Oct 30, 2012

என் வான் நிலவு

நண்பர் சிகரம் பாரதியின் கவிதை இது, மிகவும் பிடித்தது. சில மாற்றத்துடன் இங்கு பதிகிறேன்...

என் வானில்
என்னை நனைத்த படி
என்னுடன் ஓராயிரம் நட்சத்திரங்கள்..


என் வானில்
நிலவு கூட
நிலையாக இருப்பதில்லை...

அடிக்கடி
தன் உருவத்தை
மாற்றி மாற்றிக் காட்டி
என்னை ஏய்க்கின்றது...

கற்பனைகளில் கூட
கண்கட்டி வித்தை
காட்டுகின்றது...

அது போலத்தான்
அழுகையும் சிரிப்பும்
அவ்வப்போது
என்னுள் மாறி மாறி
வருகின்றன...

அடிக்கடி
நட்சத்திரங்களின்
நவரசம் காட்டி
மின்னி மறையும்
நிலவுகளாய்.

என்னுடைய
உறங்கும் இரவுகளில்
கை விளக்குகளுடன்
நிலவொளியில்
ஆடிப்பாடியபடி பலர்...

அவர்களின் கை
விளக்குகளைப்
போன்றவைதான்
எனது நிலவுகளும்...

என் அனுமதியின்றியே
களவாடப்படும் சில!
மறைந்து போகும் சில!

ஒன்றல்ல இரண்டல்ல
என் கற்பனை
வானத்தில்
ஆயிரமாயிரம் நிலவுகள்
உலாப் போகின்றன 
சில சமயங்களில்......

இல்லை
அடிக்கடி அவற்றுள்
சில நிலவுகள்
உதிர்ந்து விடுகின்றன
நீர்த்து போன
நட்சத்திரங்களைப் போல.....

இன்னும் சில நிலவுகள்
மின்னி மின்னி
மறைவதும் ஒளிர்வதுமாய்
விளையாட்டுக் காட்டுகின்றன
என்தன் வானில்...

உதிர்ந்த நட்சத்திரங்களும்,
உதிரும் நட்சத்திரங்களும்
மீண்டும் ஒளிரும் என்ற நம்பிக்கையில் நான்...


சிகரம் பாரதியின் இக்கவிதை இலங்கையின் நாளிதழான "தினகரன்" வெளியானது...

நன்றி:

சிகரம் பாரதி

Oct 22, 2012

அழகான ஆண்கள்: சத்தியமா நான் மனிதர்களைப் பற்றி சொல்லுலீங்க

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், தங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துகள்... கல்விச் செல்வமும், பொருள் செல்வமும் பெருகட்டும் அனைவருக்கும்...

சமீபத்தில் நான் முகப்புத்தகத்தில் படித்த ஓர் பொன் மொழி...

உலகில் உள்ள ஆண் இனம் அனைத்துமே அழகானதுதான். ஆனால் இந்த மனித இனத்தைத் தவிர...
                                                             
 -------------- மேற்க்கத்தியப் பழமொழி---------------

அது எந்த அளவிற்கு உண்மை என நான் தேடிய போது கிடைத்த சில நிழற்ப் படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

பார்த்து எப்படி உள்ளது என்று கமெண்டில் சொல்லிட்டுப் போங்க...

Oct 14, 2012

என்தன் இறைவா! இது நியாயமா?

என்தன் இறைவா
நான் வணங்கும் ஈசா!!!
எனக்கும் அருள்புரியேன்...

அன்று பரவையிடம்
இருமுறை தூது சென்றாய்
சுந்தரனுக்காக.
அவன் காதலை அவளிடம் உரைக்க.

எனக்கும் தூது செல்லேன்
ஒரே ஒரு முறை.



உன் நெற்றிக் கண்ணில் வெந்தால்
என் உயிர் ஒரு முறை மட்டுமே போகும் -ஆனால்
இவளின் அழகிய தண்பார்வைத் தீயில்
என் உயிர் நித்தமும் எரிந்து
அது என் உடலையும் வாட்டுகிறதே!!!
அவள் நினைவே மீண்டும்
உயிரையும்
கொடுத்துவிடுகிறதே...

நினைவில் இருக்கையில் கண்களில்
மின்னலென பாய்கிறாள்....
கனவிலும் அழகிய ராட்சசியாய்
முன் வந்து கனவையும் அவளே பறித்துக் கொள்கிறாள்...

நினைவு, தூக்கம் இரண்டிலும்
அவளே சங்கமித்து என்னுள்
என்னை விரட்டி ஓயாது திரிகிறாள்
என் மனத் தீயில்.

என் இறைவா அவளிடம் சென்று கூறேன்,
இப்படியே சென்றால்
என் உயிர் எனைப் பிரிந்து
உனையும் சேராமல்
அவளிடம் தஞ்சமடைந்து விடும்
என்பதை ஒரு முறைக் கூறேன்.

காலம் கடந்து போகுமுன்னே
ஞாலம் விட்டுப் பிரியுமுன்னே
அவள் நினைவில் நான் வாடுவதை
அவளிடம் சொல்லி
எனை வந்து சேரச் சொல்லேன்.
என்தன் இறைவா.

எனக்காக செல்லேன் அவளிடம்.
என் அன்பை அவளிடம் கூறி ஏற்கச் சொல்லேன்.
நீ மட்டும் ஏற்கச் செய்தால்
நான்  விரதம் இருந்து விளக்கேற்றி
தேங்காய் உடைப்பேனே, அவளுடன்!!!
என்தன் அன்பைக் கூறிவிடேன்...

உன் பக்தன் என்னை வாடச் செய்து
நீ மட்டும் உன் தேவியுடன் நித்தமும்
மகிழ்ச்சியில் திளைக்கிறாயே?
இது நியாயமா! நீயே கூறேன்...

........................................................வெற்றிவேல்


Oct 7, 2012

எதிர்கால நினைவுகள்

அது ஒரு மாலைப் பொழுது, நானும் என்னவளும் எங்கள் ஊர் அழகிய நீரோடையில் காலாற நடந்து  உலாவிக் கொண்டிருந்த நேரம், மாலையில் சிறு உலா தான் அது. எந்தன் கையைப்பிடித்த படியே என்னுடன் பல கதைகள் பேசி நடந்து கொண்டே வந்தாள் என்தன் தோழி. மாலையில் நடந்த அந்த இரவுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த அழகிய போராட்டத்தை ரசித்த படியே இருவரும் வீடு நோக்கி நடந்தோம். அந்த மாலைப் பொழுதின் ரம்யம் எங்களை அப்படியே கட்டி வைத்தது. அப்படியே என்னுடன் வந்த என்தன் அழகு ராட்சசியும் என்னை அவளது கரங்களால் சேர்த்து என் கரங்கள் வழியாக  என்னைக் கட்டிக் கொண்டாள்.