Dec 22, 2013

சிறைப் பறவையின் காதல்

உன் விழிகள் இரண்டும்
என் இதயம் துளைக்கும்
வில் அம்புகள்...

உன் அம்புகள் துளைத்த
என் இதயத்தில் வழிவது
குருதி அல்ல- அது என் காதல்...

என் திசையெங்கும்
காற்றாய் சூழ்ந்திருக்கிறது
எனை திணறடிக்கும் உன் காதல்...

சுவாசிப்பது காற்றை அல்ல.
உன் காதலை...

தொடுவானமாய் ஆகிவிட்டதென்
காதல்...

தொட்டுவிடும் தொலைவில் நீ
தொட இயலாத தொலைவில் நான்...

காரணம்-
இது சிறைப் பறவையின்
சிறகொடிந்த காதல்...

திருமதி.வெ.தேவி...
தஞ்சை....

தோழி திருமதி.தேவி வெற்றிவேல்  தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இல்லத்தரசி. இவரது கணவர் இந்திய கடற்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பிய கவிதை இது...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

22 comments:

  1. அருமையான கவிதை. பாராட்டுகள் கவிதை எழுதியவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும்.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. உள்ளத்தைத் தொட்ட உணர்ச்சி மிக்க கவிதை இதை எழுதியவருக்கும்
    பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் இனிய வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. உப்புக் காற்றின் மணம் துறந்து உவகையுடன் வந்து விரைவில் சேரட்டும் தோழியின் கணவர் !
    தமிழ் மணத்தில்இணைத்து வோட்டும் போட்டுவிட்டேன் சகோ !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி...

      Delete

  4. "உன் விழிகள் இரண்டும்
    என் இதயம் துளைக்கும்
    வில் அம்புகள்..." என
    அழகாகக் கவிதையாக்கியுள்ளீர்

    ReplyDelete
  5. உங்கள் அன்புத் தோழியின் ஏக்கக் கவிதை அருமை!

    அவர் கணவர் விரைவில் வீடு வந்து வாழ்வில் வசந்தம் வீசிட வாழ்த்துகிறேன்!

    பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் இனிய வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. Anonymous5:44:00 AM

    வணக்கம்
    தம்பி..

    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...

      Delete
  7. தோழிக்கு எங்களுடைய பாரட்டுகளும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி...

      தங்கள் இனிய பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. எண்ணமெல்லாம் இன்பமது தளைத்தோங்க
    வண்ண மயமாய் வாழ்வது இனித்திடவே
    வருகின்ற புத்தாண்டில் நீங்களும் உங்கள்
    குடும்பத்தினரும் மகிழ்வோடு திளைத்திருக்க
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நல்வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி...

      தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

      Delete
  9. தோழிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...