Apr 26, 2013

காதல் துளிகள்





என் கனவு:

என் கனவின் தொடக்கம்

எதுவாகினும்- அது

ஏனோ சேருமிடம் மட்டும்

நீயாகிறாய்...



முரண்பாடு:

எத்தனை முறைதான் உன்னை

எழுத முற்ப்பட்டாலும்- மை

தீர்ந்து, சொல் காணாமல்

போய்விடுகிறது.



உன்னைப் பற்றிதான் எழுத

முடிகிறதே தவிற- உன்னை

எழுதிய பாடில்லை...!



என் தோஷம்:


என்  மனம்


உன்னை நினைக்கும்

போதெல்லாம்

பித்துப் பிடிக்கிறதே!


இதன் பெயர் தான்

கன்னி தோஷமோ!



மாற்றம்: 

புறமெங்கும் அனல் வெயிலாய்

புழுதிக் காற்று பறக்க...


அங்கமெங்கும் குளிர் காற்றாய்

புயல் அடிக்குதடி- இந்த மாற்றம்

யாவும் உன்னால் தானே!



இன்னும் மிச்சம் ஏதேனும் உண்டா!

பார்க்கும் பார்வையில் மட்டும்

என் ஐம்புலனங்களில் தீயை விதைத்து

செல்லும் பெண்ணே!!!


இன்னும் என்னை என்னவெல்லாம்

செய்வதாய் உத்தேசம்...

                                  -வெற்றிவேல்


11 comments:

  1. ovvontrum arumai..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும், மேலான வருகைக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  2. //உன்னைப் பற்றிதான் எழுத

    முடிகிறதே தவிற- உன்னை

    எழுதிய பாடில்லை...!// - அருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  4. காதல்....இது காதல்.உணர்வை சொட்டுச் சொட்டாய் வெளிப்பாடுத்திய விதம் அழகு வெற்றி !

    ReplyDelete
    Replies
    1. :) இனிய கருத்துக்கு மிக்க நன்றி ஹேமா...

      Delete
  5. அன்பின் வெற்றிவேல் = அனைத்தும் அருமை - சிந்தனை நன்று - கனவு துவங்கும் முன்ன்பரே சேருமிடம் தீர்மானிக்கப் படுகிறது. கதாநாயகையினைப் பற்றித்தான் எழுத முடிகிறதே தவிர கதாநாயகியினை எழுத இயல்க்வில்லை . கன்னி தோஷம் - புதிய கண்டுபிடிப்பு - பலே பலே - கற்ப்னை அருமை. புழுதிக் காற்றும் குளிர் காற்றும் ஒருங்கே புறத்திலும் அகத்திலும் அடிக்கிறது - சிந்தனை நன்று. பார்க்கும் பார்வையிலேயே ஐம்புலன்களூம் பற்றி எரிகிறதே - கவிஞனுக்குத் தேவையான கற்பனைதேவைக்கு மேலேயே இருக்கிறது, நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...