இன்று தனது முதல் நூலான ஆவிப்பா நூலை வெளியிடும் நண்பர் கோவை ஆவி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நஸ்ரியா புகழ், நஸ்ரியாதாசன் என வாத்தியார் பாலகணேஷ் அவர்களால் புகழப்பட்ட கோவை ஆவி எனப்படும் ஆனந்த விஜயராகவன் அவர்கள் தனது குறும்பாக்கள் அனைத்தையும் தொகுத்து மாலையாக்கி புத்தக வடிவில் சிறப்பாக வெளியிட்டுள்ளார்.
நூல் முழுக்க மனதைக் கவரும் கவிதை வரிகளுக்கு ஏற்ப, தகுந்த வண்ண புகைப்படங்களையும் அதற்கு ஏற்ற தமிழ் எழுத்துறுக்களையும் தெரிவுசெய்து புத்தகத்தை சிறப்பாக வடிமைத்துள்ளார் வாத்தியார் பாலகணேஷ். அவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். ஒரு பூமாலை தொடுக்கப்படும் போது அழகிய மலர்களை மட்டும் தெரிவுசெய்வது மட்டுமல்லாமல் அவற்றை தொடுக்கும் நேர்த்தியோடு தொடுத்தால் மட்டுமே அந்த பூமாலை அழகுற காட்சியளிக்கும். அப்படி இந்த புத்தகம் முழுக்க நண்பர் கோவை ஆவி அவர்களின் கவிதைப்பூக்களை நஸ்ரியா என்ற கயிற்றின் உதவிகொண்டு சிறப்பாக புத்தகத்தை தொடுத்துள்ளார் புத்தகத்தை வடிமைத்துள்ள வாத்தியார் பாலகணேஷ். இங்கு நான் முதலில் புத்தகத்தைவிட புத்தக வடிமைப்பாளர் பற்றி குறிப்பிட முக்கிய காரணம் புத்தகத்தின் வடிமைப்பும், ஒவ்வொரு படத்தேர்வும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பதற்கே. வண்ண புத்தகங்கள் என்றாலே, ஒரு பிரச்சனை ஏற்படும். அதாவது ஓவியத்தின் வண்ணத்திற்கும் எழுத்துருவின் வண்ணத்திற்கும் தொடர்பில்லாமல் வாசிக்கவே சிரமத்தை ஏற்படுத்தும் நிலை உண்டு. ஆனால் அந்தக் காரணிகள் எல்லாம் சிறப்பாக கையாளப்பட்டு சிறப்பாக புத்தகத்தை வடிமைத்துள்ளனர். நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
இனி புத்தகம் பற்றி பார்ப்போம்...
புத்தகத்தை படிக்க ஆரம்பித்த இரண்டாவது பக்கத்திலேயே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது எனக்கு.அது என்னவென்றால் 'புலி மார்க் சீயக்காய்த்தூளுக்கும் புலிக்கும் எவ்வளவு தொடர்போ, அவ்வளவே நஸ்ரியாவுக்கும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கும்' என புத்தகத்தை ஆரம்பித்திருப்பார். இந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவருவதற்குள் அடுத்த அதிர்ச்சி, இந்த புத்தகத்தை அவர் சமர்பித்திருக்கும் முறை தான். நான் எதிர்பார்க்காத வரிகள். என் முதலாம், இரண்டாம் மற்றும் எல்லாக் காதலிகளுக்கும்...! என அவர் கூறிய உடனே புத்தகம் பாதி பிடித்துப் போய்விட்டது எனக்கு.
கவிஞர் என்றால் இருவகையினர். ஒரு வகையினர் பிறப்பால் கவிஞர்கள், மற்ற வகையினர் காதலிகளால் கவிஞர்கள் ஆக்கப்பட்டவர்கள். (இது பெண்களுக்கு பொருந்துமான்னு, யாரும் கேள்வி கேட்கக் கூடாது). இதில் நமது கவிஞர் இரண்டாவது வகை என்பது கவிதையை வாசிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்துகொள்வீர்கள்.
அடுத்ததாக நூலுக்கு எழுத்தாளர் மஞ்சுபாஷினி அவர்கள் அணிந்துரையும், கண்ணாடி மச்சான், திடங்கொண்டு போராடு சீனு அவர்கள் வாழ்த்துரையும் சிறப்பாக வழங்கியுள்ளனர்.எழுத்தாளர் மஞ்சுபாஷினி அவர்கள் பெற்ற குழந்தையின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் பார்த்துப் பார்த்து பூரிக்கும் நிலையில் ஆவிப்பாவின் வரிகளைக் வாசித்து மகிழ்வதாக பெருமைப்பட்டுள்ளார்.ஆனால் அவரே, அந்தக் குழந்தையின் செயல் சில தருணங்களில் கோபம் வரவழைக்கவும் தவறவில்லை என்று தனது கொட்டினையும் எதற்கோ கொடுத்துள்ளார் (காரணம் தெரியவில்லை....?) நண்பர் சீனு அவர்கள் வாழ்த்துரையில் விதிமுறைகளற்ற கவிதை வடிவம் என்ற ஒற்றை விதியை தனதாக்கிக்கொண்டு கவிதைகளை சிறப்பாக எழுதியுள்ளார் என்று தனது கருத்தையும் வழங்கத் தவறவில்லை.
புத்தகம் முழுக்க சிதறியுள்ள கவிதைகள் அனைத்தும் மனதைக் வருடும் தன்மை உள்ளவை. ஆனால் அவற்றில் சில மனதைக் கொள்ளைகொள்ளவும் செய்யும். அவற்றில் சில...
திரிகூடராசப்ப கவிராயனும்
வாயடைத்துப் போவான்...
என் குற்றாலமே நீ
துள்ளியோடி வரும்போது...!
என புத்தகத்தை வாசிக்கும் தருணங்கள் அனைத்தும் மனதை வருடும் கவிதைகள் அவ்வப்போது மனதை கொல்லைகொள்ளவும் செய்யும்.
இருவரியில் குறுகிச்
சிறுத்தாலும்,
சுவையல்லவோ
குறள் போல்
உன் இதழ்களும்...!
என செவ்விதழ்களையும், திருக்குறளின் இரண்டு வரிகளையும் தொடர்புபடுத்திய கவிதை. அழகு...
அடுத்த ஒரு கவிதை. வாழ்வில் ஒவ்வொரு ஆடவர்க்கும் நேரக்கூடாத தருணம் இது. அழகாக தனது கவிதை வரிகளில் அவரது வலியை வெளிப்படுத்தியிருப்பார் கவிஞர்.
அறுசுவை உணவு
ஆயிரம் கனவு
மணமேடையில் நீ
பக்கத்தில் நான்
கழுத்தில் தாலியோடு நீ
கண்ணீரும் கிப்டோடும் நான்...!
இந்தக் கவிதைக்கு ஏற்ற அழகான மணக்கோல நஸ்ரியாவின் படத்தை தெரிவுசெய்துள்ள விதம் சிறப்பு. யாருக்கும் நேரக்கூடாதது.
அடுத்ததாக கவிஞர் தங்கிலீஸ் வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து. ஆனால் இந்த தங்கிலீஸ் வார்த்தைகளும் கவிதைக்கு அழகு சேர்க்கவும் தவறவில்லை...
எழுத்தாணி தோன்றி
டெக்னாலஜி தோன்றா காலத்தே
முன் தோன்றிய பா
இந்த காதல்ப் 'பா'
என இந்தக் கவிதை புத்தகத்தை நிறைவுசெய்திருக்கும். இந்தக் கவிதைகள் அனைத்தும் உதாரணங்கள் மட்டுமே. இதைப் போன்ற கவிதைகள் புத்தகம் முழுக்க 64 பக்கங்களும் விரவியுள்ளன. இது இவரது கன்னி முயற்சி. இவரது புத்தக வெளியிடளான இந்த முதல் முயற்சியோடு மட்டுமல்லாது இன்னும் இவர் பல புத்தகங்களை வெளியிடவேண்டும் என்ற எனது பாராட்டுகளோடு நிறைவுசெய்கிறேன்...
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
அடேயப்பா என்னா ஸ்பீடு...
ReplyDelete//கொல்லைகொள்ளவும் // இதன் பெயர் தான் பின்னவீனதுவம் என்பதோ !!!
சரி எம்புட்டு டீலிங் :-)))
அண்ணே, நீங்க வாழ்த்துரை வாங்க எவ்வளவு டீலிங் பேசுநீங்கலோ, அத விட ஒரு ரூபாய் அதிகம்...
Deleteஇனிய வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா...
முன்னர் சீனுவின் ஒரு பதிவில் ஆவிப்பா... வாழ்த்துரையை படிக்கக் கிடைத்தது.. அப்போது நகைச்சுவைக்காக இருக்குமோ என்றெண்ணிவிட்டேன்..
ReplyDeleteஆனால் அது நிஜமாகியிருப்பது பாராட்டப்படக் கூடியது..
ஆவிக்கும் ஆவியின் ஆவிப்பாவை அழகாக அறிமுகப்படுத்திய நண்பனுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்
அண்ணே அது 'நாங்களும் இஞ்சினியர் தான்' புத்தகத்துக்கு எழுதிய கற்பனை வாழ்த்துரை .. இது ஆவியின் கற்பனைக் காதலிக்கு நிஜ வாழ்த்துரை :-)
Deleteயோவ் அப்போ இது அந்தாள்ர இரண்டாவது புத்தகமாய்யா...
Deleteநானும் கண்ணி முயற்சி என்னுட்டு ஓவரா புகழ்ந்துட்டேனே :(...
///கற்பனைக் காதலிக்கு///
ஏழு கழுதை வயசாமென்று கேள்விப்பட்டேனே... நஸ்ரியா ரேஞ்சுக்கு கேக்குதோ :P :)
அய்யய்யோ ஆவி எழுதினது எல்லாமே புத்தகம் தான்..! ஆவிப்பா பேப்பர் வடிவத்திற்கு வந்திருக்கும் முதல் புத்தகம் என்பதில் கன்னி முயற்சி அவ்வளவே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)))))
Deleteஅதாவது ஆத்மா சிட்டுக்குருவி அண்ணா...
Deleteஅன்று கற்பனையா சீனு வாழ்த்துரை எழுதுனாங்க. அதில் மனம் கவரப்பட்ட ஆவி அண்ணா சீனுவிற்கே வாழ்த்துரை எழுதும் அறிய வாய்ப்பை வழங்கிவிட்டார்...
அவ்வளவே....
ஆதமா அண்ணே... கண்ணி இல்ல. கன்னி...!
Deleteமன்னிக்கனும் சீனு...
Deleteஆவி தளத்துக்கு இன்னும் போகவேயில்ல... இனிமேல்தான் போகனும்..
கண்ணி என்றா என்ன கன்னி என்றா என்ன எல்லாம் நமக்கு ஒன்னுதானே :)
நன்றி வெற்றி பாஸ்
உங்களையும் முன்னுதாரணமாக கொண்டு சிலர் இருக்கக்கூடும், இதனைப் படித்து தவறாக சொல்லை சரியென்று பொருள் கொள்ளக் கூடாது அண்ணா. அதனால் தான், சரி செய்தேன் அண்ணா. தாங்கள் கண்ணி என்று எழுதியைப் பார்த்தபின் நானே, நான் தவறாக எழுதி உள்ளேனா என்று சந்தேகம் வந்துவிட்டது. ஆதலால் தான் குறிப்பிட்டுக் காட்டினேன். தவறாக கொள்ள வேண்டாம்...
Deleteஅட...! குறள்... என்னே சுவை...!
ReplyDeleteஆனந்த விஜயராகவன் அவர்கள் மென்மேலும் சிறக்க (காதலிக்க...!) வாழ்த்துக்கள்...
வணக்கம் அண்ணா...
Deleteஏழு கழுத வயசாகியும் காதலிக்கவே சொல்லுறீங்களே! கல்யாணம் பண்ண வாழ்த்துங்க அண்ணா...
தங்கள் இனிய வருகைக்கும், கவிதைக்கும் மிக்க நன்றி...
இனிய வாழ்த்து..
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வணக்கம் வேதாம்மா...
Deleteதங்கள் வாழ்த்துகளை தெரியப்படுத்தி விடுகிறேன். நன்றி...
ReplyDeleteஎன் இனிய வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் .மிக்க
மகிழ்ச்சி சகோதரரே .
வணக்கம் சகோதரி...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி... தங்கள் வாழ்த்துகளை, தெரியப்படுத்தி விடுகிறேன்...
வணக்கம்
ReplyDeleteதம்பி.
ஆவியப்பா (அண்ணாவின்) கன்னி நூல் பற்றி தங்களின் விமர்சனம் சிறப்பாக உள்ளது. மேலும் பல நூல்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி... தங்கள் வாழ்த்துகளை, தெரியப்படுத்தி விடுகிறேன்...
நன்றி..
வாழ்துக்கள்
ReplyDeleteவணக்கம்...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி... தங்கள் வாழ்த்துகளை, தெரியப்படுத்தி விடுகிறேன்...
நன்றி..
கோவை ஆவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி... தங்கள் வாழ்த்துகளை, தெரியப்படுத்தி விடுகிறேன்...
நன்றி..
நண்பர் கோவை ஆவிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி... தங்கள் வாழ்த்துகளை, தெரியப்படுத்தி விடுகிறேன்...
நன்றி..
ஆஹா , திண்டுக்கல் தனபாலன் சாருக்கு போட்டியா? இவ்வளவு சீக்கிரமா விமர்சனப் பதிவு... :) என்ன ஒரு வருத்தம்னா இவ்வளவு கவிதைகள் எழுதி அதில் ஒன்றைக் கூட நஸ் ரியாக்கு அனுப்பலை போல இருக்கே...
ReplyDeleteநஸ்ரியாவுக்கு அனுப்புனா, பாசில் சண்டைக்கு வந்துடமாட்டாரா????
Deleteஅதான் அனுப்பலன்னு இருக்கேன்...
நீண்ட நாள் கழித்து இந்த பக்கம் வந்துருக்குறதுக்கு நன்றி அக்கா....
நல்ல விமர்சனம் வெற்றிவேல். நான் இன்னும் படிக்கவில்லை. வரும் 15-ஆம் தேதி தான் புத்தகம் கிடைக்கும் எனக்கு....
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteவாய்ப்பு கிடைக்கையில் வாசித்துப் பாருங்கள். நன்றி அண்ணா...
வாழ்த்தும் பாராட்டும்!
ReplyDeleteவணக்கம் அய்யா...
Deleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...