கள்" இதற்க்கு எடுத்துக் காட்டாக அனைவரும் ஔரங்கசீப்பை மட்டுமே கூறுகின்றனர். ஏனெனில் அவர் தனது நான்கு சகோதரர்களை கொன்றிப்பார். ஆனால் தனது 99  சகோதரர்களைக் கொன்ற இந்த அசோகனை எங்கே, எதில் சேர்ப்பது?

வரலாறு எப்போதுமே உண்மையை கூற மறுக்கிறது, அது எழுதுபவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் விருப்பம், இனம், மொழி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு அரசர்களின் வரலாறும் எழுதப் படுகோறது என்பது மிகவும் வேதனை தரும் செய்தி.

அதிலும்  நியாயம், தர்மமே இல்லாத அரசனின் படைப்பில் இருக்கும் சக்கரத்தை தர்ம சக்கரமாக கூறி, நமது தேசியக் கொடியில் போட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கேவலமாகவும் உள்ளது.

வலைப்பதிவு நண்பர்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில நாள்களாக என்னால் வலையுலகத்திற்க்கு வர இயலவில்லை. நான் எனது கிராமம் சாலைக்குறிச்சி, அரியலூரில் இருந்து சென்னைக்குப் பணி நிமித்தமாக இடம்பெயர்ந்து விட்டதால, பல தடங்கல்கள் மற்றும் நெட்வொர்க் பிரச்சினைகளாலும் என்னால் வர இயலவில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே. நான் பதிவிடாத நேரங்களிலும், தலத்திற்க்கு வந்து சென்ற அந்த நல் உள்ளங்களுக்கு என் நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

உசாத்துணை:
மகா வம்சம் மற்றும் இணையதள குறிப்புகள்


34 comments:

  1. அசோகரைப்பற்றிஅறிந்திராத தகவல்கள்! அதிர்ச்சிஅளித்தன! சிறப்பான முயற்சி! பாராட்டுக்கள்!
    இன்று என் தளத்தில் ஆன்றோர்மொழிகள்
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே. கண்டிப்பாக தங்கள் தளத்திற்கு வருகை புரிகிறேன் நண்பரே. நன்றி...

      Delete
  2. எனது பதிவுக்கு வந்தமைக்கு நன்றி நண்பரே... எனது தளத்தில் பின்தொடர வேண்டுமென வேண்டுகிறேன். உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன்.
    http://varikudhirai.blogspot.com/2012/08/tamils-wer-separated-by-caste.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வருகைக்கு நன்றி நண்பரே. உங்கள் தளத்தை நான் ஏற்கெனவே பின்தொடந்துகொண்டுதான் இருக்கிறேன். நன்றி...

      Delete
    2. காலை வணக்கம். காதலியை வெறுக்கிறேன், அசோகர் பற்றி அறிந்துகொள்ளுங்கள். வெகு அருமை. இப்படித்தான் கணக்கில் அடங்கா நிகழ்வுகள் வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டு மக்கள் மெச்சும்வண்ணம் மாற்றி மாற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். பதிவேற்றிய உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள். தொடர்வோம். என் பெயர் அன்வர் பாஷா. கைபேசி 9884020283. மின் முகவரி. bashasdaesk@gmail.com

      Delete
  3. அதிர்ச்சியான ஒரு தகவல் அசோகன் பற்றி.வாழ்த்துக்களும் என் நன்றிகளும் இப்பகிர்விற்காய்.வரலாற்றில் கூட கலப்படம் சொந்தமே :(.
    சந்திப்போம்.

    எனக்கொரு பதில்!!!!!

    ReplyDelete
    Replies
    1. கலப்படம் என்பது உணவிலிருந்து வரலாற்று எழுத்துகள் வரை அன்று முதல் தொன்று தொட்டு நடைமுறையாகிவிட்டது என்பது மிகவும் வருத்தமான செய்திதான். நாம் தான் ஏது உண்மை என்று தேட வேண்டி உள்ளது...
      வருகைக்கு மிக்க நன்றி...
      மீண்டும் சிந்திப்போம், வணக்கம்.

      Delete
  4. புதைய தகவல்களும் அதிர்ச்சித் தகவல்களும் நண்பா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சிட்டுக்குருவியாரே...
      மீண்டும் சந்திப்போம், நன்றி.
      வணக்கம்...

      Delete
  5. அறியாத தகவல் நண்பரே...
    தொடர வாழ்த்துக்கள்...
    நன்றி...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete
  6. Anonymous2:35:00 PM

    சகோ. நல்லதொரு பதிவு தான் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதில் உடன்பாடே. ஆனால் எனக்கு சில கேள்விகள் !!!

    அசோகரின் இந்த வரலாறுகளை எந்த நூலில் இருந்து எடுத்தீர்கள்... !!!

    அந்த நூல்களை குறிப்பிடுங்கள் ...

    அடுத்து வெள்ளைக் காரன் வரும் வரை அசோகரின் எந்தவொரு வரலாறும் சரிவர வெளியே தெரியாமலேயே இருந்தது. ஏனெனில் பௌத்த சமய சார்பான வரலாறுகளை பிரமாணம் முற்றிலும் அழித்தும் மறைத்துமே வந்தன.

    அடுத்து அசோகர் இப்படிச் செய்தார் கொன்றார் என !! சொல்வதால் எமக்கு அதிர்ச்சியோ, வியப்போ அடையத் தேவை இல்லை ..

    ஏனெனில் அந்தக் காலங்களில் இருந்த அனைத்து மன்னர்களும் இப்படியான காரியங்களை செய்தவர்கள் தான் .. !!! ஏனெனில் அரியணை ஏறுவது என்பது எளிதான காரியம் இல்லை.. உற்றார் உறவினர், தம்பி மார் எக்கச்சக்கம் என பல போட்டிகள் இருக்கவே செய்யும் !!! ராஜ ராஜன் கூட அவரது அண்ணன் மறைந்த பின்னரே அரியணை ஏறினார். அவர் அண்ணை யார் கொன்றார்கள் என்பது எல்லாம் வரலாற்றில் திரிக்கப்பட்டு இருக்கலாம். ராஜ ராஜ சோழனை தமிழர்களாகிய நாம் பிரமிக்கின்றோம். ஆனால் அவனது ஆட்சியிலும் கொலைத் தண்டனைகளும், கற்பழிப்புகளும், படையெடுப்புகள் நடந்தே இருந்தன.

    ஆகவே மன்னர் அப்படி செய்தார் இப்படி செய்தார், நல்லவர் வல்லவர் என்பது எல்லாம் இந்தக் காலத்து கருத்தாக்கங்களே ஆகும்... !!!

    அசோக சக்கரம் ஏன் கொடியில் வந்தது என்ற வரலாற்றை இந்தியக் கொடி வரலாற்றை படித்தால் புரிந்துக் கொள்வீர்கள்.. ஆரம்பத்தில் அது ராட்டினச் சக்கரமாகவே இருந்தது. ஆனால் காங்கிரஸ் கொடியாக இருப்பதால் அதனை நீக்கிவிட்டு இந்த சக்கரத்தை சேர்த்தார்கள்.

    இது அசோகருடைய சக்கரம் மட்டும் இல்லை. அவருக்கு முன்னரே தோன்றிவிட்ட பௌத்தர்களின் சின்னமாகும்... ஆக அது அசோகச் சக்கரம் என்பதை விட பௌத்த சக்கரம் என்று பார்த்தால் பிரச்சனை இல்லை .. !!!

    அசோகர் கேடு கெட்டவராகவே இருந்தாலும் அவரதுக் காலத்திலயே படிப்பறிவு, கல்வி, எழுத்து முறை, இலக்கியங்கள் பரப்பப் பட்டன.. பொது மக்களுக்கும் படிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக பௌத்தம் பரவியது. பௌத்தம் பரவியதால் தான் அக்காலத்தில் பெரும் போர்கள் பல தவிர்க்கப்பட்டன.. ஆகவே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு !!

    அசோகர் அந்தப்புர பெண்களை கழுவில் ( கழுகு அல்ல ) ஏற்றிக் கொன்றது எந்த நூலில் இருந்து எடுத்தீர்கள் இணைப்பைப் பகிர்ந்தால் பயன்படும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே, தங்கள் வருகைக்கும், அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      தவற்றிற்கு மிகவும் வருந்துகிறேன். கழுகில் என்பதை கழுவில் என்று மாற்றிவிட்டேன்.

      நான் இந்த வரலாற்று நூல்களை மகா வம்சம் என்ற சிங்கள நூலில் இருந்து எடுத்தேன் நண்பரே, உசாத்துனையை பதிவில் இணைக்க மறந்துவிட்டேன். தாங்கள் கேட்டதும் அதனையும் இணைத்து விட்டேன்.

      பவுத்த சக்கரம் பற்றி கூடுதல் தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  7. அன்றிலிருந்து இன்றுவரை வஞ்சகம்.சூது,போட்டி,பொறைக்குள்ளேயேதான் போராடி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.’திஷ்யா’என்றொரு அழகான பெயரொன்று இருக்கிறதே !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி, வந்தமைக்கும் கருத்துரைத்ததர்க்கும் மிக்க நன்றி.

      உங்களுக்கு மட்டும் எப்படிதான் திஷ்யா என்ற பெண்ணின் பெயர் கண்ணில் பட்டதோ தெரியவில்லை.

      Delete
  8. நண்பரே.... அசோகரை விடுங்கள்...
    அவர் எந்த காலத்திலோ வாழ்ந்தார்!!

    இன்றைய அரசியல் வாதியில் என் இனிய தோழி ஹெமா சொன்னது போல
    வஞ்சகம் சூது போட்டி பொறாமை இல்லாமல் மக்களை மகிழ்ச்சியுடன் வைத்துள்ளவர் யார்...?
    கொஞ்சம் அலசி பாருங்கள். எல்லாருமே சாயம் போற சந்தர்ப்ப வாதிகள் தான்.
    கண்முன் நடப்பதையே நம்மால் ஐந்து வருடத்திற்கு ஒன்றும் செய்ய முடியாதபோது... வரலாற்றை ஏன் தோண்ட வேண்டும்? அவர்களாவது ஆசிரியர்கள் சொன்னது போல நல்லவர்களாகவே இருந்துவிட்டு போகட்டுமே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

      தாங்கள் கூறுவதும் உண்மைதான் நண்பரே, ஆனால் ஒருவரை அதிகமாக நல்லவர் என்று எண்ணி பின்னர் அவரது மோசமான பின்னணிகள் அனைத்தும் தெரிய வரும்போது மனம் மிகவும் வேதனையுறும், அதன் தாக்கம் இது என்று கூட கூறலாம் நண்பரே.

      Delete
  9. வணக்கம்
    புதிய தகவல்கள்
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

      தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  10. Replies
    1. வணக்கம், வருகைக்கு மிக்க நன்றி நண்பா...

      Delete
  11. If it is true till date how it was not brought to the notice of public?There are so many questions regarding your writing .But as brought to the light of public it may be analysed.by DK

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம், இவை அனைத்தும் உண்மை தான், நான் இதில் உள்ள பெரும்பாலான தகவல்களை மகா வம்சம் என்ற நூலிலிருந்து பெற்றேன் (எனக்கு சிங்களம் தெரியாது, தமிழ் மொழி மாற்றம் செய்யப்பட்ட நூலிலிருந்து படித்தேன்), தமிழ் மன்னன எல்லாளன் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள படிக்க ஆரம்பித்தேன், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மன்னன் அசோகனைப் பற்றி அறிந்து கொண்டேன்...

      இந்த தகவல்கள் எல்லாம் பல காலங்களாக மறைக்கப் பட்டவை, மக்களுக்கு எடுத்துச் சென்றால் என்ன ஆகும், இதையும் ஒரு செய்தியாகவே எடுத்துக் கொள்வர். வேறு எதுவும் நடக்காது.

      வருகைக்கு மிக்க நன்றி அய்யா,
      தொடர்ந்து வருகை தந்து கருத்து அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

      நன்றி வணக்கம்...

      Delete
  12. இன்றைய அரசியல் கூட எல்லவற்றையும் பார்க்கிறோம் .ஹேமா அவர்கள் கூறியது உண்மை .அரசயில் என்றால் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் என்பது போய்,முதல் புகலிடம் என்றாகிவிட்டது.நல்லது நடக்கவேண்டும்.இன்னும் இதைப்பற்றி நான் தனியாக பதிவே போடலாம் என்று இருக்கிறேன். உங்கள் படைப்பு மிக அருமை best contributio makanae
    by DK. (D.Karuppasamy.)

    ReplyDelete
    Replies
    1. ஆம் அப்பா, இன்றைய அரசியல் நிலைமை இதுதான். தாங்கள் கூறியதும் சிந்திக்க வைக்கிறது. அரசியல் என்பது அயோக்கியர்களின் முதல் புகலிடம் தான். நிதர்சன உண்மை. தாங்கள் எப்போது இது பற்றி எழுதுவீர்கள் என்று நான் காத்திருக்கிறேன். எழுதுங்கள் அப்பா...

      நன்றி வணக்கம்,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  13. do not write anything with out giving proper reference pl. A good writer will never do like this.

    All knows that anybody can narrate very badly about everyone, it need some skill and tricks with bad intention

    ReplyDelete
    Replies
    1. Brother, I mentioned all the references, Where I did taken the history records, please read fully of my blog... Don't comment, after see the title only...

      Delete
  14. அன்பின் வெற்றிவேல் - படித்த நூலின் அடைப்படையில் இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. வரலாற்றினை எழுதும் போது தகுந்த தரவுகள் எதிர் பார்க்கப்படும். தவிர்க்க இயலாதது இது. அசோகரின் கரிய நிறமும், அழகின்மையும் பரிகசிக்கப் பட்ட போது, மன்னரால் எடுக்கப்ப்டும் முடிவு பொதுவாக தண்டனை கொடுப்பது தான். ஆண்மையினை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அசோகரின் வரலாறு தவறுதலாக எழுதப் பட்டதற்கு இந்திய அரசு காரணம் என்பதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எனினும் படித்த வரலாற்றின் அடிப்படையில் பதிவு எழுதியமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தாங்கல் கூறுவது வியப்பாக உள்ளது, திட்டமிட்டே பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது... விவாதம் வேண்டாம், தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  15. ASHOKAN MURATAN ANAL PUTHAM MUTHAL THIRUNTHI THARMAVAN ANAN ATHALAL THAN AVARAI NAM ERKIROM

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா,

      அது எப்படி நண்பா, அசோகன் திருந்தியிருந்தால் வரலாற்றிலும், பாட புத்தகத்திலும் அசோகன் செய்த அக்கிரமங்களை முதலில் கூறிவிட்டு பிறகு அவன் திருந்திவிட்டான், நல்லவன் என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை, எந்த நூல் எடுத்தால் அசோகன் மரம் நட்டான், சாலை அமைத்தான் என்றே இருந்தால் உண்மையை யார் கூறுவார்கள்... உண்மையை அப்படியே உள்ளதை உள்ளது போல கூற வேண்டும். அசோகன் தர்மவானா??? ஹிட்லர் பலரைக் கொன்றான் அவன் கடைசி காலத்தில் சிலருக்கு சாப்பாடு போட்டு விருந்து அளித்திருந்தால் நீங்கள் அவனை நல்லவன் தர்மவான் என்று கூறுவீர்களா?

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் வருகைத் தொடரட்டும்.

      Delete
  16. வரலாற்றை தோண்டி துருவினால், அநேக குழப்பங்கள்தான் நேரும். வரலாறு வரலாறாகவே இருந்தால்தான் சமுதாயத்திற்கு நன்மைப் பயக்கும். இல்லாவிடில் அவர்களை உதாரணம் காட்டியே நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தி விடுவார்கள் நம் மக்கள். தங்களின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். இன்னும் நூறாண்டு கழித்து மகாத்மா காந்தியைப் பற்றி மோசமாக சித்தரித்து விடுவார்கள். வரலாறு படிக்க வேண்டும். ஆராய்ந்தால் நமக்குதான் தீமை

    ReplyDelete
  17. வரலாற்றை தோண்டி துருவினால், அநேக குழப்பங்கள்தான் நேரும். வரலாறு வரலாறாகவே இருந்தால்தான் சமுதாயத்திற்கு நன்மைப் பயக்கும். இல்லாவிடில் அவர்களை உதாரணம் காட்டியே நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தி விடுவார்கள் நம் மக்கள். தங்களின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். இன்னும் நூறாண்டு கழித்து மகாத்மா காந்தியைப் பற்றி மோசமாக சித்தரித்து விடுவார்கள். வரலாறு படிக்க வேண்டும். ஆராய்ந்தால் நமக்குதான் தீமை

    ReplyDelete
  18. இந்திய வரலாறு அனைத்திற்கும் மறுவாசிப்பு என்பது அவசியம் . அவரவர் கற்பனை, மனத்திறனே நம் வரலாறு என்பதை இனி மறுக்க ஏற்க மறுவாசிப்பு என்பது மறு ஆய்வு அவசியம் ! அவசியம் !!!

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...