Jul 15, 2012

ஒளவையாரையும் கிறங்கடித்தக் காதல்: பகுதி 2

நண்பர்களை மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கடந்த இரண்டு வாரங்களாக என்னால் எந்தப் பதிவையும் பதிவேற்ற இயலவில்லை, ஏனெனில் எனது வேலை தேடும் பணியில் மிகந்த சிரத்தையுடன் இருந்துவிட்டேன். ஆதலால் தான் என்னால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த இயலவில்லை. முதலில் எனது கடந்த ஒளவையாரையும் கிறங்கடித்தக் காதல் பதிப்பிற்கு பின்நூட்டமளித்த சில நல்ல உள்ளங்கலான பா.கணேஷ், சிவகிரி, சிட்டுக்குருவி, மற்றும் சேகர் இவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனெனில் நான் பதிவிட்ட இலக்கியக் காதல் பதிவிற்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என நான் நினைக்கவில்லை... எதிர்பார்த்ததை விட அதிக நண்பர்களும், சில புதிய வாசகர்களை இது இழுத்துள்ளது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

 நமது ஔவையார் பாட்டி தனது காதலர் பிரிவை மிகவும் எதேர்ச்சையாக, அழகாக தனது கவலையை எப்படி வெளிப் படுத்துகிறாள் என்றாள்...

செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே

பிரிய மாட்டார் என்று நான
நினைத்திருந்தேன்
பிரியப்  போவதைச் சொன்னாள் 
தாங்க மாட்டாள் என்று 
அவர் இருந்து விட்டார்
இருவரும் தவறு செய்து விட்டோம்
இப்போது பாம்பு கடித்தது போன்று என் மனம் அவர்
பிரிவை எண்ணித் திடிக்கிறது...

35.பாலை தலைவி கூற்று

தங்கள் கூடலின் இன்பத்தையும், தன் கணவனின் அணைப்பிலிருந்து தங்களை  யாராலும் பிரிக்க இயலாது என்பதை பின்வரும் உவமையோடு அவள் மிகுந்த தெளிவோடு அழகாகக் கூறுகிறாள்.

முனை  ஆன் பெரு நிரை போலக்
கிளையோடு  காக்க தன் கொழுநன் மார்பே...

கூந்தலில் முழு ஆம்பல் சூடி
வெள்ளம வரும்ஆற்றங்கரையில் நாங்கள் 
இருவரும் விளையாடச் செல்கிறோம்.
அவளுக்கு அதில் பயம் என்றாள் 
அரசன்
தன்  எழினி கால்நடைகளை
மீட்ட மாதிரி
தன் கணவன் மார்பிலிருந்து அவள் தானாக மீண்டு கொள்ளட்டும்...

80.மருதம் பரத்தைக் கூற்று


தன் காதலன் வேறொரு மங்கையை நினைத்துக் கொண்டிருக்கிறான் ஆதலால் தன் துயரத்தை 

கொன் முனை இரவு ஊர் போலச் 
சில ஆகுக நீ துஞ்சும் நாளே.

பிரம்பம்  பழத்தை கொண்டை 
மீன்  கவ்வும் நீர்த்துறை.
ஊரான்  மனைவியை நீ 
நேசித்தால்  என் நெஞ்சில் வருத்தம் அதிகள்.
மழை  மேகம் போல ஈகைக் குணமும் யானைத் 
தேர்களும்  கொண்ட அதியமானின் போர்க்கல 
இரவு  போல என் 
தூக்க நாட்கள் குறைகிறது.... 

92.நெய்தல் தலைவி கூற்று


தன் காதலனை நினைத்துக் கொண்டிருக்கையில் அவன் மேல் காதலும் காமமும் ஆற்றின் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைப் போல் என் மனதிலும் அவன் மீதான ஆசைகள் ஓடுகிறது என்பதை

அனைப் பெருங் காமம் ஈண்டுக் கடைக்கொளவே

நான் நினைக்கவில்லையே?
மீண்டும்  மீண்டும் நினைத்து இந்த
உலகத்தை  எண்ணி நான் பயப்பட வில்லையே?
 மரக் கிளையைத் தொட்டுச் செல்லும் வெள்ளம்
கையால்  இறைக்கும் அளவுக்கு குறைந்தது போல் 
குறைந்து  விட்டது உன் மேல் நான் கொண்ட காமம்
உனைக்  காண இங்கு
வந்ததும்.

99.முல்லை தலைவன் கூற்று

 தான் நினைத்த தன் காதலன் நல்ல மனிதரில்லை என்பதை அவள் மிகுந்த வருத்தத்தோடு  புலம்புவதைப் பார்த்தால் நமக்கும்  மனம் சிறிது நேரம் கலங்கச் செய்யும்.

வான் தோய்வற்றே, காமம்
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே

 நினைத்தால் வருத்தம்
நினைக்காமலும் இருக்க என்னால் 
இயலவில்லை.
வானலாவியது என் காமம் 
என்னைத் தழுவியவர் நல்ல
மனிதரில்லை.

102.நெய்தல் தலைவி கூற்று

தொடரும்....

11 comments:

  1. எப்படி உங்களால் இத்தனை பாடல்களை தேடி எடுக்க முடிகிறது..சப்பா இப்பவே கண்ணா கட்டுதே.

    ReplyDelete
    Replies
    1. தேடல் தான் காரணம் நண்பா, இதனைவிட யாரும் சிறப்பாக எழுதக் கூடாது என்ற நினைப்பு தான்...

      Delete
  2. இது எந்த ஒளவையார் ? மூன்றோ நான்கு பேரோ இருந்தனர் என்று சொல்கின்றனர்

    ReplyDelete
    Replies
    1. சங்க இலக்கியத்தில் குறுந்தொகைப் பாடிய ஔவையார்.

      வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  3. சங்க இலக்கியத்தில் குறுந்தொகைப் பாடிய ஔவையார்...

    ReplyDelete
  4. அன்பின் வெற்றிவேல் - அவ்வையின் குறுந்தொகைப் பாடல்களைத் தேடி எடுத்து பிரசுரித்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...

      Delete
  5. குறுந்தொகைப் பாடல்களும் அவற்றிற்கு நீங்கள் எழுதியிருக்கும் எளிய வரிகளும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. மிகவும் அருமை

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...