Oct 14, 2012

என்தன் இறைவா! இது நியாயமா?

என்தன் இறைவா
நான் வணங்கும் ஈசா!!!
எனக்கும் அருள்புரியேன்...

அன்று பரவையிடம்
இருமுறை தூது சென்றாய்
சுந்தரனுக்காக.
அவன் காதலை அவளிடம் உரைக்க.

எனக்கும் தூது செல்லேன்
ஒரே ஒரு முறை.



உன் நெற்றிக் கண்ணில் வெந்தால்
என் உயிர் ஒரு முறை மட்டுமே போகும் -ஆனால்
இவளின் அழகிய தண்பார்வைத் தீயில்
என் உயிர் நித்தமும் எரிந்து
அது என் உடலையும் வாட்டுகிறதே!!!
அவள் நினைவே மீண்டும்
உயிரையும்
கொடுத்துவிடுகிறதே...

நினைவில் இருக்கையில் கண்களில்
மின்னலென பாய்கிறாள்....
கனவிலும் அழகிய ராட்சசியாய்
முன் வந்து கனவையும் அவளே பறித்துக் கொள்கிறாள்...

நினைவு, தூக்கம் இரண்டிலும்
அவளே சங்கமித்து என்னுள்
என்னை விரட்டி ஓயாது திரிகிறாள்
என் மனத் தீயில்.

என் இறைவா அவளிடம் சென்று கூறேன்,
இப்படியே சென்றால்
என் உயிர் எனைப் பிரிந்து
உனையும் சேராமல்
அவளிடம் தஞ்சமடைந்து விடும்
என்பதை ஒரு முறைக் கூறேன்.

காலம் கடந்து போகுமுன்னே
ஞாலம் விட்டுப் பிரியுமுன்னே
அவள் நினைவில் நான் வாடுவதை
அவளிடம் சொல்லி
எனை வந்து சேரச் சொல்லேன்.
என்தன் இறைவா.

எனக்காக செல்லேன் அவளிடம்.
என் அன்பை அவளிடம் கூறி ஏற்கச் சொல்லேன்.
நீ மட்டும் ஏற்கச் செய்தால்
நான்  விரதம் இருந்து விளக்கேற்றி
தேங்காய் உடைப்பேனே, அவளுடன்!!!
என்தன் அன்பைக் கூறிவிடேன்...

உன் பக்தன் என்னை வாடச் செய்து
நீ மட்டும் உன் தேவியுடன் நித்தமும்
மகிழ்ச்சியில் திளைக்கிறாயே?
இது நியாயமா! நீயே கூறேன்...

........................................................வெற்றிவேல்


20 comments:

  1. இறைவனையே காதல் தூதுக்கு அனுப்புகிறது உங்கள் காதல் வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், ஆயிஷா. ஆம்... யாவும், அவன் செயல்...

      வருகைக்கும் கருத்துக்கம் மிகுந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  2. நண்பா ரொம்ப வித்தியாசமா இருக்குது
    நிஜமாலுமே நீங்கதானா எழுதினீங்க.:P

    டெம்ப்ளேட் அழகாக இருக்குது

    ReplyDelete
    Replies
    1. நண்பா, உங்களுக்கு இந்தக் கேள்வி எழுவது மூன்றாவது முறை. எத்தனை முறைதான் என் மேல் தங்களுக்கு சந்தேகம் வருமென்று தெரியவில்லை. இது நான் தான் எழுதியது. நானே தான் எழுதியது நண்பா.

      சமீபத்தில் தான் இனியதள அமைப்பை மாற்றினேன்.

      தங்கள் வருகைக்கும், அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
      தொடர்ந்து வாருங்கள்...

      Delete

  3. வணக்கம்!

    கவிதை மிக அருமை!
    கன்னல் தரும் இனிமை!

    என்னுயிர்த் தோழா! உன்றன்
    இறைவனின் துாதைக் கண்டேன்!
    இன்னுயிர்த் தமிழைக் கொஞ்சி
    இயற்றிய வரிகள் இன்பம்!
    பொன்னுயிர்க் காதல் தேவி
    புன்னகை புரிய வேண்டி
    நன்னுயிர் பெற்ற நானும்
    நாதனை வேண்டு கின்றேன்!

    என்தன் என்றும் எழுதலாம்
    என்றன் என்றும் புணா்ந்தும் எழுதலாம்

    ReplyDelete
    Replies
    1. அய்யா, தாங்கள் என்னை தோழா என்று அழைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.அதிலும் என் கவிக்கு எதிர் கவி பாடியுள்ளது மிகவும் அருமை.

      தமிழ் போற்றி என்றும்
      அமிழ்தாய் எழுதும் அய்யா.
      உன்தன் எதிர்கவி கேட்டு என்றன்
      உள்ளம் உவகை அடைகிறது.
      என்றன் வேண்டுதல் கேட்காத ஈசன்
      எள்அளவு உன்றன் சொல் கேட்பானாயின்
      உள்ளம் கடந்த மகிழ்ச்சி
      உலகில் எதுவும் இருக்காது.
      அவனைத் துதித்த நான் இன்று
      அவளைத் துதித்த கோபமோ-யார்
      கண்டது அவனின் திருவிளையாடலை.

      இதுவும் ஒரு எதிர்க்கவி பாடும் முயற்ச்சியே.

      அய்யா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா, தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  4. உங்கள் காதல் , கவிதையுடன் வளமுற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அருண்பிரசாத். தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி.

      தொடர்ந்து வாருங்கள்... நன்றி...

      Delete
  5. ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது உங்களின் கவிதை வரிகள்...பகிர்வுக்கு மிக்க நன்றி...

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி.

      தொடர்ந்து வருகைத் தாருங்கள்...

      Delete
  6. நியாயமே இல்லை...

    சீக்கிரம் விசேசம் சொல்லுங்க...!

    ReplyDelete
    Replies
    1. நியாயம் இல்லை என்பது உங்களுக்கு தெரிகிறது. அவருக்குத் தெரியவில்லையே!!!

      தொடர்ந்து வாருங்கள் அண்ணா. மகிழ்ச்சி... நன்றி, வணக்கம்...

      Delete
  7. //நீ மட்டும் ஏற்கச் செய்தால்
    நான் விரதம் இருந்து விளக்கேற்றி
    தேங்காய் உடைப்பேனே, அவளுடன்/

    கடவுளுக்கே கையூட்டா ஹா..ஹா...
    கடவுள் விடு தூதா ?

    ReplyDelete
    Replies
    1. இது கையூட்டு ஆகாது, விரதம் இருந்து பின் வரம் கேட்டால் தான் கையூட்டு. நான் பின்பு தானே தருகிறேன் என்று கூறுகிறேன்...

      நன்றி, வணக்கம். தொடர்ந்து வாருங்கள்... கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

      Delete
  8. கவிதை மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  9. வரிகள் மிகவும் அருமை!

    ஆனால், இது ஆண்டவனிடம் வேண்டும் வேண்டுதலா? அல்லது அவர்மீது கொண்ட பொறாமையா? புரியவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. பொறாமைல்லாம் ஏதும் இல்லை. வேண்டுதல் மட்டும் தான்... அவர் தான் என்னைப் பார்த்து பொறாமைப் பட வேண்டும்...

      ஹி ஹீ

      Delete
  10. அன்பின் வெற்றிவேல் - இறைவனைத் தூது விடுகிறாயா - நிச்சயம் தூது செல்வார் . கவலை வேண்டாம் - பொறுத்திரு - விரைவினில் நட்க்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... அய்யா.

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...