ஸ்லிக் என்று புதிதாக அறிமுகமாகி உள்ள தேடியந்திரம், வெறும் தேடியந்திரமாக
மட்டுமல்லாமல், அதுவே உலாவியாகவும் செயல்படக் கூடியவாறு
வடிவமைக்கப்பட்டுள்ளது.
21ஆம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக்கொள்ளும் ஸ்லிக் உலகின் முதல் தேடல் உலாவி என்று அழைத்து கொள்கிறது.
வழக்கமாக என்ன செய்வீர்கள் கூகுள் போன்ற தேடியந்திரத்தில் நுழைந்து
குறிச்சொல்லை டைப் செய்து தேடுவீர்கள். அதன் பிறகு எந்த தேடல் முடிவை
பார்க்க வேண்டுமே அதில் கிள்க் செய்தால் தனியே இன்னொரு இணைய பக்கம்
தோன்றும். அடுத்த முடிவு தேவை என்றால் மீண்டும் ஒரு கிளிக், மீண்டும் ஒரு
விண்டோ ஓபன் ஆகும். இவ்வாறு தான் நாம் தகவல்களை தேடுகிறோம்.
இப்படி ஒவ்வொரு இணையதளமாக தனியே விஜயம் செய்வதற்கு பதில் எந்த
பக்கத்தில் தேடுகிறோமோ அதே பக்கத்திலேயே புதிய இணைய பக்கத்தை பார்த்து
விடலாம்.
தேடல் முடிவுகளில் எதன் மீது கிளிக் செய்தாலும் அதற்கான இணையத்தளம் அதே
பக்கத்தில் அருகில் தோன்றுகிறது. ஆகவே தேடல் பக்கத்தில் இருந்து
வெளியேறாமலே தேடல் முடிவுகளை பார்க்கலாம்.
அதே போல தேவைப்பட்டால் ஒரே பக்கத்தில் பல வகையான முடிவுகளையும் பார்க்க
முடியும். அதாவது இடது பக்கத்தில் தேடல் முடிவுகள், வலது பக்கத்தில்
டிவிட்டர் பதிவுகள் என பார்க்கலாம்.
மேலும் நாம் திறந்த எல்லா இணையத்தளங்களையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.
இணையத்தளங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நமக்கான இணைப்புகளையும்
தனியே உருவாக்கி கொள்ளலாம்.
No comments:
Post a Comment
மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...