எங்கள் வீட்டில்
எங்களோடு வாழும்
அழகிய சிட்டே!
நலம் தானே?
நீ மட்டும் எங்கு கற்றுக் கொண்டாய்
நீங்காத மகிழ்வாய் இருக்க?
என்தன் வீட்டுக் கூரையில் தங்கியிருக்கும்
அழகிய சிட்டே!
கார் காலத்தில் மழை நீர்
ஒழுகாத இடத்தையும்,
குளிர் காலத்தில் நடுங்காமலும்
வேனிற் காலத்தில்
வெயில் படாத
இடத்தையும் நீ மட்டும் எப்படி கண்டு கொண்டாய்!!!
என்தன் கோட்டையில்
எனக்குத் தெரியாத ரகசியத்தை
நீ அறிந்து வைத்துள்ளாய்!!!
சூட்சமகார சிட்டே!!!
வருஷம் ஏழாச்சு கூரைக்கு
வாங்கிப் போட்ட
சருகும் சருகா மக்கிப் போச்சு
காவட்டையும் மாடு மிதிச்சே
நொறுங்கிப் போச்சு..
கூரைய பிரிச்சா உன்
கூடு கலையும்,
உன் முட்டை உடையும்
நீ தெருவுக்கு வருவன்னு
ஆறு வருசமா காத்திருக்கேன்
நீயே போவேன்னு!!!
சொந்தம் இருந்தா
ரெண்டு நாளைக்கு போயிட்டு வாயேன்!!!
அதுக்குள்ள முடிஞ்சா வரைக்கும்
ஓட்டைக் கூரைய வேய்ந்துடறேன்.
இல்ல ஒட்டுப் பண்ணை வைத்துடறேன்...
அடுத்த மாசம் ஐப்பசி
அடைமழையும் வந்துடும்.
வீடு பூரா ஒழுகிடுமே, உந்தன்
கூடும் நனைந்திடுமே,
ரெண்டு நாள் போயிட்டு வாயேன்.
அதுக்குள்ள சரி பண்ணிடறேன்
அடை மழைக்கு முன்
நீ வாழும் கோட்டையை...
வெற்றிவேல்...
அழகையும், உங்களின் அக்கறையும் வரிகளில் ரசிக்க வைக்கிறது...
ReplyDelete(Mobile Tower-களால் எங்கள் ஊரில் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது...)
எங்கள் ஊரிலும் பாதி அழிந்து விட்டது. இன்னும் சில மீதி உள்ளது... அது தான் இப்படி அடிக்கடி வந்து சிறிது நேரம் கவலை மறக்கச் செய்யும்!!!
Deleteவருகைக்கு மிக்க நன்றி அண்ணா...
நன்றி வணக்கம்...
வெட்டிய மரத்தின் கிளைகளில்
ReplyDeleteதன் கூட்டை தேடியது குருவி.
கவிதை வரிகளை நினைவூட்டியது உங்கள் கவிதை
தானியங்களை எப்போது பாக்கெட்டுகளாக்கினோமோ அப்போதே இந்தச் சிட்டுக் குருவிகளை இழந்து விட்டோம். மனிதத்திற்கு நன்றி.
உண்மை தான், நாம் இப்போது அனைத்தையும் இழந்து விட்டோம். நான் சிறு வயதில் இருக்கும் போது காலையும் மாலையும் வானத்தில் கூட்டம் கூட்டமாக குருவிகளும் நாரைகளும் பறக்கும்... நாங்களும் கொக்குமிஞ்சாம், கோழிமிஞ்சாம் எனக்கொரு பூ போடு என்று நகத்தை மடக்கி தேய்ப்போம். அதுவும் செல்லும் போது நகக்கண்ணில் வெள்ளை வண்ண அழகிய பூ போட்டு செல்லும் நகக்கண்ணில்...
Deleteஅந்தக் காலங்கள் எல்லாம் பொய் விட்டது எழில்...
நீ மட்டும் எங்கு கற்றுக் கொண்டாய் நீங்காத மகிழ்வாய் இருக்க?...இது கேள்வியல்ல யாகம்
ReplyDeleteஉண்மை தான் பரிதி. அந்த சூட்சமம் மட்டும் நாம் அறிந்து கொண்டோமானால் மகிழ்ச்சி தான் பொங்கும். யாகம் தான் நண்பா...
Deleteதொடர்ந்து வாருங்கள்...
நன்றி, வணக்கம்...
எல்லாருக்கும் இப்படியான மனசு இருந்தால் பொதுவாக எந்தப் பிரச்சனையுமே வராதே வெற்றி.அருமையா இருக்கு கவிதை.இது உண்மையாவே உங்கள் கூரையில் வாழும் சிட்டுக்கு எழுதினதுதானே.....சந்தேகத்தை வச்சிருக்கக்கூடாது.கேட்டுத் தெளிவாக்கிப் போடவேணும்....அதுதான் !
ReplyDeleteஎல்லாருக்கும் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியே, நமக்கு இருக்கிறது. அதுவரை மகிழ்ச்சியே!!!
Deleteஆமாம் ஹேமா, இது என் வீட்டுக் கூரையில் வசித்த சிட்டு தான்... கடைசியில் அது இந்த வருடம் காலி செய்து விட்டது, ஒரு வருத்தம். திரும்பி வரவில்லை... காத்திருக்கிறோம்...
ஹ ஹா ஹாஹா....
DeleteNice post... Keep it up..
ReplyDeleteUsing Mobilaa? Thank you for your post.
DeleteVery good superp
ReplyDeleteThank you for your coming and Comments boss.
DeleteCome continuously...
Very good superp
ReplyDeleteThank you for your coming and Comments boss.
DeleteCome continuously...
அருமை நன்றாக இருந்தது நன்றி எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லுங்க
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteகண்டிப்பாக தங்கள் தளத்திற்க்கு வருகிறேன், உங்கள் G+ல் பல தளங்களில் இருந்து பகிர்ந்துள்ளீகள்... தங்களுடைய தளம் எது என்று தெரியவில்லை. முடிந்தால் தங்கள் தல முகவரியை குறிப்பிடுங்களேன்...
மிக இயல்பான வரிகளில் இதமான கவிதை வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள் வெற்றி ...
ReplyDeleteமேலும் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அரசன் அண்ணா...
Deleteவணக்கம்...
கவிதையில் அழகுய நல்ல மனதும்..வறுமையின் உருவமும் தெரிகிறது தோழரே...
ReplyDeleteஇப்பெல்லாம் கவிதை எழுத கற்றுக் கொண்டீர்கள் போல...... வாழ்த்துக்கள்
எல்லாம் உங்கிட்டேருந்து கத்துகிட்டதுதான் நண்பா...
Deleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
வணக்கம்
ReplyDeleteகந்தன் என்றே எழுதிடலாம்!
பந்தன் என்றும் எழுதிடலாம்!
எந்தன் என்றே எழுதுவதுதோ
எழுத்துப் பிழைதான் உணா்ந்திடுக!
எந்தன் என்ற பிழைச்சொல்லை
என்தன் என்று மாற்றிடுக!
நந்தம் தமிழின் நலம்பேணி
நல்ல துரைத்தேன் நாடிடுக!
என் - தன் - என்தன் அல்லது என்றன் என்று வரும் (ஒருமை)
எம் - தம் - எந்தம் என்று வரும் (பன்மை)
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
வணக்கம் ஐயா, எழுத்துப் பிழையை சரி செய்து விட்டேன். தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி...
Deleteதொடர்ந்து வருகைத் தாருங்கள்...
மிக்க நன்றி...
nice vetri...so cute lines vetri..there is no word to say abt your lines...
ReplyDeletethanks for your comments madhu, Nice to see you here...
Deleteஅன்பின் வெற்றிவேல் - அருமையான சிந்தனை - நட்பிற்கு ஒரு சிட்டு - அதன் மீது காட்டும் பிரியம் - விடுக்கும் வேண்டுகோள் - அதுவும் அதன் நன்மைக்காக - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் அய்யா...
Deleteஇனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...