கடந்த இரு பதிவுகளில் களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் காலம் ஏன் இருண்ட காலம் எனப்படுகிறது என்பது பற்றி பேசியிருந்தோம். இக்காலத்தில் நடைமுறையில் இருந்ததாக கூறப்படும் தமிழ் எழுத்து முறை மற்றும் இலக்கிய மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
களப்பிரர்கள் காலத்தில் முக்கியமாக தமிழகத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் முன் எப்போதும், எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நடந்துள்ளது. அதாவது
- தமிழ் எழுத்துரு மாற்றம்
- இலக்கியத் தோன்றல்கள்
தமிழ் பிராமி (தமிழி கி.மு 5 - கி,பி 3 ம் நூற்றாண்டு) எழுத்திலிருந்து வட்டெழுத்தாக தமிழ் மாற்று வடிவம் பெற்றது களப்பிரர்கள் காலத்தில் தான். அதாவது தமிழ் பிராமி எழுத்துகள் கோடு கோடாக இருக்கும். இந்த வட்டெழுத்துகளிலிருந்து தான் நாம் தற்பொழுது பயன் படுத்தும் நவீன வடிவத்தை தமிழ் எழுத்து முறை பெற்றது என்று கூறுவர். ஆனால் தற்ப்பொழுதுள்ள தமிழ் நவீன எழுத்து முறை வட்டெழுத்துகளிலிருந்து தோற்றம் பெற்றவை அல்ல அவை தனியாக சோழ மற்றும் பல்லவர்களால் வட்டெழுத்துக்கு பதில் கொண்டுவரப்பட்டது என்றும் கூறுவார்.
கோடு கோடான பிராமி எழுத்துகள் கற்க்களில் செதுக்க ஏதுவாக இருப்பதை கவனிக்கவும். பிராமி எழுத்துகள் கோடு கோடாக இருப்பதால் அவை ஓலைச் சுவடிகளில் எழுத கடினமாதலால் (கிழிந்து விடுகின்ற) வட்டெழுத்துகளாக தோற்றம் பெற்றன.
தமிழ் பிராமி எழுத்து- தமிழ் என்பதை பிராமியில் இப்படித்தான் எழுத வேண்டும் |
தமிழ் எழுத்து முறை வரலாறு |
வட்டெழுத்து வளர்ந்த விதம் |
இப்போது நாம் வழங்கிக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான இலக்கியங்கள் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்களே ஆகும்.
இன்று நாம் உலகப் பொது மறையாக கூறிக்கொண்டிருக்கும் திருக்குறள் கூட களப்பிரர் காலத்தில் தோன்றிய முக்கியமான நூல் ஆகும். ஆனால் அதற்க்கு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியதாகவும் குறிப்பிடுவர். ஆனால் களப்பிரர்கள் காலத்தில் தான் திருக்குறளுக்கு உண்மையான வடிவம் பெற்றது.
கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சீவக சிந்தாமணி, முது மொழிக் காஞ்சி, விளக்கத்தார் உத்து (கூத்து நூல்), நரி விருத்தம், எலி விருத்தம், திருமூலரின் திருமந்திரம், காரைக்கால் அம்மையாரின் திருவந்தாதி, முதல் ஆழ்வார்கள் எனக் கூறப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவர் பாடிய திருவந்தாதி நூல்கள் மற்றும் முத்தொள்ளாயிரம் ஆகிய நூல்கள் களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும். இந்நூல்களில் களப்பிரரைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை.
அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள் இவர்கள் காலத்தில் தோன்றியது தான்.
களப்பிரர்கள் காலத்திற்கு முன்பு தமிழ் இலக்கியங்களில் ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைப் பாக்கள்தான் இருந்தன. அதற்குள்ளேயே தமிழ்ப்பாக்கள் முடங்கிக் கிடந்தன. ஆக, களப்பிரர்கள் வந்த பிறகுதான் தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகள் வந்தன.
ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்த புத்ததத்தர் என்னும் பௌத்தத் துறவி பாலி மொழியில் எழுதிய அபிதம்மாவதாரம் என்னும் நூலில் களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிய ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இந்த ஒன்று மட்டுமே களப்பிரரைப் பற்றி அறிய உதவும் சமகாலச் சான்று ஆகும்.
ஆனால் இதில் உள்ள ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்களில் களப்பிரர்கள் பற்றி எந்த ஒரு குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் களப்பிரர்கள் காலத்திற்கு பின்னர் எழுதப்பட்ட நூல்களில் களப்பிரர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. ஆனால் களப்பிரரைப் பற்றிய குறிப்புகள் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கண நூல்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய கல்லாடம், பெரிய புராணம் என்னும் இலக்கிய நூல்களிலும்,யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூல்களிலும் களப்பிரர் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பல்லவர் மற்றும் முற்காலப் பாண்டியர் காலத்தில் வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடு, வேலூர்ப்பாளையம் செப்பேடு, காசக்குடிச் செப்பேடு, தளவாய்புரம் செப்பேடு, வைகுந்தப் பெருமாள்கோயில் கல்வெட்டு ஆகியவற்றிலும் களப்பிரர் பற்றிய சில செய்திகள் இடம்பெறுகின்றன...
ஆனால் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்கள் பல இருந்தாலும் களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. இந்த நூல்களை களப்பிரர்கள் ஆதரித்தார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. அதே சமயம் தமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் களப்பிரர்களால் எப்படி தமிழகத்தை முன்னூறு ஆண்டுகள் ஆண்டனர் என்ற கேள்வியும் எழுகிறது. களப்பிரர்கள் காலத்தில் பல சமூக மாற்றம் ஏற்ப்பட்டதாக கூறுகின்றனர். அதில் விவசாய குடிகளின் நிலை மற்றும் அவர்களின் செல்வாக்கு உயர்ந்ததாகவும், அதே சமயம் பிராமணர்களின் செல்வாக்கு குறைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல தானங்கள் நிறுத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் கூட சமண சமயத்தை சார்ந்தவர் என்ற வாதமும் களப்பிரர்கள் காலத்தில் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் பங்கு முக்கியமானது என்பதை காட்டுகிறது. மேலும் அக்காலங்களில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி கூட சமண முனிவரால் இயற்றப்பட்டது என்ற வாதமும் களப்பிரர்கள் ஆதரித்திருப்பர் என்பதையே காட்டுகிறது.
ஆனால் களப்பிரர்கள் இதனை ஆதரித்தனர் அல்லது முற்றாக எதிர்த்தனர் என்பதற்கான முறையான சான்றுகள் ஏதும் இல்லை. பிற்காலத்தில் அழிக்கப்பட்டிருக்கலாம்.
களப்பிரர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் என்ன நடந்திருக்கலாம், அவர்கள் ஏன் முற்றாக அழிக்கப்பட்டிருப்பர் என்பது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் படிக்கலாம்.
களப்பிரர்களின் இருண்டகால தேடல் தொடரும்...
எழுத்துப் பிழை மற்றும் ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டவும், சரி செய்து விடுகிறேன்.
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
தங்கள் மேலான கருத்துகளை கூறி அல்லது பின்வரும் ஓட்டுப் பட்டைகளில் வாக்களித்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்...
நல்ல ஆக்கம்... தொடருங்கள் நண்பா....
ReplyDeleteவணக்கம் அண்ணா,
Deleteமுதல் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...
//இக்காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் தமிழ் எழுத்து முறை//
ReplyDeleteநடைமுறையில் இருந்ததாகக் கருதப்படும்
//பிராமினர்களுக்கும்//
பிராமணர்களுக்கும்
வணக்கம் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்,
Deleteதிருத்தங்களை சரி செய்துவிட்டேன்.தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி...
பார்பனர் is right
Deleteநன்றி செல்வகுமார்..
Deletethose Kalapararkal are known today as kala parayarkal. please note it in your article.
ReplyDeletethank you
தங்கள் தவகல்களுக்கு மிக்க நன்றி. உரிய ஆய்வுகளுக்குப் பிறகு தாங்கள் கூறிய கருத்து கட்டுரையில் சேர்த்துக் கொள்ளப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
Deleteவருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...
வணக்கம்
ReplyDeleteஆதாரங்களுடன் பதிவு வெளியானது அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்,
Deleteதங்கள் இனிய வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அண்ணா... பதிவு இன்னும் தொடரும் என்று நம்புகிறேன்.
நல்ல ஆக்கம் அநேகம் பேர் அறிந்துகொள்ள வேண்டிய விடயம் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் கோவை மு சரளா,
Deleteதங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. வருகையைத் தொடருங்கள்...
எங்க இருந்து ஆதாரங்களை திரட்டுகிறீர்கள்னு தெரியலை, எல்லாம் முன்னுக்கு பின் முரணாக இருக்குங்க, குறைந்தபட்சம் காலக்கிரமம் படியாவது கொடுக்க முயற்சிக்கலாம்.
ReplyDelete# சீவக சிந்தாமணி எழுதிய திருத்தக்க தேவர் சமண சமயத்தவர்.காலம் சுமார் 7 ஆம் நூற்றாண்டு.
#காக்கை பாடினியார் ,தொல்காப்பியர் காலத்தவர், களப்பிரகர்கள் காலத்துக்கு முந்தையவர்.
#//களப்பிரர்களுக்கும் பிராமினர்களுக்கும் இடையில் என்ன நடந்திருக்கலாம், அவர்கள் ஏன் முற்றாக அழிக்கப்பட்டிருப்பர் என்பது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் படிக்கலாம்.
//
களப்பிரர்கள் ஒன்றும் மர்ம மனிதர்கள் அல்ல, திடீர் என வந்து திடீர் என மறைந்தும் விடவில்லை, அவர்கள் பிற்கால சோழர்கள், பல்லவர்களுக்கு உறவு முறையினரே. களப்பிரர்களும் , தமிழக நிலப்பகுதியில் இருந்த மக்களும் ஒன்றாக கலந்து விட்டார்கள், அப்படி கலவையான மனிதக்குழுவில் இருந்து தோன்றியவர்களே பிற்கால சோழர்கள், இவர்களுக்கும் முற்கால சோழர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
களப்பிரர்கள் ,ஆந்திர,கர்நாடக எல்லையில் உள்ள ஒரு பகுதியை ஆண்டவர்கள், "kalabrahas" (அ) kalabharatha (அ) kalachuri என்பார்கள், ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் தான் தலைநகரம் இருந்துள்ளது.
களச்சூரி அரசாட்சி என இப்பவும் வரலாற்றில் இடம் கொடுத்திருக்காங்க.
காளா என்றால் பாம்பு, + பிராம்ணர்கள் என்பதே பிரஹா என சேர்த்துள்ளார்கள்.
நாக வம்சத்தினரும் ,பிராமணர்களும் சேர்ந்த கலவை. அவர்களின் மூல வரலாறு ஆக , அஸ்வாத்மனுக்கும் ,நாக இளவரசிக்கும் இடையே பிறந்தவர்கள் மூலம் உருவான இனக்குழு என சொல்லப்பட்டிருக்கு. கூடவே இக்ஷ்வாகு மன்னர் வம்சம், ராமனின் மூதாதையர் வழி என்றும் ஒரு புராண பின்புலம் கொடுக்கிறார்கள்.
ராஜ ராஜ சோழன் தன்னை இக்ஷ்வாகு வழி வந்தவன் என தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் பொறித்துள்ளார். கூட்டிக்கழித்துப்பார்த்தால் பிற்கால சோழர்கள் மூலம் களப்பிரர்கள் என்பது தெரிய வரும்.
"kalachuri dynasty" எனத் கூகிளில் தேடினால் இப்பவும் முழுவரலாறு கிடைக்கும். அவர்களில் ஒரு குழுதான் தமிழகம் பக்கமாக இடம்பெயர்ந்து வந்தது.
எனவே சரியான ஆதாரங்கள் திரட்டிக்கொண்டு மேற்கொண்டு செல்லவும், வரலாற்றினை எடுத்தேன் கவிழ்த்தேன் என முயற்சிப்பது சரியாக வராது.
#களப்பிரர்கள் தங்களுக்கு என்று நிலையான மதத்தினை கொண்டிருக்கவில்லை, சைவம்,வைணவம் ,புத்தம், சமணம் என காலத்துக்கு மாறிக்கொண்டே யிருந்தார்கள். மேலும் தமிழ்நாட்டு மக்களுடன் மண உறவுக்கொண்டு கலந்துவிட்டதால் பிற்காலத்தில் தனியே அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. மன்னராக இருந்தவர்கள் மட்டுமே அடையாளப்படுத்திக்கொண்டார்கள்,அவர்கள் மட்டுமே வீழ்த்தப்பட்டார்கள். எனவே களப்பிரர்கள் காலம் இருண்டக்காலம் என்பதெல்லாம் பொய்யானது.
தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி...
Deleteஎனக்கு பல தகவல்கள் புதியதாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது...
முன்னால் கருத்திட்டுள்ள வவ்வால் அவர்களின் கருதிர்கேற்ப்ப காகாஇ பாடினியாரையும் திருதக்க தேவரையும் தவிர்த்து பிற புலவர்களின் நூல்கள் பல (நீங்கள் குறிப்பிட்டது போல) களப்பிறர்களின் காலத்தில் தோன்றியவை எனில் நிசயம் அவர்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர்களாக இருக்க முடியாது.. ஏனெனில் ஒரு அரசு முழுமையாக ஆதரிக்காத ஒரு மொழியில் இன்னும் கூறினால் இருணட காலம் என்று கூறும்பொழுது அரசாங்கம் அந்த மொழிக்கு முற்றிலும் எதிரான ஒரு நிலையை எடுத்திருக்க வேண்டும் அப்படி எனில் அப்படியானதோரு காலகட்டத்தில் இத்தனை புலவர்களும் நூல்களும் எப்படி தோன்றி இருக்க முடியும்...
ReplyDeleteஅப்படி தோன்றி இருக்கும் பட்சத்தில் அது நிச்சயம் அந்த மொழிக்கு இருண்ட காலம் அல்ல.... இன்னும் சரியான ஆதாரங்களுடன் தேடலை தொடருங்கள்.. நாங்களும் தொடர்கிறோம்...
வணக்கம் பிரியா,
Deleteதங்கள் கருத்தும் முற்றிலும் உண்மையானதே... தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வருகைத் தந்து ஊக்கம் கொடுங்கள். மிக்க நன்றி.
தொடர்கிறேன்! தொடருங்கள்!
ReplyDeleteவணக்கம் சுரேஷ் அண்ணா,
Deleteவருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...
தமிழுக்கு இவ்வளவு சேவை செய்தவர்களின் காலத்தை இருண்ட காலம் என்பது ஏன் ?
ReplyDeleteத.ம.3
வணக்கம் பாகவான்ஜி அண்ணா,
Deleteஅவர்கள் பற்றிய தகவல்கள் அரிதாக கிடைப்பதனால் அவர்கள் காலத்தை இருண்ட காலம் என்பர். மேலும் சைவ ஆராய்ச்சியாளர்கள் கூறும் போது பிராமணர்கள் ஆதிக்கம் குறைந்திருந்த காரணத்தினால் இதனை இருண்டகாலம் என்பர்.
வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி. தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... வருகைத் தொடரட்டும்.
அன்பின் வெற்றிவேல் - தமிழ மணத்தில் வாக்களித்து விட்டேன் - படித்ததோ B.tech-Petrochemical Technology - அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து விட்டு- இப்போது சென்னை உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு களப்பிரர் காலத்தினை ஆராய்ந்து கொண்டிருப்பது பிரமிக்க வைக்கிறது. படித்ததும் பணீ புரிவதும் பொறியியல் படிப்பினைச் சேர்ந்த வேதியியல் துறையானாலும், தமிழ் மீது கொண்ட காதலால் இங்கும் ஆர்வத்துடனும் ஆய்வில் கொண்ட ஈடுபாட்டுடனும் எழுதுவதற்குப் பாராட்டுகள் நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா
ReplyDeleteஇக்கட்டுரைகளைப் படிக்க ஆழ்ந்த அறிவு வேண்டும் - ஆயுவுக்கட்டுரைகளீல் மிகுந்த ஈடுபாடு வேண்டும். அசாத்திய பொறுமை வேண்டும் - ஒதுக்குவதற்கு நேரம் வேண்டும் - இத்தனையும் இல்லாத காரணத்தினால் நுனிப் புல் மேயத்தான் முடிகிறது -
வணக்கம் அய்யா...
Deleteதங்கள் தமிழ் மனம் வாக்கிற்கு மிக்க நன்றி அய்யா.
அனைத்தும் ஆர்வம் தான் அய்யா, தமிழ் பற்றியும் தமிழர் வாழ்க்கை முறை அறியவேண்டும் என்ற முயற்ச்சிதான்.
நுனிப்புல்லும் சுவை மிகுந்தது தானே. தவறில்லை.
தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தங்களைப் போன்றோர் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் எழுதத் தூண்டுகிறது. மிக்க நன்றி.
தேடல்மிகு ஆய்வுக்கட்டுரை. தொடரட்டும் தேடல் மேலும். வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteவணக்கம் இராஜ முகுந்தன் வல்வையூரான் அண்ணா,
Deleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா. தொடர்ந்து வாருங்கள்.
தேடல்மிகு ஆய்வுக்கட்டுரை. தொடரட்டும் தேடல் மேலும். வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteவணக்கம் இராஜ முகுந்தன் வல்வையூரான் அண்ணா,
Deleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா. தொடர்ந்து வாருங்கள்.
கடைச்சங்க காலத்தின் இறுதியில் தமிழக மூவேந்தர்கள் வலிமை குன்றியிருந்தனர் அரசியல் சமுதாயம் கலை சமயம் ஆகிய துறைகளில் தேக்க நிலை காணப்பட்டதாகவும் அந்த நேரம் வட நாட்டிலிருந்து வந்த சமண பௌத்த சமயங்கள் தமிழ்நாட்டில் வலிமை பெறத்தொடங்கி இருக்கிறது களப்பிரர் ஆட்சி ஆங்காங்கே நடைபெற்றதாக கூறப்படுகிறது அப்போது தமிழகத்தில் பிராகிருதம் பாலி வடமொழி ஆகியவற்றின் செல்வாக்கு மிகுதியாக இருந்திருக்கிறது தமிழ் மொழியும் தமிழ் இலக்கியங்களும் தமிழ்க் கலைகளும் தமிழர் சமயமும் தன் வலிமை இழந்திருந்திருந்ததாக கூறப்படுகிறது மேலும் தமிழ் நாட்டிலும் சமண பௌத்த சமயங்கள் பரவின தமிழ் மக்களில் பலர் அச்சமயங்களின் உண்மைகளைக் கேட்டும் கற்றும் ஆராய்ந்தும் காலப்போக்கில் அச்சமயங்களை தமிழர்கள் பலரும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது ஆங்காங்கே சமணப்பள்ளிகலும் பௌத்த சங்ககளும் துவங்கப்பட்டு உணவு வழங்குதல் மருத்துவம் செய்தல் கல்விகற்பித்தல் ஆகிய சமுதாய தொண்டுகள் மூலம் அவர்கள் தமிழர்க்கு நலம் புரிந்ததாகவும் பல்வேறு நூல்கள் இயற்றியதாகவும் இவற்றால் கவரப்பட்ட தமிழர் தமக்கறிய சமயங்களைக் கைவிட்டு ப் புறச்சமயங்களில் ஈடுபாடு கொண்டதாகவும் கூறப்படுகிறது இந்நிலை கி பி 6ம் நூற்றாண்டு வரை வளர்ந்ததாகவும் மேலும் அரசர்களும் அதனால் ஆட்சிப் பொறுப்பிளிருந்த அலுவலர்களில் பலரும் அச்சமயங்களில் பற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள் அச்சமயங்களின் ஆதிக்கம் அதிகமானதாகவும் அவற்றை பழித்தோரும் அவற்றிற் சேர்ந்திருந்து விலகியோரும் அரசினருடைய தண்டனைக்குள்ளாகியிருக்கிறார்கள் அப்பொழுதான் பல்லவர்கள் தலைதூக்கியிருக்கிறார்கள் பிராகிருதம் பாலி வடமொழி செல்வாக்கு பெற்றிருந்தது தமிழகம் இருண்டகாலம் பிறகு கி பி 7ம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழர் சமயம் சைவம் வைணவம் என்ற இருபிரிவுகளும் தமிழும் மெல்ல புத்துயிர் பெறலாயிற்று என்றும் இவ்வாறு உயிர் ஊட்டியவர்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களும் என கூறப்படுகிறது எனது இந்த குறிப்புகள் இடைக்கால இலக்கியத்தில் நான் படித்தவை! களப்பிரர்கள பற்றி ஆய்வும் தொகுப்பும் மிகவும் அருமை இன்னும் தொடருங்கள் நானும் களப்பிரர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் இதில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் நன்றி
ReplyDeleteவணக்கம் ராசன் நாகா அண்ணா...
Deleteஎனக்கு தங்கள் கருத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. அக்காலங்களில் களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரிக்காமல் பாளி, பிராகிருத வாடா மொழிகளை ஆதரித்திருந்தால் எப்படி அக்காலத்தில் அத்தனை தமிழ் இலக்கியங்கள் தோன்றியிருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும் அண்ணா. களப்பிரர்கள் பற்றி நீண்ட ஆய்வுகள் தேவை அண்ணா. களப்பிரர்கள் ஆண்ட காலமும் சங்கம் மருவிய காலமும் ஒரே காலம் தான். அக்காலத்திலும் பல இலக்கியங்கள் தமிழில் தோன்றி தமிழின் எழுத்துரு மாற்றமும் முக்கிய மாற்றத்தை அடைந்தது.
தங்கள் இனிய வருகைக்கும், அழகான தேடல் மிகு கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா. தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்...
களப்பிரர்கள் சமண சமயத்தை ஆதரித்தவர்கள் என்பது நாம் அறிந்த்ததே ஆகையால் தமிழர்கள் ஆண்ட தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த தமிழகத்தில் சமண மதத்தைப் பரப்ப மக்களின் மொழியை அறிவதும் அம்மொழியிலேயே சமய கருத்துக்களைப் பரப்புவதுமே சிறந்தது என்ற சமணத் தலைவர்களின் கூற்றின் காரணமாக களப்பிரர்கள் காலத்தில் பல சமண சமய நூல்கள் தமிழில் தோன்றின.. சமயமும் வளர்ந்தது அத்துடன் சேர்த்து தமிழும் வளர்ந்தது...
Deleteநல்லதொரு ஆய்வு விளக்கக் கட்டுரை.. தமிழ்மொழியின் எழுத்துரு மாற்றங்களையும், அதன் வளர்ச்சியையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்துது. பகிர்வினிற்கு நன்றி வெற்றிவேல்..
ReplyDeleteதொடருங்கள்...
வணக்கம் தங்கம் பழனி,
Deleteதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்.
வணக்கம் வெற்றிவேல் ராசன் நாகா தமிழை பற்றி தங்கள் ஆய்வுகள் பெருமைக்குறியவை 5ம் நூற்றாண்டில் நீங்கள் குறிப்பிட்டுள்ள நூல்கள் இயற்றப்பட்டுள்ளது என்பது சரியானதுதான் நானும் அறிந்தேன் காரைக்கால் அம்மையார் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் சீவகசிந்தாமணி இயற்றிய திருத்தக்கதேவர் சமண துறவி சோழர் மரபைச் சேர்ந்தவர் இவர் 9ம் நூற்றாண்டை சார்ந்தவர் என்றும் எனது தேடலில் அறிந்தேன் மேலும் களப்பிரர்கள் பற்றி எந்த குறிப்பும் காண முடியவில்லை தங்கள்தான் களப்பிரர்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு தருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது மேலும் வட மொழிகள் பற்றி சந்தேகம் எழுவதாக கூறினீர்கள் 20ம் நூற்றாண்டு கவிஞர் உடுமலை நாராயணகவி திரைப்பட பாடலாசிரியர் அவர் எழுதிய பாடல்களில் வடமொழி களப்படம் இல்லாத பாடல்களே இல்லை அடுத்து வந்த கண்ணதாசனும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் முழு தமிழிழ் பாடல் எழுதினார்கள் மேலும் வணக்கம் என்ற சொல்லை வழக்கத்தில் கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா அதற்கு முன் நமஸ்க்காரம் நான் அரசியல்வாதி அல்ல இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகும் அதிகமான வடமொழிச் சொற்கள் இருந்திருக்கிறதென்றால் அப்போதுள்ள நிலை எப்படி இருந்திருக்கும்! இயற்றபட்ட நூல்கள் மக்களை சென்றடையாமல் இருந்திருக்கலாம் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் கூட இருக்கலாம் அதனால் இருண்டகாலம் எனவருந்தியிருக்கலாம் நான் வயதில் முதிர்ந்தவன் என்றாலும் உங்களவுக்கு தமிழை அறிந்தவன் இல்லை ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்கிறேன் நன்றி
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா. தங்களைப் போன்றவர்களின் கருத்துகளும் சந்தேகங்களும் பாராட்டுகளும் தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் அடுத்து தேட ஊக்கமும் அளிக்கிறது.
சீவக சிந்தாமணி களப்பிரர்கள் காலத்தை சேராதது. அதில் திருத்தம் தேவை. களப்பிரர்கள் காலம் கி.பி மூன்று முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு காலம் வரை உள்ளது. காரைக்கால் அம்மையார் பாடல்கள் களப்பிரர்கள் காலத்தவை. ஆனால் அவை பக்தி இலக்கிய காலத்தைச் சார்ந்தவை. காலத்தோடு நோக்கும் போது அவை களப்பிரர்கள் காலத்தோடு தொடர்புடையாகவே எனக்கு தோன்றுகிறது.
இயற்றபட்ட நூல்கள் மக்களை சென்றடையாமல் இருந்திருக்கலாம் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் கூட இருக்கலாம் அதனால் இருண்டகாலம் எனவருந்தியிருக்கலாம்/////////////////////////////////////////////////////////////////////////////
அண்ணா, அதாவது களப்பிரர்கள் காலத்தில் சமணம் மேலோங்கி இருந்தது. அதாவது அக்காலத்தில் வைதீக மதம் (பிற்க்காலத்தில் தான் அது இந்து மதமாக மாறியது) அழியும் தருவாயில் இருந்தது. அது பற்றி எதிர்காலத்தில் வரும் பதிவுகளில் பார்க்கலாம், அதாவது தமிழர் மதம் (திராவிட மதம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்) மற்றும் வைதீக மதம் இவற்றின் கலப்புதான் தற்ப்பொழுது வழங்கி வரும் இந்து மதம். பிற்க்காலத்தில் சைவ ஆராய்ச்சிளர்கள் வரலாறு பற்றி எழுதும் போது வைதீக மதம் வழக்கற்று, செல்வாக்கு இல்லாத காலத்தை இருண்ட காலம் என கூறினார். ஆனால் உண்மையில் களப்பிரர்கள் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாகவும், பிராமண செல்வாக்கு குறைந்து மகிழ்ச்சியாகவே இருந்தனர். அக்காலத்தில் தான் தமிழ் மொழியும் பலவாறு வளர்ச்சியடைந்தது.
மேலும் வட மொழி கலப்பு என்பது சிறிது சிறிதாக தமிழில் நடந்தது தான் அண்ணா. அது பன்னெடுங்காலமாக சிறிது சிறிதாக கலப்புற்று 20 ம் நூற்றாண்டில் செறிந்து காணப்பட்டது. பிறகு சிலரின் முயற்ச்சியால் அது குறைக்கப்பட்டது. இன்றும் சில வட மொழி எழுத்துகள் இங்கேயே தங்கி விட்டது. உதாரணமாக ஜ, சா, ஸ்ரீ போன்ற எழுத்துகள். தனித்தமிழ் இயக்கம் தோன்றலுக்கு பின் அவை குறைக்கப்பட்டது.
நான் வயதில் முதிர்ந்தவன் என்றாலும் உங்களவுக்கு தமிழை அறிந்தவன் இல்லை ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்கிறேன் நன்றி///////////////////////////////////////////////////////////////
அண்ணாநானும் முற்றிலும் அறிந்தவன் இல்லை. எனக்கு தெரிந்தவற்றை, என் தேடலில் கிடைத்த தகவல்களை நான் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவுதான். தாங்கள் என்னைவிட் இரு மடங்கு பெரியவராக இருப்பீர்கள். நான் 22 தான் எனக்கு. தாங்கள் தான் எனக்கு நான் தவறாக எழுதியிருந்த திருத்தக்க தேவர் பற்றி சுட்டிக்காட்டினீர்கள்.
நானும் களப்பிரர்கள் பற்றி தேடிக்கொண்டுத்ன் இருக்கிறேன். கிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக பகிர்ந்துகொள்கிறேன் அண்ணா...
மேலான வருகைக்கும், இனிய தகவல்களுக்கும் மிக்க நன்றி அண்ணா...
நல்ல தேடல்.புத்தகம் பற்றும இணையதள ஆதாரங்களையும் குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteஇனி வரும் பதிவுகளில் உசாத்துணை பற்றி கட்டாயம் குறிப்பிடுகிறேன் அண்ணா...
இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வணக்கம் முரளிதரன் இந்த தமிழ் தேடலில் கலந்துகொண்டு கருத்து கூறிமைக்கு நன்றி மிக்கமகிழ்ச்சி இப்பொழுது தம்பி வெற்றிவேல் களப்பிரர்கள் பற்றி ஆய்வு செய்கிறார் இது அவசியமான ஒன்று மேலும் வடமொழிகள் பற்றிய ஒரு கருத்துக்கு உதாரணம் காட்டவே சிறு குறிப்பாக 20ம் நூற்றாண்டை சுட்டிக்காட்டினேன் இருப்பினும் 19ம் 20ம் நூற்றாண்டுகளில்தான் தமிழில் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் தமிழ் வளர்ச்சியும் கண்டுள்ளது அது பற்றி வரும் நாட்களில் வெற்றிவேல் மற்றும் தமிழ் ஆர்வமுள்ள அனைவரோடும் தங்களோடும் இணைந்து ஆதாரவிளக்கங்களுடன் ஆய்வுகள் இந்த தளத்திலிருந்து அல்லது எனது தளத்திலிருந்தோ துவங்குவோம் மிக்க நன்றி
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதமிழ் பற்றியும் வட மொழி கலப்பு பற்றியும் விரிவான ஆய்வுகள் தேவை. தங்கள் தளத்திற்கு என்னால் இந்த புரபைல் வழியாக வர இயலவில்லை. தங்கள் தளத்தின் முகவரியை விட்டுச் செல்லுங்களேன்...
http://kavinaga.blogspot.in/
ReplyDeleteகவிச்சோலை முகவரி.
நன்றி அண்ணா...
Deleteஆபுரர்கள் Abhira வழி வந்த தெக்கத்திக்காரர் தான் அவர்கள். ஆ + புரர் என்றால் ஆவினத்தைப் பார்த்து வந்தோர், ஆயர். யாடு(ஆடு) > யாடவர் > யாதவர் என்போருக்கும் அவர்களுக்கும் தொடர்புண்டு. போகப்போக கள ஆபிரர் = களப்பிரர் ஆவர்.கள், கள என்ற முன்னொட்டு அவர்களின் கருப்பு நிறத்தை அவர்களின் வட்டாரத்தை, நிலத்தைக் குறிக்கப் பயன்பட்டதாக இருக்கலாம். தமிழக வரலாற்றில் முதன்முதலில் அச்சுதக் களப்பாளன் பெயர் வருகிறது. மூவர் ஆண்ட தமிழகத்துக்கு மேலே விரிந்திருந்த மொழிபெயர் தேயத்தில் நூற்றுவர் கன்னர் எனப்படும் சாதவாகனர் ஆட்சி முடிவுற்ற போது, அவர்களிடம் படைத்தளவாய்களாகப் பணியாற்றிய சில இனக்குழுக்கள் தங்களைத் தனி ஆள்மரபாக அறிவித்துக் கொண்டு உடைபட்ட நூற்றுவர்கன்னரின் பேரரசின் சில பாகங்களை கவர்ந்துகொள்கின்றனர். சிலரோ கீழ் நகர்ந்து தமிழக எல்லை நாடுகளைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற் கால் பதிக்கின்றனர். பல்லவரும் இவ்வகையினரே. பாகத மொழியை (பிராகிருதம்) புரந்து வந்தனர் எனத் தெரிகிறது. தமிழகத்துக்கு மேலுள்ள மொழிபெயர் தேயத்தில் பேசப்பட்ட தமிழுக்கு உறவான பாகதத்தை அங்கிருந்து வந்த களப்பிரர் பேசியதிலும், புரந்ததிலும் வியப்பேதுமில்லை.
ReplyDeleteமற்றப்படி பார்ப்பனர்களுடன் தங்களை இணைத்தும், இஷ்வாகு புஷ்வாகு இராமன் என கதைகட்டி பெருமை கொள்வதெல்லாம்... பிற்காலத்தில் தாழ்வுணர்ச்சி கொண்ட எல்லா திராவிட இனக்குழுக்களும் செய்தது தான். அவையெல்லாம் கப்சா என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
நால்வண்ணத்துக்குப் புறம்பான ஆயர் கூட்டத்தை பார்ப்பனர் வெறுத்ததும், இருண்ட காலம் என்றதும் ஆச்சரியமான சங்கதியில்லை.
இன்னும் எழுதலாம் நேரம் இருந்தால்...
தங்கள் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...
Deleteசகோதரா இப்படி ஆய்வு செய்யும் போது ஆயவுக்குட்பட்ட நூலை ஆதாரமாகக் கொடுப்பது வீணான எண்ணக் கிளறலை. நளினங்களைத் தவிர்க்கும்.
ReplyDeleteநாமும் தப்பிட முடியும்.
இனிய வாழ்த்து. மிக அரிய முயற்சி. தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.
சரி அக்கா...
Deleteஇனி வரும் பதிவுகளில் எங்கிருந்து எடுத்தேன் என்பதையும் குறிப்பிடுகிறேன்...
தங்கள் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கு.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/10/blog-post_10.html
நேரம் இருப்பின் வருகை தரவும்.
வணக்கம் அக்கா...
Deleteமகிழ்ச்சி... நன்றிக்கா...
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்...
Deleteதகவலுக்கு மிக்க நன்றி அண்ணா... மகிழ்ச்சிகரமான செய்தி...
வலைச்சரத்தில் இணைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி அண்ணா...
Deleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
தென்றலால் வலைச்சரத்தில் தமிழ் புயல் ஒன்று மையம் கொண்டுள்ளது இது எட்டுத்திசையிலும் தமிழ் மணத்தோடு புயல் வீசத்தொடங்கும் மற்றவர்கள் கருத்தையும் கை கோர்த்து வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் வெற்றிவேல்
ReplyDeleteஉண்மை தான் அண்ணா...
Deleteவாழ்த்துகளுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி...
இங்கும் அங்கும் சில தகவல்களே எனக்குத் தெரியும்..அதையெல்லாம் இணைத்துப் புரிந்துகொண்டு தெளிவாக வரலாற்றை உற்று நோக்குவது என்பது கடினமானது...அதை அழகாகச் செய்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். சீனா ஐயா சொல்லியதுபோல நிறைய நேரமும் வேண்டும். இப்பணியைச் செய்யும் உங்களுக்கு வாழ்த்துகள்!
ReplyDelete