Jan 23, 2014

கர்வம் தகரும் தருணத்திற்காக...

அருகில் அவள்
இல்லாததாலோ என்னமோ
எழுதும் கவிதைகளும்
உயிரற்றதாகவே தோன்றுகிறது...!

அவள் எச்சில் முத்தமில்லாமல்
தினமும் பருகும்
காலைத் தேநீரும்
கசக்கவே செய்கிறது...!

பெருத்த சண்டையில்லை
சிறு கருத்துவேறுபாடே.
அவள் சென்றுவிட்டாள்
நான் விட்டுவிட்டேன்...!

அவள் அழைப்பாளென நானும்
நான் அழைப்பேனென அவளும் - என
இருவருமாய் தோற்றுக்கொண்டிருக்கிறோம்
எங்கள் காதல் பந்தயத்தில்...!

அவளுடளான ஊடலில் என்
கர்வம் தகர்ந்து- காதல் பெருகும்
தருணத்திற்காக பொறுமையுடன்
காத்திருக்கிறேன் எங்களுக்காக...!!!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

23 comments:

  1. Anonymous1:53:00 PM

    வணக்கம்
    தம்பி..

    அவள் எச்சில் முத்தமில்லாமல்
    தினமும் பருகும்
    காலைத் தேநீரும்
    கசக்கவே செய்கிறது...!

    என்ன வரிகள்........அருமை.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்... மிக்க நன்றி...

      Delete
  2. அருமை நண்பா...

    பத்தயத்தில் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...

      Delete
  3. அட அட இது வேறயா?
    வாழ்த்துகள்! :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கிரேஸ்,

      அப்பப்ப இதுவும் உண்டு... வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தோழி,,,

      Delete
  4. காதலில் காத்திருப்பதென்பதுவும் மிக மிக அவசியமானதொன்று என
    உணரவைத்த சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    சகோதரா .முடிந்தால் இதற்கும் தங்களின் கருத்தினை இட்டுக் கௌரவப்
    படுத்துங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
    http://rupika-rupika.blogspot.com/2014/01/blog-post_22.html#comment-form

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி,

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வருகைத் தாருங்கள்...

      Delete
  5. காதலில் அதீத இடைவெளியும் ஆபத்தே... அருமையான வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி, வருகைக்கும், இனிய கருத்துக்கும்...

      Delete
  6. "அவள் எச்சில் முத்தமில்லாமல்
    தினமும் பருகும்
    காலைத் தேநீரும்
    கசக்கவே செய்கிறது...!" என
    அவளின்றிய அருமை புரிகிறதே!

    ReplyDelete
    Replies
    1. அவளின்றிய அருமை....!!!!!!!!!!

      தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா...

      Delete
  7. அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. வணக்கம் அண்ணா...

    தங்கள் வருகைக் கண்டு மகிழ்ந்தேன்...

    ReplyDelete
  9. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்7:44:00 AM

    களப்பிரர்கள் வரலாற்றுத்தொடர் என்னாச்சு?

    ReplyDelete
    Replies
    1. சில பதிவுகள் எழுதியுள்ளேன். அடுத்த பதிவிற்கு தகவல் திரட்டிக்கொண்டு இருக்கிறேன்...

      Delete
  10. Anonymous9:42:00 PM

    Nanru-
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  11. அவளுடளான ஊடலில் என்
    கர்வம் தகர்ந்து- காதல் பெருகும்
    தருணத்திற்காக பொறுமையுடன்
    காத்திருக்கிறேன் எங்களுக்காக...!!
    தகர்த்திடும் வெகு விரைவில்
    அன்பு மேலீட்டால்.
    இனிய காதல் அருமை தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  12. அருமை என்பதைத் தவிர சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் வெற்றி.

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...