Jun 19, 2013

காதல் கடிதம்: திடங்கொண்டு போராடு- பரிசுப் போட்டி

அன்புள்ள ராட்சசிக்கு,

பார்க்கும் பார்வையில் மட்டும் என்னுள், என் ஐம்புலனில் தீயை  விதைத்துவிட்டு என்னை தூரமாக தள்ளி வைத்து ஏதும் அறியாதவள் போல் என்னை ரசித்துக் கொண்டிருப்பவளுக்கு நான் எழுதும் என் காதல் கடிதம்...

முதலில் கண்டபோது தென்றலாய் என்னை வருடி, பழகும் காலத்தில் அழகுத் தூறலாக என்னை நனைத்து, என் காதலியாய் என்  மனத்தைப் புயல் போல ஆட்கொண்ட என் பேரழகிக்கு...

நானாக இருந்த என் நாட்களை விட, நாமாக இருந்த என் நாட்களில் என்னுள் பல மாற்றங்களை விதைத்து விட்டுச் சென்றவளுக்கு...

உன்னுடன் காலாற நடந்தபோது வண்ணமயமான என் நிழல், நீயில்லாத என் வெற்று நடையைக் கண்டு என் நிழலும் என்னைக் கேளி பேச வைத்தவளுக்கு...

என் வாழ்வில் நான் மிகவும் கவனமாய் என் இதயக்கூட்டில் சேகரித்து வைத்திருக்கும் நினைவுகள், நாம் சந்தித்த பொழுதுகள் தானடி. ஆனால் அந்த இனிய சந்திப்புகள் மட்டும் தான் என்னை இன்னும் உயிரோட்டமாய் வைத்திருக்கிறது.

என் காதல் உனக்குத் தெரியாத நாட்களில் எல்லாம் என்னுடன் அளவாவிய நீ, ஏனோ என் எண்ணத்தைத் தெரிந்துகொண்ட பின் நான் காண இயலாத தூரத்தில் மறைந்துகொண்டு என்னை நித்தமும் வதைத்துக் கொண்டிருப்பவளுக்கு...

என் கனவு மற்றும் என் எண்ணங்கள் என அனைத்தையும் களவாடி என் உறக்கத்தோடு என்னையும் சேர்த்து நீயே என்னையும் களவாடுவாய் என்ற காத்திருப்பில் நானடி...

இப்போது என் மனம் உன்னை நினைத்தே என் உயிர் வேகுவது போல், உன் மடியில் என் உயிர் பிரிந்து, உன் பைந்தமிழ் அழுகுரல் கேட்டே என் உடல் வேகும்  இந்த வரத்தை மட்டுமாவது எனக்கு அளித்துவிடேனடி என் செல்ல ராட்சசியே!!!

அன்புடன் 
வெற்றிவேல்...
-------------------------------------------------------------------------------------------------------------------------------

இது போட்டிக்காக மட்டுமே எழுதப்பட்டது, எழுதியது அனைத்தும் கற்பனையே. ஆரம்பத்தில் எளிதாக எழுதிவிடலாம் என்று ஒப்புக்கொண்டேன், ஆனால் எழுத ஆரம்பித்த பின்பே அதன் கடினம் புரிந்தது. நல்ல, யாராலும் எளிதில் ஒப்புக்கொள்ள இயலாத தலைப்பைத் தான் நண்பர் சீனு வழங்கியுள்ளார். அவரது முயற்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல நண்பர்கள் எழுதுபவர்களை ஊக்குவிக்குமாறு பல போட்டிகளை நடத்த முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....

எப்படியோ என்னையும் காதல் கடிதம் ஒருவர் எழுதவைத்துவிட்டார்.... நன்றிகள் பல...

46 comments:

  1. /// நீயே என்னையும் களவாடுவாய் என்ற காத்திருப்பில்... ///

    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      Delete
  2. காதல் கடிதம் நன்றாகவே வந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நல்லா வந்தாச்சா, சந்தோசம் அண்ணா... ஏதோ நினைப்பில் எழுதியது... ஓர் முயற்சி தான்...

      Delete
  3. Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  4. வெற்றிவேல் என்று பெயர் வைத்துக் கொண்டு காதலில் தோல்வியா? காதலுக்காக சாக வேண்டாம். சாகும் வரை காதலியுங்கள்.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. பெயர் வெற்றிவேல் தான்...

      தோல்வியெல்லாம் ஏதும் இல்லை... சிறு முயற்சி தான், கொஞ்சம் வித்தியாசமா எழுதலாம்னு தான் ரஞ்சினி அம்மா. சாகல்லாம் மாட்டேன், தங்கள் வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அம்மா.

      Delete
  5. பைந்தமிழ் அழுகுரல் கேட்டே என் உடல் வேகும் இந்த வரத்தை மட்டுமாவது எனக்கு அளித்துவிடேனடி என் செல்ல ராட்சசியே!!!

    >>
    தான் இறந்தாலும் தன் காதலி நல்லா இருக்கனும்ன்னு நினைப்பவன் நம்ம ஆளுங்க. இதை தவிர்த்து கதை சூப்பர். நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என்றே எனக்கு தோன்றுகிறது... நான் கூற வந்தது, என் கடைசி காலத்தில் உன்னுடனே இருக்க வேண்டும் என்பது போலத்தான்!!! இது அனைத்தும் கற்பனையே! புதுசா முயற்சி பண்ணினேன், அவ்வளவுதான்!!!

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. Replies
    1. வணக்கம்...
      இனிய கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. சுருக்கமாகவும் அழகாகவும் இருக்கிறது வாழ்த்துகள்.
    நிழலுக்கும் நிறம் கொடுக்கிறாளா காதலி!
    பைந்தமிழ் அழுகுரல்? எதற்கு அழுகுரல்?!(பிரிவை நினைத்து என்று நீங்கள் ராசிக்கு அளித்திருக்கும் விளக்கம் கண்டேன்!)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஸ்ரீ ராம்...

      ஆமாம், இது பிரிவை நினைத்து காதலிக்கு கடிதம் எழுதியது போல எழுதியுள்ளேன், பின்னூட்டத்தையும் சேர்த்து வாசித்து கருத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி...

      தொடர்ந்து வாருங்கள்... நன்றி, வணக்கம்...

      Delete
  8. //உன் மடியில் என் உயிர் பிரிந்து, உன் பைந்தமிழ் அழுகுரல் கேட்டே என் உடல் வேகும் இந்த வரத்தை மட்டுமாவது எனக்கு அளித்துவிடேனடி//

    ஏனோ காதலில் வீழ்ச்சி எனக்கு பிடிப்பதில்லை கடிதம் நன்று

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      காதலில் வீழ்ச்சி யாருக்குத்தான் பிடிக்கும்... மற்ற போட்டியாளர்கள் போல் இல்லாமல் புதிதாக எழுத வேண்டும் என நினைத்தேன், அவ்வளவுதான் நண்பா... ஓர் முயற்சி... அவ்வளவுதான்...

      Delete
  9. சுருக்கமான அழகான.. அட.. இதை எனக்கு முன்பு ஸ்ரீராம் சொல்லிவிட்டாரா?
    அழுகுரலிலும் பைந்தமிழ் - ரசித்தேன்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வருகைத் தாருங்கள்...

      Delete
  10. "முதலில் கண்டபோது தென்றலாய் என்னை வருடி, பழகும் காலத்தில் அழகுத் தூறலாக என்னை நனைத்து, என் காதலியாய் என் மனத்தைப் புயல் போல ஆட்கொண்ட என் பேரழகிக்கு..."

    அருமையானதொரு வர்ணனை.வெற்றி பெற வாழ்த்துகள் !!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தமிழ் முகில்...

      இனிய வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  11. தங்கள் கூறுவதும் முற்றிலும் உண்மை தான் காதலித்தால் தான் காதல் கடிதம் எழுத சுலபமாக இருக்கும் கற்பனைக்கு கொஞ்சம் கஷ்டம் தான் அந்தக் கஷ்டத்தை நானும் உணர்ந்திருக்கிறேன்

    தங்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் அருமையாக இருந்தது இடையில் புதுபுது வார்த்தைகள் மிகவும் அழகுடன் மிளிர்ந்தது வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஹிஷாலீ,

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... வருகைக்கும்..

      Delete
  12. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  13. புது முயற்சி நன்றாக தெரிகிறது. இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம் போல ... ரசிக்க வைத்தது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... அப்படியே வருகைக்கும், அழகான பின்னூட்டத்திற்கும்...

      Delete
  14. வெற்றிவேல்
    வெற்றிபெற வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  15. அருமை!...
    எழுதிய விதம் அழகாக இருக்கின்றது. இன்னும் கொஞ்சம் எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்குமோ? இதுவே சிறப்புத்தான்...

    ராட்சசி என அழைத்ததே அத்தனை அன்பின் இணைப்பாய் உள்ளதே!

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளமதி... நான் கடந்த 20 அன்றே கடைசி என அவசர அவசரமாக எழுதினேன், அதான் இத்தனை சுருக்கமாக... இதுவே போதும் என நினைக்கிறேன். வார்த்தைகளின் எண்ணிக்கை முக்கியம் அல்லவே, சொல்ல வருவதுதானே முக்கியம்!!!

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  16. அன்பான ராட்சசி அதுவும் தந்த இதயக்க்கூட்டில் நிணைவுகள் ரசிக்க வைத்த வரிகளுடன் கடிதம் பிடித்திருக்கு எளிமைக்கு .வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனிமரம், தங்கள் இனிய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  17. //நானாக இருந்த என் நாட்களை விட, நாமாக இருந்த என் நாட்களில் என்னுள் பல மாற்றங்களை விதைத்து//
    ராட்சசி படுத்திய பாட்டை அருமையாக விவரித்துள்ளீர் நண்பரே!
    கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை.
    நீளமா முக்கியம்.
    வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சைதை அஜீஸ்...

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... தங்கள் முதல் வருகையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்... தங்கள் வருகை தொடர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்...

      இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  18. அருமையான கடிதம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்... இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  19. ஒரு இனிய சுவைமிகுந்த கடிதம் பாராட்டுகள் ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
  20. நல்லா பீலிங்க்ஸ் நிறைஞ்சு இருக்கு பாஸ்.. கற்பனைன்னு சொன்னா நம்ப முடியலே..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோவை ஆவி. முதல் வருகை என நினைக்கிறேன்... சில விஷயங்களை சொன்னா நம்பனும்... கற்பனைதான் நம்புங்கள்.

      ஹ ஹா. வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  21. //
    என் காதல் உனக்குத் தெரியாத நாட்களில் எல்லாம் என்னுடன் அளவாவிய நீ, ஏனோ என் எண்ணத்தைத் தெரிந்துகொண்ட பின் நான் காண இயலாத தூரத்தில் மறைந்துகொண்டு என்னை நித்தமும் வதைத்துக் கொண்டிருப்பவளுக்கு...//

    கஷ்டப்பட்டு எழுதனமாதிரி தெரியலேயே!
    அருமை வாழ்த்துக்கள்

    --
    www.vitrustu.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      நம்புங்க, கஷ்ட்டப்பட்டு எழுதுனதுதான்... ஹ ஹா

      வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  22. இந்த ப்ளாகைத் தெரிந்து கொண்டேன். வந்தேன். ராட்சஸி மட்டும் இல்லை.
    அதுவே பிசாசாகூட மாறிவிடலாம். காதலி எந்த வடிவத்திலும் இருக்கலாம்.
    கடிதம் ரொம்ப அழகாயிருக்கு. நிறைய காதலித்தவர்களையெல்லாம் தெரியும்.கடிதங்கள் அதிகம் தெரியாது. இப்போது அதையெல்லாமும் பார்க்கலாம். வலையில் சிக்குபவர்களைப் பார்க்கலாம். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. :) வலையில் சிக்குபவர்கலையா? பார்க்கலாமே!

      Delete
  23. கடிதம் எழுத வைத்த சீனுவா? என்னய்யா நடக்குது? :) :) :) சின்னதா அழகான இருக்குது....மைண்ட்ல வைச்சுகிறேன்.....அடிக்கடி பதிவு பக்கம் வர முடியாது...நம்ம வேலை அப்படி......அழகான கடிதம்.வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும் போது வந்து செல்லுங்கள்... வணக்கம் நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...