கடந்த தமிழ் பற்றிய பதிவில் களப்பிரர்கள் பற்றி குறிப்பிட்டுருந்தேன், அதாவது களப்பிரர்களின் காலத்தையே கடந்து வந்தது நம் தாய் மொழி... இந்த நவீன களப்பிரர்களை விரட்டாதா என்ன!!! பிறகு சிலர் இந்த களப்பிரர்கள் பற்றி தெளிவான விளக்கங்களை வேண்டி பின்னூட்டம் அளித்திருந்தனர். எனது தேடலுக்கும், என் பதிவிற்கும் சற்று இடைவெளி விழுந்தது உண்மையே. மேலும் எந்த சார்பும் இல்லாமல் நடுநிலையில் தேடினால் மட்டுமே களப்பிரர்கள் பற்றி நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள இயலும்...
நான் எனது பாடப்புத்தகத்தில் படித்தது நினைவிற்கு வருகிறது. அதாவது களப்பிரர்கள் காலம் தமிழகத்திற்கு இருண்ட காலம். அவர்கள் காலத்தில் தமிழகத்தில் களவு, சூது, மது போன்ற தீய பழக்கங்களுக்கு தமிழர்கள் அடிமையாகினர், அவற்றிலிருந்து தமிழர்களைக் காக்கவும், களையவுமே அந்த கால கட்டத்தில் தமிழில் ஏராளமான நன்னெறி நூல்களும், பக்தி இலக்கியங்களும் தோன்றின என்று படித்தேன். அதையும் அப்படியே நம்பி விட்டேன். பிறகுதான் அவை அனைத்தும் மாற்றி எழுதப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாறு என்பதை புரிந்து கொண்டேன்.
அதாவது இருண்ட காலம் என்றால், தீய காலம் அல்ல, அது சிலர்களால் குறிப்பாக வேத மதத்தை (இந்து மதம்) சேர்ந்தவர்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு அது பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கப் பெறாத இருண்ட காலம் என அறிந்து கொண்டேன், நம் தமிழக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை தமிழகத்தில் யார் ஆண்டது, எப்படிப்பட்ட ஆட்சி என அவர்கள் பற்றிய தகவல்கள் பல திட்டமிட்டு அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் விட்டது.
அவர்கள் அப்படி என்ன தான் செய்தார்கள், ஏன் அவர்கள் காலம் இருண்ட காலமாக எந்த தகவலும் கிடைக்கப்பெறாமல் உள்ளது என்பதை தேடிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. அவற்றை இனி பாப்போம்.
![]() |
கி.பி நான்காம் நூற்றாண்டில் களப்பிரர்களின் பிரமாண்ட ஆட்சிப் பகுதி |
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர், அவர்கள் பற்றிய வரலாற்று குறிப்புகளை தேடிப்பார்த்தால் நேரடியாக சில பக்கங்களைக் கூட காண இயலாது அத்தனையும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, களப்பிரர்கள் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய காவிரிப்பட்டினத்தையே (பூம்புகார்) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.
அவர்களின் ஆட்சி மொழி பாலி மொழி மற்றும் கிரந்த மொழி ஆகும், இக்காலகட்டத்தில் தான் பல சமண நூல்கள் பாலி மற்றும் சமண கிரந்த மொழியில் வெளிவந்தமையால் தமிழைக் காக்கும் பொருட்டு தமிழில் பல இலக்கியங்களும் நூல்களும் தோன்றின என்று கூறுகின்றனர். திருக்குறள் மற்றும் சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் இக்கால கட்டத்தில் தான் தோன்றின. ஆனால் களப்பிரர்கள் இந்நூல்களை ஆதரித்தனர் என்பதற்கான எந்த ஆதராமும் இல்லை.
அவர்கள் சமண சமையத்தைச் சார்ந்தவர்கள் என்று பலர் கூறுகின்றனர் அதற்க்கு ஆதாரமாக குமரியில் உள்ள சிதறால் மலை மற்றும் உளுந்தூர்ப் பேட்டையில் உள்ள அப்பாண்டநாதர் கோயில் ஆகிய சமண குடைவரைக் கோயில்கள் இவர்கள் காலத்தில் தோன்றியது என சிலர் கூறுகின்றனர். மாறாக கிடைத்துள்ள சில களப்பிரர்கள் பற்றிய தகவல்களும் புத்த மதத்தைச் சார்ந்த நூல்களில் மட்டுமே கிடைக்கப் பெறுவதால், அவர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கூறுகின்றனர். ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது அவர்கள் பார்ப்பணர்களை ஆதரிக்கவில்லை, அதாவது களப்பிரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலம் மற்றும் பொன் தானங்களை தடுத்து நிறுத்தினார்கள். அக்காலத்தில் தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு (அதாவது ஆரியர்கள்- புரிதலுக்கு மட்டும் இச்சொல், மற்றபடி நான் இங்கு ஆரிய- திராவிடம் பற்றி பேசவில்லை) எடைக்கு எடை தங்கம், நிலம், மற்றும் தானியங்கள் போன்றவை தானங்கங்களாக வழங்கப்பட்டன. இவற்றை களப்பிரர்கள் தடுத்து நிறுத்தினர் என்பதற்கு மட்டும் சில ஆதாரங்கள் உள்ளன. இரண்டாம் விக்கிரமாதித்தன் நேரூர்கொடை வினைய ஆதித்தனின் அரிகரகொடை செப்பேட்டில் இந்தத் தகவல்கள் எழுதப் பட்டு இருக்கின்றன. மேலும் இவர்கள் காலம் கி.பி.300 முதல் கி.பி.600 என்பன போன்ற சில தகவல்கள் இதிலிருந்தே யூகிக்கப்படுகிறது. அவர்கள் காலத்தில் சமயங்களுக்கு எந்தவித முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை.
![]() |
குமரி- சிதறால் மலை |
அப்பாண்ட நாதர் கோயில்- திருனரங்கொன்றை கிராமம்- உளுந்தூர் பேட்டை |
மேலும் அவர்களின் அரசர்களைப் பற்றியும் குறிப்புகள் எழுதி வைக்கவில்லை. அப்படி எழுதி வைத்திருந்தாலும் அவை அழிக்கப் பட்டுவிட்டன என்றே கூறலாம். எப்படி தேடினாலும் இரண்டு பெயர்கள் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது. கள்வர் கோமான்- புல்லி என்பவரால் அவர்கள் ஆட்சி தொடங்கியது என்றும், கி.பி. 442ல் ஆட்சி செய்தவன் கோச்சேந்தன் கூற்றன் என்பன ஆகும்.
பிறகு இறுதியாக களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அது நடந்தது அவர்களின் இறுதிக் காலத்தில்தான். களப்பிரர்கள் பாண்டியன் கொடுங்கன் பாண்டியனாலும் , சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் மற்றும் சாளுக்கியர்களாலும் கிபி 7 நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்டனர் என்பது கூட பாண்டியர்களின் செப்பெடுகளிளிருந்தே கிடைக்கப் பெறுகிறது.
குறிப்பிட்ட இக்காலத்தில் மட்டும் பார்ப்பனார்களின் செல்வாக்கு அறவே இன்றிக் காணப்பட்டதால் அக்காலம் தமிழகத்தில் இருண்ட காலம் என சைவ ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்டது என இக்கால நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
களப்பிரர்களின் இருண்டகால தேடல் தொடரும்...
தங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவித்துவிட்டுச் சென்று என் தேடலையும், என்னையும் ஊக்கப் படுத்துங்கள். ஏதேனும் தவறாக கூறியிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
சித்திரவீதிக்காரன் தளத்திற்கு வந்து விட்டதாக நினைத்தேன்... தொடர்க...
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteசித்திர வீதிக்காரன் யார் அண்ணா? தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...
இந்தக் கட்டுரைப் பற்றி எதேனும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் அண்ணா...
நல்ல முயற்சி தம்பி வெற்றி...
ReplyDeleteவிபரங்களை அறுதியிட்டு இந்த நூலில் ,இந்த இடத்தில் ,இந்த ஆண்டில் என துல்லியமாக சொல்லியிருக்கிறீர்கள் ,நல்ல ஆய்வு ....
ஆதாரங்கள் கிடைத்த இடத்தையும் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.தேடல் தொடரட்டும் நம்மைப் பற்றி நாம் விரிவாக அறிந்துகொள்ள உங்கள் ஆய்வு துணை செய்யட்டும்.அதற்குண்டான வழியும் துணையும் கடவுள் உங்களுக்கு அருள்வாராக...
நன்றி!
வணக்கம்...
Deleteதங்கள் பெயரை மட்டுமாவது கூறிவிட்டுச் சென்றால் நான் மகிழ்வேன். தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து வருகைத் தாருங்கள் நண்பரே.
இந்த தேடல் முடியும் தருவாயில் எங்கிருந்து ஆதாரங்களை தேடினேன் என்று குறிப்பிடுகிறேன் நண்பரே...
கடவுள் அருளோடு, உங்கள் வாழ்த்தும் துணை செய்யட்டும்...
நன்றி வணக்கம்...
Good Job
ReplyDeleteவணக்கம்...
Deleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
நல்ல இடுகை.
ReplyDelete**கிரந்த மொழி**
கிரந்தம் மொழியல்ல. அது எழுத்து முறை.
வணக்கம் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்,
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
ஆமாம் கிரந்தம் என்பது எழுத்து வகை தான். ஆனால் களப்பிரர்கள் அந்த எழுத்து வகையையே தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தினர், அதைத்தான் அவர்கள் ஆட்சி மொழி என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பாலி மொழியையும் குறிப்பிடுவர்...
தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...
தயை கூர்ந்து எழுத்துப் பிழைகளைத் திருத்தவும். படிக்க ஏதுவாகும்.
ReplyDeleteவணக்கம் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்,
Deleteகணினியில் தட்டச்சு செய்வதால் சில பிழைகளை தவிர்க்க இயலவில்லை, அதற்க்கு நான் மிகவும் வருந்துகிறேன்...
முடிந்த வரை பிழையின்றியே எழுத முயற்ச்சிக்கின்றேன்.. இருப்பினும் சில பிழைகளை தவிர்க்க இயலவில்லை... தெரிந்தவரை திருத்திவிடுகிறேன்...
**களப்பிரர்கள் அவர்களுக்கு வழங்கிய நிலம்**
ReplyDeleteவழங்கப்பட்டு வந்த?
வணக்கம் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்,
Deleteமாற்றிவிட்டேன், குறிப்பிட்டுக் கூறியமைக்கு மிக்க நன்றி...
நல்ல ஆய்வு தொடருங்கள்....
ReplyDeleteவணக்கம் பிரியா,
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தாங்கள் தானே கேட்டிருந்தீர்கள் களப்பிரர்கள் பற்றி விரிவாக எழுத வேண்டி...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
It's very honour to appreciate your sincere efforts to grab this informations and share to us.
ReplyDeleteவணக்கம் ஜீவன்சிவம்,
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...
தொடர்ந்து வருகைத் தாருங்கள்...
திருக்குறள் மற்றும் சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் இக்கால கட்டத்தில் தான் தோன்றின. ஆனால் களப்பிரர்கள் இந்நூல்களை ஆதரித்தனர் என்பதற்கான எந்த ஆதராமும் இல்லை.
ReplyDeleteசிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
வணக்கம் இராஜராஜேஸ்வரி,
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
அழகிய படங்களோடு.. ஒரு சரித்திரத்தைக் கொண்டு வந்து காட்டியிருக்கிறீங்க.. நன்று.. இன்னும் எழுதுங்கோ.. இப்படிப் புதையல்கள்..
ReplyDeleteவணக்கம் ஆதிரா,
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
தொடர்ந்து களப்பிரர்கள் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்...
கலக்கல் பதிவு.. தெரியாத பல விஷயங்களும் இருந்தன.. அருமை.. தொடர்ந்து எழுத்து தம்பி..
ReplyDeleteவணக்கம் ஆவி அண்ணா...
Deleteதங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...
மிக நல்ல இடுகை...உண்மையை உரக்க சொன்னதால்...உங்களை...
ReplyDeleteதொடருங்கள்...
வணக்கம் நம்பள்கி,
Deleteஉண்மையை உரக்கச் சொன்னதால் என்னை ...............???
தெளிவா சொல்லிட்டுப் போங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
தொடந்து வாருங்கள்...
இங்கு களப்பிரார்களில் ஏன் இந்த காதலோ தெரியவில்லை....
ReplyDeleteஅவர்கள் தமிழர்களும் இல்லை...தமிழை வளர்த்ததாகவும் தெரியவில்லை....
வணக்கம் வெத்து வேட்டு,
Deleteஎனக்கு களப்பிரர்கள் மீது காதலும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. மறைக்கப்பட்ட உண்மையை உற்ற ஆதாரங்களோடு எனக்குத் தெரிந்த வரையில் வெளிக்கொணர முயற்ச்சிக்கிறேன், அவ்வளவுதான்...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்...
கிரந்த எழுத்துக்கள் எனவே கேள்விப் படுகிறேன். இவர்கள் வட கர்னாடக பகுதியில் இருந்து வந்து பாண்டிய அரசை வெற்றி கொண்டவர்கள். ஆனால் வளமையான கன்னட மொழி பரவிய காலத்திற்கு முன்பே இங்கு வந்து ஆட்சி செய்தவர்கள். ஆரியர் மீதான அடக்கு முறை இவர்களின் ஆட்சி ஆதாரங்களை சிதைக்க வைத்திருக்கலாம். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பெரிய கோவில்களை போல இவர்கள் அதிகம் ஏற்படுத்தவில்லை. ஆனால் தமிழ் எழுத்து சீரமைப்பு இவர்கள் காலத்தில் வளர்ச்சி பெற்றதாக சொல்லப்படுகிறது. ஆய்வு தொடர்க
ReplyDeleteதங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி...
Deleteகளப்பிரர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் காலத்தில் ஏற்ப்பட்ட இலக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம் தோழி...
வருகைக்கும் இனிய தகவலுக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்.
பதிவர் சந்திப்பில் பார்தோமே மறந்துட்டீங்களா ?
Deleteஓஓ... மன்னிக்கவும் சகோ...
Deleteஞாபகம் வந்துவிட்டது...
மன்னிக்கவும் கொஞ்சம் மறந்துட்டேன்... இப்போ வந்துட்டுது...
எனக்கு மறதி அதிகம்...
இப்படி மறந்திட்டா எப்படிப்பா?
Deleteஎனக்கு கொஞ்சம் மராத்தி அதிகம்... எளிதில் மறந்துவிடுவேன்... மன்னிக்கவும்.
Deleteஓ தம்பிக்கு மராத்தி கூட தெரியுமா
Deleteஓஒ.. மறதி தான் மராத்தி என்றாகி விட்டது அண்ணா...
Deleteவெற்றி ஆராய்ச்சியாளரா மாறிட்டீங்க போல? எழுதி முடிங்க நானே உங்களுக்கு "களப்பிர டாக்டர்" பட்டம் தருகிறேன். அழகான கட்டுரை. அருமையான ஆய்வு. எனக்கு எல்லாமே புதிய தகவல்கள். தொடருங்கள், தொடர்கிறோம். எனது தளத்திற்கும் வாருங்கள்.
ReplyDeleteவணக்கம் பாரதி...
Deleteகலப்பிற பட்டம்...! இது என்ன புது பட்டமா இருக்கு?
தங்களின் நீண்ட இடைவெளிக்குப் பின் வருகை, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... வருகை தொடரட்டும்...
மிக்க நன்றி...
நன்றாக செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளீர் ... உங்கள் தேடலில் நானும் தொடர்கிறேன்
ReplyDeleteவணக்கம் ரூபக்,
Deleteதங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் வருகை தொடரட்டும்...
தொடருங்கள் வெற்றி !! :)
ReplyDeleteசரி நண்பா...
Deleteதாங்கள் தொடர்ந்து வாருங்கள்...
great article
ReplyDeleteவணக்கம்...
Deleteபெயரை சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்... வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...
//அப்பாண்ட நாதர் கோயில்- திருனரங்கொன்றை கிராமம்- உளுந்தூர் பேட்டை//
ReplyDeleteநல்ல பதிவு. இந்த உளுந்தூர்பேட்டை சென்னையிலிருந்து திருச்சிக்கு போகும் போது விழுப்புரத்துக்கு அண்மையில் அந்த ஊர் தானே. எனக்கு முன்பே தெரிந்திருந்தால் போயிருப்பேன். அதுவாக இருந்தால், அடுத்த முறை நிச்சயமாக போய்ப் பார்ப்பதற்காக குறித்து வைத்துள்ளேன். நன்றி.
வணக்கம் வியாசன்...
Deleteஆமாம் அதே உளுந்தூர்பேட்டை கிராமம் தான் நண்பா... அடுத்த முறை கண்டிப்பாக முடிந்தால் சென்று வாருங்கள். முடிந்தால் தகவல்களை எனக்கும் அனுப்புங்கள். உதவியாக இருக்கும் நண்பா...
வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி, தங்கள் வருகைத் தொடரட்டும்...
பாண்டியர்கள் களப்பிரருக்கு கீழ் ஆட்சி நடத்திக் கொண்டே இலங்கையின் மீது படையெடுக்க களப்பிரர்கள் அனுமதித்தார்களா. ஏனென்றால் கி.பி 428 இல் பாண்டிய அரசர் படையெடுத்து கி.பி 452 வரை ஆண்டதாகக் குறிப்பிடுகிறது மகாவம்சம். சிங்கள அரச குடும்பமும், பாண்டிய அரசகுடும்பமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். அதனால் பாண்டியர்களே தொடர்ந்து ஆண்டிருக்கலாம். ஆனால் பிற்கால இனவாதப் பெளத்த பிக்குகள் தமிழ் பாண்டியர்களை அன்னியர்கள், படையெடுத்து வந்தவர்கள் (Invaders) என்று திரித்திருக்கலாம். வரலாற்றை திரிப்பதில் சிங்களவர்கள் வல்லவர்கள். உதாரணமாக அபயபாண்டியன் என்ற தமிழரசனை பண்டுகாபய என்ற சிங்களவனாக மாற்றி விட்டார்கள். இப்படி எவ்வளவோ உதாரணங்கள் உண்டு.
ReplyDelete69. PANDU 428-433 AD – A Tamil invader, the first of this era -
70. PARINDA 433 AD – Son of Pandu, second Tamil ruler -
71. KHUDA PARINDA 433-449 AD – Younger brother of Pandu, Third Tamil ruler during this period -
72. TIRITARA 449 AD – Fourth Tamil ruler – was defeated and slain by Dhatusena within 2 months
73. DATHIYA 449-452 AD – Fifth Tamil ruler - was defeated and slain by Dhatusena after a war lasting 3 years
74. PITHIYA 452 AD – Sixth Tamil ruler - was defeated and slain by Dhatusena at the end of 7 months and with this the Indian dynasty was extinguished
கி.பி. 463 வரை பாண்டியர்கள் ஆளவில்லை. கி.பி.452 இலேயே சிங்கள அரசன் தாதுசேனன் பாண்டியர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி விட்டான் என்கிறது மகாவம்சம்.
அது பற்றிய தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை நண்பா... பாண்டியர்கள் களப்பிரர்களுக்கு அடங்கி தான் ஆண்டு கொண்டிருந்தனர், அது தெளிவாக புலப்படுகிறது... மற்றைய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை...
Deleteபாண்டியர்கள், சிங்களர்கள், மகா வம்சம் பற்றிய தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி... இது எனது தேடலுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
மிக்க நன்றி...
என்னமோ பெரிய விஷயங்களைப் சொல்ல வரீங்கன்னு புரியுது... தொடர்ந்து படிக்கிறேன்.....முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் அக்கா...
Deleteதொடர்ந்து வருகைத் தாருங்கள். பதிவும் எப்படி இருக்கிறது என்று கூறி விட்டுச் செல்லுங்கள்...
தாங்கள் தான், கவிதையோடு கட்டுரையும் எழுது என்று கூறினீர்கள்... தொடர்ந்துகொண்டிருக்கிறேன்...
தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...
பதிவில் உங்கள் தேடல் முயற்சி தெரிகிறது.... வாழ்த்துக்கள் நண்பா! தொடருங்கள்!
ReplyDeleteவணக்கம் நண்பா...
Deleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
களப்பிரர்கள் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய காவிரிப்பட்டினத்தையே (பூம்புகார்) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளனர். //இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா நண்பா....மற்ற படி இந்த கட்டுரை மிக அருமை ..தொடரட்டும் இந்த பணி ....வாழ்த்துக்கள் -வினோத்குமார் க.
ReplyDeletevinoknk@ymail.com
நான் தேடியவரை அப்படித்தான் அறிகின்றேன், சிலர் உறையூர் என்கின்றனர். பலரால் பூம்புகார் என்றுதான் குறிப்பிடுகின்றனர்...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...
புதிய தகவல்! உங்கள் தேடலுக்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுகள்! இதையோட்டியப் பதிவுகள் அனைத்தையும் படிக்கிறேன். பகிர்விற்கு நன்றி வெற்றிவேல்!
ReplyDeleteவணக்கம் கிரேஸ்,
Deleteமறக்காமல் அனைத்தையும் படியுங்கள்... படித்து விட்டு தங்கள் மேலான கருத்துகளையும் சொல்லுங்கள் தோழி...
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...
தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாங்க...
nall muyarchi thodaratum tamilz pani nanri
ReplyDelete"காவிரிப்பட்டினத்தையே (பூம்புகார்) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளனர்"
ReplyDelete.
"நம் தமிழக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை தமிழகத்தில் யார் ஆண்டது, எப்படிப்பட்ட ஆட்சி என அவர்கள் பற்றிய தகவல்கள் பல திட்டமிட்டு அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் விட்டது."
மேற்கண்ட இரண்டுக்கும் ஆதாரம் தருக.