Jul 17, 2013

பலாப் பழம் வாங்க போறீங்களா? இதை படிச்சிட்டுப் போங்களேன்!

சந்தைல பலாப்பழம் வாங்குவோம், பழம் பெருசா இருக்கும், கடைக் காரரும் நிறைய சுளை இருக்கும்னு சொல்லி வாங்க வச்சிடுவார். நாமளும் வீட்டுக்கு வந்து பழத்தை சாப்பிட்டு அடுத்த ஒரு வாரத்துக்கு பலாப் பழம் விற்ற அந்த பெரியவர திட்டிகிட்டு இருப்போம், ஏமாற்றுக் காரர் என்று. ஏன்னா உள்ள சுளையே இருக்காது, மாட்டுக்கு மட்டும் ஒரே கோதா இருக்கும்.  இந்த பிரச்சனை இனி ஏற்ப்படாம இருக்கனுமா இந்த பதிவை படிங்க. பழத்த வெட்டாமலே உள்ள இருக்கறது எத்தனை சுளை என்று எண்ணிவிடலாம். 



உங்க கேள்வி புரியுது, அதுக்காக மார்க்கெட்டுக்கு அல்ட்ரா ஸ்கேனிங்க தூக்கிட்டு போகவா முடியுங்கற தங்கள் கேள்வி எனக்கு காதுல விழுது, அதுல்லாம் வேணாம், சின்ன கணக்குதான்... உங்களாலயும் இனி சுளை எத்தனை உள்ள இருக்குன்னு கண்டு புடிச்சிடலாம்...


பலா பழத்தினை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை காண, பழம்பெரும் கணித நூலான, கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு

சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி –வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை"

உரை: ஒரு பலாப்பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவென்று கண்டுபிடிக்கலாமோ எனின் அதற்குச் சொல்லுமாறு: காம்பைச் சுற்றிலும் எண்ணிப் பார்க்க, ௱ முள்ளுக் கண்டது. இதை ௬ ஆல் பெருக்க, ௱ X ௬ = ௬௱ , இத ௫-க்கீய, ௱ X ௫ = ௫௱, ௨௰ X ௫ = ௱, ஆக ௱ ஐயும் ௨௰ ஐயும் கூட்ட ஈவு ௱௨௰ சுளை என்று சொல்வது.

விளக்கம்:


பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.



அதாவது,

பலா பழத்திலுள்ள முற்களின் எண்ணிக்கை : 100
இதை 100 X 6 = 600,
பின்பு இந்த 600 ஐ 5 ஆல் வகுக்க, 120.  இதுவே சுளையின் எண்ணிக்கையாகும்.

ஆக, காம்பைச் சுற்றி 100 முற்கள் இருந்தால் பழத்தில் 120 சுளைகள் இருக்கும்...!

அடுத்த முறை கண்டிப்பாக அனைவரும் பலா பழத்தை வாங்குறதுக்கு முன்னாடி கணக்கு போட்டுட்டு சுளைக்கு ஏற்ற காச கொடுங்க... அதிகமா கொடுத்து ஏமாற வேணாம். யாராவது இந்த கணக்க போட்டீங்கன்னா சரியா வருதான்னு மறக்காம சொல்லுங்கள்.

தங்கள் கருத்துகளை மறக்காமல் கமென்ட்டில் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி..

43 comments:

  1. ஊருக்கு வரும் போது சிறுமலை சென்று ஒரு பெரிய பலாப் பழம் வாங்கியாந்து (அடி கிடைத்தாலும் பரவாயில்லை) உங்களுக்கு கண்டிப்பாக வழங்குவேன்... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வாங்கி வாருங்கள் அண்ணா... இருவரும் எண்ணி விட்டி சாப்பிடலாம்! பலாப் பழம் கண்டிப்பா வரணும்... சொல்லிட்டேன்.

      Delete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி....

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி அண்ணா....

      Delete
  3. இதுவரை அறியாத தகவல்
    பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரமணி அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      Delete
  4. Replies
    1. தங்கள் தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி...

      Delete
  5. அருமையான தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பழமையான தமிழ்ப்பாடல்களில்
    இன்னும் நிறைய தகவல்கள் உண்டு,,

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். தாங்கள் கூறுவது சரிதான். பழமையான கணக்கதிகாரப் பாடலில் இன்னும் பல சமாச்சாரங்கள் உள்ளன. தங்களின் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. இதுக்காகவே ஒரு பழம் வாங்கி டெஸ்ட் செய்திடறேன்....

    ReplyDelete
    Replies
    1. டெஸ்ட் செய்யிறது மட்டும் இல்ல. இங்க பாதி சுளை வந்துடனும் எழில் அக்கா. சீக்கிரம் வாங்கி பண்ணுங்க... பண்ணுனதும் இங்க வந்து சொல்லுங்க...!

      Delete
  7. அறியாத தகவல், தனபாலன் அண்ணா முயற்சி செஞ்சு பார்த்துட்டு பதில் சொல்லட்டும் நானும் முயற்சி செய்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் முயற்சி பண்ணுங்கள்... வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. எல்லா பலாப் பழங்களும் சுவையாக இருப்பதில்லை. சில ஏதோ கோஸ், முள்ளங்கி போல காய்கறிச் சுவை மட்டுமே மிஞ்சியிருக்கும். சுவையை கண்டறிய வழியுண்டா?

    ReplyDelete
    Replies
    1. தேடித் பார்க்கிறேன் தெரிந்தால் நிச்சயம் பகிர்கிறேன்... தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  9. நல்ல தகவல்தான்... அதை எண்ணும்வரை எமக்கும் விற்பனையாளருக்கும் பொறுமை வேணுமே!.

    ReplyDelete
    Replies
    1. பழத்த வாங்கிடுங்க, வீட்டுக்கு வந்து எண்ணிப் பாருங்கள் இளமதி... எப்படியும் பழத்தை தட்டி, தூக்கி தானே வாங்குவோம்...அப்போது எண்ணிப் பார்த்து விடுங்கள்...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. ஒரு பலா பழம் பார்சல்

    ReplyDelete
    Replies
    1. வந்துகிட்டே இருக்கு பாருங்கள்... வந்ததும் எண்ணி சாப்பிட்டுங்க...

      Delete
  11. எனக்கு பலாப்பழம் ரொம்ப பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பிடிக்குமா. அப்போ ஒரு பார்சல் சொல்லிட்டா போகுது...

      Delete
  12. அன்பின் வெற்றி வேல் - கணக்கதிகாரம் எல்லாம் படிக்கிறாயா - பலே பலே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  13. அட! இப்படி ஒன்னா!!!! புதுத்தகவல் எனக்கு!

    அடுத்தமுறை இதுக்காகவே எண்ணிப் பார்த்துட்டுச் சொல்றேன்.

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் துளசி கோபால்,

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  14. பல முறை வீட்டில் இருந்த பலாப்பழத்தை பறித்து அதிலிருந்து சுளைகளை தனியே எடுத்திருக்கிறேன். இப்படி கணக்கெல்லாம் போட்டது கிடையாது. பாடல் முன்பே ஒருமுறை படித்திருக்கிறேன்!

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால் ஒரு முறை கணக்கு போட்டு விடுங்கள்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  15. தேவையான கணக்கு.... பலாப்பழம் வாங்குவோர் கவனிக்கவும்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பிரகாஷ்,

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  16. எண்றதெல்லாஞ் செரிதான் வூட்ல இருக்கிறவங்க உடோனுமல்ல...

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா. அது உங்க சாமர்த்தியம். சாப்பிடுறது எங்க சாமர்த்தியம்.

      Delete
  17. நானும் எதிலோ படித்திருக்கிறேன்! சுவையாக பதிவாக்கி தந்தமைக்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா... தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... பாராட்டுகளுக்கும் நன்றி...

      Delete
  18. Anonymous12:25:00 AM

    புதுத் தகவலாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்... தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  19. தமிழ்மணத்தில் ஏழாவதாக ஓட்டுபோட்டு உங்களுக்கே எல்லாப் பலாசுளைகளையும் தந்துவிடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மிக்க மகிழ்ச்சி... சீக்கிரம் ஒரு பெரிய பலாப் பழம் ஆர்டர் பண்ணுங்க பார்ப்போம்!

      Delete
  20. Replies
    1. வணக்கம் அகமது ஜலாலுதீன்,


      தங்கள் இனிய கருத்துக்கு மிக்க நன்றி...

      Delete
  21. அட..இன்றைக்குத்தான் இந்தப்பதிவைப் படிக்கிறேன்..வாங்கிப் பார்த்துடலாம்...நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கிப் பார்த்ததும் சொல்லுங்க அக்கா...

      Delete
  22. அட இங்கு ஏற்கனவே பதிவிட்டுள்ளீர்கள் பலா பற்றி. இன்று நான் இது பற்றி என்தளத்தில் பதிவிட்டேன். அப்போ தோழி கிரேஸ் அவர்கள் தான் தங்கள் இணைப்பை தந்து தங்கள் தளத்தை பார்க்க சொன்னார்கள். ரொம்ப சுவாரஸ்யமான விடயங்கள் தான் இவை பிரமிக்க வைக்கின்றது அல்லவா.? நன்றி சகோ! வாழ்த்துக்கள் ....! கிரேசுக்கு என் நன்றிகள் ..!

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...