Jul 26, 2013

உதிரும் நான் -11

மழலை  தன் தாயிடமிருந்து
சிறுக சிறுக பேசக்
கற்றுக்கொள்வது போல்

நானும் அவளிடமிருந்து
மெல்ல மெல்ல
கற்றுக்கொண்டிருக்கிறேன்
காதலை...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jul 23, 2013

உதிரும் நான் -10

ஆடி மாதம் மழைக்காக
காத்திருக்கும்
உழுத நிலமாக
காய்ந்து கொண்டிருக்கிறேன்...
அவள் வருகைக்காய்!!!

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Jul 20, 2013

அவள் சென்று விட்ட பிறகு...

சமையலறையில்
சமைத்ததை நானும்
சமைந்ததை அவளும்
சமமாகப் பரிமாறிய நேரங்களில்
சிந்திய பருக்கைகளையும்
சிதறிய முத்தங்களையும்
பசியோடு 
அவள் சென்றுவிட்ட 
ஆடி மாதத்தில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
தனியாக நான்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Jul 17, 2013

பலாப் பழம் வாங்க போறீங்களா? இதை படிச்சிட்டுப் போங்களேன்!

சந்தைல பலாப்பழம் வாங்குவோம், பழம் பெருசா இருக்கும், கடைக் காரரும் நிறைய சுளை இருக்கும்னு சொல்லி வாங்க வச்சிடுவார். நாமளும் வீட்டுக்கு வந்து பழத்தை சாப்பிட்டு அடுத்த ஒரு வாரத்துக்கு பலாப் பழம் விற்ற அந்த பெரியவர திட்டிகிட்டு இருப்போம், ஏமாற்றுக் காரர் என்று. ஏன்னா உள்ள சுளையே இருக்காது, மாட்டுக்கு மட்டும் ஒரே கோதா இருக்கும்.  இந்த பிரச்சனை இனி ஏற்ப்படாம இருக்கனுமா இந்த பதிவை படிங்க. பழத்த வெட்டாமலே உள்ள இருக்கறது எத்தனை சுளை என்று எண்ணிவிடலாம். 

Jul 14, 2013

உதிரும் நான் -9

அவளைக் கண்ட பின்
அறிந்து கொண்டேன்...

கவிஞனைப்
புனையும் வல்லமை
கவிதைக்கும் 
உண்டென்பதை...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Jul 10, 2013

உதிரும் நான் -8

மரணத்தை வென்றவன்:

உன் வேல்விழி பார்வைகள்
துளைத்தும் 
நான் இன்னும் 
மரணிக்காமல் உள்ளேனே,
மரணத்தை வென்றவன்
நான்தானடி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Jul 4, 2013

அவள் -ஆறாவது பெருங்காப்பியம்

உன் பொன் முகத்தில்
எப்போதுமே தவழும் 
புன்னகையை அணியாக்கி...

உதட்டுச் சுழித்தலை மோனையாக்கி
கண் சிமிட்டலை எதுகையாக்கி
பின்வரும் அழகு சிரிப்பை இயைபாக்கி...

உன் வெட்கம்- எனக்கு அந்தாதி
எனைத் தீண்டும் உன் குளிர்ந்த
பார்வையோ மடக்கு என்பேன்...

உன் செவ்வாயில் உதிரும் 
பன்சொற்களை செய்யுளாக்கி...
மனத்திரையில் ஓடும் நம்
காதலைப் பொருளாக்கி...

தமிழ் தனக்காக எழுதிக் 
கொண்டிருக்கும்
ஆறாவது பெருங்காப்பியம்
உன்னை'யும்
நம் காதலையும் தானடி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Jul 2, 2013

உதிரும் நான்- 7

ஏனோ நீ
சூடிச் செல்கையில் மட்டும் 
பருத்திப் பூவும்
வாசம் பெற்று என்னை
கிறக்கமடைய
செய்வதேனடி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...