Oct 21, 2013

தமிழக வரலாற்றில் களப்பிரர்கள் காலம் மட்டும் இருண்ட காலமானதேன்?

களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், களப்பிரர்கள் எனப்படுபவர்கள் என்பவர்கள் யார்? என்பது பற்றியும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற இலக்கிய மாற்றங்கள் மற்றும் தமிழ் எழுத்துரு மாற்றம் பற்றியும் கடந்த மூன்று பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் களப்பிரர்கள் காலம் மட்டும் ஏன் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனப்படுகிறது என்பது பற்றி விரிவாக அறிய முற்படுவோம்...

கி.பி மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் நடைபெற்ற தமிழக அரசியல் மாற்றம் மற்றும் மதப் போர்கள் பற்றி அறிய முற்படும் போது களப்பிரர்கள் பற்றியும் தானாக அறிந்து கொள்ளலாம். அதாவது களப்பிரர்கள் பற்றி வரலாற்று அறிஞர்கள் இருண்ட காலம் என கூற இரண்டு காரணங்கள்...
  1. களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறாததால்
  2. சைவ ஆராய்ச்சியாளர்கள் களப்பிரர் காலத்தில் வைதீக மதம் (ஆரிய மதம்) முடங்கிக் கிடந்த காரணத்தால் அப்படி குறிப்பிடுவர்.
ஆனால் மயிலை சீனி.வேங்கட சாமி அவர்கள் எழுதியுள்ள களப்பிரர்கள் காலத்தில் தமிழகம் என்ற நூலில் சுமார் 69 நூல்களில் இருந்து 175 பக்கங்களில் களப்பிரர்கள் பற்றி தகுந்த விளக்கத்துடன் இருண்ட காலத்திற்கு ஒளியூட்டியுள்ளார்...  நான் இன்னும் வாசிக்கவில்லை இந்த புத்தகத்தை, நண்பர்கள் யாரேனும் கிடைத்தால் கொடுக்கவும்.

தற்பொழுது நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் எல்லாம் கல்வெட்டுகள், அக்கால இலக்கியங்கள், கோயில் செப்பேடுகள் ஆகியவற்றின் மூலமே கிடைக்கப் பெறுகிறது. அதிலும் அக்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகள் எல்லாம் கோயில் நிலம் சம்பந்தப் பட்டதாகவும், நில அதிகாரம் வழங்குதல் போன்றவைகளே அதிகம். களப்பிரர்கள் காலத்தில் அவர்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் எந்தவொரு பிரமாண்ட கோயில்களும் கட்டப்படவில்லை. அப்படிக் கட்டப்பட்ட கோயில்களும் பிற்காலத்தில் சைவக் கோயில்களாக மாற்றப்பட்டது. ஆதாலால் அவர்கள் பற்றிய தகவல்கள் மற்ற ஆட்சியாளர்களை விட குறைவாகவே கிடைக்கப்பெறுகிறது.

முடுங்குடுமி பெருவாளிடி என்ற பாண்டியன் பிராமணர்களுக்கு வேள்விக்குடி என்ற கிராமத்தை தானமாக அளித்துள்ளான். அங்கு நீண்ட காலம் பிராமணர்கள் அனுபவித்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் காளி என்ற களப்பிர மன்னன் அதனை திரும்ப பெற்றுக்கொண்டான். இது சிறு ஆதாரம் மட்டுமே. இந்த தகவல் நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனின் கல்வெட்டில் உள்ளது. இது உதாரணம் மட்டுமே. களப்பிரர்கள் பிராமணர்கள் ஏதும் செய்யாமல் அனுபவித்து வந்த சலுகைகளை பறித்து பாமர மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதுவே பின்னர் களப்பிரர்கள் மீது சைவர்களுக்கு பெரும் விரோதமாக மாறியது.

பலர் குறிப்பிடுகின்றனர், அதாவது தமிழர்கள் அனைவரும் சேர்ந்து களப்பிரர்களை அழித்து, அவர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மொத்தமாக அழித்தனர் என்று குறிப்பிடுகின்றனர். இது முற்றிலும் தவறு. வரலாற்றை கொஞ்சம் நன்றாக கூர்ந்து ஆராய்ந்தால் சில உண்மைகளை புரிந்துகொள்ளலாம். அதாவது அப்பொழுது நடந்த சண்டை களப்பிரர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த சண்டை அன்று. அது சைவத்திற்கும் சமணத்திற்கும் நடந்த சண்டை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது தமிழகத்தில் பக்தி இலக்கிய காலம் என்பது  கி.பி. 700 முதல் கி.பி.900. இக்கலாத்திற்கு முன்பும் இக்காலமும் தான் சமணத்திற்கும் சைவத்திற்கும் நடந்த மதப்போர் உச்ச கட்டத்தை அடைந்தது. சைவத்திற்கும் சமணத்திற்கும் நடந்த போரில் சமணம் தோற்கடிக்கப்பட்ட வேளையில் சமணர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர், அதாவது அவர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர்.  கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் சார்ந்த தடயங்கள், ஆதாரங்கள அனைத்தும் காழ்ப்புணர்ச்சி காரணமாக அழிக்கப்பட்டது. அதனால் தான் களப்பிரர்கள் பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைக்கபெருகிறது. அதாவது சமணர்களை, சமணர்களின் ஆட்சியை  புறந்தள்ள வரலாற்றை மாற்றி திரிக்கப்பட்ட தகவலே அது. அதே காலகட்டத்தில் நடந்தது தான், சைவத்திற்கும் சமணத்திற்கும் ஏற்ப்பட்ட மதப் போர் மற்றும் களப்பிரர்களுக்கும் பாண்டியன் கொடுங்கன் பாண்டியனுக்கும் நடந்த போர். இரண்டின் நோக்கமும் வேறு வேறு. ஆனால் பிற்காலத்தில் தமிழர்களால் மொத்தமாக களப்பிரர்கள் அழிக்கப்பட்டு விட்டனர் என்று திரித்துவிட்டனர் சைவ சமய ஆராய்ச்சியாளர்கள்.

அக்காலத்தில் வைதீகம் (ஆரியம்) வழக்கற்றுக் கிடக்க சில காரணங்கள் வரலாற்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது. அதாவது...

  1. வைதீகர்கள் கொலை வேள்வியை செய்தனர்...
  2. பிராமணர்களால் உயர்வு தாழ்வு பாராட்டப்பட்டது, தாங்கள் மட்டுமே உயர்ந்தவர் என்றும், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கூறினர்.
  3. அவர்கள் வேதத்தை அவர்கள் மட்டுமே படிக்க வேண்டும், மற்றவர்கள் படிக்கக்கூடாது.
  4. பிராமணர்களுக்கு சுவர்ண தானம், ஷேத்திர (நிலம்) தானம், கோ (பசு) தானம், மகிஷ தானம் அஸ்வ தானம், கஜ தானம், பார்யாதானம், கன்னியா தானம் முதலியவற்றை பெறுவதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர்,
  5. மாறாக சமணர்கள் மற்றும் பவுத்தர்கள் மக்களுக்கு சாஸ்திரம், கல்வி, மருத்துவம் போன்ற உதவிகளை செய்தனர். 
இக்காரணங்களால் அக்காலத்தில் வைதீக மதம் பொது மக்களால் போற்றப்படவில்லை. இது அனைத்தும் உச்ச கட்டமாக நடந்தது களப்பிரர்கள் காலத்தில் தான். களப்பிரர்கள் காலத்தில் வைதீகம் மொத்தமாக வழக்கற்று அழியும் தருவாயில் சென்று விட்டது. இக்காரணங்களால் தான் இக்கால சைவ/ பிராமண ஆராய்ச்சியாளர்கள் மொத்தமாக களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் என்று ஒற்றை வரியில் கூறிச் சென்றுவிட்டனர். 

அழியும் நிலைக்கு சென்றுவிட்ட வைதீக மதம் எப்படி இந்து மதமாக பிரமாண்ட வளர்ச்சி பெற்றது என்ற கேள்வி ஏற்ப்படுவது இயல்பு. அதைப் பற்றி நாம் வரும் காலங்களில் அறிய முயலுவோம்...

உசாத்துணைகள்...
  1. மு. வரதராசனின் தமிழ் இலக்கியம்- தமிழ் இலக்கிய கால வகைப்பாடு.
  2. மயிலை சீனி.வேங்கடசாமியின் சமணமும் தமிழும் பக்கம்-93
  3. Kalabhras dynasty
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

களப்பிரர்கள் பற்றிய பிற பதிவுகள்...

மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்

இருண்டகால தேடல்: யார் இந்த களப்பிரர்கள்?

இருண்ட கால தேடல்: களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்


தங்கள் கருத்துகளை மறக்காமல் கூறிவிட்டுச் செல்லுங்கள். ஏதேனும் தவறு இருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள்...

54 comments:

  1. பல அரிய தகவல்கள் கால வெள்ளத்தால் அழிந்து விட்டது... இருக்கிறதை வைத்து ஆராய்ச்சி தொடர்கிறது... தொடர்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      உண்மைதான், பல தகவல்கள் அழிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் விட்டது...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  2. த.ம. 3.. வரலாற்றை படிக்கும் போது தான் பல உண்மைகள் வெளிவருகிறது. சமயம் சார்ந்திருக்கிறபடியால் என் பின்னூட்டத்தை இத்தோட நிறுத்திக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  3. அருமையான முயற்சி தொடர்க

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....

      Delete
  4. அடபாவிகளா வரலாற்றையே மாற்றியிருக்கிறார்களே தமிழனுக்கு பல நன்மை புரிந்த களப்பிரர்களை எதிரியாகவும் சித்தரித்து பிராமணர்களின் கொடுமைக்கு அளவே இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      வரலாறு அப்படித்தான், மாறிக்கொண்டே மாற்றிக்கொண்டே இருக்கும்... நாம் தான் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்...

      Delete
  5. அடபாவிகளா வரலாற்றையே மாற்றியிருக்கிறார்களே தமிழனுக்கு பல நன்மை புரிந்த களப்பிரர்களை எதிரியாகவும் சித்தரித்து பிராமணர்களின் கொடுமைக்கு அளவே இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி...

      Delete
  6. இவ்வளவு ஆராச்சியா? பாராட்டுக்கள் வெற்றிவேல்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா... தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  7. நல்லதொரு வரலாற்று கட்டுரை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. மிக நல்ல பகிர்வு நண்பரே ..நல்ல அலசல் ..பல செய்திகளை தெரிந்து கொண்டேன் உங்கள் பகிர்வில் ..நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  9. வணக்கம் நண்பரே!
    பயனுள்ள நல்லதொரு பகிர்வை வழங்கியமைக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள். மறைக்கப்ப்ட்ட வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. தங்களது தளம் அருமை. இணைந்தும் விட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      என் தளத்தோடு தாங்கள் இணைந்து கொன்டதில் மிக்க மகிழ்ச்சி... தங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி..

      Delete
  10. தொடரட்டும் ஆராட்சி. வாழ்த்துக்கள் தம்பி. எல்லோராலும் இது முடியாது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  11. தொடரட்டும் ஆராட்சி. வாழ்த்துக்கள் தம்பி. எல்லோராலும் இது முடியாது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  12. பாராட்டுக்கள் வெற்றி வேல்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்5:57:00 PM

    உசாத்துணைகள் தருவது சிறப்பு.
    ஒரே தகவல் சுழன்று கொண்டிருப்பது பிரச்சினை. ஏனென்றால் விக்கிப்பீடியா தளத்தில் உங்களைப் போன்றோர் எழுதுவதை உசாத்துணையாகக் கொள்வது. :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது அந்த முது குடுமிப் பெருவழுதி தகவல் மட்டுமே... அதுவும் பார்த்து சரி செய்தபிறகே அந்த தகவலை சொன்னேன்... எந்த தகவல்களையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது அல்லவா...!

      Delete
    2. உங்களைப் போன்றோர் எழுதுவதை உசாத்துணையாகக் கொள்வது...

      எங்களைப் போன்றோர் கூறியதை ஏன் உசாத்துணையாக எடுத்துக்கொள்ளக் கூடாது நண்பா... அதில் என்ன தவறு இருக்கப் போகிறது. யார் கூறினால் என்ன, உண்மையும் அதற்குரிய சான்றும் இருந்தால் போதாதா???

      Delete
  15. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்6:04:00 PM

    //சைவ ஆராய்ச்சியாளர்கள் களப்பிரர் காலத்தில் வைதீக மதம் (ஆரிய மதம்) முடங்கிக் கிடந்த காரணத்தால் அப்படி குறிப்பிடுவர்.//

    வைதீகம் (வைணவம்?) முடங்கினால் சைவர்க்கு மகிழ்ச்சிதானே? எதற்கு இருண்ட காலம் என்று சொல்லவேண்டும்?

    அக்காலத்தில் 'இந்து' மதம் இருந்ததில்லை. சைவமும் வைணவமும்தான் இருந்தது. பின்னரே அவை புராணங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு இந்து மதம் தோன்றியது. சைவ மதம் ஆகம நெறிகளையும், வைணவ மதம் வேத நெறிகளையும் பின்பற்றின. பின்னர் ஏற்பட்ட கூட்டணியில் அவே வேதாகமமாக உருப்பெற்றன.

    இல்லாவிட்டால் இறைவனுக்கு உள்ளே 'அபிசேகமும்' வெளியே யாகம் வளர்ப்பதும் வந்திருக்காது.

    ReplyDelete
    Replies
    1. வைதீகம் (வைணவம்?) முடங்கினால் சைவர்க்கு மகிழ்ச்சிதானே? எதற்கு இருண்ட காலம் என்று சொல்லவேண்டும்?///////////////////////////

      அதாவது வைதீகம் முடங்கிக்கிடந்தால் அக்காலத்தில் அதாவது கி.பி. 1000 க்கு முன் சைவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்ப்பட்டிருக்கும்.

      ஆனால் வைதீகம் முடங்கிக் கிடந்த காலத்தை எப்படி வைணவமும் சமணமும் கலந்த இந்து சமய ஆராய்ச்சியாளர்கள் (இக்கால) எப்படி ஏற்றுக்கொள்வர்???

      Delete
    2. அக்காலத்தில் 'இந்து' மதம் இருந்ததில்லை. சைவமும் வைணவமும்தான் இருந்தது. பின்னரே அவை புராணங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு இந்து மதம் தோன்றியது. சைவ மதம் ஆகம நெறிகளையும், வைணவ மதம் வேத நெறிகளையும் பின்பற்றின. பின்னர் ஏற்பட்ட கூட்டணியில் அவே வேதாகமமாக உருப்பெற்றன.

      இல்லாவிட்டால் இறைவனுக்கு உள்ளே 'அபிசேகமும்' வெளியே யாகம் வளர்ப்பதும் வந்திருக்காது.////////////////////////////////////////////////////

      தகவல்களுக்கு மிக்க நன்றி...

      Delete
  16. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்6:09:00 PM

    // களப்பிரர்கள் காலத்தில் அவர்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் எந்தவொரு பிரமாண்ட கோயில்களும் கட்டப்படவில்லை. அப்படிக் கட்டப்பட்ட கோயில்களும் பிற்காலத்தில் சைவக் கோயில்களாக மாற்றப்பட்டது. //

    களப்பிரர்கள் காலத்தில் அவர்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் எந்தவொரு பிரமாண்ட கோயில்களும் கட்டப்பட்டதாக அறியப்படவில்லை. அப்படியேக் கட்டப்பட்டிருந்தாலும், அக்கோயில்களும் பிற்காலத்தில் சைவக் கோயில்களாக மாற்றப்பட்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...

      திருத்தத்திற்கு நன்றி...

      Delete
  17. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்6:19:00 PM

    //முடுங்குடுமி பெருவாளிடி //

    வாளி ஒரு 20 லிட்டர் கொள்ளுமா?

    அவர் முதுகுடுமிப் பெருவழுதி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. நன்மாறன் அய்யா...

      நான் ஆங்கில புத்தகத்திலிருந்து தகவல் எடுத்தேன், ஆதலால் தான் அப்படியே பெருவாளிடி என்று குறிப்பிட்டேன்...

      சரியான பெயரை குறிப்பிட்டுக் கூறியமைக்கு மிக்க நன்றி...

      Delete
  18. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்6:40:00 PM

    //வைதீகர்கள் கொலை வேள்வியை செய்தனர்...//

    பில்லி சூனியம் மாதிரி ஏதாவதா?

    //பிராமணர்களுக்கு சுவர்ண தானம், ஷேத்திர (நிலம்) தானம், கோ (பசு) தானம், மகிஷ தானம் அஸ்வ தானம், கஜ தானம், பார்யாதானம், கன்னியா தானம் முதலியவற்றை பெறுவதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர்,//

    பார்யாதானம்? அட்டகாசம்!
    எந்த சர்வீஸ்க்காக இவ்வளவு பீஸ் கொடுக்கணும்னு தெரியலையே!

    ReplyDelete
    Replies
    1. எந்த சர்வீஸ்க்கு என்று அவர்களுக்குத் தான் தெரியும்? யார் கண்டது.

      Delete
  19. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்7:14:00 PM

    இடுகையின் கருத்துகள் முன்பின் இருந்தாலும் இது போன்ற கட்டுரைகள் வலையுலகிற்கு வருவது அரிதே. சிந்தனையைத் தூண்டும் முயற்சிக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. கடைசியாக என் முயற்ச்சியை பாராட்டிவிட்டீர்கள் நன்மாறன்,

      மிக்க நன்றி... சில தகவல்களை கணினியில் உள்ளீடு செய்யும் போது சில பிழைகள், சொற்றொடர் மாறுபாடுகள் தவிர்க்க இயலவில்லை. தாங்கள் அதனை சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

      மிக்க நன்றி...

      உங்கள் வாயிலாக பல தகவல்களை அறிந்துகொண்டேன்... நன்றி.

      Delete
  20. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்7:26:00 PM

    சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கௌமாரம் இவையெல்லாம் தாண்டி ஆசிவகம் என்றொரு மதமும் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி...

      புலவர்.கோ.தேவராஜன் அவர்கள் மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதிய புத்தகத்திற்கு எழுதிய பதிப்புரையில் சமணம், பௌத்தம், ஆசிவகம், வைதீகம் இவற்றோடு வட நாட்டோடு முற்றிலும் தொடர்பற்ற தமிழர் மதமும் இருந்ததாக ஐந்து மதங்களைக் குறிப்பிடுகிறார்...

      Delete
  21. மதத்தால் வரலாற்றை இழப்பது கொடுமையானது...இருக்கும் தகவல்களை ஆராய்ந்து அழகாக பதிவு செய்ததற்கு நன்றி வெற்றிவேல்! வாழ்த்துகள்! பல ஊர்களுக்கும் சென்றீர்களா? கல்வெட்டுகளைப் பார்த்தீர்களா? வரலாற்றை அறிந்துகொள்வதில் உள்ள ஆர்வத்தால் மனம் மகிழ்ந்து அறிந்துகொள்ளவே கேட்கிறேன்..வேறொன்றுமில்லை.. :)
    எனக்கும் அப்படிச் சில இடங்களுக்குச் சென்று பார்க்க ஆசை,,எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை.
    உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கிரேஸ்,

      முற்றிலும் உண்மையே, மதத்தின் பெயரால் நாம் நமது வரலாற்றை இழந்து கொண்டிருக்கிறோம்.

      இல்லை, இன்னும் எங்கும் செல்ல ஆரம்பிக்கவில்லை. தற்பொழுது வேலை ஏதும் இல்லை. தேடிக்கொண்டிருக்கிறேன். பணி கிடைத்த பிறகுதான் பல ஊர்களுக்கு சென்று கல்வெட்டுகள் பற்றி தேடவேண்டும்... இப்போது புத்தகங்களில் மட்டுமே படித்துக்கொண்டிருக்கிறேன்...

      தங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும், வாழ்த்துகள்... நிறைவேறும் போது மறக்காமல் எனக்கும் தகவல் கொடுங்கள்...

      Delete
    2. வணக்கம் வெற்றிவேல்!
      பணி விரைவில் கிடைக்க வாழ்த்துகள்! உங்கள் வாழ்த்திற்கு நன்றி, கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன். உங்களுக்கும் இடமேதும் தெரிந்தால் சொல்லுங்கள், நன்றி!

      Delete
    3. வணக்கம் கிரேஸ்,

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      தெரியும் பட்சத்தில் தெரியப்படுத்துகிறேன்...

      Delete
  22. வணக்கம் வெற்றிவேல் இருண்ட கால தேடலில் உலகத் தமிழர்களுக்கு வரலாற்றை ஆய்வு செய்து வரலாற்று உண்மைகளை மிக அழகாக ஆதாரங்களுடன் தெளிவாகச் சொல்லியிருப்பது உலகத்தமிழர்கள் மனதில் நிற்கிறீர்கள் வாழ்த்துக்கள் வெற்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தமிழ் பிரியன்...

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...

      Delete
  23. மிகச் சிறந்த பதிவு வாழ்துக்கள்... தாங்கள் கூறியது போல களப்பிரர்கள் காலம் வைதீக சமயத்திற்க்கும், பிராமணர்களுக்குமே இருண்ட காலம்... தமில் மொழிக்கு அல்ல.

    கொல்லாமை, புலால் உண்ணாமை, பொய்யாமை, யாவரும் ஓரினம் இவற்றையே தங்கள் கொள்கையாக கொண்டவர்கள் அவர்கள்.. ஆனால் அவர்கள் ஆதரித்த மதம் முதலில் புத்தமாகவும் பின்னர் சமணமாகவும் இருந்ததால் சைவ மதம் தலைத்தோங்கி இருந்த தமிழக மக்களுடன் அவர்களால் சரியாக கலக்க இயலவில்லை... மக்களுக்கும் அரசுக்கும் மிக பெரிய இடைவெளியை இதுவே உருவாக்கியது.. இவர்களின் காலத்தில் நடைபெற்ற கடை சங்கத்தின் அழிவு வரலாறு மன்னிக்கவே முடியாத மாபெரும் விடயமாக பதிந்து விட்டது...

    திருப்புகழுர் கல்வெட்டிலும் இன்னும் சில பட்டயங்களிலும் சரவன பெலகொலே விலும் இவரகளைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாக கேள்வி.
    நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலை நான் இப்பொழுது வாசித்துக் கொண்டுள்ளேன்.. எங்கள் பகுதி நூலகத்தில் கிடைத்தது.. நீங்களும் முடிந்தால் நூலகத்தில் தேடிப் பாருங்கள்...

    ReplyDelete
  24. வெறுமனே கொடுத்த நிலத்தை திரும்ப வாங்கிக்கொண்டது மற்றும் தானங்களை நிறுத்தியது கொண்டு மட்டும் பார்பனர்களுக்கு எதிரானவர்கள் என சொல்லிவிடமுடியாது காரணம் அதே போன்றவை பின்பும் நடந்துள்ளது.

    கேரள அரசரான மார்த்தாண்டவர்மா நம்பூரிதிகளை பிடிக்காமல் துரத்திவிட்டு பின்பு துளு பிராமணர்களை கொண்டு வந்து குடியேற்றினார். இப்போது அதைக்கொண்டு என்ன சொல்ல முடியும்?

    வள்ளுவர் தெளிவாக சொல்லிவிடுகிறார்,

    அறத்திற்கும் அந்தணர் நூற்கும் ஆதியாய்
    நிற்பது மன்னவன் கோல்.

    ஆக மன்னவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பார்பனர்கள் ஏதும் செய்ய இயலாது. இந்த நிலையை மாற்ற கெஞ்சி எழுதப்பட்டது தான் மனுஸ்மிருதி. அம்பேத்கர் எழுதிய மனுஸ்மிருதி நூலிருந்தால் படித்து பாருங்கள்.

    ஒரு மன்னன் ஒரு பார்ப்பானுக்கு கொடுத்த நிலத்தை திருப்பி பெற்றுக்கொண்டான் என்பதில் இருந்து மட்டும் ஏதும் கற்பனை செய்ய இயலாது. ஒரு கோஷ்டியை தள்ளிவிட்டு இன்னோர் கோஷ்டியை கொண்டு வந்து வைத்திருக்கலாம். பார்பனர்களை வானளவு உயர்த்தி எழுதியவை எல்லாம் ஆங்கிலேய கால்டுவெல் ஆலும் பின்னர் ஜியு போப் ஆலும் எழுதப்பட்டவை. ஒரு சாதியை உயர்த்தி பேசினால் அந்த சாதிக்கு கசக்குமா என்ன?

    சமண -சைவ சண்டை சோழர்கள் ஆட்சியிலும் தொடர்ந்தது. சைவ சித்தாந்தம் வலுவாக நிறுவப்பட்ட கிபி 1000க்களுக்கு அப்புறமே இது நின்றது.

    சமணர்கள் ஏதோ நல்லவர்கள் போல் சித்தரித்து சைவர்கள் கொடூரமாக அவர்களை கொன்றார்கள் என எழுதியுள்ளீர்கள். சமணர்களின் கொடுமைகள் அநேக இடங்களில் பதியப்பட்டுள்ளன. அவற்றையும் கொஞ்சம் படித்து பாருங்கள்.

    ReplyDelete
  25. ///சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கௌமாரம் இவையெல்லாம் தாண்டி ஆசிவகம் என்றொரு மதமும் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது.///


    தமிழர்களின் ஆசீவகத்திலிருந்து தான் சமணமும், பெளத்தமும் உருவாகியதெனவும் கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டிலிருந்து சமணம் வடக்குப் பரவியதே அல்லாமல் சமணம் தமிழ் நாட்டுக்கு வெளியே இருந்து வரவில்லை. சமணம் தமிழ்நாட்டில் உருவாகிய தமிழர்களின் மதம்.

    http://www.youtube.com/watch?v=M9Ch8oQOl7M


    தமிழ்ச் சமணர்களின் ‘சமண வெள்ளைக்குளம்” > சரவனபெலகொலே வாக மாறி விட்டது.

    சரவன பெலகொலே வில் வாழ்ந்தவர்கள் தமிழ்ச் சமணர்கள்

    சமணம் > *சிரமணம் > சரவன (இந்தோ ஆரியர்களால் சமணம் சிரமணம் என உச்சசரிக்கப்பட்டடது. (Eg. R sound is dominating in German language)

    வெள்ளை (தமிழ்) >பெல்லே (Belle-Kannada) > Bele பெல

    குளம் (Kulam) > கொளம் >கோலம் (kannada) > கொலா(லே)

    சமணவெள்ளைக்குளம் > சரவனபெலகொலே


    ReplyDelete
  26. Anonymous3:05:00 AM

    Good r bad right r wrong u lead to. A healthy discussion

    ReplyDelete
  27. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

    வலைச்சர தள இணைப்பு : கடந்து சென்ற காலங்கள்

    ReplyDelete
  28. மாயாவினோதப்பரதேசி2:08:00 PM

    பதிவிடுவதற்கு முன் மயிலை சீனி வேங்கடசாமியின் நூலைப் படித்துவிட்டுப் பதிவிட்டிருக்கலாம்.
    சோழர்களும் பாண்டியர்களும் அக்காலத்தில் செல்வாக்கிழந்து போய் விடவில்லை. இலங்கையில் பாண்டியர்களும் இரேணாட்டில் சோழர்களும் பல வெற்றிகளை அடைந்துள்ளனர். பிறநாட்டில் வெற்றிக்கொடி நாட்டுமளவுக்குத் தமிழ் அரசர்கள் இருந்த காலத்தில் களப்பிரர்கள் எங்கு ஆண்டார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வரலாறு என்பது ஆதாரங்களின் அடிப்படையில் அமையவேண்டும். ஊகத்தின் பேரிலும் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலும் சொல்லப்படுவது வரலாறல்ல..

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...