Oct 30, 2012

என் வான் நிலவு

நண்பர் சிகரம் பாரதியின் கவிதை இது, மிகவும் பிடித்தது. சில மாற்றத்துடன் இங்கு பதிகிறேன்...

என் வானில்
என்னை நனைத்த படி
என்னுடன் ஓராயிரம் நட்சத்திரங்கள்..


என் வானில்
நிலவு கூட
நிலையாக இருப்பதில்லை...

அடிக்கடி
தன் உருவத்தை
மாற்றி மாற்றிக் காட்டி
என்னை ஏய்க்கின்றது...

கற்பனைகளில் கூட
கண்கட்டி வித்தை
காட்டுகின்றது...

அது போலத்தான்
அழுகையும் சிரிப்பும்
அவ்வப்போது
என்னுள் மாறி மாறி
வருகின்றன...

அடிக்கடி
நட்சத்திரங்களின்
நவரசம் காட்டி
மின்னி மறையும்
நிலவுகளாய்.

என்னுடைய
உறங்கும் இரவுகளில்
கை விளக்குகளுடன்
நிலவொளியில்
ஆடிப்பாடியபடி பலர்...

அவர்களின் கை
விளக்குகளைப்
போன்றவைதான்
எனது நிலவுகளும்...

என் அனுமதியின்றியே
களவாடப்படும் சில!
மறைந்து போகும் சில!

ஒன்றல்ல இரண்டல்ல
என் கற்பனை
வானத்தில்
ஆயிரமாயிரம் நிலவுகள்
உலாப் போகின்றன 
சில சமயங்களில்......

இல்லை
அடிக்கடி அவற்றுள்
சில நிலவுகள்
உதிர்ந்து விடுகின்றன
நீர்த்து போன
நட்சத்திரங்களைப் போல.....

இன்னும் சில நிலவுகள்
மின்னி மின்னி
மறைவதும் ஒளிர்வதுமாய்
விளையாட்டுக் காட்டுகின்றன
என்தன் வானில்...

உதிர்ந்த நட்சத்திரங்களும்,
உதிரும் நட்சத்திரங்களும்
மீண்டும் ஒளிரும் என்ற நம்பிக்கையில் நான்...


சிகரம் பாரதியின் இக்கவிதை இலங்கையின் நாளிதழான "தினகரன்" வெளியானது...

நன்றி:

சிகரம் பாரதி

14 comments:

  1. Super vettri. Nalla irukku. Nalla yosichirukkenga. Ennoda blog IDku link kuduthu unga nermaiya kaattinadhuku oru salute. Na ennoda kavidhaiya vaasikkum podhellam oru kurai irukkura madhiriye thonum. Aanaa ippo manasukku niraiva irukku. Thanks and vaalththukkal "kavingnar vettri"!.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் வெற்றி. கேட்க நல்லாத்தான் இருக்கு. சத்தம் போட்டு சொல்லிடாதிங்க, அடிக்க வந்துடுவாங்க...

      முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. கவிதை ரொம்ப நல்ல இருக்கு..உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      தொடர்ந்து வாருங்கள்...

      நன்றி, வணக்கம்...

      Delete
  3. நன்றாக எழுதியுள்ளீர்கள் தோழரே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      வருகைத் தொடரட்டும்...

      Delete
  4. நான் அவருடைய தளத்திலும் சென்று படித்துள்ளேன்
    அழகான கவிதை
    தினகரன் இதற்கு இடம் கொடுக்காவிட்டால் வேறு எதற்குக் கொடுப்பதாம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை நான் அங்கும் பார்த்தேன் நண்பா...

      வணக்கம், தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி நண்பா...

      Delete
  5. அருமையாக இருக்கு “சுட்ட கவிதை”:)...

    ReplyDelete
    Replies
    1. சுட்ட கவிதை (பழம்) என்றுமே ருசி அதிகம் தானே!!!

      வணக்கம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி...

      Delete
  6. நல்ல வரிகள்... அருமை...

    இருவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
      தொடர்ந்து வருகைத் தாருங்கள் அண்ணா...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...