Dec 30, 2015

திறந்த மடல் - 1

அன்பு தோழர் சீனு அவர்களுக்கு,

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, அப்பா சென்னையில் இருக்கும்போது அவர் மாதாமாதம் வீட்டிற்கு கடிதம் எழுதுவார். அதை நான்தான் வாசித்துக்காட்டுவேன். அப்போதெல்லாம் நான் சிறு பையன். அப்பா எழுதும் கடிதத்தை என்னால் வாசிக்க மட்டும் முடியும். பதில் எழுத தெரியாது. மாமா தான் பதில் எழுதுவார். நான் பதில் எழுதுகிறேன் என்று கூறிக்கொண்டு எழுதினாலும் அதில் ஊறுபட்ட பிழை மண்டிக்கிடக்கும். மாமா அதைக் கிழித்துவிட்டு அவர்தான் எழுதி அனுப்புவார். இருந்தாலும் எனக்குள் கடிதம் எழுத வேண்டும் எனும் ஆவல் மட்டும் நீடித்துக்கொண்டே இருந்தது.


Dec 1, 2015

தாவணி

வழக்கமாகப் புலரும் பொழுதைப் போன்று அன்று இல்லை. காலையில் எழும்போதே பெரும் உற்சாகமாக எழுந்தேன். காலையிலேயே துயில் களைந்து எழுந்துவிட்ட என்னை என் தம்பியும், அம்மாவும் விசித்திரமாக பார்த்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. விடுமுறைக்கு வீட்டிற்கு எப்போது வந்தாலும் அப்போதெல்லாம் ஒன்பது மணிக்கு எழுந்தே பழக்கப்பட்டவன் நான். என்னை எழுப்ப முயற்சித்துவிட்டு தம்பி தோற்று பள்ளிக்கூடம் சென்றுவிடுவான். அம்மா பருத்திக்காட்டுக்கு சென்றுவிடுவார். அவர்கள் பிறகே விழிப்பேன். கல்லூரியில் சேர்ந்த மூன்று வருடங்களாக நடந்துகொண்டிருப்பது இதுதான். நேற்று தீபாவளி. நேற்று கூட எட்டு மணிக்குத்தான் எழுந்தேன். அப்படிப்பட்ட சோம்பேறி நான்.