தலைப்பைப் பார்த்ததும் நண்பர்கள் நான் எங்கே சினிமா கதாநாயகர்களைப் பற்றி கூறப் போகிறேன் என்று நினைக்கவேண்டாம். இது நிச்சயம் அவர்களைப் பற்றி கூறப் போகும் பதிவு அல்ல. உலகை ஒரு கலக்கு கலக்கிய நபர்களைப் பற்றிய பதிவுதான் இது. ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என யாரும் இதுவரை எந்த வரையறையும் வரையறுக்கவில்லை என்று நினைக்கிறேன். அப்படி யாரும் வரையறுத்திருந்தால் அதற்க்கு நான் பொறுப்பு இல்லை நண்பர்களே.
அவர்களைப் பற்றிய இணையதள இணைப்பையும் கொடுத்துள்ளேன், நான் நினைத்துக் கொண்டிருக்கும் வரையறைகளின் படிதான் பின் வரும் நபர்களை என்னால் இயன்றவரையில் வரிசைப் படுத்தியுள்ளேன் நண்பர்களே.இவர்கள் அனைவரும் தங்களைப் பற்றி மட்டும் நினைக்காமல் மற்றவர்களின் நலனிலும் அக்கறை உடையவர்கள்.
பிரபாகரன்: தனி ஆளாய் ஆரம்பித்து, உலகின் சக்தி வாய்ந்த போராளிக் குழுவை உருவாக்கிய பெருமை இவரைத் தான் சாரும், தமிழன் என்றாள் அவனொக்கொரு மாபெரும் அடையாளத்தை விட்டவர். உலகின் எவரது, எந்த நாட்டின் முழு ஒத்துழைப்பும் இல்லாமல் ஒரு மாபெரும் தனி அரசை அமைத்து 30 ஆண்டுகள் ஆண்டவர், உலகின் முப்படைகளும் கொண்ட ஒரே போராளிக் குழுவை உருவாக்கிய மாபெரும் தலைவன். கொண்ட கொள்கைக்காக, தமிழ் ஈழ அரசுக்காக தன் குடும்பத்தையே போர்க்களத்தில் இழந்த மாசற்ற தன்னிகரற்றத் தலைவன். என்னைக் கேட்டால் இவருக்குப் பிறகுதான் அனைவரும் என்பேன், நான் தற்பொழுது இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. இவர்மீது வைத்திருக்கும் மதிப்புகளும் மரியாதையும் அளவே இல்லை என்று கூறலாம்.
பியர் கிரில்: இவரையும் யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இவர் முதன் முதலில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து சிக்கிம் மலைப்பகுதியில் பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் கொண்டார். ஆனால் பின்னர் இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றி தற்பொழுது டிஸ்கவரி சானலில் உயிர் பிழைப்பது எப்படி என்று மேன் Vs வைல்ட் என்ற நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சாதனைகளை சித்து வருகிறார். தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல், பல சவாலான செயல்களை செய்து முடித்திருப்பவர். இவர்தான் எனது அடுத்த ஹீரோ. என்னைக் கேட்டால் இவருக்குத் தெரியாத கலைகள், உயிர் பிழைத்தல் தொழில்நுட்பம் என ஏதும் இல்லை என்பேன். இவர் முகப்புத்தகத்திலும், டிவிட்டரிலும் உள்ளார்.
கெய்த் பேர்ரி (Keith Barry): இவர் அயர்லாந்தில் பிறந்தவர். இவர் தற்பொழுது டிஸ்கவரி சானலில் Deception with Keith Barry நிகழ்ச்சியை நடத்துபவர். நாம் கேள்விப் பட்டிருக்கும் கண்கட்டுவித்தை, ஏமாற்றுதல் போன்றவற்றில் இவர் பெயர் போனவர். ஒரு முறை இவர் கண்களைக் கட்டிக் கொண்டு சுமார் 10கி.மீ தூரம் கார் ஓட்டினார், நான் பார்த்து மிரண்டு போனேன், அவ்வளவு திறமை உள்ளவர். அடுத்தவர்களின் மனதினை எளிமையாக கண்டுபிடிப்பவர். இவரது திறமைகள் நமக்கு இருந்தால் நாம் என்னன்னவோ செய்விடுவோம். இவரது துறையில் இவருக்கு இணையாக யாரும் யாரும் இல்லை என்றே கூறலாம். இவரும் முகப்புத்தகத்திலும், டிவிட்டரிலும் உள்ளார். பின்தொடர விரும்புபவர்கள் தொடரலாம்.இவர் ஒருமுறை பெண்களை எப்படி கரெக்ட் பண்ணுவது என்று சொல்லிக் கொடுத்திருப்பார். அனைத்து காளையர்களும் பார்க்க வேண்டியது. அதனைப் பார்த்தும் அப்புறம் நீ ஏண்டா ஒன்டிக்கட்டையாக இருக்கிறாய் என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது, என்னக செய்வது நேரம் கைகூடவில்லையே!
மனல் அல் ஷரிப் (Manal al-Sharif): இவர் சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர். சவூதி அரேபியா நாட்டில் பெகளுக்கு எதிரா இழைக்கப் படும் பாலியல் வேறுபாடுகள் போன்றவற்றிற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்கள். நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை
கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.
பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள்.
அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப்
பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப்
பெண்மணி. இவரது முயற்சி அதி விரைவில் கைகூடட்டும். இவர் அந்த நாட்டின் நலிவடைந்த பெண்களுக்கு ஒரு மாபெரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
பியர் கிரில் ஓர் மலை ஏறும் சாதனையாளர். பியர் என்பது அவரது தங்கை அவர்க்கு வைத்த பெயர்.
ReplyDeleteகூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே... தங்கள் வருகைக்கும் நன்றி...
Deleteநல்ல தொகுப்பு + தகவல்கள் நண்பரே ! தொடருங்கள். நன்றி.
ReplyDeleteஎன் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
தங்கள் வருகையும், பாராட்டுகளும் இருக்கும் வரை நான் தொடர்ந்துகொண்டே இருப்பேன் நண்பரே...
Deleteநல்ல அறிமுகங்கள்! நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துரைத்ததர்க்கும் மிக்க நன்றி நண்பரே...
Deleteநல்ல அறிமுகங்கள் நண்பரே ...
ReplyDeleteவருகைக்கும், கருத்துரைத்ததர்க்கும் மிக்க நன்றி...
Deleteதலைசிறந்த தலவர்களுக்குள் என் தலைவன் முன்னுக்கு.சந்தோஷமாயிருக்கு நண்பரே !
ReplyDeleteஅவர் தலைவர்களுக்கெல்லாம் தலைவர்...
Deleteவருகை தந்தமைக்கும், கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி தோழியாரே.
Nice post. I like it.
ReplyDeleteவணக்கம் தோழி, தங்கள் வருகைக்கும், தங்கள் விருப்பத்திற்கும் மிக்க நன்றி தோழி...
Deleteஎங்கள் தலைவர் மாமாவை முதன்மை படுத்தியமைக்கு நன்றி அண்ணா
ReplyDeleteநானும் அவரின் வளர்ப்பில் வளர்ந்தவர்கள்......