Jul 1, 2012

ஒளவையாரையும் கிறங்கடித்தக் காதல்

நண்பர்களை மீண்டும் இரவின் புன்னகை வழியாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எப்பொழுதுமே நான் மாலை நேரத்தில் எங்கள் கிராமத்தின் எரி, சிறு நீரோடை வழியாக நடந்து செல்வேன். பகல் முழுவதும் சாத்திய வீட்டினுள்ளே அடைப்பட்டு இருப்பதால் மாலை நேர இந்த நடைப் பயணம் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும்  அளிக்கும். வற்றிப் போய் காய்ந்து போன எரி, அதன் மேலே பறந்து வந்து தழுவும் இதமானத் தென்றல், மாலை நேரக் குறைந்த வெளிச்சம், கத்தும் கோட்டான், பழமையான அரச மரத்தில் தங்கியிடுக்கும் பச்சைக் கிளிகளின் அழகான குரல் என்னை எங்கேயோ கொண்டு சென்றது. மனம் லேசாக பறக்க ஆரம்பித்தது, அந்த நேரத்தில் மேற்கு தொடுவானில் சூரியன் மறைந்து கொண்டிருந்தான்.
அந்த மரங்களின் இடையில் சிவப்பு மாபந்து ஒன்று கீழே விழுவதைப் போன்று  இருந்தது. அந்தக் காட்சியை எனக்கு வர்ணிக்க இயலவில்லை... அப்பொழுது மனம் மகிழ்ச்சியில் உற்ச்சாகம் அடைந்தது.

இந்த மகிழ்ச்சியினூடே காதலும் மெல்ல என் மனத்தைக் கரைக்க ஆரம்பித்தது, எனக்கு எப்போதுமே காதல் என்றால் யவன ராணி நாவலில் வரும் அந்த அழகான காதல் தான் என் நினைவுக்கு வரும். நெடுஞ்செழியன், வேளிர் குலத்துப் பேரழகியான பூவழகி, ஆண்களை மயக்கும் நீல மணிக்  கண்களை உடைய அந்த கிரேக்க நாட்டு ராணி (யவன ராணி- யவனம் என்றால் கிரேக்கம் என்று பொருள்). இந்த மூவரின் காதல் கதையே எனக்கு நினைவுக்கு வரும். பூவழகி மற்றும் யாவன ராணியின் ஒப்பில்லாதக் காதலில் அவன் படும் அழகானத் திண்டாட்டம், படைத்தலைவன் என்ற முறையில் அவனது கடமையின் இடையில் அவனது காதலை மிக அழகாகவே சாண்டில்யன் சொல்லியிருப்பார். என்ன ஒரு அழகான உவமைகள்.

அந்த வேளிர் குல மங்கையினால் இளஞ்செழியன் படும் பாட்டைப் போலவே நானும் ஒரு மங்கையினால் மனோமொடிந்துப் போய்க்கொண்டு இருக்கிறேன் என் கதை இப்பொழுது வேண்டாம் . நாம் இப்போது  விடயத்திற்கு வருவோம்.

இந்தக்  காதல் எப்போதுமே இப்படித்தான், கூலிக் காரனனாலும் சரி, அரசன் ஆனாலும் சரி யாரையும் விட்டு வைப்பதில்லை. சரி. 

எனக்கு இளைமையே வேண்டாம், முதுமையைக் கொடுத்து விடுங்கள் என்று கிழவியாகிப் போன ஔவையாரையும் இந்தக் காதல் விட்டு வைக்கவில்லை என்பதை நினைத்தால் தான் எனக்கு வியப்பாக இருக்கிறது. ஒளவையார் என்றாலே நமக்கு அவர் எழுதிய ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழிப் போன்றவைத்தான் நமக்கு நினைவில் வரும். ஆனால் அவர் எழுதிய சில பாடல்கள் உள்ள குறுந்தொகை எனும் பாடல்கள் அவ்வளவாக நினைவில் வராது.

தற்செயலாக நான் குறுந்தொகைப் படிக்க நேர்ந்தது. அதில் ஒளவையார்ப் பாட்டி எழுதிள்ள காதல் பாடல்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அப்பொழுதான் தெரிந்துக் கொண்டேன் அவர் உடல்தான் கூன்விழுந்து கிழப் பருவம் ஆகி விட்டதே தவிர அவர் மனமும் காதலால் தவித்தது என்பதைப் புரிந்து கொண்டேன்.

குறுந்தொகையில் மட்டும் ஒளவைப் பாட்டி மொத்தம் பதினைந்துப் பாடல்களைப் பாடியுள்ளார். அனைத்தும் அருமையான காதல் ரசம் பொழியும் பாடல்கள். யாருக்கும் இலக்கண நடையைப் புரிந்துகொள்வது கடினம் என்பதால் எளிய, என்னால் இயன்ற கவிதை நடையில் கூறுகிறேன்.

பாலை எனும் பதினைந்தாவதுப் பாடலில் தன் காதலை மிக அழகாக செவிலித் தாயிடம் பின் வருமாறுக் கூறுகிறாள்

செயிலை வெள் வேல் விடலையயொடு
தொகுவனை முன்கை மடந்தை நட்பே. 

ஆலமர நிழலில் பறை ஒலிக்கும் 
கொசகர்கள் வார்த்தை போல் உண்மையாகிவிட்டது,
கழலும் வெள்ளி வேல் அணிந்த வாளிபனோடு
இந்தப் பெண்ணின் நட்பு.

15. பாலை செவிலித்தாய் கூற்று.

தான்  காதல் கொண்டவற்றை மேற்க்கண்டவாறு கூறும் அந்த வாலிபப் பாட்டி. தன் தோழியுடன் கூறுகிறாள், அவள் பாடிய தன் காதலன் இருப்பிடத்தைப் பற்றி மேலும் மேலும் பாடக் கூறுகிறாள். இது காதல் வயப் பட்ட அனைவருக்கும் இயல்பு தானே, தன் காதலைப் பற்றி மேலும் மேலும் கூறக் கேட்பது. 
இன்னும் பாடுக பாட்டே அவர்
நல் நெடுங் குன்றம் பாடியப் பாட்டே

அகவன் மகளே 
நரைத்த கூந்தளுடைய அகவன் மகளே 
பாடு பாடு இன்னமும் பாடு
அவருடைய நல்ல உயரமான குன்றினைப்ப் பாடினாயே 
அந்தப் பாட்டை

24. குறிஞ்சி தோழிக் கூற்று

தன் காதல் நிலையை யாரிடமும் கூறஇயலாத நிலையை எண்ணி அவர் பின்வருமாறு மனம் வெதும்பிப் பாடுகிறாள். தன் நிலையை அறியாத ஊராரை எண்ணி மிகவும் வருத்தப் படுகிறாள் அந்தக் கிழவி.

முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்
ஓரேன, யானும் ஓர் பெற்றி மேலிட்டு,
உயவு  நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

முட்டிக்கொல்வேனா!
என்னை நானே தாக்கிக் கொள்வேனா!
அம்மா, ஆ, ஊ என்று அலறவா?
அவன்  நினைவால் 
இவல மெல்லிய இடையில்
என்  நோய் அறியாமல் 
தூங்கிக்கொண்டிருக்கும் 
இந்த ஊரை என்ன செய்ய!

28. பாலைக் தலைவிக் கூற்று

அவர் தன் காதலனுடன் எப்படி இருக்க ஆசைப் பட்டு இப்போது எப்படி துன்பப்படுகிறாள் என்பதை களிமண் பானை போல எனும் உவமையினால் கூறி தழுவிக் கொள்ள யாராவது கிடிக்க மாட்டார்களா எனக் கூறுவதை நீங்களும் கேளுங்களேன்... 

அகன உறத் தழீஇக் கேட்குநர்ப் பேரினே!

மழையில் நனையும்
களிமண்  பானை போல ஆசைப் பட்ட நெஞ்சே!
உன் ஆசை பாராட்டுக் கூறியதே...
ஓங்கிஉயர்ந்த மரக் கிளையில் 
தாய்க்  குரங்குப் போல 
உடலுடன் தழுவிக்கொள்ள
யாராவது கிடைக்க வேண்டும்..

29. குறிஞ்சி தலைவன் கூற்று

தன் காதலலானவன் தானைத் தழுவிட்டுச் சென்ற வழியையும், தன் காதலன் சென்ற வழியின் நிலையினையும்அழகாகவே கூறுகிறாள்.

அருஞ் சுரம் என்ப நம் 
முலையிடை முனிநர் சென்ற ஆறே.

கடும்  காற்று 
கடும் வெப்பம்
உலர்ந்தமரத்தினூடே சப்தமிடும் 
மழைப் பாங்கானது பாலை நிலம்
அந்த பாலை நிலம் தான்
என் மார்பின் மீது படுத்திருந்தவன்
சென்ற வழி..

39. பாலை தலைவிக் கூற்று

பதிப்பு ஏற்கெனவே மிகவும் நீண்டுவிட்டது என நினைக்கிறேன்  நண்பர்களே. இன்னும் இருக்கிறது மீதியினை அடுத்தப் பதிப்பில் காணலாம்...

தங்கள் கருத்துகளை மறக்காமல் கருத்துரையில் தழுவவிட்டுச் செல்லுங்கள். அது வரும் காலப் பதிவுகளை மெருகேற்ற மிகவும் வசதியாக இருக்கும்...
நன்றி நண்பர்களே அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.

12 comments:

  1. யவனராணி எனக்கும் மிகமிகப் பிடித்த நாவல். மறக்க இயலாத தமிழ் மூதாட்டி ஔவையாரின் பாடல்களைப் பாங்குறப் பகிர்ந்த விதம் நன்று. மிக ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே... தாங்கள் தொடர்ந்து வருகைதந்து கருத்துரையேற்று கேட்டுக்கொள்கிறேன்...

      Delete
  2. முழுவதுமாகப் படித்து விட்டேன். நல்லதொரு சேர்ப்பு.. எப்படியோ கடைசியில் ஔவையாரையும் அனுபவ புலவர் என்ற முடிவுக்கு வராமல் இருந்தால் சரி தான்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  3. நல்லதொரு பதிவு பாஸ்...
    எனக்கு இலக்கியம் பற்றி பெரிதாக தெரியாது ஆனால் உங்கள் பதிவுகளின் மூலம் இலகுவாக புரிந்து கொள்ளலாம் போலுள்ளது....!

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தமிழ் இலக்கியம் அது அல்ல அல்ல குறையாத தமிழ் அமுதம் நண்பரே...

      Delete
  4. நண்பரே, என்ன ஒரே அடியா இலக்கியத்துல புகுந்து விளையாடுறீங்க??என்னமோ போங்க.. இருந்தாலும் எல்லாம் அருமை. படிக்க படிக்க ஏதோ ஒரு மயக்கம்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அறிவியலில் புகுந்து விளையாடுகிறீர்கள், சிறிது காலம்ஒளவையாருடன் விளையாடலாம் என்று தான்...

      Delete
  5. அன்பின் வெற்றிவேல் - குறுந்தொகை படிக்கிறாயா - நன்று நன்று - பழந்தமிழ்ப் பாடல்கள் படிக்கும் பழக்கம் நன்று - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. குறுந்தொகை படித்திருக்கிறேன் அய்யா... எனக்கு மிகவும் பிடித்தது...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. காதலை வெளிப்படுத்தும் பாடல்களை அழகாகப் பாடியுள்ளார் ஔவையார் ,,அவரே காதல் வயப்பட்டுப் பாடினாரா :) இது எனக்குக் கொஞ்சம் புதிய பார்வையாக இருக்கிறது..
    பதினைந்தாவது பாடல் செவிலித்தாய் தலைவியின் தாயிடம் அவளுடைய மகளின் திருமணம் பற்றிப் பேசுவதாக அமைந்த பாடல் நண்பரே..நீங்கள் சொல்லியிருப்பது சற்று மாறுபாடாக இருக்கிறது...
    குறுந்தொகை படித்து மற்றவர் அறிந்திடப் பகிரும் உங்களுக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...