Nov 28, 2012

சொல்லித் தெரிவதில்லையடி




சொல்லித் தெரிவதில்லையடி
நான் உன்
மீது கொண்ட நேசம்!

என்னிடம் கூறிவிட்டு,
அனுமதித்த பிறகா, நீ
என்னுள் வந்தாய்!

இல்லையே! நான்
அறியாமல் என்னுள் நுழைந்தாய்!
உறக்கத்தை களைத்தாய்!
நினைவினை சிதறடித்தாய்!
கனவின் முழு நாயகியும் ஆனாள்!!!

அன்பில் உருக வைத்தாய்!
ஏக்கத்தில் சிதற வைத்தாய்!
பிரிவினில் அழவும் வைத்தாய்!
இவற்றை, நீ என்
அனுமதியுடனா செய்கிறாய்!!!
இல்லையே!

நானும் சொல்லப் போவதில்லை!
என் அன்பை, நேசத்தை, காதலை
உன்னிடம்...

என்னைப்போல் நீயாக
எப்போது அன்பை
உணருவாய் என்று பார்க்கலாம்!

அதுவரையில் சொல்லப் போவதில்லை
நான், உன்னிடம் என் அன்பை...
காலம் தாழ்த்தி
கானல் கனவில் கரையுமுன்
சொல்லிவிடு என்னிடம்...
என் அன்பே!!!

சொல்லித் தெரிவதில்லையடி!
என் காதல் உன்னிடம்.
சொல்லித் தெரிவதில்லையடி...!!!

24 comments:

  1. Aahaa.... Arumai.... Kalakkureenga vettri. Indha kavidhaiya vaasikkira endha ponnume ungala venaannu solla matta. Vaazhththukkal.

    On my site: http://newsigaram.blogspot.com/2012/11/sri-lankas-first-satellite.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சிகரம், வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. உண்மையான நேசம் சொல்லாமலே புரியும் வருந்தவேண்டாம் வெற்றிவேல். கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. புரிந்துகொண்டால் மகிழ்ச்சியே... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா...

      Delete
  3. உண்மை அன்பு தானாக ஒரு நாள் தெரிவிக்கும்... பிறகு மாற்றவே மாறாது...

    பொறுத்தார் காதலிலும் ஆள்வார்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. அன்பை சொல்லித் தெரியப்படுத்தனுமனில் வார்த்தைப் பற்றாக்குறை ஏற்பட்டுப் போயிடுமே தோழா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பா... உண்மைதான். பற்றாக்குறை எப்போதுமே உண்டு...

      Delete
  5. காதலையும் கவிதையையும் அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் கையால் பாராட்டு பெற்றதில் மகிழ்ச்சி...

      தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete

  6. தம்பி ...
    காதலின் வெளிப்பாடு காலத்தாமதம் ஆனாலும் கண்ணுக்குள் வைத்து கொண்டாட மட்டும் தவறுவதில்லை மனசு ...
    (இந்த கவிதையில் நீங்கள் நிறைய மெருகேற்றம் செய்து இருந்தால் கவிதையின் சுவை மேலும் கூடியிருக்கும், முழு வடிவமின்றி
    இருப்பதாய் உணர்கிறேன், அடுத்த படைப்பில் அதை நான் எதிர்பார்க்கிறேன் நன்றி )

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அடுத்த படைப்பில் முயற்சி செய்கிறேன் அண்ணா...

      Delete
  7. இப்பிடி ஒரு அவஸ்தை காதலில் மட்டுமே சுகம்.....ஆனாலும் காலம் தாழ்த்த வேணாம் வெற்றி......வாழ்த்துகள் அவங்களுக்கும் !

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி கவிச்காக்கரவர்த்தினி...

      Delete
  8. சொல்லித்தெரிவதில்லை காதல் உண்மைதான்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா, கருத்துக்கு நன்றி...

      Delete
  9. சொல்லித் தெரியாதை
    அருமையாகச் சொன்னவிதம் அருமை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஆஹா.. அருமையான கவிதை.. வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி...

      Delete
  11. சொல்லியும் கூட தெரியாத காதல் இங்கு நிறைய குடிகொண்டிருக்கையில் சொல்லிய காதல்,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete

  12. வணக்கம்!

    என்றன் வலையில் இரவுதரும் புன்னகையை
    இன்தமிழ் யாப்பில் இசைத்துள்ளேன்! - உன்றன்
    வருகையைத் தந்திடுவீா்! வானமிழ்து உண்டு
    கருத்தைப் பதிப்பீா் கணித்து!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வந்து படிக்கிறேன் அய்யா...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...