காதலை
மெல்ல தட்டி எழுப்பினேன்...
பீனிக்ஸ் பறவையாக
உயிர்பெற்று
சிறகடித்தது வானில்...
கண்கள் நிறைந்த
கனவுகளுடனும்
உள்ளம் முழுக்க
தன்னம்பிக்கையுடன்
மேலும் மேலும் உயர பறந்தது
அது...
எட்டாக் கணவாய்களையும்
நீண்ட கண்டங்களையும்
உயர்ந்த சிகரங்களையும்
அகன்ற ஆழிகளையும் கூட
சாதுர்யமாய் கடந்து
வீறு நடை போட்டது...
தகிக்கும் பாலையையும்,
பொசுக்கும் எரிமலையையும்
ஒய்யாரமாகக் கடந்து சென்றது
என் பீனிக்ஸ் பறவை...
நடுங்கவைக்கும் கார்காலத்தையும்
பொசுங்கவைக்கும் வேனிற்காலத்தையும்
உணவாகக் கொண்டு திண்ணமாய்
பறந்து கொண்டிருந்தது
வசந்தத்தை நோக்கியே...
வசந்தமென எண்ணி
கண்கள் நிறைந்த
கனவுகளுடனும்
உள்ளம் முழுக்க
தன்னம்பிக்கையுடன்
மேலும் மேலும் உயர பறந்தது
அது...
எட்டாக் கணவாய்களையும்
நீண்ட கண்டங்களையும்
உயர்ந்த சிகரங்களையும்
அகன்ற ஆழிகளையும் கூட
சாதுர்யமாய் கடந்து
வீறு நடை போட்டது...
தகிக்கும் பாலையையும்,
பொசுக்கும் எரிமலையையும்
ஒய்யாரமாகக் கடந்து சென்றது
என் பீனிக்ஸ் பறவை...
நடுங்கவைக்கும் கார்காலத்தையும்
பொசுங்கவைக்கும் வேனிற்காலத்தையும்
உணவாகக் கொண்டு திண்ணமாய்
பறந்து கொண்டிருந்தது
வசந்தத்தை நோக்கியே...
வசந்தமென எண்ணி
அவள் பார்வையில் அகப்பட்டதும்
எரிந்து பொசுங்கி
எரிந்து பொசுங்கி
சாம்பலாகிவிட்டது
என் காதல் பீனிக்ஸ்.
என் காதல் பீனிக்ஸ்.
மெல்ல உயிர்கொடுத்து
அவளுக்காக
என் காதலை தட்டி
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் என் சாம்பலிலிருந்து...!
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் என் சாம்பலிலிருந்து...!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
அட அட..எழுப்புங்கள் எழுப்புங்கள் ..
ReplyDeleteஅருமை சகோ!
வணக்கம் அக்கா...
Deleteவருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...
அப்படித் தான் இருக்கோணும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசரி அண்ணா...
Deleteவாழ்த்துகளுக்கும், வருகைக்கும் நன்றி அண்ணா...
உண்மைக் காதல் தோற்றுப் போகாது !! வாழ்த்துக்கள் சகோதரா
ReplyDeleteதோல்வியைக் கண்டு துவளும் மனத்தை விடச் சிறந்தது இப்
பண்பே .கவிதை அருமை !
பாராட்டுகளுக்கு நன்றி சகோதரி...
Deleteசிறந்த வரிகள்
ReplyDeleteபாராட்டுகள்
பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...
Deleteவணக்கம்
ReplyDeleteதம்பி...
சிறப்பாக உள்ளது வரிகள்.... இப்படியே மெயின்டன் பன்னுங்கள்...வாழ்த்துக்கள்..
கவிதையாக என்பக்கம்-தேடுகிறேன்......தேடுகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் அண்ணா...
Deleteவாழ்த்துகளுக்கு நன்றி...
பீனிக்ஸ் பறவை ஒரு கற்பனையான பறவை. அது எப்படி நிஜமான காதலுக்கு ஒப்பாக சொல்ல முடியும்?
ReplyDeleteபீனிக்ஸ் என்பது கற்பனைதான் அண்ணா... ஆனால் உவமை இல்லாமல் எப்படி அண்ணா எழுதுவது...
Deleteவேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு// மற்றும் // இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா பாடல்களை ஓரிரு தடவை கேட்கவும்.. :)
ReplyDeleteஓரிருதடவை மட்டும் கேட்டால் போதுமா அண்ணா...
Deleteஆனால் மனசு கேட்க மறுக்கிறதே...!
"//எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteமீண்டும் என் சாம்பலிலிருந்து...!//" - இந்த வரிகள் வெறும் ஒரு பெண்ணின் காதலுக்காக மட்டுமல்லாமல், வாழ்க்கையில் ஏற்படும் எல்லாத் துயரங்களுக்கும் இது பொருந்துமேயானால் மிக்க சந்தோஷம் சகோதரா.
நிச்சயம் அனைத்திற்கும் பொருந்தும் அண்ணா...
Deleteகவிதை அருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள் சகோதரா
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...
சொக்கன் அவர்கள் கூறியபடி பெண்ணாகப் புனையப்பட்ட வாழ்வின் அத்தனை தேடுதலுக்கும் பீனிக்ஸ் பறவையாக இருக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteகண்டிப்பாக அக்கா...
Deleteவாழ்த்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...
நல்ல கற்பனை....
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நன்றி வேதாம்மா...
Deleteஆவி, காதல் உண்மையாக இருந்தாலும், அது கவிதையாகவோ, கதையாகவோ, ஏன் காவியமாகவோ புனையப்படும்போது பல உவமைகள் வரத்தனே செய்யும்! அது போலத்தன் இதுவும் என்று கொள்ளலாமே!
ReplyDeleteஉண்மை தான்...
Deleteஅவர் புரிந்து கொள்ளட்டும்...
வெற்றிவேல் தம்பி கவிதை அருமை! காதல் எரிந்து விட்டதோ என்று தோன்றியது.....அப்பா மீண்டும் துளிர்த்டு எழுந்து விட்டது! காதல் என்றுமே அழியக் கூடாது !
ReplyDeleteவணக்கம்...
Deleteதங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
காதலர்கள் அழியலாம், ஆனால் காதல் அழியாது...
மீண்டும் உயிர்த்தெழட்டும் உங்கள் காதல்.....
ReplyDeleteபாராட்டுகள்.
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா....
Deleteவருகைக்கு மகிழ்ச்சி...