Dec 4, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -1

ஈழம், யவனம், சாவகத் தீவு, பவளத்தீவு, பாண்டிய நாடு, சீனம், கடாரம்  போன்ற தேசங்களிலிருந்து வணிகர்களையும் கடலோடிகளையும் கவரும் மாபெரும் துறைமுக நகரமாக நாவலந்தீவினுள் அமைந்திருந்த மாபெரும் சோழப் பேரரசின் தலைநகராக விளங்கியது புகார்.

பல தேசத்து வணிகர்களும் கடலோடிகளும் தொடர்ந்து வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருந்ததனால் புகார் நகரில் இருந்த துறைமுகம் எப்போதும் பரபரப்புடனே இருந்து கொண்டிருந்தது.
 
துறைமுகத்திற்கு தூர தேசங்களிலிருந்து வந்து கொண்டிருந்த நாவாய்களுக்கு வழிகாட்ட நெய்யில் எரிந்துகொண்டிருந்த கலங்கரை விளக்கு, கடலலையின் உயரத்திற்கு ஏற்ப ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கும் படகு, நாவாய்கள் ஆகியவை கடலின் மீது நடனமாடிக் கொண்டிருந்தது.

கலங்கரை விளக்குடன் சேர்ந்துகொண்ட நிலவும் புகார் நகரக் கடலுக்குள் வெள்ளியை வாரி இறைத்துக்கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை அளித்தது.

வந்துகொண்டிருந்த நாவாய்களின் தூரத்து சிறு சிறு விளக்குகள் வானில் நட்சத்திரங்களுக்கு இணையாக கடலில் மின்னிக்கொண்டிருந்தது.

தூர தேசங்களில் இருந்து வந்துகொண்டிருந்த பெரும் வணிகக் கப்பல்களுக்கும், கடலோடிகளுக்கும் பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருந்த மணிமேகலைத் தெய்வத்தின் சிலை நெய்தனங்காவல் கடற்கரையில் வீற்றிருந்தது. அக்கோயிலில் எரிந்துகொண்டிருந்த சிறு விளக்கிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த வெளிச்சமானது, பெருங்கடலுக்கே பாதுகாப்பையும், அருளையும் வழங்கிக் கொண்டிருப்பது போல சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது.

துறைமுகத்தில் வணிகர் கூட்டங்கள், அவர்களின் பணியாட்கள், அவர்களை முறைப்படுத்தியும், பாதுகாப்புக்காகவும் நின்றுகொண்டும் குதிரை மீதும் அமர்ந்திருந்த வாளேந்திய குதிரை வீரர்கள் அங்குமிங்கும் சென்று பார்வையிட்டுக் கொண்டு அனைவரையும் ஒழுங்குபடித்திக் கொண்டிருந்தனர்.

கப்பலிலிருந்து பாண்டிய நாட்டு முத்துக்கள், பொன், வெள்ளி, வைரம், கர்ப்பூரம், வாசனைக் குங்குமம், சீனத்து பட்டு, யவன தேசத்து நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த கலைப் பொருள்கள் போன்ற வாணிபப் பொருள்களை கப்பலிலிருந்து இறக்கிக்கொண்டும், ஏற்றிக்கொண்டும் துறை முகத்திலிருந்து பொருள்களை கூடை கூடையாக குதிரை வண்டியிலும், தங்கள் தலையில் சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்ததால் குதிரை வண்டியிலிருந்து வந்த சப்தமும் சுமை தெரியாமல் இருக்க பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் வந்த பணியாளர்களின் சப்தமும் சேர்ந்துகொண்டு நகரம் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிந்தது.

சீனத்துக் கற்பூரம், வாசனைத் திரவியங்கள் துறைமுகம் முழுவதும் நறுமணத்தை பரப்பிக் கொண்டிருந்தது.

மாறாக உச்சிக்கு வந்துவிட்ட பூரண சந்திரன் தான் இரவு கடந்து நடு யாமம் வந்துவிட்டதை காட்டியதே தவிர நகரத்தில் நடு இரவு கடந்து கொண்டிருப்பதற்கான சுவடே இல்லை.

துறைமுகம் மட்டும் அல்லாமல் புகார் நகரமும் இப்படியே சுறுசுறுப்புடன் காணப்பட்டது.

வீதியில் எரிந்துகொண்டிருந்த இரவு விளக்குகளின் செந்நிற ஒளியோடு செந்துகொண்ட நிலவின் பாலொளி புகார் நகரத்திற்கு பேரழகை வழங்கிக்கொண்டிருந்தது.

இரவில் புகார் நகரத்திற்கு காவல் காக்கும் ஊர்ப்படை வீரர்கள் தங்களுக்குரிய உடையிலும் மாற்றுடையிலும் காவல் காத்துக்கொண்டிருந்த படியாலும் துறைமுகம் மற்றும் தூர தேசங்களிலிருந்து வந்திருந்த மக்களை பரிசோதித்து அவரரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பும் பணியிலும், வழியை காண்பித்துக்கொண்டும் வீரர்களின் கேள்விகள், பயணிகள் அளித்துக் கொண்டிருந்த பதில்கள் அவ்வப்போது எழும் குதிரைகளின் கனைப்பு சத்தம் முதலியவை துறைமுகத்தை விடவும் புகார் நகரம் பரபரப்புடன் இருந்தததை காட்டிக்கொண்டிருந்தது.

சோழப் பேரரசின் அரண்மனை, அமைச்சர்கள், செல்வந்தர்கள் இவர்களின் பல அடுக்கு மாட மாளிகைகள் அடங்கிய பட்டினப் பாக்கமும் மறவர்கள், சிறு வணிகர்கள் இவர்கள் வசிக்கும் மருவூர்ப் பாக்கமும் அந்தி விளக்குளால் பேரழகோடு விளங்கிக்கொண்டிருந்தது. இந்த இரண்டு ஊர்களும் சேர்ந்ததுதான் புகார் நகரம்.

இப்படி புகார் நகரமே பரபரப்பாகவும் கோலாகலமாக இருக்கக் காரணம் அடுத்தத் திங்களின் பவுர்ணமி நாளில் தொடங்கும் இந்திரத் திருவிழாதான்.

இந்திரத் திருவிழா அரச விழா என்பதால் சோழப் பேரரசின் தலைநகராகிய புகார் பொலிவோடு தயாராகிக் கொண்டிருந்தது. ஆதலால் எந்த வித அசம்பாவிதமும் இருக்கும் பொருட்டு காவல் மட்டும் பல மடங்கு அதிகப் படுத்தப் பட்டிருந்தது.

காவல் நகரத்தில் மட்டும் அல்லாது புகார் நகரத்தைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகளிலும் நகருக்கு வரும் விருந்தினரை பாதுகாக்கும் பொருட்டு ஆங்காங்கே காவல்கள் நிறுத்தப் பட்டிருந்தது.

புகார் நகர மக்களும், அவர்களின் விருந்தினர்கள், விழாக்களுக்கு பலதரப்பட்ட தேசங்களில் இருந்து வரும் அலங்காரப் பொருள்களை வாங்குவதற்கும், அவல் நீச்சல் போட்டியில் தங்கள் திறமையைக் காண்பிக்கவும் தயாராகிக் கொண்டிருந்தனர் பெண்கள், மல்யுத்தம், இளவட்டக் கல் தூக்கும் போட்டி, வில் வித்தை, புரவிப் போட்டி ஆகியவற்றில் தங்கள் திறமையைக் கவனிக்க ஆடவர்களும் தயாராகிக்கொண்டிருந்தனர்.

இப்படி புகார் நகர மக்கள் அல்லாது நகரில் அமைந்துள்ள பலதரப்பட்ட சமயங்களான சைவம் (தமிழர் மதம்), ஆசீவகம், ஆருகதம் (சமணம்), பவுத்தம், வைதீகம் முதலிய சமய மக்களும் தயாராகிக் கொண்டிருந்தனர். இந்த சமயங்களின் பெரியோர்கள் சமய வாதம் புரிந்து ஒருவரொருவர் மற்றவர்களைத் தோற்கடிக்க தங்களைத் தயார்படுத்திக் கொண்டும் இருந்தனர்.

இந்தச் சமய மக்களோடு சிவன், கொற்றவை, திருமால், இந்திரன் முதலான தமிழர்களின் தெய்வங்களின் கோயில்களும் ஆருகத மதத்தின் ஆறுகதக் கடவுளின் மடங்களும், பவுத்தத்தின் ஏழு விகாரங்களை உள்ளடக்கிய இந்திராவிகாரமும், வைதீக பிராமணர்களின் விஷ்ணு, உருத்திரன், முதலிய தெய்வங்களும் வைதீக தெய்வங்களுக்கு நடத்தும் பிரமாண்ட யாகங்களுக்கு பலி கொடுக்க ஆயிரக்கணக்கான பசுக்களும் தயாராகிக் கொண்டிருந்தனர் இந்திரத் திருவிழாவிற்கு.

இப்படி புகார் நகரமே பரபரப்புடன் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது புகார் நகரப் பெரும் வணிகன் வேளாதன் மட்டும் சற்றுக் கவலையுடன் பொழுது கடந்துகொண்டிருப்பதைக் குறிக்கும் உச்சி நிலவையும் வழியையும் பார்த்துக் கொண்டு ஏவலாளிகளுடன் இன்று வருவதாய்ச் சொன்ன தன் மகள் பத்திரை ஏன் இன்னும் வரவில்லை? செய்தி ஏதேனும் அவர்களைப் பற்றி வந்ததா என்று பணியாளர்களிடன் கோபத்தோடும் கவலையுடனும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

நேரமாக நேரமாக பெருவணிகன் வேளாதனின் எதிர்பார்ப்பும், கவலையும் அதிகமாகிக் கொண்டே சென்றது. ஏனெனில் இன்று தன் உறவினர் நகரான ஆவூரிலிருந்து திரும்புவதாகக் கூறிய தன ஒரே மகள் பத்திரை கொடிய கள்வர்கள் நிரம்பிய சம்பாபதி பெருங்காட்டைக் கடந்துதான் வரவேண்டும் என்ற எண்ணம் மெதுவாக அவனைத் தின்றுகொண்டு பயத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. வனப் பாதையில் நின்றுகொண்டிருந்த சோழ வீரர்களின் காவலும், தன் மகளுடன் வரும் வானவல்லி மற்றும் சில காவலாளிகள் வருகிறார்கள் என்ற செய்தி மட்டுமே அவனுக்கு ஆறுதல் அளித்துக்கொண்டிருந்தது, சம்பாபதி வனத்தின் காவல் தெய்வமான சம்பாபதி அம்மனைத் தான் அவன் நம்பி வேண்டிக்கொண்டிருந்தான். இருப்பினும் அவனது கவலை நின்றபாடில்லை.
தொடரும்...
 
நன்பர்கள் அணைவருக்கும் வணக்கம். இனி வரும் ஒவ்வொரு புதனன்றும் வானவல்லி என்ற சரித்திர நாவல் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துப் பிழை, சொற்பிழை ஏதேனும் காணப்பட்டால் சுட்டிக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

57 comments:

  1. ஐயோ நாவலா.......
    வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அண்ணா...

      வருகைத் தொடரட்டும்...

      Delete
  2. நல்லதொரு ஆரம்பம்... பாராட்டுக்கள்... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் பாராட்டுகளுக்கும் வருகைக்கும் நன்றி...

      Delete
  3. அருமையான நாவல்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  4. நாவாயகளின் -- நாவாய்களின்
    கான்பித்துக் - காண்பித்துக்
    அவ்வபோது - அவ்வப்போது
    கவல்கள் - காவல்கள்
    அவல் நீச்சல் - ?
    நன்பர்கள் அணைவருக்கும் - நண்பர்கள் அனைவருக்கும்

    ReplyDelete
    Replies
    1. எழுத்துப் பிழைகளை சரி செய்து விட்டேன் அண்ணா... சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி...

      அவல் நீச்சல் என்பது அரிசியால் செய்த ஒரு வகை உணவுப் பொருளை வாயில் அடைத்துக் கொண்டு நடக்கும் ஒருவகை நீச்சல் போட்டி... சங்க கால புகார் நகரின் இந்திர விழாவில் இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது அண்ணா...

      Delete
    2. வரும் பதிவுகள் அனைத்திலும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் அண்ணா...

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வானவல்லி புகழ் பரப்பட்டும். அருமையான முயற்சி. தொடர்ந்து படிக்க ஆவல், த.ம 2

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அண்ணா...

      Delete
  7. நாவல் தொடங்கியதில் மிக்க மகிழ்ச்சி வெற்றிவேல் வாழ்த்துக்கள் தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...

      ஒவ்வொரு புதன் அன்றும் வெளிவரும்...

      Delete
  8. மகிழ்ச்சி நண்பரே தொடருங்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி அண்ணா...

      தங்கள் வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  9. நாவல் துவக்கம் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அய்யா...

      Delete
  10. அருமையான துவக்கம்! சரித்திர நாவலுக்கான அனைத்து அம்சங்களும் இருக்கிறது! தொடருங்கள்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் பாராட்டுகளுக்கும் இனிய வருகைக்கும் .மிக்க நன்றி...

      Delete
  11. Anonymous8:32:00 PM

    வணக்கம்
    தம்பி

    உங்களின் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்... கட்டாயம் காத்திருப்போம்... அடுத்த பதிவுக்கா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி , தொடர்கிறேன் அண்ணா...

      Delete
  12. நல்ல துவக்கம் தம்பி. .தொடர்ந்து எழுதுப்பா!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா, தொடர்கிறேன்...

      Delete
  13. இஸ்ட்ரி நாவலாபா...
    சோக்கா கீதுபா... கண்டினி பண்ணுபா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நைனா,

      தொடர்கிறேன்...

      Delete
  14. வாழ்த்துக்கள் தம்பி

    ஒரு சிறிய சந்தேகம், திருமால் வேறு, விஷ்ணு வேறா, வெவ்வேறாக இருந்தாலும் வைதீக அதாவது வைணவ மதம் தானே,

    // சிவன், கொற்றவை, திருமால்,//
    //வைதீக பிராமணர்களின் விஷ்ணு,//

    ReplyDelete
    Replies
    1. நாம் எடுத்துக் கொண்ட கதைக் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்று இல்லை. அப்போது வைதீகம், தமிழர் மதம் அதாவது சைவம் என தனித்தனி மதங்களாக இருந்தது... அக்காலத்தில் திருமால் வேறு, விஷ்ணு வேறு. திருமால் தமிழர் கடவுள் விஷ்ணு வைதீக மத பிராமணர்களின் கடவுள். இரு மதங்களும் கி.பி. 8-9 ம் நூற்றாண்டுகளுக்குப் பின் தான் இணைந்து இந்து மதமாக மாறியது...

      நன்றி..

      Delete
  15. நான் முதலில் வானவல்லி என்னும் சரித்திர நாவலின் புத்தக விமர்சனம் என்று நினைத்தேன், சரி புத்தகத்தை நீ எழுது, விமர்சனத்தை நான் எழுதி கொ(ல்)ள்கிறேன் :-)))))

    ReplyDelete
  16. அருமை..நான் ஏதோ புத்தகம் படித்ததைப் பகிரப் போகிறீர்கள் என்று நினைத்தேன்..இது வெகு அமர்க்களமாய் இருக்கிறதே..வாழ்த்துகள்! தொடர்கிறேன் வானவல்லியை! நன்றி வெற்றிவேல் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கிரேஸ்,

      தங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சி .அக்கா..

      Delete
  17. நாவல் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மாதேவி,

      தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  18. சரித்திரக் கதை முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி, நன்றி அண்ணா...

      Delete
  19. தமிழ் மண வாக்கிற்கு நன்றி அண்ணா...

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் நண்பா தொடர்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கும், தொடர்வதற்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  21. இனிய வணக்கம் தம்பி வெற்றி...
    முதலில் என் அன்பான பூங்கொத்தை பெற்றுக்கொள்ளுங்கள்...
    அழகான வரலாற்று நாவல் எழுதத் துணிந்த உங்களின் முயற்சிக்கு.

    ==
    வானவல்லி
    பெயரே அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. பெயர்க் காரணத்தை எனக்கு இடும்
    பதில் கருத்தில் நீங்கள் குறிப்பிட்டால் மகிழ்வேன் தம்பி. அறிந்த பொருளே இருந்தாலும்
    உங்கள் கருத்தில் வானவல்லிக்கு என்ன பொருள் என்பதை தெரிந்துகொள்ளவே இந்த எண்ணம்.
    ==
    சொற்பிழைகள் திருத்திய பிறகு படைப்பின் எழில் பெருகி இருக்கிறது., முடிந்த அளவுக்கு
    சொற்பிழைகள் இன்றி எழுதுங்கள். எவ்வளவோ முயற்சிகள் எடுத்து நல்ல ஒரு
    காவியம் படைக்க நினைக்கும் உங்கள் முயற்சிக்கு சொற்பிழைகள் வேகத்தடைகள் இடும்..
    கவனத்தில் கொள்ளுங்கள்.
    ==
    அறிமுகப் பதிவில் கதை நிகழுமிடம் வர்ணிப்புகள் மிகவும் அருமை. கதைக் களத்தை
    கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
    ==
    வணிகன் வேளாதன் உங்கள் சரித்திரக் கதையின் முதல் கதாபாத்திர அறிமுகம்.
    என்னிடமிருந்து ஒரு வேண்டுகோள்....
    ஒவ்வொரு கதாபாத்திரம் அறிமுகத்திலும் அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லுங்கள்
    அப்போதுதான் அவர்களும் உருவம் கண்முன் தோன்றும்.
    ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
    ==
    தொடருங்கள் தம்பி...
    தொடர்ந்து வருகிறேன்...
    சரித்திரம் நிகழ்த்துங்கள்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் தம்பி வெற்றி...
      முதலில் என் அன்பான பூங்கொத்தை பெற்றுக்கொள்ளுங்கள்...
      அழகான வரலாற்று நாவல் எழுதத் துணிந்த உங்களின் முயற்சிக்கு.
      =================================================

      இனிய வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வாழ்த்துகளுக்கும், பூங்கோத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
    2. சொற்பிழைகள் திருத்திய பிறகு படைப்பின் எழில் பெருகி இருக்கிறது., முடிந்த அளவுக்கு
      சொற்பிழைகள் இன்றி எழுதுங்கள். எவ்வளவோ முயற்சிகள் எடுத்து நல்ல ஒரு காவியம் படைக்க நினைக்கும் உங்கள் முயற்சிக்கு சொற்பிழைகள் வேகத்தடைகள் இடும்..

      கவனத்தில் கொள்ளுங்கள்.
      ======================================================

      முடிந்த அளவிற்கு சொற்ப்பிழைகள் இன்றியே எழுத முயற்சி செய்கிறேன். இருப்பினும் கணினியில் எழுதும் போது சில பிழைகளை தவிர்க்க இயலவில்லை. பிழைகள் சிறிது தடையாகவே உள்ளது அண்ணா... வாசிக்கும் தங்களைப் போன்றவர்கள் சுட்டிக்காட்டுவீர்கள் என நம்புகிறேன்.

      Delete
    3. அறிமுகப் பதிவில் கதை நிகழுமிடம் வர்ணிப்புகள் மிகவும் அருமை. கதைக் களத்தை
      கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
      ===============================================

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா... தங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த உற்ச்சாகம் அளிக்கிறது.

      Delete
    4. வணிகன் வேளாதன் உங்கள் சரித்திரக் கதையின் முதல் கதாபாத்திர அறிமுகம்.
      என்னிடமிருந்து ஒரு வேண்டுகோள்....
      ஒவ்வொரு கதாபாத்திரம் அறிமுகத்திலும் அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லுங்கள்
      அப்போதுதான் அவர்களும் உருவம் கண்முன் தோன்றும்.
      ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
      =====================================================

      ஆமாம் அண்ணா, வணிகன் வேளாதன் முதல் கதாபாத்திரம். இனி வரும் கதாபாத்திரங்களில் அந்தக் குறையை சரிசெய்துவிடுகிறேன்...

      தவறை சுட்டிக் காட்டியுள்ளமைக்கு மிக்க நன்றி.

      Delete
    5. தொடருங்கள் தம்பி...
      தொடர்ந்து வருகிறேன்...
      சரித்திரம் நிகழ்த்துங்கள்
      வாழ்த்துக்கள்.

      தங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும் மிகுந்த உற்ச்சாகம் அளிக்கிறது. மிகுந்த நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துக்கும்.

      தொடர்கிறேன் அண்ணா...

      Delete
    6. வானவல்லி
      பெயரே அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. பெயர்க் காரணத்தை எனக்கு இடும்
      பதில் கருத்தில் நீங்கள் குறிப்பிட்டால் மகிழ்வேன் தம்பி. அறிந்த பொருளே இருந்தாலும்
      உங்கள் கருத்தில் வானவல்லிக்கு என்ன பொருள் என்பதை தெரிந்துகொள்ளவே இந்த எண்ணம்.
      ======================================================


      அண்ணா, வல்லி- கொடி வானவல்லி என்பதற்கு மேகங்களுக்கிடையில் படரும் தூய்மையான, பரிசுத்தமான கொடி என்று பொருள். வானில் படரும் கொடி எனப் பொருள். கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் இப்படியே தூய்மையாக

      Delete
  22. Anonymous7:24:00 PM

    மிக அருமையான முயற்சி ஆரம்பமே அசத்தல் . எனக்கும் வானவல்லி மிகப் பிடித்தது.
    கனநாள் கருத்திடவில்லை என்று முகநூல் பிடித்துப் புகுந்தேன். வானவல்லி என்று பெயர் கண்டதும் ஏதோ சரித்திர நாவலோ
    என்று புகுந்தேன். சொந்த முயற்சி என் புரிந்தது. இனிய வாழ்த்து.
    தொடருவேன். சரித்திர நாவல் போலவே உள்ளது. அருமை.
    அத்தனை விமரிசன விளக்கங்களும் வாசித்து மகிழ்ந்தேன்.

    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வேதாம்மா...

      தாங்கள் தேடி வந்து வாசித்து கருத்தளித்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...

      தாங்கள் தொடர்ந்து வந்து தங்கள் மேலான கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...

      வருகைக்கும் இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி அம்மா...

      Delete
  23. சரித்திர நாவல் கைவந்திருக்கிறது. ஆனால் இனிதான் கவனமாக இருக்க வேண்டும். எல்லோரும் சொன்னது போல் எழுத்துப் பிழைகள். எ.கா.கற்பூரம்...மொழி இதுவ்ரை சரியாகத்தான் உள்ளது அடுத்து வரலாற்று நிகழ்வுகளில் எந்தக் குறையும் இல்லாமல் கவனம் கொள்ளவும். எனக்கு வரலாறு தெரியாது ..எனவே அதைச் சுட்டிக்காட்ட என்னால் முடியாது . ரசனையான பெயர்க்காரணம் படித்தேன் அருமை. தொடர்கிறேன் . கடினமான உந்தன் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வெற்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தாங்கள் கூறியுள்ள யோசனைகளையும் நான் கவனத்தில் கொள்கிறேன்... ஆரம்பத்தில் எழுத்துப்பிழைகள் அதிகம் ஏற்பட்டன. இப்போது குறைத்துள்ளேன்...

      தங்கள் இனிய கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி...

      Delete
  24. வணக்கம் சகோதரா! முதலில் சரித்திரக்கதையை எழுதுவதற்கு பாராட்டுக்கள்.

    பொதுவா நான் சரித்திர நாவல்களை விரும்பி படிப்பதுண்டு. நேற்று உங்களுடைய தளத்திற்கு முதன்முதலாக வந்தபோதே, இந்த கதையை பார்த்துவிட்டேன். அப்பவே படிக்க வேண்டும் என்று எண்ணினேன், நேரம் இல்லாததால், கவிதைகளை மட்டும் படித்தேன். வரலாற்று கதைகளை நான் கூடுதல் நேரம் எடுத்து படிப்பதுண்டு. அதனால் இன்று நிதானமாக இந்த முதல் பகுதியை படித்தேன்.
    ஆரம்பமே மிக அருமையாக இருக்கிறது. சீக்கிரம் மற்ற பகுதிகளையும் படித்து விடுகிறேன்.
    தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தாங்கள் விரும்பி படித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா...

      விரைவில், மற்ற பகுதிகளையும் படித்து கருத்து வழங்குங்கள் அண்ணா... எனக்கு மகிழ்ச்சியாகவும், பெரும் ஊக்கமாகவும் அமையும். மகிழ்ச்சி அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  25. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

    வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - மலைப் பயணம்

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி அண்ணா...

      Delete
  26. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

    வலைச்சர தள இணைப்பு : டெலிபோன் தொல்லை!!!!!!!!

    ReplyDelete
  27. எனது கருத்தை காணவில்லையே... ஐயகோ... ம்ம்ம்... இப்போது புத்தகமாய் உருப்பெற்று விட்டது வானவல்லி... சிறப்பு...

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...