நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிகக்க மகிழ்ச்சி, உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தம் மொழி, தம் வரலாறு மீது எப்போதுமே ஓர் அக்கறை உண்டு. நமக்கும் நம் வரலாறு மொழி மீது ஓர் உயர்ந்த பற்று இருந்தது அது எதுவரை என்றால் நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று ஓர் ராணுவம் என அனைத்தும் இருந்த காலத்தில். இப்போது நாம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, சிறுக சிறுக கட்டி எழுப்பியதையும் துரோகிகளால் இழந்துவிட்டு தவிக்கிறோம், நான் கூறுவது அனைவருக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
ஆமாம் சோழர்கள், பாண்டியர், சேரர் முதல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் வரைதான். அன்று நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று நாணயம் உலகின் வலிமையான ராணுவம் என அனைத்தும் நம்மிடம் இருந்த காலத்தில் எவனும் நம்மை கனவிலும் சீண்ட நினைத்ததில்லை, அப்படியே அவர்கள் சீன்டினாலும் அவர்களை நாம் சும்மா விட்டதில்லை.
ஆமாம் சோழர்கள், பாண்டியர், சேரர் முதல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் வரைதான். அன்று நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று நாணயம் உலகின் வலிமையான ராணுவம் என அனைத்தும் நம்மிடம் இருந்த காலத்தில் எவனும் நம்மை கனவிலும் சீண்ட நினைத்ததில்லை, அப்படியே அவர்கள் சீன்டினாலும் அவர்களை நாம் சும்மா விட்டதில்லை.
நம்முடன் அனைத்தும் இருந்தபோது நாம் சுதந்திரமாக உலாவினோம், இந்தியப் பெருங்கடல், சேது சமுத்திரம், வங்கக் கடல் என அனைத்தும் நாம் தான் ராஜா, நம்மை ஏன் என்று கேட்க எவனும் இல்லை. அப்படியே கேட்டாலும் அவன் உயிர் அவனுக்கில்லை. அப்படி இருந்த நம் தமிழ் இனம் இன்று எப்படி எல்லாமோ ஆகி விட்டது.
நம் வரலாற்றில் நிறைய உதாரணங்களை நாம் கூறலாம், தமிழ் வணிகர்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தியதற்க்கு தென் கிழக்கு ஆசியாவையே அதிர வைத்தான் நம் ராஜ ராஜன், தமிழைப் பழிப்பின் தாய் தடுப்பினும் மிதிப்பேன் என்று வட இந்தியாவையும் வெற்றி கொண்டான் அந்த தமிழ்ப்புலி.
பருவ மழை பொய்த்த சமயத்தில் ஒரு முறை கர்நாடக மன்னன காவிரியைத் தடுத்து விட்டான், தமிழக வயல்கள் காயும் நிலைமை சோழன் எப்படியோ கேட்டுப் பார்த்தான், பேசிப் பார்த்தான் அவன் மசியவில்லை. உடனே இவன் படையை கிளப்பிக் கொண்டு காவிரி மேல் இருந்த அணையை உடைத்துவிட்டு, அவன் தேசத்தையே நிர்மூலமாக்கிவிட்டு வந்தான் ராஜ ராஜனின் பேரன்.
தமிழிற்கும், தமிழனுக்கும் மதிப்பளிக்க வில்லை என்று இமயம் வரை சென்று வெற்றிக் கோடி நாட்டினான் தமிழ் ஆண்ட சேர மன்னன.
இவர்கள் உடலில் ஓடியதும் தமிழ் இரத்தம் தான், நம் உடலில் ஓடுவதும் அதே இரத்தம் தான். என்ன கொஞ்சம் சூடு, சொரணை எல்லாம் காலப்போக்கில் கரைத்து விட்டோம்.
தண்ணீர், உணவு, உரிமை என அனைத்திற்கும் நாம் மற்றவனையே எதிர்பார்க்கும் நிலை ஆகிவிட்டது.
தற்ச்செயலாக மொரிசியஸ் நாட்டு நாணயங்களை பார்க்க நேரிட்டது, அதில் உள்ள அனைத்தும் தமிழ். தமிழிற்கு அவ்வளவு முக்கியத்துவம், எண்களும் தமிழ். எழுத்தும் தமிழ்.
எனக்கு ஒரு சந்தேகம் நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எங்களைத் தெரியும். ௦,௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯ நம்மில் பலர் இதனை காலம் கடந்தே அறிந்துள்ளோம். இப்படி தமிழ் எழுத்தில் என்னுருக்கள் உண்டா என்று கேட்போம்.
காலத்தின் கொடுமை...
நான் பார்த்து மகிழ்ந்த மொரிசியஸ் தமிழ் நோட்டுகளை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
மொரிசியசின் எந்த நோட்டுகளை எடுத்தாலும் அதில் தமிழ் இன்றி இருக்காது.
அங்கு தமிழிற்கு அவ்வளவு மதிப்பு. நாம் இங்கு ஒவ்வொன்றிக்கும் ஹிந்திக்காரனிடம் கை எந்துகிறோம், புலம் பெயர் தமிழ் உறவுகளோ நம் தமிழிற்கு மிகச் சிறந்த அருமையான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாராட்டத் தக்கது.
பிறந்த ஆறு மாத குழந்தைக்கு A,B,C,D கற்றுக் கொடுக்கும் தேசமாகிவிட்டது நம் தமிழ் என்பது தான் பெரும் வருத்தமாக உள்ளது...
மறக்காமல் பதிவுகளைப் பற்றி பின்னூட்டமளித்து விட்டுச் செல்லுங்கள் உறவுகளே. முழுவதும் படித்துவிட்டு கருத்து வழங்குங்கள் நண்பர்களே, எப்போதும் பத்து மூட்டை பதர்களை விட ஒரு மூட்டை நெல் மணியே சிறந்தது என நினைக்கிறேன்.
நன்றி, மீண்டும் சிந்திப்போம்.
சிறப்பான பதிவு நண்பரே... பாராட்டுக்கள்...
ReplyDeleteமொரிசியஸ் தமிழ் நோட்டுகளை பதிவு செய்தது சிறப்பு...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
வருகைக்கு மிக்க நன்றிகள்.
Deleteதொடர்ந்து வந்து கருத்து கூறுங்கள் நண்பரே...
naam nam thamizh sirapinai ariyamal thavaru seithu vittom, iniyavathu ondru pattu thamizh valarpom
ReplyDeleteதவறை நாம் புரிந்து கொண்டாலே நன்று தான் நண்பா. தொடர்ந்து வாருங்கள், நன்றி
Deleteதமிழ் மறந்த தமிழன்! வேதனையான விசயம்தான்! சிறந்த பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html
ஆமாம் அய்யா, வருகைக்கும் மிக்க நன்றி நண்பா.
Deleteதொடர்ந்து வாருங்கள்...
அருமை சகோதரா... நானும் மகிழ்ந்தேன்... ஆனால் எனக்கொரு சந்தேகம் .. இந்திய ரூபாய் குறியீட்டை வடிவமைத்த தமிழர் துளி கூட தமிழ் அடையாளம் வராமல் பார்த்துகொண்டு, ஹிந்தி வடிவில் அமைத்தாரே ஏன்?
ReplyDeleteமறுமொழி தந்துவிட்டேன் சகோ...
நண்பரே அந்து எழுத்துகள் அனைத்தும் ஹிந்தி அல்ல, தாங்கள் மொழிகள் பற்றிய அறிவில் பின் தங்கியுள்ளீர் என நினைக்கிறேன், தமிழையும் ஹிந்தியையும் ஒப்பிட்டுப் பேசாதீர். அந்த தகுதி ஹிந்திக்கு இல்லை. ௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯ இந்த எழுத்துகள் அனைத்தும் ஹிந்தி இல்லை, இவை தமிழின் மாற்றம் செய்யப்படாத கிரந்த எழுத்து நண்பா. மற்ற எழுத்துகள் அனைத்தும் காலத்திற்கு ஏற்ப வீரமாமுனிவர் என பலரது முயற்சிகளால் சீர்திருத்தம் செய்யப் பட்டு மாற்றம் செய்யப்பட்டு விட்டது நண்பா. ஆனால் இந்த எண் எழுத்துரு மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை...
Deleteஅவர் இந்தி எழுத்தில் குறியீட்டை வடிவமைத்ததாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டது
Deleteநண்பா எவ்வாறு இப்படி தவறாக புரிந்து கொள்கிறீர்கள்? கல்வெட்டு மொழி தமிழ் என நான் அறிவேன். அது குறித்த ஓர் ஆய்வுக் கட்டுரையும் என்னிடம் உள்ளது. நான் கேட்டது உங்கள் ருபாய் நோட்டில் உள்ள குறியீடு. அதை வடிவமைத்தவர் தமிழர் தானே? அந்த குறியீடு தமிழின் துளி அடையாளமும் கொள்ளவில்லை. அது நான் அறிவேன். ஹிந்திக்கு தமிழ் அருகில் வர அருகதை இல்லை என்பதி நானும் அறிவேன். என் செம்மொழி கட்டுரையை பாருங்கள்.
Deleteஅந்த ரூபாய் நோட்டைப் பாருங்கள், அதில் தமிழும் உள்ளது. ஹிந்தியும் உள்ளது நண்பா. அதில் ஹிந்தியை விட தமிழுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப் பட்டிருக்கும்... அதுதான் என்னைக் கவர்ந்த விடயம் நண்பா... கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது தாங்கள் செம்மொழி பதிவைப் படிக்கிறேன்...
Deleteநண்பா, நாணயத்தை வடிவமைத்தவர் தமிழனா என்று தெரியவில்லை. தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது. வேறெந்த நாடும் தமிழுக்கு அளிக்கப்படாத முன்னுரிமை என்றே தோன்றியது. எனக்கு அப்போது ஹிந்தி என் கண்ணிற்கு தெரியவில்லை...
Deleteமொரீசியஸ் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஒருமுறை போய்வரவும் நினைத்திருக்கிறேன்.நன்றி புன்னகை தகவல்களுக்கு!
ReplyDeleteநல்லது தோழி, சென்றால் கட்டையால் தகவல் கொடுங்கள், எப்படி இருக்கிறது என்று...
Deleteஆதரவிற்கு நன்றி...
சிறப்பான பதிவு. உங்கள் ஆதங்கம் தமிழர் அனைவர்க்கும் இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். நம் உரிமையை என்றைக்கும் விட்டு கொடுக்க கூடாது. நாவாய் கடற்படை தமிழகத்தில் இருந்தது இலங்கை,மலேசியா, இந்தோநேசியா தமிழனின் பகுதியாக இருந்தது. பாட புத்தகங்கள் ஆகட்டும் தமிழனின் பெருமைகள் மறைக்கப்பட்டே வந்திருக்கின்றன. தமிழனின் கடல்மார்க்கம் செழித்திருந்ததற்கு பல சொற்கள், சொற்பதங்களை காணமுடியும்.
ReplyDeleteஎன் ஆதங்கத்தின் சிறு சிதறலே இவை நண்பா. உலகின் தலைச்சிறந்த மக்கள் நாம் தான், ஆனால் இன்று ஒரு அடிமை வாழ்க்கை போல் வாழ வேண்டிய நிலைமை. தமிழர்கள் அனைவரும் இன்று சிதறி வாழும் வாழ்க்கை. பாரம்பரியம், தொன்மை என அனைத்தையும் இழந்து வாழும் ஒரு அகதி வாழ்க்கை.
Deleteம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரணங்கள் பலவிதம், எப்போது ஆறும் என்றே தெரியவில்லை.
தொடர்ந்து வருகைத் தாருங்கள்.
நன்றி...
மிகவும் சிறப்பான தகவலை பதிவு செய்துள்ளீர் உண்மையில் பாராட்டுகள் காலவெள்ளத்தில் கறந்து போன தமிழனின் சூடு சொரணை பற்றி சிறப்பாக பதிவு செய்தமைக்கு பாராட்டுகள் இருப்பினும் தமிழனுக்கு தமிழின் சிறப்புகளை தெரியப் படுத்தப் பட வேண்டியது மனது கடமை ... பாராட்டுகள்
ReplyDeleteஅந்த வேலையை தொடர்ந்து நமது இளைய சமூகம் தான் செய்ய வேண்டும்.
Deleteவருகைக்கு மிக்க நன்றி தோழி...
Dear Tamilmagan I am very proud of calling you .I have to type only in Enlish.That is why I am giving my view in English.Even now our Tamilan is no.1 in this USA too.I am an age of 62 and living with my sons here for 6months only.Here we are very proud of our brain .But only thing is somebody is a shy type to say as a tamilan,here.Dear we will win very soon .All the best for your article.I am very much interested your writings ,since Tamil is my life ,my breath ,all/.
ReplyDeleteவணக்கம் ஐயா, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அய்யா!!!
Deleteமேலும் தாங்கள் என்னைத் தமிழ் மகன் என்று அமைத்தமைக்கு நான் மிகவும் பெருமைப் படுகிறேன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உலகின் தலைச்சிறந்த இனம் நமது தமிழ் இனம், தொன்மையானதும் கூட. ஆனால் தமிழன் அப்படி கூற மறுக்கிறான் என்பதே மிகவும் வேதனையான விஷயம். தமிழர்கள் புத்திசாலிகள் என்பது மகிழ்ச்சியான செய்திதான், ஆனால் அவர்கள் தமிழன் என்று கூற வெட்கப்படுவது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
வருகைக்கு மிக்க நன்றி அய்யா, தொடர்ந்து வருகைத் தந்து ஆதரவு தாருங்கள்...
நன்றி.
அருமையான பகிர்வு! தமிழை தமிழர்கள் நேசிக்க வேண்டும், தமிழ் என்பது தமிழர்களுக்கு அடையாளம் என்பதை அனைவரும் உணர வேண்டும் ! உங்களை என் வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன், "விடை தேடும் காதல்" என் காதல் கவிதையை படித்து உங்களின் கருத்தை பதியவும். அன்புடன் ஆயிஷாபாரூக்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழி...
Deleteகண்டிப்பாக வருகை தருகிறேன்...
வணக்கம் நண்பா!தமிழை வணங்குகிறேன்..இப்பதிவிற்காய் நன்றிகள்.என்ன ஒரு வருத்தம் சிர சமயங்களில் எமது சிறப்புகளை எம்மவர்க்கு நினைவுபடுத்தவேண்டியுள்ளது.பறவாயில்லை நண்பா! அப்படியாவது எம் தாய் தமிழை வளர்போம்.
ReplyDeleteஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !!!
நமது பெருமைகளை நாமே, நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயம் தான். என்ன செய்வது?
Deleteவருகைக்கும், தாங்கள் மேலான கருத்துகளுக்கும் மிக்க நன்றி தோழி...
தொடர்ந்து வாருங்கள்...
நண்பா கவலையை விடும்.நமது மன்னர்கள் பல நாடுகளை வென்று இருந்தாலும்கூட அங்கு மதத்தையோ மொழியையோ பரப்பவில்லை,கோவில் மட்டுமே கட்டினர்.இதுதான் நம்மவர் உயரிய பண்பு.
ReplyDelete