Sep 14, 2013

உதிரும் நான் -21

பெருமழைக்குப் பின் 
உயிர் பெற்று எழும் 
சிறு காளானாய்

அவளைக் கண்ட பின்

உயிர்பெற்று விட்ட
என் காதல்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


39 comments:

  1. Replies
    1. வழக்கம் போல முதல் வருகைக்கும், தமிழ் மன வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  2. மண்ணில் காளான் முளைத்தது. வெற்றிவேல் மனதில் கவிதை பிறந்து. நன்று வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  3. Anonymous7:24:00 PM

    வணக்கம்
    தம்பி

    கவிதையில் தெரிகிறது.
    உன் உள்ளத்தின் உயிர்மூச்சு
    அவள் நினைவுகளை தினம் தினம்
    சுமக்கிறாய் என்பதில் ஐயமில்லை.
    கவிதை அருமை வாழ்த்துக்கள் தம்பி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தாங்கள் கவிதையை புரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி... வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. படத்துக்கு நீங்கள் தரும் கவிதை..... வாவ் என என்னை வாய் பிளக்க வைக்கிறது.....

    வாழ்த்துகள் வெற்றிவேல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வெங்கட் அண்ணா,

      தங்கள் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... நன்றி.

      Delete
  5. உயிர் பெற்ற படங்கள்.. வரிகள்..!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. ம்ம்ம்...... அருமை. கவிதையும் அதற்கேற்ற ஒளிப்படத் தெரிவும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. படம் கவிதையால் உயிர் பெற்றுள்ளதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. காளான்களாய் காதல்,,,,,அல்ல அது பாறை கீறி முளைவிடிகிறா செடியாய் இருந்தால் நலம்.

    ReplyDelete
    Replies
    1. என் காதல் காதல் அது எப்போதுமே, பாறையைக் கிழித்து வெளிவரும் செடி போல் வலிமையானது தான் அண்ணா, இங்கே நான் குறிப்பிட்டுள்ளது மழையை பார்த்த பின் உயிர் பெற்று எழும் காளான் போல நானும் என் காதல் அவளைப் பார்த்த பின்பு உயிர் பெற்றுள்ளது என கூற முயன்றுள்ளேன். காளான் போல வலிமையற்றது, அல்ல சில காலமே உயிர் வாழும் என்பதை நான் இங்கு குறிப்பிடவில்லை. காளானின் மூலம் மழை, அது போல என் காதலின் மூலம் அதாவது அவளைப் பார்த்த பின் தான் எனக்குள் காதல் தோன்றியது என்பதை இங்கு சொல்லியுள்ளேன்....

      Delete
  9. தம்பி லவ் பண்ணலன்னு சொன்னா நம்ப முடியலியே...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, தம்பி சொல்றத நம்பனும்.... சொல்லிட்டேன்.

      Delete
    2. சீனு அப்படி சொல்றதே என்னால நம்ப முடியல.. இப்போ நீ வேறயா? உண்மை பேசுங்கப்பா..!

      Delete
    3. ஆவி அண்ணா,

      நாங்கல்லாம் அரிச்சந்திரன் பக்கத்து வீட்டுக் காரங்க, உண்மைய மட்டும் தான் பேசுவோம்...

      Delete
  10. அன்பின் வெற்றி வேல் - கவிதை அருமை - விமலனின் கருத்தினையும் கவனிக்கவும். ரூபன் கருதிய படி அவள் நினைவுகளை தினந்தினம் சுமக்கிறாய் என்பதில் ஐயமில்லை - படம் தேர்ந்தெடுத்துப் போட்டாயா - படத்துக்குக் கவிதையா = கவைதைக்குப் படமா - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... விமலன் அண்ணாவின் கருத்து எனக்கு புரியவில்லை.

      கவிதையை எழுதி, பிறகே படத்தை தேர்ந்தெடுத்தேன் அய்யா...

      தங்கள் நல்வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...

      Delete
  11. கவிதையும் படமும் ஒன்றிப்போகிறது மனதில்..!

    பகிர்வினிக்கு நன்றி வெற்றிவேல்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தங்கம் பழனி,

      தங்கள் வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  12. மறுமொழியும் அதற்கான தெளிவான விளக்கங்களையும் கூட ரசித்தேன்.. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா,

      பதிவோடு, மறு மொழியையும் சேர்த்து படித்தமைக்கு மிக்க நன்றி...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  13. காதலில் கனன்று
    காண்கையில் களிப்பு
    காளானாய் வெடித்து...
    கருத்தினுள் தித்திக்கும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. கருத்தினுள் தித்திக்கும் கவிதை...

      மிக்க நன்றி அண்ணா...

      Delete
  14. பெருமழை எப்போதும் வருமா? இல்லை எப்பவாவது வருமா?.. I mean அவிகள எப்பவும் பார்க்கறதுண்டா, இல்ல எப்பவாவது தானா??

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, கடந்த வருடம் வந்த பெருமழை... ஆனால், இன்னும் நனைந்து கொண்டே இருக்கின்றேன்...

      அதான் என் கண்ணுக்குள்ளும், கனவினுள்ளும் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேனே...!!! அப்போ, தினமும் அடைமழை தான்...

      Delete
  15. இன்னும் கூட சுருக்கலாம் வெற்றி ... படத்தேர்வு இப்படி இருத்தல் நலம் ...

    ReplyDelete
    Replies
    1. சரி அண்ணா,

      அடுத்த கவிதையை பதிவிடும் பொழுது கவனத்தில் கொள்கிறேன். மிகவும் நன்றி அண்ணா...

      Delete
  16. கலக்கல் கவிதை..சீனு அவர்களின் மறுமொழியை வழிமொழியலாமோ :)
    விமலன் அவர்களின் மறுமொழிக்கு நீங்க கொடுத்துள்ள விளக்கம் அப்படி கேட்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கிரேஸ்,

      சீனு அவர்களின் மறுமொழியை நீங்களும் வழி மொழிரீங்களா போச்சு...

      விமலன் அண்ணாவின் மறுமொழிக்கு அப்படி விளக்கம் கொடுக்கவேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டுவிட்டேன்.

      சில கேள்விகளை இப்படி பகிரங்கமா கேக்கக்கூடாது.. ஹ ஹா...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  17. Anonymous2:14:00 PM

    இது காதல் வலைத்தளமா?...இன்னும் விரிவு படுத்தலாம் வரிகளை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வேதா. இலங்காதிலகம்,

      இது காதல் வலைத் தளமா? அப்படியென்றும் சொல்லிக்கொள்ளலாம் அக்கா, ஆனால் இங்கு நான் கவிதை அல்லாத மற்ற கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி. தங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிகிறது...

      Delete
  18. வணக்கம் ரூபன் அண்ணா,

    தங்கள் தகவலுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...