Oct 17, 2013

உதிரும் நான் -22

என்றோ வந்தவள்
என் மனவாசலில்
புள்ளி வைத்துச்
சென்றுவிட்டாள்...

நான் இன்னமும்
கோலமிட்டு வண்ணம் தீட்டிக் 
காத்துக்கொண்டிருக்கிறேன்
அவள் வருகைக்காய்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


30 comments:

  1. ரசிக்க விரைவில் வருவார்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      நானும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன்...

      Delete
  2. திபாவளி சிறப்புப் பகிர்வோ ?..வாழ்த்துக்கள் சகோ
    தீபத் திருத்தாய் வரவால் உங்கள் இல்லமே ஒளி வெள்ளத்தில்
    தவளட்டும் .

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி சிறப்புப் பகிர்வெல்லாம் இல்லை... அது பிறகு வரும்...

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அக்கா... அவள் வருகையால் வருகையால் விரைவில் ஒளி வெள்ளத்தில் தவழட்டும்...

      Delete
  3. கோலம் மறைவதற்குள் சட்டு புட்டுன்னு சொல்லிருங்க...

    ReplyDelete
    Replies
    1. சரிங்க பாஸ்...

      வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. புள்ளிவைத்துத் தள்ளிச் சென்றுவிட்ட
    கள்ளியைக் கண்டு உள்ள(த்)தைச் சொல்லிவிடுங்கள்..:)

    அழகிய படமும் அருமைக் கவியும்!
    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா...

      தங்கள் வாழ்த்துகளுக்கும், தமிழ் மன வாக்கிற்கும் மிக்க நன்றி...

      Delete
  5. Anonymous6:35:00 PM

    வணக்கம்
    தம்பி

    கவிதையின் வரிகள் மனதை தொட்ட வரிகள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  6. Anonymous7:01:00 PM

    ''...நான் இன்னமும்

    கோலமிட்டு வண்ணம் தீட்டி...''''
    காத்திருப்பதும் காதலில் சுகமாம்...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா...

      அதிலும் சுகம் தான்... தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. கலக்கல் வரிகள்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. வண்ணக் கோலத்துடன் காத்திருக்கும் காதல்..அருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கிரேஸ்...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  9. வருங்கால மனைவி கோலம போட வேண்டிய வேலையில்லைன்னு சொல்லு.

    **********
    கவிதை நன்று வெற்றிவேல்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      கோலம் போடற வேலை இல்லையா??? இதுவும் நல்லாருக்கே...

      Delete
  10. அள்ளி முடித்த கொண்டையாள்
    புள்ளி வைத்துப் போனாளோ...

    இனிக்கிறது கவிதை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      கவிதை இனிக்கிறதா??? மகிழ்ச்சிஅண்ணா.

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா....

      Delete
  11. ஏக்கமும் தீரும் ஏந்தலை வருவாள் கவலை வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. நானும் அந்த நம்பிக்கையில் தான் உள்ளேன் அண்ணா....

      இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி...

      Delete
  12. புள்ளி வைத்தவளை
    எண்ணி எண்ணிக் காத்திருப்பதிலும்
    சுகமிருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா... உண்மைதான்.

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்...


      Delete
  13. காத்திருப்பதும் காக்க வைப்பதும் காதல் விளையாட்டு தொடரட்டும் இனிமை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      காதல் விளையாட்டா!!! நல்லது.

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாங்க...

      Delete
  14. அன்பின் வெற்றி வேல் - காதலில் காத்திருத்தலே பரம சுகம் - காத்திருத்தலின் முடிவே வெற்றிதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...

      Delete
  15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா...
      மகிழ்ச்சி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...