
தனிமைப் படுத்தப்படும் சமயத்தில் தான் மனதின் ஆழத்தினுள் பூட்டி வைத்திருக்கும் பல நினைவுகளும் கிளர்ந்து எழுந்து பாடுபடுத்தும். அந்தத் தனிமையை இப்போது நினைத்தாலும் என்னை நினைத்து நானே பரிதாபப் படுவேன். அந்த அளவிற்குக் கொடூரமான தனிமை அது. வேலை கிடைக்காத விரக்தி, கடன், ஏமாற்றம், காதல் என அனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை ரணமாக்கத் தொடங்க அவற்றிலிருந்து விடுபட்டுக் கொள்ளவே புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன்.