Jul 20, 2012

தன்னம்பிக்கையின் இடம் இது

முதல் பக்கத்தில் திரு.கலாம் அவர்களின் நிழற்படம் இருப்பதனால், இது அவரைப் பற்றியது என்று யாரும் நினைத்து விட வேண்டாம் நண்பர்களே/ தோழிகளே. சில  தினங்களுக்கு முன்னர் முகப்பு புத்தகத்தில் படித்தது, மிகவும் பிடித்து இருந்தது, உடனே அனைவருக்கும் பகிரலாம் என்று தோன்றியது.
மாத்தியோசி  என்று சிலர் கூறுவார்கள், சிலரது செயல்கள் எப்போதுமே மற்றவர்களை விட சிறிது மாறுபட்டு இருக்கும். அதனைப் பற்றிதான் இது.
சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து “இது என்ன பழம்” என்றார். “சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு “இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” என்றார். “இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்” என்று அறிவுரை சொன்னார் மருத்துவர்.

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர். 
புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு. நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார்…… “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்” என்று கூறினார்...

வனங்களில் விறகு சேகரித்து வயிற்றைக் கழுவி வந்த அந்த மனிதனின் எதிரே ஒரு முனிவர் வந்தார். “இன்னும் முன்னால் போ” என்றார். போன இடத்தில் நிறைய சந்தனக் கட்டைகள் கிடைத்தன. அவற்றை விற்றதில் காசு நிறைய கிடைத்தது. மீண்டும் அந்த முனிவர் எதிரே வந்தார். “இன்னும் முன்னால் போ” என்றார். இப்போது நிறைய சுரங்கங்கள் தட்டுப்பட்டன. அவற்றை அள்ளிச் சென்று பெரும் செல்வந்தனாக மாறினான். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி! உங்களை முன்னேற்றப் போகிற முத்திரை வாசகம்….. “இன்னும் முன்னால் போ” என்பதுதான்!!

யார் பிச்சைக்காரன் என்பதில் ஓர் அறிஞர் தீர்ப்புச் சொல்ல வேண்டியிருந்தது. அவர் தெளிவாகச் சொன்னார். “பிச்சை எடுப்பவனை எல்லாம் பிச்சைக்காரன் என்று சொல்ல முடியாது. சராசரியான பிச்சைக்காரன் ஒருவனின் வாழ்க்கையை முதலில் பாருங்கள். மூன்று அம்சங்கள் தெரியும். முதலாவதாக, எது நடக்க வேண்டும் என்பது அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இரண்டாவது, அவன் விரும்புவது அவனுக்குக் கிடைப்பதில்லை. மூன்றாவதாக அவன் விரும்புவது கிடைத்தாலும் தேவையான அளவுகளில் கிடைப்பதில்லை. இந்த மூன்று குறைகள் எவனுக்கு ஏற்பட்டாலும் அவன் பிச்சைக்காரன்தான். இந்தக் குறைகள் இல்லையென்றால் ஒரு பிச்சைக்காரன் கூட பணக்காரன்தான்.”

அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார். கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணிச்சத்தம் கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார்

18 comments:

  1. நல்ல பதிவு..
    பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  2. குட்டிகுட்டியான கதைகளுடன் சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்தமைக்கும் கருத்து வழங்கியதர்க்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete
  3. சிறப்பான பதிவு.அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்தமைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete
  4. இந்த கதை ஓகே. ஆனா,18+ கதை எங்க????

    ReplyDelete
    Replies
    1. அந்த கூத்தைக் கேட்காத்தீர் நண்பரே, அதில் நான் இணைத்த படங்கள் அனைத்தும் சரியாகத் தோன்றவில்லை. அதனால் அந்தப் பதிவை நீக்க வேண்டியதாகிவிட்டது, மிகவும் வருந்துகிறேன் நண்பரே, மன்னிக்கவும்

      Delete
  5. Wow. Nice. Nallathan eludhurenga. Adhisayavin thalam valiyaaga vandhen. Thodarndhu sandhippom tholare. Namma thalaththukkum konjam varalaame? http://newsigaram.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழி, பாராட்டுகளுக்கும் நன்றி. இனி தங்கள் தளத்திற்கு தொடர்ந்து வருகைப் புரிகிறேன் தோழி...

      Delete
  6. அருமையான பதிவுகள் . நான் இந்தப் பதிவை என் முக நூலில் வெளியிடலாமா? உங்களின் தளத்தின் பெயருடன்.
    மன நலம் குறித்த பதிவுகளில் ஆர்வம் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      தாராளமாக வெளியிடலாம், எனது அனுமதியைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. வருகைக்கு மிக்க நன்றி தோழி...

      Delete
  7. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  8. நண்பரே உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது படியுங்கள், முகவரி கீழே.

    http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_19.html

    ReplyDelete
    Replies
    1. என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய நாடோடி நண்பனுக்கும், வலைச்சரத்திற்கும் எனது மட்டற்ற நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் என் வலையுலக பயணத்தை ஆரம்பித்த பின் சில நாள்களிலே வலைச்சரத்தை அறிந்து கொண்டேன். அப்படி ஆரம்பித்த பிறகு தினமும் வலைச்சரத்தைப் பார்வை இடுவேன், எங்கேனும் நமது பதிவும் அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கிறதா என்று பார்ப்பேன். அப்பொழுதெல்லாம் ஏமாற்றம் தான் மிஞ்சும், இன்று நான் தற்ச்செயலாக தங்கள் அறிமுகம் செய்தியைப் பார்த்தபிறகு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் நண்பா.

      எனது நண்பர்களான எத்தனம், சிகரம் பாரதி, வரிக்குதிரை, பாலாஜி பதிவுகள் தொடர்ந்து வலைச்சரத்தில் தொடர்ந்து அறிமுகமான போது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது, அப்போது எனது தளம் இன்னும் அறிமுகப் படுத்தப் படவில்லை என சிறு வருத்தமும் இருந்தது, தற்போது எனக்கு தங்கள் அறிமுகம் மிகுந்த மகிழ்ச்சியையும், இன்னும் ஊக்கத்தையும் அளித்துள்ளது நண்பா. மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி.

      தங்கள் அறிமுகம் எனக்கு புது வாசகர்களையும், புது தெம்பையும் அளித்துள்ளது நண்பா. மிக்க நன்றி...


      எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் வலைச்சரம் தான் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....நண்பா

      நான் எழுதிய பதிவுகளான மரணத்திற்குப் பின் ஓர் அலசல்
      http://iravinpunnagai.blogspot.in/2012/07/blog-post_18.html
      மரணத்திற்குப் பின் மறுபிறப்பா?
      http://iravinpunnagai.blogspot.in/2012/07/blog-post_26.html
      அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்
      http://iravinpunnagai.blogspot.in/2012/08/blog-post.html

      போன்ற பதிவுகை எதிர்பார்த்தேன், ஆனால் எதிர்பார்க்காத அந்த தன்னம்பிக்கைப் பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

      Delete
  9. லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்”

    முன்னேற்றத்திற்கு வித்திடும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி தோழி, தொடர்ந்து வருகைப் புரிந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...