நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்றேன், அது இரண்டாவது முறை. ஏற்க்கனவே சில வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன், ஆனால் அப்போது என்னால் எந்தப் படமும் எடுக்க முடியல, ஏன்னா அப்போல்லாம் நம்மகிட்ட மொபைல் இல்ல. இந்த முறை செல்லும்போதே படம் எடுக்கலாம்னு டோக்கன் கேட்டான். டோக்கன் 200 ரூபா. நாம தான் காச ஆத்துல போட்டாலும் போடுவோம் ஆனால் இது மாதிரி மட்டும் செலவு பண்ண மாட்டோமே! நுழைவுக் கட்டணம் மட்டும் செலுத்திட்டு உள்ளப் போனேன், நானும் என் இஷ்ட்டத்துக்கு படம் எடுத்துகிட்டு இருந்தேன், வளச்சி வளச்சி எடுத்தேன்னா பார்த்துகோங்களேன்.
அது சோழர் மற்றும் பல்லவ கால சிற்ப்பங்கள் இருந்த பகுதி, ஆனாலும் வெளிச்சம் போதல, அப்போ ஒரு அழகான காஞ்சி நாட்டு பல்லவ சிற்பம் ஒன்று என்னைப் பார்த்து சிரிச்சிகிட்டே உள்ள வந்தாங்க, வந்து டோக்கன் காமிங்கன்னு கேட்டாங்க. நானும் என் நுழைவு சீட்ட காமிச்சேன், அவுங்க மொபைல படம் எடுக்கறீங்களே, அந்தப் படத்துக்கு டோக்கன் காமிங்கன்ன்னு பதில் வந்தது! நானும் விடாம அதுக்கு டோக்கன் தனியா வாங்கணுமான்னு கேட்டேன்? அவுங்க கொஞ்சம் முறைச்சிகிட்டே ஆமாம் வாங்கனும்னு சொல்லிட்டு, இனி படம் எடுத்தா அபராதம் கட்ட வேண்டி இருக்கும்னு போய்ட்டாங்க!!! நமக்கு தான் கொஞ்சம் திருட்டுத் தனம் இருக்கே, கொஞ்சம் பயமாவும் இருந்துச்சு, அப்படியும் விடாம எடுத்து தள்ளிட்டேன், அதுல பாதி படம் தெளிவாவே இல்ல... வெளிய போகும் பொது அதே பொண்ணு கூப்டாங்க. சொல்லியும் கேட்காம நெறைய எடுத்துட்டீங்க போலன்னு நம்மள பாத்து சிரிச்சிகிட்டே கேட்டாங்க, நானும் கொஞ்சம் சிரிச்சேன்... அப்புறம் என்ன, அவுங்க போய்ட்டாங்க. அவுங்க போனதையே கொஞ்ச நேரம் பார்த்துட்டு நானும் கிளம்பி வந்துட்டேன்...
(நாமளும் கதை சொல்லுவோம்ல)
|
சோழர் கால தமிழ் எழுத்து |
|
அம்மன் சிலை |
|
விஷ்ணு |
|
அம்மன் சிலை |
|
நடராஜர் |
புடிச்சிருந்தா ஒரு கமேண்ட போட்டுட்டு போங்க...!!!
அடடா... சிரிப்போடு முடிந்து விட்டதே...! ஹிஹி... ஆனால் படங்கள் அருமை... பாராட்டுக்கள்...
ReplyDeleteவணக்கம் அண்ணா... பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...
Deleteஅழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
Deletepada pakirvukku nantri..
ReplyDeleteவணக்கம் சீனி...
Deleteஅன்பின் வெற்றிவேல் - படங்கள் அருமை - டிக்கெட் வாங்காமல் புகைப்படமெடுத்து மாட்டிக்கொண்டு தப்பித்தும் வந்து விட்டீர்களா ? காஞ்சி நாட்டுப் பல்லவ சிற்பம் கருணைன் காட்டியதா ? பரவாய் இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஆமாம் ஆமாம், அப்படியேதான்...
Deleteஎப்படியோ தப்பித்தாகி விட்டது...