தொடுத்த மல்லிகையோடு
அகம் மலரச் செய்யும்
சிரிப்புடன்
மரகதப் பச்சை பட்டுடுத்தி
கடந்து செல்கிறாள்
கன்னியொருத்தி...
கடந்த மாத்திரத்தில்
கடந்த காலத்தில்
காதலை உணர்ந்த தருணம்
நிழலாடத் தொடங்கிவிட்டது
கண்களில்...
மறுத்தவள் ஏனோ
மறைந்துவிட்டாள்
என்னைவிட்டு...
மயங்கிய மனம் மட்டும்
இன்னமும்
தவித்துக்கொண்டிருக்கிறது
அவளைத் எண்ணியே...!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
காதலை உணர்ந்த தருணம்
நிழலாடத் தொடங்கிவிட்டது
கண்களில்...
மறுத்தவள் ஏனோ
மறைந்துவிட்டாள்
என்னைவிட்டு...
மயங்கிய மனம் மட்டும்
இன்னமும்
தவித்துக்கொண்டிருக்கிறது
அவளைத் எண்ணியே...!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
அப்படித்தான்...!
ReplyDeleteவீட்டிலே சொல்லிட வேண்டியது தான்...
காதல் முத்திவிட்டது தம்பிக்கு!
ReplyDeleteஆஹா, ஒரு தலை காதலா, சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு தவித்துக்கொண்டிருக்கும் மனதை சாந்தப்படுத்துங்கள் சகோதரா.
ReplyDeleteதங்களுக்கு திருமணம் ஆகவில்லையென்றால், என்னுடையை முந்தைய கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteஇல்லையென்றால், முகவரியை தாருங்கள், உங்கள் மனைவியிடம் சொல்லி வைக்கிறேன். அப்புறம் எப்படி மனது தவிக்கிறது என்று பார்க்கலாம்.
தண்ணியை காட்டி அவள் சென்று விட்டாள்,அவளை எண்ணியே நீங்கள் மருகுவது ஏனோ ?
ReplyDeleteத ம 2
மறைந்தவளை மறந்துவிட்டு அடுத்த வேலைய பாரு தம்பி!! உனக்கு வில்லனே உனக்குள் இருக்கும் டெஸ்டஸ்ட்ரான்கள் தான்!
ReplyDeleteசெந்தில் தம்பி காதல் கவிதகளாகக் கொட்டுதே! டும் டும் டும் ஏரம் வந்தாச்சு?!!!!1
ReplyDeleteநல்ல அருமையான கவிதை! வீட்டில சொல்லிடுங்க தம்பி! காதல் என்றால்! இல்லை அவங்கள பார்க்கச் சொல்லிடுங்க தம்பி! தருணம் வந்து விட்டதோ!?!!!!!
மயங்கிய மனதைத் தட்டி எழுப்புங்க...
ReplyDelete
ReplyDelete"மயங்கிய மனம் மட்டும்
இன்னமும்
தவித்துக்கொண்டிருக்கிறது
அவளை எண்ணியே...!" என
உள்ளத்து உண்மையைப் பகிருகிறீர்...
நல்ல கவிதை...... பாராட்டுகள்...
ReplyDeleteத.ம. +1
மயக்கியவள் மாயமாகிப்போனாளோ. கவிதை அருமை.
ReplyDeleteகாதல் மஹாகவி வெற்றிவேல் அவர்களே........!!!!
ReplyDeletegood..
ReplyDeleteVetha.Elangathilakam.