நொடிப் பொழுதின்
பார்வை முத்தத்தில்
விழியைப் பறித்து தீ
மூட்டிச் சென்றாய்...
நெற்றிப் பொட்டில் இட்ட
ஆசை முத்தத்தில்
உச்சம் குளிர்ந்து
கார் முகிலும் தூருகிறது நம் மேல்.
உச்சந் தலையில்
நீ தீண்டிய இன்ப முத்தம்
உடலைக் கரைத்து
உள்ளம் குடித்து
உணர்ச்சியால் தீப் பற்றச் செய்யுதடி
கன்னத்தில் இட்ட காதல் முத்தம்
காதலினால் கன்னக்
குழிகளை நிரப்பி
ஜீவ நதியாய் பெருகச்
செய்யுதடி...
உதட்டைத் தீண்டிய மோக முத்தத்தில்
உதட்டு ரேகையில்
முத்த ரேகையும், ஆயுள் ரேகையும்
மொத்த ரேகையாய்
பரவச் செய்து
பரவசம் செய்யட்டுமே!!!
வெற்றிவேல்
முகப்புப் புத்தகத்தில் போட்டிக்காக எழுதியது, படித்து எப்படி உள்ளது என்று கூறுங்கள் நண்பர்களே....
mmm.........முத்தத்தில் போட்டியா முகப்புத்தகத்தில் போட்டியா???!!!நல்லாயிருஙப்பா.....!
ReplyDeleteமுகப்புத்தகத்தில் மட்டுமே போட்டி, இன்னும் முத்தத்தில் போட்டி போட்டி போடற அளவுக்கு இன்னும் வளரலன்னு நினைக்கறேன்...
Deleteதங்கள் வாழ்த்துகள் இருந்தால் எப்போதும் நல்லாருப்பேன் தென்றல்...
நன்றி வணக்கம்...
முத்தத்துக்கு ஒரு முத்தமிடுகிறேன்....
ReplyDeleteஅழகாக இருக்கிறது நண்பரே...கவிதை
தங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய முத்தத்திற்கும் மிக்க நன்றி நண்பா...
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
ச்ச..................ஒரே வெக்கமாயிருக்கு.தமிழ் வந்தால்தான் நிறையச் சொல்லுவா இந்தக் கவிதைக்கு.ஒரே முத்தச் சத்தம்.தமிழ்கிட்ட சொல்லி ஒரு பொண்ணு பாக்கச் சொல்லணும் சீக்கிரமா !
ReplyDeleteசீக்ரம் சொல்லுங்கோ!!! அந்த நல்ல காரியத்த சீக்ரம் செய்ய சொல்லுங்க...
Deleteநன்றி வணக்கம்...
தம்பி ரெடியாத்தான் இருக்கிறார்....மக்களே கவனியுங்கோ !
Deleteஹ ஹ ஹா
Deleteஅருமை மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
Deleteதொடர்ந்து வாருங்கள்...
...ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா... எங்கு இன்னும் வரவில்லையே என்று நினைத்தேன், வந்துவிட்டீர்கள்...
Deleteநன்றி வணக்கம்...
முத்தத்தில் இத்தனையா...? உம் நடத்துங்கள்...
ReplyDeleteஇன்னும் எத்தனையோ உள்ளது நண்பா... நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான்...
Deleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
தம்பி, முத்தத்தில் 1 பார்வை.2 நெற்றி .3 உச்சம்தலை 4 .கன்னம் .5 உதடு .இன்னும் எந்த இடம் உள்ளது.....மொத்தத்தில் நனறாகா..உங்கள் பதிவு அய்யா ....அன்புடன் கருப்பசாமி...
ReplyDeleteஇன்னும் ஏராளம். தங்களுக்கு அதைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்...
Delete