நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஒரு வழியாக ஐம்பதாவது பதிவும் வந்துவிட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வலை தளம் தொடங்கிய பிறகு எப்படி பதிவு போடுவது என்பது கூடத் தெரியாமல் தான் ஆரம்பித்தேன், அப்போது குழந்தை நிலா ஹேமாவின் கவிதைக்கு கருத்து எப்படி வழங்குவது என்று கூடத் தெரியாமல் பக்கத்தை சேமித்து வைத்த காலமும் உண்டு.
முதலில் எனக்கு இந்த வலைத் தளத்தை அறிமுகப் படுத்திய நண்பர் விமல் அவர்களுக்கு மேலான நன்றிகள். பிறகு தொடர்ந்து உதவிய நண்பர் சேகர் அவர்களுக்கும், இடையில் பல முறை டாஷ்போர்ட் பிரச்சனைகள் எழுந்தது, நான் உதவிகள் கேட்ட போதெல்லாம் உதவிய நண்பர் சிட்டுக் குருவி மூஸா அவர்களுக்கும், திண்டுக்கல் தனபாலன் அண்ணன் அவர்களுக்குள் மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆரம்பத்தில் வெற்றிவேல் என்றும் பிறகு கருத்தான் என்றும் திரும்பவும் வெற்றிவேல் என்றும் தலைப்பை மாற்றிக்கொண்டே இருந்தேன் ஒரு நிலையில்லாமல், பிறகு நான் தலைப்பை தேடிக்கொண்டிருந்த போது எனது தோழி மின்னலிடம் பெயர் கேட்டேன். அவர் கூறியது தான் இந்த இரவின் புன்னகை. அவர் தற்ச்செயலாக இப்படி யோசி என்று இந்தப் பெயரைக் கூற நான் இதனையே தளமாக மாற்றிக் கொண்டேன். அவளுக்கும் நன்றி.
ஆரம்பத்தில் கட், காப்பி எல்லாம் சில முறை செய்தேன், பிறகு என்னை அப்படியே மாற்றிக் கொண்டேன். இப்போதெல்லாம் அப்படி செய்வதே இல்லை. இதில் உள்ள அனைத்து பதிவுகளும் என்னுடையது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான். ஆனால் அனைத்தும் நிறைவாக எழுதியிருப்பேன் என நம்புகிறேன்...
உண்மையைக் கூற வேண்டுமானால் எனக்கு கவிதையே எழுதத் தெரியாது. ஏதோ ஆடிக் கொரு முறையும் அமாவாசைக் கொருமுறையும் எனக்குத் தெரிந்தது போல் கிறுக்குவேன். அதையும் கவிதைகளாக ஏற்றுக் கொண்ட நல் உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள். குறிப்பாக தென்றல், ஹேமா, பாரதி, தமிழ் செல்வி.
என் தளத்திற்கு தொடர்ந்து வருகைத் தந்து என்னையும் எழுத தூண்டிக் கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் குழைந்தை நிலா, சிகரம் பாரதி, வரிக்குதிரை அருண் பிரசாத், சிட்டுக் குருவி, எத்தனம் சேகர் என அனைவருக்கும் நன்றிகள். கடந்த காலங்களில் தொடர்ந்து வந்து கொண்டும் தற்போது மறந்துவிட்ட சொந்தமான அதிசயா அவர்களுக்கும், சுரேஷ் அவர்களுக்கும் நன்றிகள். பெயர் விடுபட்ட நண்பர்கள் என அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
சொதப்பலுடன் ஆரம்பித்து இன்று ஓரளவு நன்றாக செல்கிறேன் என்று நினைக்கிறேன்.
ஆரம்பிச்சது ஒரு பாதைல, போய்க்கிட்டு இருக்குறது இன்னோரு பாதைன்னு, பாதை எங்கல்லாம் இருக்கோ அங்கெல்லாம் கேட்க ஆள் இல்லை என்று தொடர்கிறது என் பயணம்.
இடையில் என் பதிவுகள் தொழில் நுட்பம், மரணத்திற்குப் பின், ஔவையார், கவிதை என்று சிறகடித்துப் பறந்துள்ளது.
நான் பதிவிட்டவைகளில் எனக்கு பிடித்தது ராஜராஜ சோழனைப் பற்றி போட்ட பதிவு மற்றும் தடம் மாறியப் பொழுதுகள்...
உங்கள் ஆதரவும், உங்கள் வருகையும் தொடர்ந்து அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்...
நன்றி வணக்கம்...
வெற்றிவேல்.
ஹா... ஹா... நான்தான் முதல் தோழன் நண்பா,....
ReplyDeleteவாழ்த்துக்கள் கோடி நண்பா.....
முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கு கோடி நன்றி நண்பா.
Deleteநான் நீண்ட நாட்களுக்குப் பின் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்... எனது இருப்பை தக்க வைக்க முடியுமா என யோசித்தேன்... ஆனால் அருமையான உங்களைப் போன்ற நண்பர்களைப் பெற்றுக் கொண்டேன்... என்னையும் தனிப்பட்டு விளித்து , இணைப்பும் தந்த உள்ளத்துக்கு நன்றி நண்பா...
ReplyDeleteஉங்களுக்கு இணைப்பு தர இயன்றதர்க்கு நான் தான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் அருண்பிரசாத். இங்கு நம்பிக்கை உள்ளவரை நாம் நம்மை தக்க வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு அது அதிகமாக இருக்கிறது என நான் நம்புகிறேன்...
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
தொடரட்டும் தங்கள் பதிவுகளும், இங்கு வருகையும்...
இதோ எனது இறுதிப் பதிவு.. வந்து பதில் தெரிந்தால் சொல்லுங்கள்..
ReplyDeleteஇலங்கையை அதிர வைத்த முக்கொலைகள்
படித்து கருத்தும் வழங்கிவிட்டேன் நண்பா,,,
Deleteமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா.
Deleteதங்கள் ஊக்கமும் தான் காரணம் இந்த ஐம்பதாவது பதிப்பிற்கு...
நன்றி வணக்கம்..
தொடர்ந்து வாருங்கள்...
வாழ்த்துக்கள் நண்பரே! நான் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்! சில சமயம் விடுபட்டிருக்கலாம்! தொடர்ந்து எழுதுங்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிள்ளையார் திருத்தினார்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...
Deleteதொடர்ந்து வாருங்கள்...
நன்றி வணக்கம்...
50 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! விரைவில் 500 ஆகட்டும்!
ReplyDeleteஸ்ரீ....
தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா...
Deleteதொடர்ந்து வாருங்கள்... நன்றி வணக்கம்....
பதிவுலகில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழி...
Deleteநன்றி, வணக்கம்...
வாழ்த்துக்கள் வெற்றி. நீங்கள் எழுதியது ஐம்பது பதிவாக இருக்காலாம். அந்த ஐம்பது பதிவில் பலரது எழுத்துக்களை ஊக்குவித்து உள்ளீர். உங்கள் தளத்திற்கு வந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒன்றை கற்று கொண்டு தான் நான் செல்வேன். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். சில நேரங்களில் சில பதிவுகளை நான் படிக்க தவறி இருக்கிறேன். அனால், பெரும்பாலான பதிவுகளை படித்துள்ளேன். எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் நான் படிக்கும் சில வலைப்பூவில் இரவின் புன்னகையும் ஒன்று. ஏலே, டோன்ட் வோர்ரி பீ ஹாப்பி.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சேகர். தாங்கள் கூறுவதைக் கேட்கும் போது எனக்கு மிகவும் மகிழ்க்ச்சியாக உள்ளது... இதனை நான் தக்க வைத்துக் கொள்வேன் என நம்புகிறேன்...
Deleteநன்றி, வணக்கம்...
congrats
ReplyDeleteநன்றி, வணக்கம் எல்.கே சார்.... தொடர்ந்து வாருங்கள்...
Deleteவாழ்த்துக்கள் நண்பரே.உங்கள் வெற்றிகள் தொடரட்டும்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா...
Deleteதொடர்ந்து வருகை தந்து சிறப்பியுங்கள்...
வாழ்த்துக்கள் தங்கள் ஆக்கங்கள் மென்மேலும்
ReplyDeleteபல்கிப் பெருகி நற் பேறுகளைப் பெற்று சிறப்புடன்
திகழ!..மிக்க நன்றி பகிர்வுக்கு .
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா...
Deleteதங்கள் வருகை தொடரட்டும்...
கடந்த காலங்களில் தொடர்ந்து வந்து கொண்டும் தற்போது மறந்துவிட்ட சொந்தமான அதிசயா //
ReplyDeleteஅதிசயா மறந்து விடவில்லை என்றே நினைக்கிறேன்... ஆனால் அவரும் என்னைப் போலவே நேர நெருக்கடியில் உள்ளார்... எனது பதிவுகளிலும் அவரைக் காண முடியவில்லை... பிறகு அவர் வலைக்கு சென்ற போது அதை அறிந்தேன்.... உறவே " என உரிமையோடு அழைக்கும் அந்த சொந்தத்தை நானும் மிஸ் பண்ணுகிறேன்..
வேலை நிமித்தமா? பரவா இல்லை, பொறுமையாக வரட்டும். காத்திருப்போம்...
DeleteCongratulations!
ReplyDeleteWelcome bharathi...
Deleteதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா....
ReplyDeleteநன்றி, வணக்கம்...
என் மனம் நிறைந்த வாழ்த்துகள் வெற்றி.உங்கள் பெயரோடே உங்கள் அதிஷ்டம் இருக்கு.உடம்பிலதான் கொஞ்சம் சதை அதிஷ்டம் வைக்கணும் !
ReplyDeleteஆரம்பத்தில் இடையிடை வந்திருக்கிறேன்.பிறகு உங்களை நடுவில் தவறவிட்டுவிட்டேன்.எங்கள் தலைவர் பற்றிய பதிவோடுதான் மீண்டும் சந்தித்தேன்.அதன்பிறகு (பயம் காட்டின)மரணத்திற்கு அப்பால்,லிபியாவின் நிஜமுகம் போன்ற இன்னும் சரித்திர அலசல்கள்தான் உங்கள் எழுத்தை மிகவும் ரசிக்க வைத்தது.தொடர்ந்து எழுதாவிட்டாலும் எழுதும் ஒவ்வொன்றும் முத்துப்போல பெறுமதியாகவே இருக்கும்.இன்னும் இன்னும் எழுத என் அன்பு வாழ்த்துகள்.எழுதுங்கோ எழுதுங்கோ எழுதிக்கொண்டே இருங்கோ.வாசிக்கிறம் !
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஹேமா... படு சீக்ரட் ஆன விஷயத்தெல்லாம் இப்படி வெளியில் சொல்லி காட்டிக் கொடுக்கக் கூடாது. குண்டா இருந்தா ஏகப்பட்ட வியாதிங்க அப்புறம் மருத்துவர்னு அலையணும் அதனாலதான் நான் ஒல்லியா இருக்கேன் ( இப்படி தான் சொல்லி ஊர எமாத்துறேன்...)
Deleteதங்களைப் போன்ற அழகான வாசகர்கள் இருக்கும் வரை வேறு என்ன வேலை ஹேமா. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
ஐம்பதாவது பதிவின் கருத்தாக, ஐம்பதாவது பதிவையே வைத்திருக்கிறீர்கள். அப்போது ஐம்பதாவது பதிவு, ஐம்பத்தியோராவது பதிவாக வருமா? அல்லது ஐம்பத்தியோராவது பதிவு ஐம்பதாவது பதிவாக வருமா?
ReplyDeleteஒரு வருடத்தில் ஐம்பது பதிவுகள் கடந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பாலாஜி சகோ. நன்றாக என்னை குழப்புகிறீர்கள்...
Deleteஅது எப்படி ஐம்பதாவது பதிவு மற்ற எங்களில் வரும்???
குழப்பவில்லை சகோதரரே, விளையாட்டாகத்தான் சொன்னேன். முதலில் இருந்து உங்கள் பதிவுகளை கணக்குப் பார்க்கவில்லை.
Delete//ஒரு வழியாக ஐம்பதாவது பதிவும் வந்துவிட்டது// //அது எப்படி ஐம்பதாவது பதிவு மற்ற எண்களில் வரும்???//
ஐம்பதாவது பதிவின் கருத்து எந்தன் வீட்டு சிட்டாக இருந்து, அரை சதம் கடந்த நான் என்ற பதிவு ஐம்பத்தியோராவது பதிவாக இருந்திருந்தால் எப்படி இருக்கும்? என்று தோன்றியது.
புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன், அல்லது அதிகமாக குழப்புகிறேனா!
மீண்டும் குழப்பமே பாஸ், இதுக்கு முற்றுப் புள்ளி வச்சிடலாம். நான் போட்டுருக்குறது ஐம்பதாவது பதிவுதான்... நம்பனும்...
Deleteவாழ்த்துக்கள் நண்பரே மேலும் பல மைல்கள்கள் தாண்டி சிகரம் தொட நெஞ்சார்ந்து வாழ்த்துகிறேன்..
ReplyDeleteஎன்னப்பா நான் செய்ததெல்லாம் ஒரு உதவியா.. ரொம்ப ஓவரா இல்ல
உதவி என்பது கடுகளவு செய்தாலும் மலையளவு செய்தாலும் உதவி உதவிதானே நண்பா...
Deleteஉங்கள் வாழ்த்துகள் போலவே அனைத்தும் நடக்கட்டும், மிக்க நன்றி குருவி...