Oct 22, 2012

அழகான ஆண்கள்: சத்தியமா நான் மனிதர்களைப் பற்றி சொல்லுலீங்க

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், தங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துகள்... கல்விச் செல்வமும், பொருள் செல்வமும் பெருகட்டும் அனைவருக்கும்...

சமீபத்தில் நான் முகப்புத்தகத்தில் படித்த ஓர் பொன் மொழி...

உலகில் உள்ள ஆண் இனம் அனைத்துமே அழகானதுதான். ஆனால் இந்த மனித இனத்தைத் தவிர...
                                                             
 -------------- மேற்க்கத்தியப் பழமொழி---------------

அது எந்த அளவிற்கு உண்மை என நான் தேடிய போது கிடைத்த சில நிழற்ப் படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

பார்த்து எப்படி உள்ளது என்று கமெண்டில் சொல்லிட்டுப் போங்க...



















இப்படி ஆண் இனத்த இவ்ளோ அழகாகவும் கம்பீரமாகவும் படைத்த இறைவன் ஏனோ இந்த மனித இனத்தில் மட்டும் மாறுபட்டு சிந்தித்து நமக்கு துரோகம் பண்ணிட்டாரோன்னு தோணுது... கீழ இருக்குறதையும் பார்த்துவிட்டு போங்களேன்...





மேல இருக்கற படமும் ஒரு உதாரணத்துக்குதான்... உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்'ன்னு நினைக்கிறேன்....

25 comments:

  1. படங்கள் அருமை... (மயில் படங்கள் சூப்பர்ப்...)

    முடிவில் ஏன் இப்படி ஒரு அழுகைப்படம்...?

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, முதல் ஆளாய் வருகைத் தந்ததற்கும், அழகான கருத்து வழங்கலுக்கும் மிக்க நன்றி...

      கடைசியில் இருந்த அந்த அழுகாச்சிப் படத்தை எடுத்துட்டேன்... அழகா இருந்துதுன்னு போட்டேன்... உங்கள் ஆட்சேபனைக்குப் பிறகு இருக்கலாமா அது...???

      Delete
  2. தமிழ்மணத்தில் தளத்தை இணைக்கவில்லையா...?

    அது சரி... பகிர்வு வெளியிட்டதும் udanz 199 likes - எப்படி...? அந்த ரகசியம் சொல்லக்கூடாதா...?

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணத்தில் எனது தளத்தை இணைக்கும் பொழுது சிறு பிரச்சனைகள் வருகிறது. இடுகையை பதிவு செய்து விட்டேன். ஆனால் பதிவினை இணைக்கும் பொழுது இடுகையை பதியவும் என்று வருகிறது. ஆதலால் தான் தமிழ் மணத்தில் இணையாமல் உள்ளேன்...

      அந்த உடான்ஸ் ரகசியம் எனக்கும் ஏதும் தெரியல, அதுவா காமிக்குது... சரிபண்ண வழி இருந்தால் சொல்லுங்களேன்...

      Delete
  3. என்ன நண்பா இப்பிடி ஒரு சைசா சிந்திக்கிறீங்க...
    இரைவனின் படைப்புக்களில் சிறந்து மனித இனம் தான் மனிதர்களை விட அழகானது எதுவும் கிடையாது.....
    மனிதர்கள் மனிதர்களாக இருக்கும் வரையில் அவர்கள் அழகுதான். ஆனால் இப்போ இருக்கிர மனிதர்களெல்லாம் மிருகமாக மாறுகிறார்களே அதுதான் அழகு குறையுது போல

    படங்கள் அழகு

    ReplyDelete
    Replies
    1. நண்பா, மனித இனம் சிறந்தது தான். நான் இங்கு அதனைப் பற்றிக் கூற வரவில்லை. அழகு ஆண் இனமா இல்லை பெண் இனமா? என்பது பற்றிதான் சிந்தித்தேன்... அதிலும் மனித ஆண் அழகு என்பதைவிட மற்ற இன ஆண்கள் அழகு என்பதையே கூறினேன்...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  4. sako....!

    padangal pramaatham....

    manitharkalin azhaku-
    seyal paadukalaakum!

    ithu en-
    nilaipaadaakum!

    ReplyDelete
    Replies
    1. நண்பா, உண்மைதான். செயல்பாடுகளும் ஒருவனை மிக அழகாக எடுத்துக் காட்டிவிடுகிறது... உங்கள் நினைப்பும் சரியே...

      தங்கள் முதல் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றிகள்...

      Delete
  5. ஆண்மையே ஆண்களின் அழகு!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தாங்கள் கூறுவதும் உண்மைதான்.

      ஆண்மைதான் ஆண்களின் முதல் அழகு...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. மயில் படங்கள் மிகவும் அழாக இருக்கிறது..பகிர்வுக்கு மிக்க நன்றி...

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும், பிடித்தப் படத்தை அழகாக கூரியுள்ளதற்க்கும் முகுந்த நன்றிகள்...

      தங்கள் முதல் வருகை தொடர் வருகையாகட்டும்...

      நன்றி, வணக்கம்...

      Delete
  7. மனித இனத்திற்கு அடுத்ததுதான் எல்லாமே என்கிறார்கள்.மனிட மாண்புகள் நிறைய விரவிக்கிடக்கிற சமூகம் இது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், விமலன். தாங்கள் கூறுவதும் உண்மைதான், மனிதன் தனக்கு பிறகுதான் அனைவரும் என நினைத்ததன் காரணத்தால் தான் இயற்க்கை வளம் அனைத்தையும் தானே அழித்துக் கொண்டும், மாசுபடுத்திக் கொண்டும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்...

      ஏனோ இப்பூவுலகில் தான் மட்டும் தான் வாழ்வதாய் ஓர் எண்ணம்...

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. அழகிய படத்தொகுப்பு.... ஆண்களும் அழகு தான்!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  9. என்ன நண்பா அழகான ஆண்கள் படங்கள் வரிசைல எனது படத்தை விட்டுவிட்டாய்???இருந்தாலும் எனது நிழல் படத்தை(சிங்கம்) போட்டதுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், உங்கள் படத்தை போடலாம்னு தேடித் பார்த்தேன்... எங்கும் கிடைக்கல அதான் சிங்கப் படத்த எடுத்து போட்டுட்டேன்....

      வணக்கம் நண்பா, தங்கள் வருகைக்கும் அழகான இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. ஆஹா.. அனைத்துமே அழகு. அதிலும் அந்தப் பழமொழி சூப்பரோ சூப்பர்ர்:)...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆதிரா, எனக்கும் அந்தப் பழமொழி மிக பிடித்திருந்தது...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... வருகைத் தொடரட்டும்...

      Delete
  11. படங்கள் அழகு. அறிவியல் பூர்வமாக விலங்கினங்களில் ஆண் இனம் அழகாகப் படைக்கப்பட்டிருக்கக் காரணம் அதன் இணையை ஈர்க்கத்தான். மனித இனத்தில் வீரம் தான் அழகு.அதனால் தான் அந்தக் காலத்தில் போருக்கு போவது அழகானது. இப்போது அதுதான் உழைப்பாகியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வணக்கம் எழில். தங்கள் வருகைக்கும், அழகான கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  12. padangal arumai solla varthai illai









    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா...

      Delete
  13. இந்த கேள்விய நான் ரொம்ப நாளைக்கு முன்பே யோசித்திருக்கேன் :)இந்த விசயம் பற்றி என் கருத்து : பொதுவா ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அழகாய் தெரிவது இயற்கை செய்து வைத்திருக்கும் ரகசிய ஃபார்முலா,மிருகங்களும் பறவைகளும் நம் இனம் இல்லை என்பதால் பொதுவாக ஒரு கண்ணோட்டத்தில் நம்மால் பார்க்க முடிகிறது !! நம் இனம் (மனித) என்று வருகிற போது இயற்கையின் ஃபார்முலா நம்மை Stuck செய்துவிடுகிறது..!! பெண் அழகென்று சொல்ல ஆரம்பித்துவிடுகிறோம் !அழகாய் இருக்கிறாய் என்று சொல்லும் போது பெண்களும் மயங்க ஆரம்பித்து விடுகிறார்கள் :) ஆண் மிருகங்களுக்கும், ஆண் பறவைகளுக்கும் பிரத்யேக உடல் வாகை அளித்து பெண் விலங்குகளையும் பறவைகளையும் கவர கைகொடுத்த அதே இயற்கை மனித இனத்திற்கு மனம் எனும் மாயக்கருவியை கொடுத்திருக்கிறது,பேசுதல்,வர்ணித்தல்,கவிதை என கவர்தல் வேறு வடிவத்தில் நடக்கிறது !! :)

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...