Jun 17, 2013

மற்றுமோர் ஜென்மம் உண்டெனில்...


வயிற்றில் இருக்கும் உனக்கு 
அழகுக் கதைகள் கூறி- உன் 
சிறு அசைவுகளையும் காதுவைத்துக்
கேட்டு ரசிக்கும் -என் அக்கா
மகளாய் நீயாக வேண்டும்...

உன் கரம் கோர்த்து ஊர் சுற்றி
ஆளானதும் பச்சை ஒலைக்கட்டி
என் குரலைக் கேட்டதும்- கதவிடுக்கில்
நாணத்துடன் மறைந்திருந்து பார்க்கும்
உன்ஆசை மாமனாக நானாக வேண்டும்...

சோம்பல் முறிக்கும் உன்பேரழகு,
அதிகாலையில் நீயிடும் கோலத்தின்
புள்ளியில் நான் தொலைந்து, உன்சிறு
புன்னகைகளையும் ரசிக்கும்படி உன்
எதிர் வீட்டில் நான் வசிக்க வேண்டும்...

நம் காதலுக்கு நம் பெற்றோரே 
தூபமிட்டு ஆசிவழங்க, உனக்குப்
பிடித்த பையனை முதல் வருடமும்
எனக்குப் பிடித்த பெண்ணை மூன்றாம் 
வருடமும் நாம் பெற வேண்டும்...

திகட்டும் அன்பில் இருவரும் திளைத்து
உன் மடியில் என்உயிர் பிரிந்து, இப்பிறப்பில்
உன்னை நினைத்தே என்உயிர் வேகுவது போல்
உன் பைந்தமிழ் அழுகுரல் கேட்டே- என்
உடல் வேகவேண்டும் என் மறுபிறப்பில்....

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

13 comments:

  1. அட்டகாசம் போங்க...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  2. Replies
    1. வணக்கம் சீனி...

      காதலே தான்...!!! தமிழ்க் காதல்.

      Delete
  3. வணக்கம் அண்ணா...

    வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  4. Replies
    1. வணக்கம்... வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. அன்பின் வெற்றிவேல் - அருமையான கவிதை - சிந்தனை நன்று - விருப்பம் நிறைவேற நல்வாழ்த்துகள் - அடுத்த பிறவியில் அவள் அக்கா மகளாகப் பிறக்கவும், இவன் ஆசை மாமனாகப் பிறக்கவும், அவள் எதிர் வீட்டில் இவன் வசிக்கவும், இருவரும் மணமுடித்து, முதலாமாண்டு பையனும் மூன்றாமாண்டு பொண்னூம் பெற்றுக்கொள்ளவும், இப்பிறவியிலும் மறுபிறவியிலும் அவளுக்கு முன்னரே அவன் மறையவும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  7. வாழ்க வளமுடன்!

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...

அதிகம் விரும்பப்பட்டவை