உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.
20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 1,71,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (7,50,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 5,00,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.
இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.
பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது.
உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 5,00,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த 5,00,000 சொற்கள் பிரப்பிலக்கணத்தோடு வகைப்படுத்தப் பட்டு உள்ளது. அதன் சொற் பொருட்களை கணக்கில் கொண்டால் பத்து இலட்சங்களைத் தாண்டி விடும்.
நல்ல முயற்சி... தொடர்ந்து இது போன்ற விடயங்களை வெளிக் கொணருங்கள்.
ReplyDeleteகண்டிப்பாக நண்பா,
Deleteதொடர்ந்து வருகை தாருங்கள்...
வருகைக்கு மிக்க நன்றி நண்பா.
தமிழுக்கு சிறப்பு... இது போல் தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteதாங்கள் வாழ்த்துகள் உள்ளவரை கண்டிப்பாக தொடர்வேன் சகோ.
Deleteதமிழில் சொற்கள் அதிகமுள்ளதால்தான் நாங்கள் கதைப்பது வேகம் போலவும் ஏதோ கறகறப்பாய்,முரட்டுத்தனமாய் கதைப்பதாக எங்கள் மொழி தெரியாதா வேற்று நாட்டவர்கள் சொல்கிறார்கள்.நான் அவர்களுக்குக் காரணத்தை விளங்கப்படுத்தியுமிருக்கிறேன் !
ReplyDeleteஅது அவர்களின் மூடத்தனமான பேச்சு தோழி...
Deleteதமிழால் வாழ்கிறோம்.தமிழாயே வாழ்வோம்.பெருமையாக இருக்கிறது நண்பா..வாழ்த்துக்கள்.நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு தமிழை துறந்த முட்டாள்களுக்கு தான் இது புரியவில்லை போலும்.வாழ்க தமிழ்.சந்திப்போம் சொந்தமே!
ReplyDeleteதாங்கள் கூறுவது அனைத்தும் சரியே, தமிழ் தான் அனைத்தும். நாகரிகம் என்று கூறுவதை விட, பொறாமை, பகைமை என்று கூட கூறலாம். உதாரணத்திற்கு தமிழ் மேல் சிங்களன் ஹிந்திகாரனுக்கு உள்ள பகைமை.
Deleteஅனைத்தும் திட்டமிட்டே மறைக்கப் படுகிறது...
சிறப்பான தகவல் பகிர்வு! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி அய்யா
Deleteதமிழில் இருக்கும் பல சொற்களை நாம் வழக்கொழித்து விட்டோம்.
ReplyDeleteநிறைவான பதிவு.
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான் தோழி. நம் சிறப்பை நாமே அழித்துக் கொண்டு இருக்கிறோம்.
Deleteஆம் ...சரி தான் ..
Deleteநாற்றதிற்கு உள்ள பொருளையே மாற்றி விட்டோம் ..!!!
துர்நாற்றம் என்ற வார்த்தையை அகராதியிலே அகற்றி விட்டோம் ..!!!
உண்மை தான். நாற்றம் என்றாலே வாசனை என்றுதான் பொறும. ஆனால் நாம் வாசனை என்றால் நல்ல வாசனை எனவும், நாற்றம் என்றால் கெட்டது எனவும் ஆக்கிவிட்டோம், என்ன செய்ய தமிழுக்கு நாம் ஏற்ப்படுத்தி இருக்கும் சோதனை...
Deleteஅருமையான தகவல்கள்
ReplyDeleteவருகைக்கு நன்றி தோழி...
Deleteதமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்பு "ழகரம் " ...!!!
ReplyDeleteமற்றுமொரு சிறப்பு...
எந்த மொழியின் பெயரையும் ...மனிதன் பெயராய் வைத்து கொள்வதில்லை ..!!! தமிழர்கள் மட்டுமே பெற்ற பெரும் பேறு இது ..!!!
எடு :முத்தமிழ் ,தமிழரசன், தமிழரசி. ஏன் தமிழ் என்றே பெயர் கேட்டதுண்டு ..!!!
ஆமாம் தோழி, வருகைக்கு மிக்க மன்றி மற்றும் மேலான கருத்துகளுக்கும்...
Deleteதொடர்ந்து வாருங்கள்
நான் அண்மையில் படித்தவை .:உலக செம்மொழி 6 அவை:சீனம் ,ஹீப்ரு,சமஸ்கிருதம்,தமிழ் ,லத்தின் கிரேக்கம் ..இவற்றுள் தமிழும் சீனமும் தாம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் மொழிகள் .பேராசிரயர் கா .சிவத்தம்பி கூற்றுப்படி தமிழ் ஒன்றுதாம் எல்லாவிதத்திலும் தொன்மை ,தொடர்ச்சி கொண்ட ஒரே மொழி .இன்னும் அதன் உதிரத்தில் உதித்து பல மொழிகள் தோன்றினாலும் அதன் சீரிளமை என்னென்றும் குறையாது .. by DK..(D.Karuppasamy.)
ReplyDeleteவணக்கம், ஆம், தாங்கள் கூறியதும் உண்மையே? இன்று உயிர்ப்புடனும், சீர்மையுடன் இருக்கும் ஒரே மொழி தமிழ் மட்டுமே. சீனமும் உள்ளது பல மாற்றங்களுடன். சீனம் எப்படியும் தப்பித்துக் கொள்ளும் இந்த உலக சுருங்கலில், ஆனால் நம் தமிழிற்கு சிறு கடினமே. ஏனெனில் சீனம் தனியாக சீன மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளது. சீனர்களுக்கென்று தனி நாடும் உள்ளது. ஆனால் நமெக்கென்று ஒரு நாடு இல்லை. ஆதலால் நம் தொன்மை, சிறப்பு அனைத்தும் மறைக்கப் பட்டே நாம் வளர்கிறோம், இங்கு சிலர் இங்கு திராவிடர் என்று சிலவற்றை மறைக்கிறார்கள். ஹிந்திக்காரர்கள் பகிரங்கமாகவே மறைக்கிறார்கள். என்ன செய்ய??? நம் சிறப்பை நாமே உணர்ந்து கொண்டால் தான் நன்று...
Deleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி அப்பா...
கண்டிப்பாக உங்கள் வலை திரட்டியில் இணைத்து விடுகிறேன் நண்பா...
ReplyDeleteவருகைக்கு நன்றி...
ஐயா, தங்கள் பதிவிற்கு நன்றிகள் மற்றும் மகிழ்ச்சி...
ReplyDeleteஆங்கிலத்தில் மொத்தம் உள்ள சொற்களின் எண்ணிக்கை நீங்கள் கூறியவாறு உள்ளது உண்மை என்பதை என்னால் அறிய முடிந்தது (http://oxforddictionaries.com/words/how-many-words-are-there-in-the-english-language).
அதனைப்போலவே தமிழில் இத்தனை சொற்கள் உள்ளன என்பதற்க்கான ஆதாரம் (எனக்கு) கிடைக்கவில்லை. ஆகவே, தாங்கள் அதற்க்கான ஆதாரங்களை அளித்தீர்கள் என்றல், இதனை என் நண்பர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக அமையும்.
நன்றிகளுடன்
க.ஆனந்த்
அதுதான் பாவாணர் தொடங்கிய சொற்பிறப்பியல் அகர முதலியில் உள்ளது என்று நான் குறிப்பிட்டுள்ளேனே நண்பா.... கிடைத்தால் அதற்க்கான இணைய இணைப்பை இணைக்கிறேன். இந்த அகர முதலி அண்ணா நூற்றாண்டு மற்றும் கன்னிமாரா நூலகத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்...
Deleteதங்கள் ச்வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
தங்கள் மறுமொழிக்கு நன்றி...
Deleteஇந்த திட்டத்திற்கான பதிவை வலையில் கிடைக்கவில்லையே, அகராதியை மின்புதகமாக பதிப்பித்தால் பலரும் பயன்பெறுவர். தங்களிடம் இதற்கான வலைதொட்ரபு இருந்தால் தெரிவிக்கவும், பயன்பெறுவேன். நன்றி.
ReplyDeleteஐயா, வணக்கம். இந்நூலின் பிரதி எங்கு கிடைக்கும்? எனது, மின்னஞ்சல் முகவரி (tamilvalluvar@gmail.com). பதிலுக்குக் காத்திருக்கிறேன்.
ReplyDelete