Jan 19, 2016

உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்


என் தேடல்
உனக்காகத்தான்...
என் பயணம்
உனக்காகத்தான்...
என் இலக்கும்
உனக்காகத்தான்...

யுகம் யுகங்களாக இறந்து
மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டிருக்கிறேன்
உனக்காக...

இருவரும் சந்திக்கும்போது
காதல் மொழி வேண்டாம்...
விழிகள் இணைந்து
நேரத்தைக் கடக்க வேண்டாம்..
உதட்டோரம் சிறு சிரிப்பு,
கடைக்கண் பார்வை என
எதுவும் தேவையில்லை...

பெருஞ்சிந்தனையில் பேனாவைக் கடிக்கும்
சமயத்திலோ...
உறக்கம் வராமல் புரண்டு படுக்கும்
பொழுதிலோ – அல்லது
தனிமையை விரும்பி
அமர்ந்திருக்கும் காலத்திலோ
என் நினைப்பு உன்னுள் தோன்றி
மறைந்தால் போதும்...

உனக்கும் சேர்த்து
நான் ஒருவன் காதல் செய்வேன்...


சி.வெற்றிவேல்...

சாளையக்குறிச்சி

6 comments:

  1. ம்ம் என்ன வெற்றி இப்படிச் சொல்லிவிட்டீர்கள்!"என் நினைப்பு உன்னுள் தோன்றி மறைந்தால் போதும்" என்று....ரசித்தோம்...காதலையும் உங்கள் வரிகளையும்!

    ReplyDelete
  2. // உனக்கும் சேர்த்து
    நான் ஒருவன் காதல் செய்வேன்...// அடடா!எப்பேற்பட்ட காதல்! கலக்கல் கவிதை வெற்றி!
    த.ம.2

    ReplyDelete
  3. எங்கிருந்தாலும் வாழ்க...!

    ReplyDelete
  4. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. கடைசி வரிகள் கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
    http://www.ypvnpubs.com/2016/01/01.html

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...