Jun 6, 2013

ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா?

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நான் கோயம்புத்தூர் சென்ற போது என்னைப்பார்த்து ஒரு CISF வீரர் கேட்ட கேள்வி இது தான்...

ஹிந்தி தெரியாத நீ ஒரு ஹிந்துஸ்தானியா? என்று.

ஹிந்தி தெரிந்திருந்தால் மட்டுமே நான் ஒரு ஹிந்துஸ்தானி என்றால், எங்களுக்கு அந்த ஹிந்துஸ்தானமே தேவை இல்லை. நான் தமிழன் என்பதிலேயே பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினேன்...




சவூதி அரேபியாவிலிருந்து வந்த மாமாவை அழைக்க இரு தினங்களுக்கு முன் நான் கோயம்பத்தூர் விமான நிலையம் சென்றிருந்தேன். விடியற்காலை 4. 30 மணிக்குத்தான் விமானம் வந்து சேரும், நான் அதிகாலை 2.00 மணிக்கெல்லாம் போய் சேர்ந்துவிட்டேன். அப்போது அங்கு பணிபுரிந்த இரு வட இந்திய சிப்பாய் என்னிடம் பேச்சுக் கொடுத்தனர்.

அவர் ஹிந்தியில் எதோ கூறினார்...

நான் ஹிந்தி மாலும் நஹி, போல் தமிழ் ஆர் இங்கிலீஷ் என்றேன். (நான் இதற்க்கு முன் ஒரு மாதம் தேராடூன் (உத்ராகான்ட்) தங்கியிருந்ததால் சில வார்த்தைகள் தெரியம், அவர் என் பேர், ஊர் தான் கேட்டார். எனக்கு புரிந்தது...

உடனே அவர் ஹிந்தி மாலும் நஹி... என்று ஏளனத்துடன் கேட்டார்.

நான் எஸ் எஸ் என்றேன்...

(இனி நடந்த உரையாடல் அனைத்தும் ஆங்கிலத்திலே நடந்தது)

உடனே அவர் ஹிந்தி தெரியாத நீ ஒரு ஹிந்துஸ்தானியா என்றார்?

நான், எனக்கு தமிழ் தெரியும், கூடவே ஆங்கிலமும் நன்றாக பேசுவேன், நான் எதற்கு ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றேன்.

அவர், ஹிந்தி தான் ஹிந்துஸ்தானத்தின் மொழி, அதனால் அனைவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

எனக்கு கோபம் வந்துவிட்டது, நான் கூறினேன். ஹிந்தி கற்றுக்கொண்டால் தான் நான் ஒரு இந்தியன் என்றால், எனக்கு அந்த ஹிந்துஸ்தானமே தேவையில்லை என்றேன்.

அவர் கையில் இருந்த தனது A.K 47 துப்பாக்கியை பார்த்த படியே என்னிடம் கேட்டார். ஹிந்தி தெரியாவிட்டால் உங்களுக்கு பல வேலை வாய்ப்புகளை இழப்பீர்கள், முன்னேற்றம் ஏதும் இருக்காது என்றார்.

நான் கூறினேன், ஹிந்தி தெரிந்திருந்தால் தான் எங்களுக்கு வேலை எல்லாம் கிடைக்கும் என்றால் எங்களுக்கு அந்த வேலையே தேவையில்லை. ஹிந்தி பேசாமல் நாங்கள் எந்த விதத்திலும் தாழ்ந்துவிட வில்லை என்றேன். மேலும் நான் ஹிந்தியை விட தமிழ் மூத்த, பண்பட்ட மொழி. அதற்க்கு நீங்கள் என்ன மதிப்பு அளித்துள்ளீர்கள் என்று கேட்டேன்..

அவர் ஆச்சர்யத்துடன், அவர் மீண்டும் ஹிந்தி தெரியாமல் உங்களால் தமிழகம் தவிர எப்படி செல்ல முடியும், வளர்ச்சி எல்லாம் இருக்காது, என்னமோ ஹிந்தி பேசினால் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற நோக்கில் என்னிடம் கூறினார்.

நான் அவரிடம் 'நான் கடந்த வருடம் உத்ராகன்ட் சென்றிருந்தேன், அங்கு ஒரு மாதமும் தங்கியிருந்தேன், நான் ஒரு முறை கூட ஹிந்தி தெரியல என்று வருத்தப்பட்டது கிடையாது. நான் எங்கு சென்றாலும் அங்கு இருந்த படியே என்னால் எந்த மொழியையும் குறுகிய காலத்திற்குள் என்னால் கற்றுக்கொள்ள முடியும், ஆக நான் ஹிந்தியை ஒரு பாடமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றேன். மேலும் நான், நீங்கள் தான் ஹிந்தி பேசுவீர்களே, இங்கு ஏன் தமிழகத்தில் ஹிந்தி பேச இயலாதவர்களிடம் வேலை செய்கிறீர்கள், உங்கள் ஊரிலே வேலை பார்க்க வேண்டியதுதானே? மேலும் இங்கு சென்னை வளர்ந்த காரணத்தினால் தானே உங்கள் பையனையும் கான்பூர் சிட்டி சரியில்லை என்று இங்கு ஏன் கல்லூரியில் சேர்த்தீர்கள் என்று கேட்டேன்? (முன்னர் அவர் பையனை இங்கு சேர்த்திருப்பதாக கூறியிருந்தார்) மனிதனிடம் பேச்சு வரவில்லை....

மேலும் அவர் ஹிந்தி பேச இயலாததால் நீங்கள் பல வாய்ப்புகளை இழந்துள்ளீர்கள் என்று கூறினார்,

நான், ஏற்கெனெவே நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம், ஒரு காலத்தில் எங்களுக்கென தனி தேசியம், தனி நாடு, எங்களுக்கென்று தனி படை என அனைத்தும் இருந்தது, இப்போ நாங்கள் இந்தியா என்ற காரணத்தினால் அனைத்தையும் விட்டுவிட்டு இருக்கிறோம், ஆக நாங்கள் இனி இழப்பதற்கு எங்களிடம் ஏதும் இல்லை... அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று கூறினேன்.

அப்போது இன்னொருவரும் சேர்ந்துகொண்டார் அவருடன், அவர் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி உள்ளது, தமிழகம் தவிர. ஆந்திராவில் 90 %, கர்நாடகாவில் 80% மற்றும் கேரளாவில் 60% பேர் ஹிந்தி பேசுகின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டுமே யாருக்குமே ஹிந்தி தெரியல? இங்க மட்டும் தான் ஹிந்தியால நுழைய முடியலன்னு சொன்னார்!!!

எனக்கு பெருமையா இருந்துது. நான் அவரிடம் நீங்கள் சொல்லற ஹிந்தி பேசற மாநிலம் எல்லாம் எங்கள விட இன்னும் வளரல, எல்லா விதத்திலையும் போக்குவரத்து, கல்வி, மருத்துவம்னு நாங்க தான் முன்னணில இருக்கோம், ஹிந்தி பேசற மாநிலத்துலேருந்துதான் இங்க கூலி வேலைக்கு ஆளு வராங்க. ஹிந்திய ஏற்றுக்கொண்ட எந்த மாநிலமும் எங்கள விட வளரல. நாங்க ஹிந்தி பெசாததனால எந்த விதத்துளையும் நாங்க தாழ்ந்து போகல. எங்களுக்கு தமிழ், ஆங்கிலம் போதும், ஹிந்தி தேவையே இல்லை என்றேன்....

என்ன நண்பர்களே, நான் கூறியது சரிதானே? ஹிந்தி தெரிந்திருந்தால், அந்த மாநிலத்தில் பாலும், பழமும் பெருக்கெடுக்கும் என்பது போல பேசுகின்றனர். அப்படியெல்லாம் இல்லை. தமிழகம் தாண்டி சென்று பாருங்கள். அவர்கள் நிலைமை எப்படி மோசமாக உள்ளது என்று. தமிழ் போதும் நமக்கு....

தங்கள் மேலான கருத்தை விட்டுச் செல்லுங்கள்...

அப்படியே இதனையும் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்...

உதிரும் நான்...

அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்


69 comments:

  1. ஒவொவொரு பதிலும் சாட்டையடி தான்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா... தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  2. சரியான பதிலடி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ராபின். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. அசராமல் அசத்தியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  4. Tamilan9:38:00 AM

    Good. The other b*u*l*l*s*h*i*t tried is "Hindi is the national language of India". Simple answer is "No, it is not."

    ReplyDelete
    Replies
    1. சில எருமை மாடுங்க, இல்லை நோ'ன்னு சொன்னா ஏத்துக்க மாட்டங்குதுங்களே!!! என்ன செய்ய தமிழன்...?

      Delete
  5. நீங்கள் கூறியது சரி தான். தமிழ தமிழர்களை ஏளனமாய் பேசுபவர்களிடம் இப்படித் தான் பேசியாக வேண்டும், ஆனால் ஹிந்தி கற்றுக் கொள்ள வண்டும் என்று என்னுள் தனிப்பட்ட உணர்வு உண்டு, என்னால் இந்தி பேசமுடியவில்லையே என்ற ஏக்கத்தினால் மட்டும் அல்ல, இன்னுமொரு மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையினாலும்.

    மற்றபடி அந்த நபரிடம் நீங்கள் பேசிய அத்தனை வார்த்தைகளும் சரியே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீனு...

      ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது, அவரவர் தனிப்பட்ட விருப்பம். எதையும் திணிக்கக்கூடாது... அந்த உணர்வு தானாக வளர வேண்டும்.

      திணிப்பது என்பதை எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது...

      Delete
  6. Anonymous10:29:00 AM

    what you said is right..

    but hindi therialana, vera state pogumbodhu naama padara asingamum avamanamum iruke adhu evlo kastham theiryuma...

    just learn it as a language.. it is must to avoid the problems when u go north...

    ReplyDelete
    Replies
    1. அதனை ஏன் நீங்கள் அசிங்கம் என்று நினைக்கிறீர்கள். ஆங்கிலத்தில் பேசுங்கள் நண்பா... அதுவே புரிகிறது அனைவருக்கும். நான் இரு மாதங்கள் தங்கியிருந்தேன். எனக்கு அப்படி எந்த அவமானமும் தோன்றவில்லை. அவர்கள் ஒரு பஞ்சாபி ஹிந்தியில் பேசுவான், நான் ஆங்கிலத்தில் பேசும் போது எனக்கு பெருமையாக இருக்கும். என்னை அவர்கள் பார்த்தாலே வணக்கம் என்று மரியாதையுடன் அழைப்பார்கள்... வெட்கப்பட வேண்டியது நாம் அல்ல...

      Delete
  7. தூள் !! ஹிந்திக் கார்ர்களுக்குக் கொஞ்சம் தலைக்கனம் அதிகம், அப்பப்போ இப்படிக் கொஞ்சம் மருந்து கொடுக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. நான் இருவருக்கு கொடுத்து விட்டேன்... அனைவருக்கும் கொடுக்க வேண்டும்...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  8. Anonymous11:01:00 AM

    மிகவும் சரி, அசத்தலான பதிலடி. :)வங்காளம், கேரளம், கருநாடகம், ஆந்திரம் போன்ற மாநிலத்தில் அனைவருக்கும் இந்தி தெரியாதுள்ளதை நேரில் கண்டதுண்டு. அங்கு இந்தி தெரியும் என்பது வெறும் மாயை வாதமே.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். உண்மை தான் நண்பா... அவர்கள் ஹிந்தி என்பது இந்தியாவின் மொழி, ஹிந்தி தெரிந்தால் தெருவில் தேனும், பாலாரும் ஓடும் என்பது போன்ற மாயையை உருவாக்க எத்தனிக்கின்றனர்...

      அவர்களின் லட்ச்சனத்தை அங்கு சென்று பார்த்த பின்புதான் அறிந்துகொண்டேன்...

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி இக்பால்... நீண்ட நாட்கள் கழித்து என் பதிவிற்கு வந்துள்ளீர்கள்... நன்றி.

      Delete
  9. இப்படியான தமிழர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? நம்பமுடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா. அடியேன் தமிழ் நாட்டில் தான் உள்ளேன். நம்புங்கள்...

      இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தங்கள் வரவு நல்வரவு...

      Delete
  10. நச்... பதிவு...!!

    இந்தப் பருப்புப் பயலுக எப்பவும் நம்மளக் கண்டா இப்படித்தான் பேசுவானுக..
    இதற்கு முன் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் கான்பரன்ஸ் காலில் அடிக்கடி மும்பை, டெல்லி பயலுகளோட பேசுவோம். திடீர்னு நடுவுல எவனாவது ஹிந்தியில கேள்வி கேட்டா வேணும்னே தமிழ்ல பதில் சொல்வேன். மூடிக்கிட்டு ஆங்கிலத்துல பேசுவானுங்க. மலர்வண்ணன் -ன்ற என் பேர ஒருத்தனால கூட ஒழுங்கா உச்சரிக்க முடியாது. எனக்குப் பெருமையா இருக்கும்.

    பலமுறை வடக்குப் பக்கம் சென்று வந்திருந்தாலும் ஒருமுறை கூட ஹிந்தி தெரியாமல் நான் சிரமப் பட்டது கிடையாது. காய்கறி கடை, டீ கடை, ஹோட்டல், டாக்ஸி, ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட், தியேட்டர், ஆஸ்பத்திரி, வங்கி, பஜார், பார் என எங்குமே எனக்கு ஹிந்தி தெரியாமல் சமாளிக்க முடிந்தது.

    என் நண்பர் ஒருவர் இரண்டு வருடங்கள் ஜம்முவில் இருந்தும் ஹிந்தியில் அச்சா, நஹி, ஹாங், ஜி, படா, சோட்டா போன்ற ஓரிரு வார்த்தைகளை மட்டுமே அறிவார். ஹிந்தி பேச கற்றுக் கொள்ள வாய்ப்பு இருந்தும் இது போன்ற கூமுட்டைகளின் நச்சரிப்பால் ஹிந்தியை வெறுத்து ஒதுக்கி விட்டார்.

    கேட்பதற்கே கரடு முரடாக இருக்கும் இதை எவனாவது கற்றுக் கொள்வானா?!

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு. சமாளிக்கனும்ன்னு நினைத்தால் எப்படியும் சமாளித்து விடலாம். தமிழகம் தவிர்த்து ஆங்கிலம் பொது, ஹிந்தி எதற்கு நமக்கு? மதியாதான் தலைவாசல் மிதியாதே'ன்னு நம்ம பாட்டி சொல்லிருக்காங்க! தமிழ மதிக்காதவன நாம எந்த மயிருக்கு மதிக்கணும். சொல்லுங்கள். அவனுங்க எழுத்தப் பார்த்தாலே, ஜாங்கரிய பிச்சி போட்ட மாதிரி இருக்கும். இவனுங்க இப்படி பீத்திக்கறதனாலையே என்னமோ தெரியல ஒரு வெறுப்பு வந்தாச்சி நண்பா...

      Delete
  11. நீங்க சொல்வது சரி நண்பரே... நான் ஆஃப்ரிக்கா, தெற்கு சூடானில் இருக்கிறேன், எனக்கும் இம்மாதிரி அனுபவம் கிடைத்தது, நானும் பதிலடி இப்படித்தான் கொடுத்தேன்...வெளிநாடுகளில் நம் வடக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நடத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் நம் ஊர்க்காரர்கள் இந்தி தெரியாமல் படும் சிரமம் கொடுமை... தமிழகத்தின் எல்லையைத் தாண்டிவிட்டால், இந்தி தெரியாமல் இருப்பது பெரிய சிரமத்தைக் கொடுக்கிறது...ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலத்தை ஆர்வமாக நாம் கற்பதுபோல், இந்தியையும் நாம் கற்பது நல்ல பலன்களையே தரும் என்பது என் அனுபவத்தில் நான் கண்டுகொண்டது...

    ReplyDelete
    Replies
    1. வட மாநிலங்களின் நிறுவனங்களில் பணிபுரியும் யாரும் ஆங்கிலம் தெரிந்து, ஹிந்தி தெரியாமல் யாரும் துன்புற்றிருக்க மாட்டார்கள். ஆங்கிலம் தெரியாமல் தமிழ் மட்டும் தெரிந்திருக்கும் நபர்கள் தான் இப்படி காயமுருகின்றனர், அதிலும் அவர்கள் சிறு காலங்களிலேயே, ஹிந்தியை பேச ஆரம்பித்து விடுவர். ஆனால், அதனை ஒரு பாடமாக படிக்க எந்த தகுதியும், அவசியமும் இல்லை என்பதே என் கருத்து...

      தங்கள் இனிய, அனுபவமுள்ள கருத்துக்கு மிக்க நன்றி நண்பா...

      தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  12. Anonymous12:44:00 PM

    the central govt banking sector select people from non hindi speaking states...then slowly force them to learn hindi by arranging spl training programs which is conducted mainly in hindi....though the officers know english well,they are reluctant to use that.The ministry headed by mr p.chidhambaram does not seem to take this issue seriously....KAPIL SIBAL is another minister who is uncomfortable with states which are growing economically well without using hindi as its major language.Needless to say about our dravidian ministers who are interested in making deals rather than solving the issues of tamil people.once karunanithi proudly claimed dhayanidhi maran's hindi knowledge would help to uplift the lives of tamilians someday....it did surely.....SPECTRUM!!!

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் ஹிந்தியை நேர்வாசல் வழியாக புகுத்த இயலாது என்பதை அறிந்து புற வாசல் வழியாக அனுப்ப முயற்ச்சிக்கின்றனர். அது ஒரு நாளும் வெற்றியடையாது...

      நம் திராவிட தலைவர்கள் தமது குடும்ப நலனுக்காக தமிழரையும், தமிழையும் அடகு வைத்துவிட்டனர் என்பது வேறு கதை... அதை பிறிதொரு பதிவில் ஆராயலாம்...

      Delete
  13. Anonymous1:50:00 PM

    The issue should b delinked with persons like the CISF constables n' other Hindi zealots. Only then u can see the issue holistically.

    Knowing English s good only if u are among the people who know it. u can't speak with the lower society in English. u have to use their language only. Just to get your desires fulfilled: like gaggling in market, dealing with ur peons and cleaners etc.

    If u live w/in TN, no problem. If u move outside, u will face probs.

    It s better to learn Hindi if u want to move out.

    ReplyDelete
    Replies
    1. Anonymous8:40:00 AM

      Appa sami...With Hindi will you be able to go to Russia? America? Japan? Germany? Learn everything....why just Hindi? Don't you have idea of going out of India? You want people to go out of TN, not out of India? Learn all languages and get translator job.

      Delete
    2. நண்பா... ஹிந்தி தேசிய மொழி என்பது ஒரு மாயையே... அதிலும் வட மற்றும் தென் இந்திய மக்கள் (தமிழகம் தவிர்த்து) ஹிந்தியை கல்வி அறிவு பெற்றவர்கள் தவிர்த்து யாரும் பேசவில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியிலேயே பேசுகின்றனர். கிழக்கு இந்தியாவில் வங்காளம், வடக்கு மற்று மேற்கில் பஞ்சாபி, குஜராத்தி, மராட்டி மற்றும் பல. ஹிந்தி என்பது தேசிய மொழி அது தெரிந்தால் அனைத்தும் பெற்றுவிடலாம் என்பது ஒரு மாயை மட்டுமே. ஹிந்தி என்பது கானல் நீர். தாகம் தீர்க்காது.

      Delete
    3. இரண்டாமவர் அழகாக சொல்லியுள்ளார்...

      Delete
  14. Anonymous2:01:00 PM

    Another most important factor that u miss, Vetrivel, s the Human factor.

    Language is the way to go to the hearts of a people. That s why we advocate for mother tongue as medium of education for small children. It is a natural way to captivate their minds. Others tongues like English is unnatural way.

    People can warm up to you and be more truthful to u if u deal with them in their own tongue. For e.g. if you speak Tamil with a Tamilian, it is better because it straights goes into his heart. Similarly with other tongues.

    People of Hindi belt find English difficult to learn coz English is considered as an alien tongue with alien culture. Further, their politicians after independence ensured that English is pushed far down in educational system. For instance, the min pass mark in English in UP school s 25 in . So, no man knows English well. Moreover, he begins to hate it.

    The hatred of English accentuates their love of their mother tongue. And it also leads to hatred of people like you who give more imp to English and refuse to even ack their Hindi.

    Same story with all languages. Only pedants and pretentious small minded men prefer a foreign language like English.

    Love Indian languages. If u do, u will love Hindi definitely.

    ReplyDelete
    Replies
    1. நான் ஹிந்திக்கு எதிரி இல்லை நண்பா... நான் நம் மீது திணிப்பதையே வெறுக்கிறேன், அட்ப்புரம் அது தெரிந்தால் அனைத்தும் கற்றுக்கொள்ளலாம், அனைத்தும் கிடைக்கும் என்பது மாயையே!!!

      Delete
    2. Anonymous1:06:00 PM

      the same.. hindi speaking peoples if they have to work in other states. they only need to learn that state language instead of asking them to learn your language.right?
      for instrance will you accept if i come to delhi and asks delhi people to speak in tamil as i dont know hindhi as they dont know tamil wen they are in TN. first understand the peoples.
      again the same LOVE ALL INDIAN LANGUAGES . IN INDIA there are more languages other than hindhi. so you can love tamil. nothing wrong.
      conversation b/w 2 persons ,that they dont know the other persons language.at that time the common lang will help. as you are replying in english . and me too. :-P

      Delete
    3. Anonymous1:06:00 PM

      last post by sairam

      Delete
  15. இலங்கையில் சிங்கள ஆதிக்கம் போல, இந்தியாவில் இந்தி ஆதிக்கம்! மொத்தத்தில் தமிழர்களாகிய நாம் இரு மொழி ஆதிக்கத்துக்கும் எதிராக போராடணும்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  16. ஹிந்தி கத்துக்கறது பத்தி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கற்றுகொண்டால் மட்டும் உங்களுக்கு அவங்க பெரிய வரவேற்ப்பு கொடுப்பாங்கன்னு நினைக்கறது பெரிய தப்பு என்பது வடக்குல போய் வெற்றி பெற்றவன் கிட்ட கேட்டா தெரியும்.

    12 வருடங்களுக்கு முன்னாடி கொப்னகேன் (டென்மார்க்) ல ஒரு சர்தார்ஜி ஐ சந்தித்தேன். முகத்தில் பெரும் மகிழ்ச்சியோடு அவர் என்னிடம் "Are you from India" என்றார் நானும் ஆம் என்றேன். அவ்வளவுதான் வெள்ளக்காரங்க மாதிரி கட்டியணைத்து ஹிந்தி ல பேச ஆரம்பிச்சிட்டாரு. நான் "Sorry I don't know Hindi " என்றேன். அடுத்து அவர் சொன்னது "So you are from Tami Nadu" அதுக்கு அப்புறம் எதுவும் பேசாம திரும்பிட்டான்.

    என்னடா இது அவனா வந்தான், கட்டியனைதான் (ஒரு இந்தியனா "செப்பு மொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் என்று தான்" தோணிச்சி) ஹிந்தி தெரியாதுன்னு சொன்னதும் திரும்பிட்டானே. ஒருவேளை திருட்டுப்பயலா இருப்பானோ என்று எனது pocket ஐ பரிசோதனை செய்தேன், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஹிந்தி தெரிஞ்சாதான் இந்தியனாவே ஏற்றுக்கொள்வார்கள் போலும். என்ற

    ReplyDelete
    Replies
    1. பலரும் நீங்கள் கூறுவதைப் போலத்தான், நினைக்கிறார்கள். ஹிந்தி அறிந்திருந்தால் மட்டுமே இந்தியன் என்று. மாற்ற வேண்டிய சூழ்நிலை...

      Delete
  17. Though accepting lot of facts in your post, I cant agree 100% to what you've said.

    http://vettipayyan-nattu.blogspot.com/2011/04/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஹிந்தி பற்றிய பதிவைப் படித்தேன் நண்பா... நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. என் கருத்தை நான் கூறியுள்ளேன், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை...

      மீண்டும் நான் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் ஹிந்தி என்ற மொழிக்கோ. அல்லது அது பேசும் மக்களுக்கோ நான் விரோதி அல்ல. ஹிந்தி தெரிந்தால் யாவும் பெறலாம், ஹிந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியன் என்ற மன நிலை உள்ளவர்களை மட்டுமே நான் எதிர்க்கிறேன், பல மொழிகள் பேசும் நம் நாட்டில் இது போன்று திணித்தால் அது பிரிவினையே வழி வகுக்கும்...

      Delete
  18. "தமிழ் காரர்" என்று கூட சொல்ல மாட்டார்கள் அப்படி சொன்னா தமிழ்னு சொல்ல வராதே "மத்ராஸி வாலா" என்றே சொல்வார்கள். நம்மில் சிலர் பெயரோடு "ஜி..ஜி" என்று எதுக்கு சொல்லனும் ? வடநாட்டவருக்கு தமிழ்நாடு ஒரு வேற்று தேசமா? வேற்று மொழி காரர்கள் இரண்டொரு வாரங்களிலே இங்கு வந்து தமிழில் காய்கறிகாரனிடம் பேரம் பேசுவதை பார்த்திருக்கலாம்? வேண்டுமானால் விருப்பப்பட்டு ஒரு மொழியை கற்கலாம் ஆனால் தினிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்கள் மன நிலை தான். எதையும் விருப்பப்ட்டே கற்றுக்கொள்ள வேண்டும், திணிப்பதை ஏற்க்கவே கூடாது.

      அங்கு சென்ற சில மாதங்களில் நம்மால் அந்தப் பிராந்திய மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். ஆதலால் ஒரு பாடமாக கற்க வேண்டிய அவசியம் இல்லை, என்பதே என் கருத்து...

      Delete
  19. Anonymous9:23:00 PM

    very very very wonderful nanba, i faced such incidents , we never lost anything by not learning Hindi, if someone really wanted to learn something , better learn French or German ...we tamilians should not even consider uncouth language like Hindi , our language is enriched and wealthy than any other in the world.I am writing this in english just because not good in tamil typing.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள் நண்பா. நம்மிடமே அனைத்தும் இருக்கும் போது நாம் ஏன் மற்றவர்களை தேடிப்போக வேண்டும்...

      Delete
  20. Anonymous12:16:00 AM

    //நீங்கள் சொல்லற ஹிந்தி பேசற மாநிலம் எல்லாம் எங்கள விட இன்னும் வளரல, எல்லா விதத்திலையும் போக்குவரத்து, கல்வி, மருத்துவம்னு நாங்க தான் முன்னணில இருக்கோம், ஹிந்தி பேசற மாநிலத்துலேருந்துதான் இங்க கூலி வேலைக்கு ஆளு வராங்க. ஹிந்திய ஏற்றுக்கொண்ட எந்த மாநிலமும் எங்கள விட வளரல. நாங்க ஹிந்தி பெசாததனால எந்த விதத்துளையும் நாங்க தாழ்ந்து போகல. எங்களுக்கு தமிழ், ஆங்கிலம் போதும், ஹிந்தி தேவையே இல்லை என்றேன்...//

    100%

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  21. இதை போல இதற்கும் சற்று மேலாகவே பதில் கொடுத்தாச்சு....இன்னும் தேசிய மொழி இந்திதான்னு பினாத்துறாங்க....நம்ம பயலுக தமிழின் பல பிரபல பஞ்ச் டயலாக்குகளை இந்தியில் அடித்துவிடும் போது மிரண்டு விடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம். ஒரு நாள் அனைவரும் தமிழைத் தேடிக் கற்றுக்கொள்ளும் நிலை கண்டிப்பாக வரும்...

      Delete
  22. Very Good, I agree with you

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா. தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்று. தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  23. உங்கள் விவாதம் சரியானதே. எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. இருந்தும் ஹிந்தியை ஒரு மொழியை அறிந்துகொள்ளும் விதத்தில் படிப்பது தவறில்லை என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சரி நண்பா...

      தொடர்ந்து வருகைத் தாருங்கள்...

      Delete
  24. சரியான பதிலடி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்.

      Delete
  25. மிகச்சிறந்த கருத்து... நம் தாய்மொழி தமிழை விட ஹிந்தி ஒன்றும் அவ்வளவு உயர்வான மொழி கிடையாது.. நல்ல நெத்தி அடி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி... தங்கள் இனிய வருகைக்கும், அழகான கருத்துக்கும் மிக்க நன்றி...

      தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  26. தாய்மொழி தமிழை விட ஹிந்தி ஒன்றும் உயர்வான மொழியோ ஹிந்தியைவிட தமிழ் உயர்வான பாஷய்யோ கிடையாது.. ஆனா தமிழை தாய்மொழி கொண்ட தமிழகத்து பொரும்பான்மையோருக்கு தாய்மொழி தமிழில் கல்வி கற்பது ரொம்ப அவமானகரமானது. இந்திய மொழிகளில் ஒன்றான ஹிந்தியை மொழியாக கூட கற்று கொள்வது கூடவே கூடாது. ஆனா அந்நிய பாஷய் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பது அப்படி ஒரு பெருமை தருகிறது.பெருமையடைகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஹிந்தியை விட தமிழ் உயர்வான மொழி கிடையாது மற்றும் தமிழர்கள் தாய் மொழியில் கல்வி கறப்பது அவமானத்து என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது திரு.வேகநரி அவர்களே...

      ஆங்கில வழி கல்வி என்பதை ஏற்க்க கூடாது என்று கூற இயலாது, நமக்கு உலகத்தோடு ஓர் இணைப்பு மொழி கட்டாயம் வேண்டும், தமிழை மதிக்காமல், புற வழியில் கொண்டு வந்துவிடலாம் என திணிப்பவர்களை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள இயலாது...

      வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  27. அன்பின் வெற்றிவேல் - நல்லதொரு பதில் - அவன் அதனைப் புரிந்து கொண்டானோ என்னவோ தெரியாது - ஆனால் நாம் கூறவேண்டியதை அங்கங்கே கூறிவிட வெண்டியதுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள சீனா அண்ணா...

      நாம் எவர்க்கும், எதற்கு அஞ்சக்கூடாது... நம் தரப்பு நியாயங்களையும், உரிமைகளை நாம் எப்போதும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

      Delete
  28. Karthikeyan nanjappan4:07:00 PM

    I too have many such encounters with north indian people. that is their mindset. and one more thing, it is not only tamils who hate hindi learning but also all the north east peoples who really hate hindi itself except sikkim which speaks nepali a close relative of hindi. i have been to bengal, they speak in hindi with others only.
    and one bengali student told me that english has been oppressed in bengali schools by communists due to the fear of capitalist thinking will come out of the minds of people. but unfortunately all communist tall leaders are products of british education with ICS etc. if they learn english in up and bihar, too much of caste politics and religious politics would not sustain infront of people. we accepted english and we are happy. hindi people were not allowed to learn and they are happy and proud of hindi.
    moreover, there is a judgement from guj high court ruling that there is no national language in india. hindi and english are the official languages. also english will be final if any dispute or doubt arise in law..
    nice writing brother

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கார்த்திகேயன்,

      தங்கள் இனிய கருத்துகளுக்கும், தகவல்களுக்கும் மிக்க நன்றி...

      Delete
  29. meka nantru ainakku aipaade tamil dif aodefpathu tareyathu aooenum ounkal saitheku nanree toadarpukku 09442748229

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்... நன்றி, வணக்கம்...

      Delete
  30. ANKILAM EN KATREERKAL NANBARE TAMILAI MATTUM PATIKKA VENTI THANE OORUTAN KOOTI VAAZH ENRA THAMIL VARTHAIYAI MARANTHU VITTEERKALA

    ReplyDelete
    Replies
    1. Friend, I am not oppose anyone for learn any other language, I am not enemy for it. But I am opposing who push me learn Hindhi. No one force me to learn english, So I learnt it.

      Delete
  31. TAMIL PATITHTHU NEENGAL PULAVAR AKIVITTERKALA ILLAI ENrAL THAMILAI PATRI PESA UNGALUKKE THAKUTHI ILLAI

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா,

      உண்மையைப் பற்றிக் கூற புலவராக வேண்டியதில்லை. மனதில் உறுதி இருந்தால் போதும், நான் திராவிடம் என்ற சொல்லையே நம்புவதில்லை, அது ஒரு அரசியல் சொல். தமிழ் பற்றியும், அரசியலின் உண்மை நிலை பற்றியுமே கூறுகிறேன்...

      தங்கள் வருகைத் தொடரட்டும்....

      Delete
  32. Mathil pattadhai maraikamal velipaduthum veeram tamizhanidam ulladhu enbathai neengal niroobothu vitttirgal..... ungaluku en vanakanagal....ungaladhu ovvoru pathilum sattaiyadiaga ulladhu....ungalin pathil ennul iruntha thairiyathai, thannambikkaiyai athiga paduthi ulladhu...nandri tamizhan innum tamizhanaga ullan enbatharku sandrai neengal ullirgal............

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...