Oct 23, 2013

உதிரும் நான் -23

காதல் தவத்தில்
நித்தமும்
வெந்துகொண்டிருக்கிறேன்
அவளுக்காய்...

வரம் கொடுக்கிறேனென்று 
எந்த தெய்வமும்
கலைத்துவிடாமல் இருக்கட்டும்
என் தவத்தை...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...




50 comments:

  1. தொடரட்டும் தவம்.....

    படத்திற்கேற்ற கவிதை நன்று வெற்றிவேல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
    2. உங்கள் முயற்சிகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்

      Delete
  2. விரைவில் வரம் கிடைக்க வாழ்த்துக்கள்... தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் டி.டி அண்ணா...

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      தமிழ் மண வாக்கிற்கும் நன்றி அண்ணா...

      Delete
  3. வேண்டும் தெய்வமே வரட்டும்
    வரம் அருளட்டும்
    அதுவரை கவிதைத் தவம் தொடரட்டும்
    எமக்கும் அது வரமாய் அமையட்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் இனிய வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
  4. அருள் கிடைக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...

      Delete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி, வலைச்சர அறிமுகம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது... நன்றி.

      Delete
  6. இயற்றும் தவம்..
    இற்றுப் போகாது...
    இமைவிரித்து
    இதழ் சுழித்து
    இசைவாய் வருவாள்
    இனியவள் இனிதாய்....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், அழகான கவிதைக்கும் மிக்க நன்றி.. இனியவள் இனிதாய் வருவாள் என்ற நம்பிக்கையிலேயே நானும் உள்ளேன்...

      Delete
  7. காதல் தளத்தில் தவமிருந்துகொண்டே உங்கள் காரிகைக்கு தூரிகை வரைந்த ஓவியமாய் கவிதை .கன்னிகை மனம் கனிந்து கார்முகிலாய் பொழியட்டும் அன்பை கன்னல் சுவையாய் காதல் இனிக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. யார்ம் கலைத்து விடமாட்டார்கள் கவலை வேண்டாம்/

    ReplyDelete
    Replies
    1. யாரும் வரம் கொடுக்கறேன்னு சொல்லி கலச்சிடக் கூடாதுன்னுதான் அப்படி சொன்னேன்...

      தங்கள் இனிய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  9. அந்தக் காதல் தெய்வமே வந்தால் நல்லதுதானே? அருமையான கவிதை, வாழ்த்துக்கள் வெற்றிவேல்!

    ReplyDelete
    Replies
    1. அது காதல் தெய்வம் இல்லை கிரேஸ். காதல் தேவதை...

      விரைவில் வருவாள் என்றே நம்புகிறேன்...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. காதலே தவம் தானே..
    அருள் கிட்டும்...:)

    அழகிய காட்சியும் கற்பனையும் சகோ!

    வலைச்சர அறிமுகத்தில் இன்று நீங்களும்! வாழ்த்துக்கள்!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளமதி அக்கா...

      தங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  11. Anonymous12:26:00 PM

    இந்தக் காதல் தவத்தை விட்டிட்டுக்
    காரியத் தவத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
    யாரைப் பார்த்தாலும் திருமணம் குழந்தைகள் உள்ளவரும்
    கருவை மத்திடும் சிந்தனை இல்லவே இல்லை.
    நிறைந்த சிந்தனை உருவாகட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. காதல் தவத்தொடு காரியத் தவமும் சேர்ந்தே உள்ளது அக்கா...

      எண்ணம் முழுக்க அவளும் காதலும் நிறைந்துள்ள வேளையில் என் கருத்தை எப்படி மாற்றிட இயலும்...!

      தங்கள் இனிய அறிவுரைக்கும், வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... முயற்சி செய்கிறேன்.

      Delete
  12. கவிதை தவம் தொடரட்டும்...

    காதல் கவிதைகள் உங்களை பைசா இல்லாமல் பல ஆயிரம் பேரிடம் எடுத்து செல்லும்...

    தொடருங்கள்...
    பெரு மதிப்பிற்குரிய பாலா அய்யா தனது நாற்பதாவது வயதில் எழுதிய காதல் கவிதைகள் இன்னும் என்னை வசீகரித்துக்கொண்டே இருக்கின்றன ...

    காதல் கவிதைகள் கவிங்கனுக்கு சாகா வரத்தை தருபவை..

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மது அண்ணா...

      அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க... தாங்கள் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை. காதல் கவிதை எழுத வயது தேவையில்லை மனமிருந்தால், காதலிருந்தால் போதும்...

      தொடர்ந்து எழுதுகிறேன், ஆதரவிற்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  13. அன்புக்கான தவத்தில்
    அழகான வரிகளில்
    காதல் வெளியீடா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  14. வார்த்தைகள் நல்லா மெருகேறி வருது தம்பி.. கலக்குங்க..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  15. Replies
    1. வணக்கம் அண்ணா...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
  16. சூப்பர்... நைஸ்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீனு அண்ணா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
  17. உங்கள் தவத்தை மெச்சினோம் ..நீர் விரும்பும் காரிகையின் பெயரைக் கூறும் என்று கேட்டாலுமா உங்கள் தவம் கலையாது ?
    த.ம 6

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி... வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
  18. கடுகு சிறிதாயினும் காரம் பெரிசு என்பதுபோல இருக்கு கவிதை. குட்டியாக இருப்பினும் சூப்பர் கற்பனை.

    //வரம் கொடுக்கிறேனென்று
    எந்த தெய்வமும்
    கலைத்துவிடாமல் இருக்கட்டும்
    என் தவத்தை...///
    ஹா..ஹா..ஹா... ஃபீலிங்சோடு எழுதியிருந்தாலும் படித்ததும் சிரித்து விட்டேன்ன் அழகிய கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.இது கற்பனை இல்லை, உண்மைதான்...

      சிரிச்சீட்டிங்களா, ஏன் அதிரா?

      Delete
  19. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி அய்யா..

    ReplyDelete
  20. அவள் வந்து வரம் தரட்டும்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.. அப்படியே இனிய வருகைக்கும்...

      Delete
  21. காதல் தவத்தில்
    நித்தமும்
    வெந்துகொண்டிருக்கிறேன்
    அவளுக்காய்...

    வரம் கொடுக்கிறேனென்று 
    எந்த தெய்வமும்
    கலைத்துவிடாமல் இருக்கட்டும்
    என் தவத்தை...


    என்று எழுதியுள்ள நண்பரே

    வரமும் அவள்தான் வரம் கொடுப்பவளும் அவள்தான்
    எனும்போது தனியாக தெய்வம் எதற்கு?

    ReplyDelete
    Replies
    1. தனியாக தெய்வம் தேவை இல்லை தான் அண்ணா...


      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
  22. தங்கள் தவம் என்றும் கலையாமல் வேகக்கடவது ! ;)

    ReplyDelete
  23. தேவதையின் வழியில் தெய்வங்கள் குறுக்கிடாதிருப்பார்களாக...

    அழகான கவிதை. பாராட்டுகள் வெற்றிவேல்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் இனிய பாராட்டுகளுக்கும் நன்றி அக்கா...

      Delete
  24. தொடரட்டும் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன் சகோதரி...
      நன்றி...

      Delete
  25. அன்பின் வெற்றி வேல் - காதல் தவம் கலைக்க இயலாத தவம் - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா..

      தங்கள் நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...