Aug 14, 2012

இரவின் புன்னகையின் சுதந்திர தின சிறப்புரை

வலைதள நண்பர்களுக்கும், இந்தியக் குடிமக்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள். பல சர்ச்சைகளுக்கும், சிக்கல்களுக்கும் இடையில் நாம் நமது பாராளுமன்ற ரகளைகளுக்கு இடையில் நமது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் நமது குடியரசுத் தலைவரும், பிரதமரும் ஏதேனும் ஒரு யாரோ எழுதிக்கொடுத்த ஒரு அறிக்கையை படிப்பர், அதில் ஒரு வேடிக்கை என்ன என்றாள், அவர்கள் கூறுவது அனைத்தும் அன்றைக்கு மட்டுமே அவர்களுக்கு ஞாபகம் இருக்கும், அடுத்த நாள் அதனை மறந்து விடுவர். நாமும் மறந்துவிடுவோம், படிக்கும் அவர்களும் மறந்து விடுவர்.
அப்படியே இந்த சுதந்திர தினமும் நடக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அனைத்து வருடங்களும் இப்படியே நடக்கிறது. எந்த மாறுபாடும் இல்லை.

இன்று  நாம் சுதந்திர தினம் என்றாள் காந்தியையும், நேருவையும் மற்றும் சில தலைவர்களைப் பற்றியே நினைவுகூறுகிறோம். ஆனால் அதற்க்கு உழைத்த பல உள்ளங்களைப் பற்றி நாம் நினைக்க மறந்துவிடுகிறோம்.

இதுவரை  7,700 மக்கள் நக்சல்களால் இறந்துள்ளனர், வருடம் முழுவது எங்கேவாவது ஒரு இடத்தில் குண்டு வெடிப்புகளும், கலவரமும் நிகழ்ந்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. யாராவது ஒரு மனிதன் பசியாலும் நோயினாலும் இறந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும்.  இதனை விட ஒரு கொடிய நிலை என்ன என்றாள். இந்த மனிதர்கள் எல்லாம் வருடா வருடம் சுதந்திர தினமும், குடியரசு தினமும் கொண்டாடுகிறார்கள்.

இந்திய மக்களாகிய நமக்கு எங்கும், எங்கேயும் செல்ல உரிமை உண்டு, அனைத்து வளங்களும் அனைவருக்கும் சொந்தம். கன்னியாகுமரியில் உள்ள கடற்கரை ஜம்முவில் வசிப்பவனுகும், ஜம்முவில் உள்ள மலை வளம் குமரியில் உள்ளவனுக்கும் உரிமை உண்டு. ஆனால் நடப்பது என்ன, பீகாரில் உள்ளவன் மராத்தியில் சென்றால் அடிக்கிறார்கள், இங்கு உள்ள தமிழன் தன்னுடைய சொந்த சேதுக்கடலுக்கு அவனால் தொழில் செய்ய இயலவில்லை. இது சுதந்திரமா?

மேலும் நாம் ஒவ்வொரு சுதந்திர தினம் கொண்டாடும் போதும் நாம் சுதந்திரமாக கொண்டாடுகிறோமா? என்ற சந்தேகம் எனக்கு மிகவும் வலுவாக உள்ளது. ஏனெனில் விமானம், தரை, கப்பல் என முப்படையின் பாதுகாப்பு, அனைத்து விமான, பேருந்து, ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு இல்லாமல் நம்மால் சுதந்திரமாக சுதந்திரதினம் கொண்டாட இயலுகிறதா? என்பதே எனது கேள்வி.

வெள்ளைக் காரனிடமிருந்து நாம் சுதந்திரம் வாங்கிவிட்டோம் இந்த ஊழல் வாதிகளிடமிருந்தும், இந்த பெரும் திருடர்களிடமிருந்து சுதந்திரமடையப் போகிறோம்?

558 தமிழக மீனவர்கள் இதுவரை சிங்கள கடற்படையால் இறந்துள்ளனர், நித்தமும் நமது மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டும், துன்புறுத்தப் பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், மாநில கட்சிகளும் சரி, தேசிய கட்சிகளும் சரி அனைவரும் இந்த பிரச்னையை ஒரு ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் இதனை ஒரு மக்களின், தமிழனின் உரிமைப் பிரச்சனையாக பார்க்க மறுக்கின்றனர். 

ஒரு  இந்தியனாக நாம் இந்த சுதந்திரதினத்தை கொண்டாடலாம், ஆனால் ஒரு தமிழனாக என்று நாம் சேதுக்கடலிலும், தமிழ் ஈழத்திலும் சுதந்திரமாக சுய உரிமையுடன் வாழ்கிறோமோ அன்று தான் நமக்கு உணமையான சுதந்திரம்.

வாழ்க  இந்தியா, வளர்க தமிழகம்.

16 comments:

  1. நல்லது நண்பா தொடரட்டும் உன் சேவை
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

      Delete
  2. I salute for this speech. Super nanba. Ungalaip polave ellorum sindhiththaal naadu kattayam unmaiyaana sudhandhiram perum. Vaalththukkal ullame.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா...

      Delete
  3. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
    Replies
    1. நல் வாழ்த்துகள் நண்பா. ஜெயஹிந்த்

      Delete
  4. நல்ல கருத்துக்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா...

      Delete
  5. வாழ்த்துகள்



    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. உபயோகித்துப் பார்க்கிறேன் நண்பா...

      Delete
  6. Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. சுதந்திரம் நாட்டுக்கு மட்டும்தான்...பிந்தின வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. கவிச் சக்கரவர்த்தினியின் பின்தின வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  8. சிந்தனையைத் தூண்டும் பதிவு !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...