உன் கோபக் கனலில் அருகில்
வந்தவுடன் எரித்துவிடும்
விட்டில் பூச்சியென்று
நினைத்தாயா என்னை!
நான் தேடிச் செல்வது –சிறு
வெளிச்சமும் அல்ல. நீ
எரித்தவுடன் சாம்பலாக
விட்டில் பூச்சியுமல்ல நான்.
பீனிக்ஸ் பறவையடி...
சுடும் சூரியன் எனத் தெரிந்தும்
உன்னை நோக்கியே
பறந்துகொண்டிருப்பேன்- உன்னாலே
நித்தமும்
மடிவதற்க்காய்!!!
................................வெற்றிவேல்...
வணக்கம் சகோதரரே!
ReplyDeleteஇளையநிலாவில் உங்கள் வருகை கண்டேன். வரவிற்கு மிக்க நன்றி!
வானவீதியில் வீறுகொண்டு
பீனிக்ஸ் பறவை ஒன்று
போகும் வேகங்கண்டு
பேசுவதறியாமல் போகிறேன்...
அருமையான கவி. ரசித்தேன். வாழ்த்துக்கள்!
வணக்கம் சகோதரி...
Deleteகடந்த வருகை தான் இளமதியில் என் முதல் வருகை...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி. இனி தொடர்ந்து வருவேன் என்று நினைக்கிறேன்...
காதல் வேகம் கவிதையில் தெரிகிறது. சூப்பர்
ReplyDeleteவணக்கம் அய்யா...
Deleteதங்கள் வருகைக்கும், தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகைத் தாருங்கள்...
உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா... வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.
Deleteகாதல் என்றால் இப்படித்தான் ஆரம்பத்தில் தோணும்...
ReplyDeleteஆரம்பம் மட்டும் அல்ல இறுதியும் இப்படியேதான் தொடரும் அண்ணா...
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
ada...!
ReplyDeleteவாங்க சீனி. வணக்கம். என்ன கவிதைய பற்றி ஏதும் சொல்லாம அட'ன்னு போட்டுட்டு போயிட்டீங்க!!!
Deleteஅடா அடா என்னமாய் பின்னுதப்பா இந்த காதல் சிலந்தி கவிதையை!!!!
ReplyDeleteகாதல் சிலந்தி.... பெயர் புதியதாகவும், அழகாகவும் உள்ளதே!!!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
பீனிக்ஸ் பறவை துணிவு,நம்பிக்கையோட புறப்பட்டாச்சு.வாழ்த்துகள் வெற்றி !
ReplyDeleteஇந்த நம்பிக்கையும், துணிவும் கடைசி வரைக்கும் இருக்கும்னு நம்பறேன் ஹேமா.... வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
Deleteஅருமை.. அருமை...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
Deleteதமிழ்மணத்தில் என் பதிவை எவ்வாறு புதுபிப்பது என கூறுங்களேன் தோழரே.
ReplyDeleteதமிழ்மணப் பதிவுப்பட்டை கிடைத்தாலும்.. அதில் கிளிக் செய்யும்போது Error வருது.
எனது வலைபதிவு jeshwatamiltamil.blogspot.in
இதில் (.com ) இல்லாமல் (.in) என்று இருப்பதாலா?
.in .com இதுதான் தற்பொழுது தமிழ் மணத்தில் பெரும் பிரச்சனை, இதனை மாற்ற சிலர் ஆலோசனை வழங்கியிருந்தனர், நீங்கள் முடிந்தால் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவர் தான் எனக்கும் இந்த பிரச்னையை சரி செய்து கொடுத்தார்.... தீர்வு கிடைத்தால் கட்டாயம் பகிர்ந்துகொள்கிறேன்...
Deleteநன்றி நண்பரே.
Deleteநான் முயற்சி செய்தவரையில் சரியாக பலன் கிடைக்கவில்லை. என்னினும் நீங்க சொன்னதை போல அவரிடம் கேட்டு பார்க்கிறேன்.
முயற்சி செய்து பாருங்கள்... கண்டிப்பாக பலன் கிடைக்கும்...
Deleteவெற்றிபெற வாழ்த்துகள்...
அன்பின் வெற்றிவேல் - கனலில் எரிந்துவிடும் அல்லது கனலால் எரித்து விடும் என்றிருக்க வேண்டாமா ? மடிவதற்க்காய் - க் தேவையா ? கவிதை அருமை - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம், அப்படி போடும்போதுதான் உச்ச கட்ட அன்பை வெளிப்படுத்துவது போல தோன்றியது... அதனால் தான் அப்படிப் போட்டுவிட்டேன் அண்ணா...
Deleteதங்கள் இனிய கருத்துக்கு மிக்க நன்றி...
நல் வரவு...