Feb 2, 2015

கவிதை: காதலியை வெறுக்கிறேன்...

நான்தான் முதலில் நோக்கினேன்
அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்
பிறிதொரு சமயம் அவளும் நோக்கினாள்
பார்வை காதலானது
காதல் தெய்வீகமானது

அவள் விழிகளைப் பார்த்தே
காலத்தைக் கடக்கும் வித்தையறிந்தேன்.

உதட்டுப் பிளவினூடே
உயிரை உறிஞ்சினாள்...
அமரத்துவத்தை உணர்ந்தேன் நான்.

ஓருயிர் ஈருடலானோம்.

பிறவிப்பலனை அவள்மூலம்
அடைந்தேன்.

அவளின்றி நானில்லை
எனும் நித்திய நிலை.

அவளது புன்னகையைக் கொண்டே 
யுகங்களைக் கடக்க 
முனைந்தேன்...

காலம் கடந்தது.

மனம் இப்போதெல்லாம்
என் காதலியை 
வெறுக்கவே செய்கிறது.

காரணம் தெரியவில்லை.

ஒருவேளை
காதலி மனைவியானதும்கூட
காரணமாக இருக்கலாம்...

அவள் காதலியாகவே 
இருந்திருக்கலாம்...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

8 comments:

  1. மனைவி தொடர்ந்து காதலியாகவே இருக்கலாமே
    அது நம் மனதில்தான் இருக்கிறது இல்லையோ
    மனம் கவர்ந்த படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நாமும் காதலனாகவே இருக்க முடியுமா தம்பி...?

    ReplyDelete
  3. கவித சும்மா கொட்டோ கொட்டன கொட்டுது :) கலக்குங்க பாஸ் கலக்குங்க

    ReplyDelete
  4. கல்யாணத்திற்கு பிறகும் காதல் தொடர முடியும். :) அது காதலாக ஆரம்பித்திருக்குமேயானால்

    ReplyDelete
  5. ஓஹோ!!கவிதை அப்படி போகுதா???:)))) நடக்கட்டும் நடக்கட்டும்:))

    ReplyDelete
  6. மனைவி ஆனபிறகும் காதல் தொடரலாம் வெற்றி..... :)

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...