Nov 17, 2012

கேள்விகளால் ஆனவள் ! கேள்வியாய் ஆனவள் !

வெறுமையாய் இருந்த என்
மனக் காகிதம் ...

கிறுக்கக் கூடத் தெரியாமல்
இருந்த நான்...

அழகாய் உள்நுழைந்தவள்
உயிரோவியமாய் ஆகிவிட்டாய்...

சில நேரம் அழகிய கவிதைகளாய்,
மனம் வருடும் ஓவியமாய்,
கடந்து செல்லும் கனவுகளாய்..

எப்படி நான் வரைந்தாலும் முடிவில்
மட்டும் தவறாமல் வந்து
நனைத்து விட்டுச்
செல்லும் மனச் சாரலாய் நீ ...

என் மன ஏட்டில் நான் வரையும்
எழுத்து, சொல்,
தொடர் புள்ளி, கார்ப் புள்ளி,
தவறாமல் வந்து முடித்து வைக்கும்'
முற்றுப் புள்ளி...
யாவும் நீயே!!!

காரணமில்லாமல் தோன்றும்
ஆச்சர்யம், வியப்பு, மகிழ்ச்சி
என நான் உணரும்
யாவும் நீயே...

ஆனால்  முடிவில் மட்டும்
தவறாமல்
கேள்விக் குறியாய் மட்டும்
நின்று கொள்கிறாய் என்னுள்...

விடையாய்  வரும் காலம் எப்போது???


25 comments:

  1. கேள்விகளால் ஆனவள்....மனதின் ஏக்கம்,எதிர்பார்ப்பு....அசத்தல் கவிதை வெற்றி !

    சம்பத்தப்படவள் பார்ப்பாளா ?அவள் கேள்வி கேட்டால் சொல்ல ரெடியா இருங்கோ.கவனம் !

    ReplyDelete
  2. Replies
    1. வாங்க சீனி, வணக்கம்...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  3. தலைப்பு கூட கவிதையாய் மின்னுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் முரளிதரன் அண்ணா, வாங்க...

      கவிதையாய் மின்னுகிறதா??? கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது...

      Delete
  4. அருமை...

    விரைவில் அந்தக் காலம் வர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வந்தால் மிக்க மகிழ்ச்சி அண்ணா...விரைவில் வரட்டும்...

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  5. என்ன வெற்றி வேலை செய்யும் இடத்தில பிகர்ஸ் அதிகமாக இருக்கிறதோ.. ஒரே கவிதை கொட்டுகின்ரீர்.

    ReplyDelete
    Replies
    1. இங்கெல்லாம், வேலை செய்யற எடத்துல, மருந்துக்கு கூட யாரையும் பார்க்க முடியல... நீங்க வயித்தெரிச்சல கிளப்பாதீங்க... உங்கள மாதிரி ஐ.டி கம்பெனியா??? நான்... பேசாம போய்டுங்க, சொல்லிட்டேன்...

      Delete
  6. நல்ல அழகான கற்பனை... நிஜமாகக்கூட இருக்கலாம்.. எதுவாயினும் கவிதை அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா, வணக்கம்... வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete

  7. வணக்கம்

    வண்ண மின்னும் அவள்முகத்தில்
    வடிவாய் ஆடும் முத்தணிகள்!
    கண்ண தாசன் பாடிடுவான்
    கன்னி காதை கேள்வியென!
    உண்ணத் தெவிட்டாச் செந்தமிழில்
    ஓங்கும் வெற்றி வேல்கவிஞா்
    எண்ணம் இனிக்கப் படைத்திட்ட
    எழுத்தைக் கண்டு வியக்கின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா, வணக்கம்... என்னையும் தங்கள் வரிசையில் கவிஞர் என்று கூறுகிறீர்களே, இது தகுமா என்ன???

      மிக்க நன்றி அய்யா...

      Delete
  8. அத்தனையும் அவளாகிப்போனபின் கேள்விக்குறியும் பதிலாக மாறுமே விரைவில்.அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்க குட்டன், தாங்கள் கூறுவது போல் நடந்தால் மகிழ்ச்சியே!!! வருகைக்கும், அழகான கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  9. அருமை!

    ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் செம்மலை அண்ணா, தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. சொல்லிப்போனவிதம் மிக அருமை
    அதைவிட முடித்த விதம் மிக மிக அருமை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரமணி அண்ணா, தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... வருகைத் தொடரட்டும்...

      Delete
  11. அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வாங்க ஆயிஷா... தங்கள் வருகைக்கும், அழகான கருத்தும் மிக்க நன்றி...

      Delete
  12. காதலிக்கத் தொடங்குபவர்களுக்கு
    ஆச்சர்யக் குறிகள் அதிசயக் குறிகளாகத்தான் தெரியும்.

    கவிதை அருமை “இரவின் புன்னகை“

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அருணா செல்வம், தங்கள் கருத்து அழகாக உள்ளது...

      தங்கள் கருத்துக்கும், இனிய வருகைக்கும் நன்றி...

      Delete
  13. வாங்க மலர், வணக்கம்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...