கண்டதால் வந்ததா காதல் - இல்லை கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல். கண்ணெதிரே நீ.... ஒரு நாள் கலங்கினாய் எனைப் பார்த்து உறைந்தது என் உதிரம். தளர்ந்தது என் சரீரம்.
தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத் தாங்கியது என் இதயம். காத்திருந்தேன் பல நாட்கள் தன்னந்தனியாய்...... கனவு கண்டிருந்தேன் சில நாட்கள் வந்தது உன் தகவல் வாடிய பூவும் மலர்ந்தது....!
ஊருக்கு ராஜாவாய் நீ..... உன்னுடலுக்கு ராணியாய் நான் இருப்பேன் என நினைத்தேன். அதில் ஒரு மாற்றம் கண்டேன் சரியென சொன்ன உதடுகள் சத்தியம் மறந்தது ஏனோ....!
கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான். கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான். என் வாழ்வில் வந்த துன்பம் சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ... விடை தேடி அலைகின்றேன் விடிவொன்று கிடைக்குமோ....!
புதிரான அகிலத்தில் - ஏன் பிறந்தேன் அன்று... திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள் இருட்டறையாய் மாறியது ஏனோ... புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன் புரியவில்லை போகும் பாதைகள்
காதலில் தோல்வி
ReplyDeleteகண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.
தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!
ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!
கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!
புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்
வணக்கம் அய்யா... தங்கள் இனிய கவிதைக்கு மிக்க நன்றி... அப்படியே வருகைக்கும்...
Deleteஅட...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வணக்கம் அண்ணா... இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
Deleteகாதலில் விழுந்ததால் காணும் காகித
ReplyDeleteபூவும் வாசனை தருமே!
த ம.3
ஆமாம் ஆமாம்...
Deleteஅவள் கார் கூந்தல் தழுவியதால்
இந்த காகித பூவும் வாசம் பெற்றுவிடுகிறதே...
ஹ ஹா...
வணக்கம் தோழி... தமிழ் மண ஓட்டுக்கும், தங்கள் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...
பருத்தி பூ வாசம் கவிதையில் இருக்கிறது வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம்,
Deleteதங்கள் இனிய கருத்துக்கும் வருகைக்கும் நன்றி... தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது...
ReplyDeleteவணக்கம்!
உதிரும் தலைப்பில் உரைத்த கவிதை
பதியும் மனத்துள் படா்ந்து!
தமிழ்மணம் 4
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் அய்யா...
Deleteதங்கள் மேலான வருகையும், தமிழ் மண ஓட்டும் மகிழ்ச்சியளிக்கிறது... மிக்க நன்றி.
வாசனை தொடர்ந்தும் வீசிட வாழ்த்துக்கள் சகோ :)
ReplyDeleteஅவள் வாசம் தான் பூக்கும் பூக்கும் மல்லிகை போல் ஓயாதது அல்லவா... வீசிக்கொண்டே தானே இருக்கும்!
Deleteதங்கள் இனிய வருகைக்கு மிக்க நன்றி சகோதரி...
கவிதை வாசம் காதலியின் கூந்தல் பூ போலவே வாசம்!
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் ரசனை அற்ப்புதம். என் கவிதையை அவள் கூந்தல் பூவோடு ஒப்பிட்டுள்ளீர்கள்... அழகு...
மிக்க நன்றி...
வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...நண்பா.
Deleteகுழல் தழுவும் காற்றில் கூட
ReplyDeleteசுகந்தம் வீசும் ....
பருத்திப்பூவென்ன
பட்ட இலை சூடினாலும்
பலநூறு வாசம் வரும்.....
அருமை
தங்கள் கவிதையும் மிகுந்த அழகாக உள்ளது... வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...சகோ.
Deleteஅன்பின் வெற்றி வேல் - பருத்திப் பூ கூட வாசமாக இருக்கிறதா - பலே பலே - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteஅய்யா வணக்கம்...
Deleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...
லவ் மூட் ஸ்டாட் ஆயிருச்சில்ல
ReplyDeleteலவ் மூட்!!! அது அப்பப்போ வரும் போகும்!
Deleteஅழகான வரிகள். வாழ்த்துகள்.
ReplyDeletemm...
ReplyDelete:)
Deleteவாசமுள்ள (இல்லா) பூவோ?
ReplyDeleteத.ம-7
Deleteவாசமில்லா பூ, அவள் சூடியதால் வாசம் பெற்று மயக்கச் செய்கிறது...
Deleteதமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி அய்யா...
Deleteஉள்ளத்தில் காதல் இருந்தால்
ReplyDeleteஉலகமே ஒளிமயமாகும்
கள்ளமே ஒழிந்து கொளளும்
கல்லிலும் மிருதுவாகும்
எதிலும் ஆனந்தம் கொள்ளும்.
அருமையான கவிதை. வாழத்துக்கள்.
வணக்கம் அய்யா... இனிய கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...
Deleteகாதல்வந்தால் வாசமில்லா மலருக்கும் வாசம் வந்துவிடுகிறதே :)
ReplyDeleteஆமாம் ஆமாம்...
Deleteஅவள் அப்படித்தான்.